சிவப்பு நிலா

அந்தக் காலத்துப் பேய்ப் படங்களில் வானத்து வெள்ளை நிலா பேய் வரும் போது மட்டும் ரத்த சிவப்பு நிலாவாகத் தெரியுமே (குளியறை குழாயில் தண்ணீருக்குப் பதில் ரத்தம் வரும்) அப்படியொரு ரத்தச் சிவப்பு நிலாவை பார்த்திருக்கிறீர்களா?

சூரியனிலிருந்து 150 கோடி கிலோ மீட்டர்கள் தூரத்தில் இருக்கும் சந்திரன் (இந்தத் தூரத்தை தரையில் கணக்கிட்டால் காஷ்மீருக்கும் கன்னியாகுமரிக்கும் உள்ள தூரத்தின் 4,28,572 மடங்கு!) மீது, அதனிடமிருந்து 3,84,400 கிமீ தூரத்தில் இருக்கும் பூமியின் நிழல் படியும் போது, அதாவது சூரியனின் கதிர்கள் நிலாவின் மீது நேரடியாக படாத போது, பூமியின் வளி மண்டலத்துகள்களில் பட்டு குறைவான அலைநீளம் கொண்ட கதிர்கள் சிதறடிக்கப்பட்டு விட(ரேலீ விளைவு) மீதமுள்ள கதிர்கள் நிலவில் பட அது ரத்த சிவப்பாக, பேய்ப்படத்து நிலவாகக் காட்சியளிக்கும். அந்த நேரத்தில் நிலா முழுக்கவும் ‘சோனாகாச்சி’யாகத் தெரியும் (‘மகாநதி’ படத்தின் படி ரெட் லைட் ஏரியாவின் பெயர்)

இந்த ‘சிவப்பு நிலா’ பொதுவாக முழுச்சந்திர கிரகணத்தின் போது தோன்றும் என்றும், இதை ‘ஆப்பிரிக்கால பாக்கலாம், அண்டார்ட்டிகா பாக்கலாம்!’ என்றெல்லாம் சொல்வார்கள்.

சில சமயங்களில் சந்திரன் உதய நேரங்களிலும் இந்தக் காட்சி கிடைக்கவே செய்கிறது. கீழேயிருக்கும் சந்திரன் சில நிமிடங்கள் இப்படி ரத்தச் சிவப்பாகத் தெரியவே செய்கிறது. மேலெழும்ப எழும்ப அளவிலும் பெரிதாக நிறத்திலும் வெளிர் மஞ்சள், வெள்ளை என மாற்றம் பெற்று தெரிகிறது.

நேற்றிரவு மலர்ச்சி பேட்ச் 79ன் தொடக்க வகுப்பை முடித்துவிட்டு புதுச்சேரி கடற்கரையில் என் அலுவலக நண்பர்களோடு கடல் பார்த்து நின்ற போது தூரத்தில் ரத்த சிவப்புப் பொட்டொன்றைக் கண்டோம். ‘ஏய், சிவப்பு நிலா!’ என்று உற்சாகமாகி ‘எடுறா படத்தை!’ என்று ஜூம் செய்து ஜூம் செய்து படமெடுத்தோம் (என் காமிராவில் பரி எடுத்த படம்).

சிவப்பு நிலா! ரேலீ விளைவில் ஒளி சிதறடிக்கப்பட்டு இந்த நிறத்தில் தெரிகிறது. பாரதியின் வரிகள் நினைவுக்கு வருகிறது.

‘தோற்ற மயக்கங்களோ!… வெறும் காட்சிப் பிழைதானோ!’

– பரமன் பச்சைமுத்து
புதுச்சேரி
18.02.2025

#Redmoon #ReleighEffect #RayleighScattering #பரமன்பச்சைமுத்து #ParamanPachaimuthu #ParamanLifeCoach #ParamanTouring #malarchipuducherry #Puducherry

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *