பல ஆண்டுகள் ஆயிருந்ததாலும், வேறு வங்கிக் கணக்கை இணைக்க வேண்டியிருந்ததாலும், ‘உங்களுடைய அடையாள படிவங்களை எடுத்துக் கொண்டு நீங்களே நேரில் வரவேண்டும்’ என்று அறிவுறுத்தப்பட்டதாலும் இதுவரே போயிராத அந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் மண்டல அலுவலகத்திற்குப் போயிருந்தேன்.
(‘தெரிந்தவர்கள் எவரும் இல்லை! ம்… அந்த கவுண்டர்ல கேப்போம்!’)
‘மேடம்… எனக்கு பேங்க் அக்கவுண்ட் சேஞ்ச் பண்ணனும்’
‘அந்த கவுண்ட்டர் சார்!’
‘உட்காருங்க சார்!’
எல்லா தனியார் நிறுவனங்களைப் போலவும் மிகச் சிறப்பான சேவையைத் தந்தார்கள், தரவுகள் சரி பார்த்தல், எண்ம படிவங்களுக்கான அசல் படிவங்களை உறுதி செய்தல், கொயொப்பம் பெற்றல் என அத்தனையையும் சில நிமிடங்களில் முடித்து என் பிரச்சினையை சரி செய்து ‘இட் வில் கெட் ரிஃப்ளெக்ட்டேட் சார். தேங்க்யூ!’ என்று சொல்லி என்னை அனுப்பி வைத்தார்கள்.
நன்றி சொல்லிவிட்டு தோள் பையை தோளிலேற்றிக் கொண்டு நடந்து லிஃப்ட்டுக்கு வருகிறேன். ஏற்கனவே லிஃப்ட்டின் பொத்தானை அழுத்தி விட்டு ‘வரட்டும்’ என காத்திருக்கும் மனிதரொருவர் நம் பக்கம் திரும்புகிறார். நடக்கிறோம்.
‘பரமன் பச்சைமுத்து!!?’
‘ஆமாம்! நீங்க?’
‘சார், நான் xxxxxxxx, நீங்க எங்க ஸ்கூலுக்கு வந்தீங்க. நான் உங்க கிளாஸ் அட்டெண்ட் பண்ணிருக்கேன்!’
(‘இவருக்கே ஸ்கூல் போற வயசுல பையன் இருப்பான் போலத் தோனுதே! இவர் ஸ்கூல்ல நாம கிளாஸ் எடுத்தோமா? புரியலியே!’)
(‘ஒரு வேலை அந்த ஸ்கூல்ல வாத்தியாரா இருந்திருப்பாரோ இவரு!’)
‘ஓ… எந்த ஸ்கூல்லங்க?’
‘தாம்பரம் சார்! நீங்க கூட என் பேரைச் சொல்லி மேடைக்கு கூப்ட்டீங்க!’
‘தாம்பரம்?? ஜெய கோபால் கரோடியாவா?’
‘ஆமாம் பரமன் சார்! நான் அப்ப டென்த் படிச்சேன். உங்க மோட்டிவேஷன்தான் என்னை தூக்குச்சு, லெவன்த்ல க்ரூப் ச்சூஸ் பண்ண வச்சது?’
‘ஓ! இங்க என்ன செய்யறீங்க?’
‘இதான் சார் நம் ஆஃபீஸு. இந்த கம்பெனியோட இன்ஸ்யூரன்ஸ் டிபார்ட்மெண்ட்ல எக்ஸிக்குயூட்டிவ் சார்! நான் வொர்க் பன்றேன்.’
‘வாவ்! சூப்பர்! நீங்க டென்த் படிக்கும் போது நான் உங்க ஸ்கூலுக்கு வந்தேன். ரைட்! இப்ப உங்க வயசு என்ன?’
’29 சார்!’
‘சின்ன ஸ்கூல் பையனா இருந்தீங்க, 14 வருஷம் கழிச்சி பாக்கறோம். நீங்க வளர்ந்து வேற மாதிரி ஆளா ஆயிட்டீங்க. அடையாளம் தெரியலை! வெரி வெரி ஹேப்பிப்பா!’
‘எனக்கும் சார்?’
’14 வருஷம் கழிச்சி என்னை எப்படி கண்டுபிடிச்சீங்க?’
‘நீங்க அப்படியேதானே சார் இருக்கீங்க!!’
– பரமன் பச்சைமுத்து
13.02.2025
சென்னை
#பரமன்பச்சைமுத்து #ParamanLifeCoach #tamilmotivational #growthmessages #ParamanPachaimuthu #மலர்ச்சி #பரமன் #StayWithPositive #lifecoach #JeyagopalKarodia