​ஒன்றரை நாளுக்கு ஓர் ஊர் என்று சுற்றுபவனை

ஒன்றரை நாளுக்கு ஓர் ஊர் என்று சுற்றுபவனை

ஒரே இடத்தில் அடைத்துப் போட்டுவிட்டது இந்த விஷக் காய்ச்சல்! 

இதற்கு மேல கசப்பா ஒண்ணு இருக்க முடியுமா என்றிருக்கும் நிலவேம்புக்குடிநீரை உலகிலேயே இத்தனை முறை குடித்தவன் நானாகத்தான் இருப்பேன்.  ஒரு நாளைக்கு மூன்றுமுறை என்ற கணக்கில் நிலவேம்பும், ஆடாதொடை மணப்பாகும் பருகித் தள்ளுகிறேன்.

நான்கு நாட்களாக படுக்கையில் கிடக்கிறேன் கஞ்சி குடிக்கிறேன் என்று சொல்லலாம் 

அல்லது 

சோழ தேசத்து உணவான சூடான புழுங்கலரிசி கஞ்சியும் கறிவேப்பிலை புதினாத் துவையலும் உண்டு ஒரு மன்னனைப் போல ஓய்வெடுக்கிறேன் என்று சொல்லலாம்! 

நான்கு நாட்களில் பத்திரிக்கை எழுத்தென்று படுத்தே தொடர்ந்தாலும் இரண்டு விஷயங்களைச் செய்ய முடியாதது வருத்தம் –  ஒன்று, உடற்பயிற்சி. இன்னொன்று, மலர்ச்சி மாணவர் ஒருவரது திறப்பு விழாவிற்குச் செல்ல முடியவில்லை.

பரமன் பச்சைமுத்து

30.03.2017

சென்னை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *