தமிழகத்தில் முதல் மாதிரி திட்டமாக அத்திக்கடவு அவினாசி திட்டம் நிறைவேறியுள்ளது. தமிழக முதல்வருக்கு நன்றிகள்!
‘அந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம் அதனால் நாம் தொட வேண்டாம்!’ என்று விடாமல் ‘மக்களுக்கும், மண்ணுக்கும் இந்தத் திட்டம் தேவை, இதை தொடர்ந்து நிறைவேற்றுவோம்!’ என்று மக்கள் பயனை கருதி செய்ததனால் தமிழக அரசுக்கு… பூங்கொத்து!
முன்னெடுத்த மாரப்ப கவுண்டர், காமராஜர், கலைஞர், ஜெயலலிதா, இறங்கி 80% பணிகளை முடித்த எடப்பாடி, கூடுதல் நிதி ஒதுக்கி சிறப்பாக நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றிகள்!
தமிழகத்தின் முதல் நீரேற்று மாதிரி(பம்ப்பிங்), 1045 குளங்கள் நீர் பெறும், 2500 ஏக்கர் பாசனம் பெறும், 3 மாவட்டங்களி்ல் நிலத்தடி நீர் செறிவூட்டப்படும் என்பன நாம் துள்ளிக்குதித்துக் கொண்டாட வேண்டிய பயன்கள்.
கணிணி கட்டுப்பாட்டோடு கூடிய தானியங்கி நீரேற்று முறை, குழாய்கள், அத்தனை குளங்கள் இணைப்பு என்பதெல்லாம் ஒரு கனவாகத் தோன்றுகிறது. இதை வடிவமைத்து சாத்தியமாக்கிய
‘எல் அண்ட் டி’ நிறுவனத்தை எழுந்து நின்று பாராட்டுகிறோம்.
இந்த திட்டம் கொண்டுள்ள அறிவியல் அமைப்பு நாளை தமிழகத்தில் பல இடங்களில் மாற்றத்தை கொண்டு வரலாம்!
வாழ்க! வாழ்க!
– பரமன் பச்சைமுத்து
31.08.2024
#athikadavuAvinasi #Athikadavu #TnGovtScheme #Paraman #ParamanPachaimuthu #பரமன் #பரமன்பச்சைமுத்து #அத்திக்கடவு #அவிநாசி #திட்டம்
#தமிழகஅரசு