சுத்த குறிஞ்சி நிலமான குடகு மலைப் பகுதி ‘கொடவா நாடு’ ‘கொடகு நாடு’ என்ற பெயர்களில் அழைக்கப்பட்டிருக்கிறது. நெல், கமுகு, வாழை என பயிரிட்டு வந்தவர்கள் பிரித்தானியர்களின் ஆளுகையில் அறிமுகப்படுத்தப் பட்ட காஃபியையும் பயிரிட்டு செழித்துள்ளனர். தமிழ், கன்னடம், துளு கலந்த மொழியான ‘கொடவா’ மொழி இவர்கள் பேசும் மொழி.
நமக்கு நன்கு பழக்கப்பட்ட மிகவும் பிடித்த அதே மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் கிழக்கு சரிவில் இருக்கும் இந்த
கொடகு தனி மாநிலமாகவே இருந்து பிறகு மைசூர் சமஸ்தானத்தில் இணைக்கப்பட்டு பிறகு கர்நாடகமாக மாறியது.
பிரித்தானியர்கள் காலத்தில் கொடகு ‘கூர்க்’ என்று பெயர் மாற்றம் பெற்றிருந்தாலும், தற்போது அரசிதழ்களில் கொடகு என்றே குறிப்பிடப்படுகிறது. அப்போதும் இப்போதும் கொடகின் தலைநகரம் ‘மடிகேரி’தான்.
பசும் பள்ளத்தாக்குகளும், காஃபி தோட்டங்களும் மலைக்காடுகளும் நிறைந்து கண்ணுக்கும் கருத்துக்கும் இனிதாக இருக்கும் கூர்க் ‘ஸ்காட்லேண்ட் ஆஃப் இண்டியா’ என்றே கொண்டாடப்படுகிறது.
‘பரமன், சாயந்திரம் வாக் போகலாம்னு டெர்ரஸுக்குப் போனேன், சன் செட்டுக்கு அப்புறம்தான் பரமன்… மூஞ்சில்லாம் எரியுது, செம ஹீட் வேவ்!’ என்று சென்னையிலிருந்து மலர்ச்சி மாணவர் அழைத்துச் சொல்லும் அதே வேளையில் இங்கே நாம் இருக்கும் குடகு பகுதியான விராஜ்பேட்டையில் 24 டிகிரி குளிர்கிறது.
தமிழகத்து சோழ நாட்டின் வளம் பற்றியும், இந்து சமயம் சொல்லும் குறுமுனி அகத்தியர் பற்றியும் சொல்ல கொஞ்சம் இருக்கிறது.
பெரும் சித்தரான தவசீலரான வல்லமை பொருந்திய
அகத்தியர் ‘இந்த இடத்தில்தான் நின்றிருப்பார்!’ என்று ஊகிக்கப்படும் இடத்தில், நாம் போய் நின்றால் எப்படி இருக்கும்?
(தொடர்வோம்)
: ‘குடகு மலைக் காற்றில்…’ – 3
-பரமன் பச்சைமுத்து
விராஜ்பேட், கூர்க்
27.05.2024
#ParamanTouring #Paraman ##ParamanPachaimuthu #பரமன் #பரமன்பச்சைமுத்து #Karnataka #KudaguMalai #Kodagu #Coffee #ClubMahindra #Virajpet #Koduva #KoduvaLanguage #ParamanTravelWriteup #ParamanCoorg #Cauvery #Agathiyar