கேள்வி: சினிமாவின் உச்ச நிலையிலில் இருக்கும் போது நடிப்பை நிறுத்தி விட்டு அரசியலுக்குள் நுழைகிறாரே விஜய்?
பதில்: அமிதாப் பச்சன், எம்ஜியார் இதை செய்தார்கள். இப்போது விஜய் வருகிறார். அவருக்கு வாழ்த்துகள்.
சினிமாவில் நடிப்பதை அவர் நிறுத்துவது சிறந்த செயல் அல்ல என்பது என் தனிப்பட்ட கருத்து. கட்சி தொடங்கிய பின்பு எம்ஜிஆர் நடித்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’ போன்ற படங்கள் அவரை மக்களிடம் உயர்த்தி நிறுத்தின. கட்சியை கொண்டு சேர்த்தன. சினிமா மிகச் சிறப்பான மீடியம்.
‘மாமன்னன்’ படத்தோடு நடிப்பை விடுவதாக உதயநிதி அறிவித்த போதும் இதையே எழுதினேன். இப்போது விஜய்க்கும் இதையே எழுதுகிறேன். நடிப்பதை அவர்கள் நிறுத்துவது சினிமா என்ற சக்தி வாய்ந்த பெரு ஊடகத்தை பயன்படுத்தாமல் விடுவதாகும். முற்றிலுமாக விட வேண்டியதில்லை அவர்கள்.
– பரமன் பச்சைமுத்து
04.02.2024
சென்னை