மலைகளழகு, ஒவ்வொரு மலையும் ஒவ்வோரழகு.
குத்துப்பாறையாக, செதில் செதில் கற்களாக, உயர்ந்த மண் மேடுகளாக, கடும்பாறைகளாக, புக முடியா புதரடர்ந்தவகையாக, மரங்கள் வளர்ந்த மலைகளாக, காடுகளை தாங்கி நிற்கும் மலைகளாக என மலைகளின் தோற்றங்களில் தன்மைகளில் வேறுபாடுகள், அத்தனையும் அழகு. (வேளிர் குல வேள்பாரியின் மலைக்கு ஏன் பச்சைமலை என பெயர் வந்ததோ! தாவரங்கள் அடர்ந்த மரங்கள் பச்சையாகத்தானே இருக்கும்! மேற்குத் தொடர்ச்சியில் உள்ள மலைக்கு ஏன் ‘நீல மலை’ என்று பெயர் வைத்தனர்!)
ராவணன் சீதையை சிறை வைத்ததாகச் சொல்லப்படும் இலங்கையின் நுவரேலியா பகுதிக்கு போகும் வழியின் பள்ளத்தாக்கு பகுதிகளின் மலைகளைக் கண்டு அசந்து மெய்மறந்து நின்றிருக்கிறேன். தொட்ட பெட்டாவிலிருந்து கோவை நோக்கி வரும் வழியில் இருக்குமே, அவற்றை விட அழகானவை.
இந்த சிறு மலை ஒவ்வொரு முறையும் எனை ஈர்க்கிறது. நுவரேலியாவை ஏதோவொரு வகையில் நினைவு படுத்துகிறது.
இன்று அதிகாரம் பயணத்தின் போது, காஃபி அருந்துவதற்காக இறங்கிய போது மலையை அடக்கிக் கொண்டோம் நம் படத்திற்குள் ( 99 Km Coffee Magic வாசலில்)
மலை அழகு, மலை உறுதி, மலை காலங்காலமாக நம்பிக்கையின் குறியீடு, நம்பிக்கையின் அளவீடு, மலை மாபெரும் நம்பிக்கை! மலை பெரும் ஆற்றல்!
இருப்பில், அணைப்பில், உடன் இருக்கும் ஆற்றலில், மாப்பெரிய நம்பிக்கையில்… அவரவர்க்கு அவரது அன்னை ஒரு மலை!
மலையோடு படம் எடுத்துக் கொண்டேன்.
– பரமன் பச்சைமுத்து
06.09.2024
பெரும்பேர் கண்டிகை
99 Km Coffee Magic
#பரமன்பச்சைமுத்து #ParamanLifeCoach #ParamanPachaimuthu #ParamanTouring #AmirthamPachaimuthu #அமிர்தம்பச்சைமுத்து #MuPachaimuthuArakkattalai #99kmCoffeeMagic #மலை #அம்மா