இந்தியா அசத்தல் கடலிலும் விண்ணிலும்

விண்வெளியில் ஆதித்யா 1 தனது லெக்ராஜியன் பாயிண்ட் எனப்படும் எல் -1 புள்ளியை இன்று அடையப் போகிறது என்று மகிழும் இதே நேரத்தில் வானிலும் கடலிலும் மூன்று நிகழ்வுகள் இந்தியர்களால் சிறப்பாக நிகழ்த்தப்பட்டுள்ளன என்று கூடுதல் மகிழ்ச்சி கொள்கிறோம்.

கருந்துளை எனப்படும் கருங்குழியிலிருந்து வெளிப்படும் கதிர்கள், எரிபொருள் தீர்ந்து வெடித்து சிதறும் விண்மீன்களிலிருந்து உருவாகும் கண்ணுக்குத் தெரியா நிறமற்ற நியூட்ரான் விண்மீன்களின் கதிர்கள், நெபுலா கதிர்கள் ஆகியவற்றை கணக்கிட உதவும் ‘எக்ஸ்போசாட்’ வான்வெளியில் வெற்றிகரமாக நிறுவப் பட்டிருக்கிறது, இஸ்ரோ விஞ்ஞானிகளால்.

வின்வெளியிலேயே மின்சாரம் தயாரிக்கும் பரிசோதனை முயற்சியில் 180வாட் தயாரித்து வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். இது உலகின் முதல் முயற்சி என்று நினைக்கிறேன்.

கடத்தல்காரர்களால் கடத்தப்பட்ட இந்திய சரக்கு கப்பலை அதிரடியாக இறங்கி மீட்டிருக்கிறது இந்திய கடற்கடை. தகவல் அறிந்து ஐஎன்எஸ் போர்க்கப்பல் விரைந்த விதமும், இந்தியக் கமாண்டோக்கள் கப்பலில் குதித்து செயல்பட்ட விதமும் ஹாலிவுட் திரைப்படம்தான் போங்கள்!

வாழ்க இந்தியா!

– பரமன் பச்சைமுத்து
சென்னை
06.12.2024

#India #Isro #Paraman #ParamanPachaimuthu #XPoSat #பரமன் #எக்ஸ்போசாட் #பரமன்பச்சைமுத்து #இஸ்ரோ #கடற்படை #இந்தியா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *