வேலூர் ஆர்யாஸ் காஃபி

மாயவரம் காளியாகுடி காஃபி, பெங்களூர் எம்டிஆர் காஃபி, பெங்களூரு அடிகாஸ், ஒரு காலத்தைய சரவண பவன் காஃபி போல குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சுவையான காஃபி வேலூர் ஆர்யாஸ் காஃபி.

இன்றும் அதே சுவை மாறாமல் கிடைக்கிறது. உள்ளே உட்கார்ந்து அவர்கள் கொண்டு வரும் காஃபியை விட, டோக்கன் வாங்கிக் கொண்டு வெளியே காஃபி போடுமிடத்திலேயே சுடச்சுட வாங்கி வெளியே நின்று பருகும் காஃபி கூடுதல் சுவை என்று நானாகவே எண்ணிக்கொள்கிறேன். வட்டாவில் வெள்ளை வெளேரென பாலும் தம்ளரில் டிகாக்‌ஷன் கலந்த காஃபியுமாய் நம்மிடம் அவர் தர, இரண்டையும் கலந்து பருக வேண்டியது நமது வேலை.

பெங்களூரு நோக்கிப் பயணிப்பவர்கள் ஆர்யாஸில் காஃபி குடிக்க வேண்டுமானால் மேம்பாலத்தில் ஏறாமல், ஜிஆர்டி ஹோட்டலைக் கடந்த உடன் வரும் கிரீன் சர்க்கிளில் வலதில் திரும்பி அரைவட்டமடித்தால் இடப்புறம் ஆர்யாஸ்.

ஆர்யாஸும், பக்கத்தில் ஹோட்டல் அண்ணாமலையும் பின்புறம் பேருந்து நிலையமும், எதிர்ப்புறம் அம்பாலால் எஸ்டேட்ஸும், நடக்கும் தூரத்தில் பாலாறும் என இருந்த இந்த இடத்தில், ஜிஆர்டி நட்சத்திர ஹோட்டல், நம்ம வீடு உணவகம் என பலதும் வந்து விட்டன. ஆனாலும், அதே ஆர்யாஸில் அதே இடத்தில் நின்று காஃபியை அதே சுவையோடு பருக முடிகிறது.

– பரமன் பச்சைமுத்து
வேலூர்
23.09.2023

#Vellore #AryasVellore #ParamanTouring #பரமன் #பரமன்பச்சைமுத்து #ParamanLifeCoach #Paraman #ParamanPachaimuthu #LifeCoach
#MalarchiPosters #GrowthMessages
#Motivational #MotivationalSpeaker #LifeTeacher #TamilMotivational

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *