Monthly Archive: February 2018

கௌதமியை வைத்து கமலை நோக்கி சமையல் செய்யும் ஊடகங்கள் இனி

‘நான் அவரோடு இணைந்து செயல்படுவதாக சொல்கிறார்கள். இல்லை. நான் என் மகளுக்காகவும் எனக்காகவும் உழைக்கிறேன். அவர் என் சம்பளப் பாக்கியை இன்னும் தரவில்லை. ஆதாரங்கள் உள்ளன’ என சுட்டுரையில் கொளுத்திப் போட்டிருக்கிறார் கௌதமி. ஸ்ரீதேவி மகள்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு திரும்ப வந்த கமலிடம் அதைக்கேட்டும் விட்டனர் நிருபர்கள். ‘சம்மந்தம் இல்லை என்று அவர் சொல்லிவிட்டார். சம்பளப்… (READ MORE)

Politics

, , , , ,

யாரை எங்கே இட்டுச் சென்று எங்கே முடிக்கிறது வாழ்க்கை என்பது பெரும்புதிர்…

சிறுவனாக இருந்த போது அக்கா கூட்டிச் சென்று கீரப்பாளையம் விஆர்கே டாக்கீசில் காட்டிய படத்தில்தான் முதன்முதலில் ஸ்ரீதேவியை பார்த்தேன் என்று நினைக்கிறேன். அதில் வரும் ‘பெயரைச் சொல்லவா அது நியாயமாகுமா!’ பாடல் என் மனங்கவர்ந்த பாடல். சென்ற வாரம் கூட ஓர் இரவுப்பயணத்தில் முணுமுணுத்தப் பாடல். என்னைப் போல் பலருக்கு ‘காற்றில் எந்தன் கீதம்…’ என்ற… (READ MORE)

பொரி கடலை

, , , , , ,

unnamed.jpg

‘நாச்சியார்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

சொந்த மகள், ஊரின் பிரபல மருத்துவர், அரசியல் செல்வாக்குள்ள தொழிலதிபர், அன்றாடங்காய்ச்சிகளின் சமையல் காண்ட்ராக்டர், தனது நிலையத்தில் பணிபுரியும் அதிகாரிகள் என உலகில் எவரது மனதைப் பற்றியும் சட்டை செய்யாமல் தனது செய்கைகளால் வன்முறை காட்டும், ‘அடிச்சிட்டுத்தான் பேசுவாள், இதயமே இல்லாதவள்!’ என்றே விளிக்கப்படும் ஒரு தடாலடி முரட்டுப் பெண் காவல்துறையதிகாரி… உலகமே வன்முறை காட்டும்… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , , , ,

பொன்னியின் செல்வன் போல சரித்திர நாவல் வேண்டுமா?

கேள்வி: சமீபத்திய சென்னை புத்தகக் கண்காட்சியில்தான் ‘பொன்னியின் செல்வன்’ வாங்கினேன். படித்தேன். அருமை. இது போன்ற இதற்கு ஈடான சரித்திர நாவல்கள் ஏதும்? பதில்: சரித்திர நாவல்கள் என்றாலே சாண்டில்யன் என்று சொல்லும் நிலை இருந்தது ஒரு காலத்தில். அரு ராமநாதனின் ‘வீரபாண்டியன் மனைவி,’ சுஜாதாவின் ‘காந்தளூர் வசந்த குமாரன் கதை’ ஆகியவை சிறந்த படைப்புகள்…. (READ MORE)

Uncategorized

ஒன்றாகவே ஆனால்..

ஒன்றாகவே ஒரே இலக்கை நோக்கிப் பயணிக்கிறோம் பலர், ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமலேயே, ஒவ்வொருவரும் ஒவ்வொரு உலகத்தில்! நீலகிரி எக்ஸ்பிரஸின் ஒரு கோச்சில் யாராரோ சிலரோடு கோவையை நோக்கி. பரமன் பச்சைமுத்து 17.02.2018 Facebook.com/ParamanPage

Uncategorized

அருமையான புத்தகங்க

‘வணக்கங்க. ‘நதி போல ஓடிக்கொண்டிரு…’ படிச்சேங்க. எட்டு சாப்டர் படிச்சிட்டேன். ரொம்ப பிரமாதமா இருக்கு. ஒரு மனிதனுக்கு, அலுவலகம் போறவனுக்கு அன்றாட வாழ்க்கையில் தேவையான எல்லா விஷயங்களையும் கொடுத்து, ஒரு கதை மாதிரி சொல்லி அருமையா இருக்குங்க. இது எல்லாருக்கும் கிஃப்டா தரப்பட வேண்டிய புத்தகம். படிச்ச உடனே சொல்லனும்னு தோணிச்சி அதான் கூப்டேன்ங்க. ரொம்ப… (READ MORE)

Paraman's Book

, ,

கண்டறிவதும், கற்றுக் கொள்வதும்தானே வாழ்க்கை

காலையில் தூக்கத்திலிருந்து விழிக்கும் போதே குரல்வளை அடைப்பு நீங்கி தெளிவடைந்ததைப் போலொரு உணர்வு. ‘சிவாய நம’ ‘மலர்ச்சி வணக்கம்’ என்று சொல்லிப் பார்த்தேன். அதே பழைய குரல் வந்ததும் துள்ளிக் குதித்தேன். ‘அம்மா, ஆசை, ஓடை… அனைத்தும் வந்து விட்டது… அனைத்தும் வந்து விட்டது… தாயே…’ என்று பேச்சு வந்ததும் பரவசத்தில் துடிக்கும் ‘சரஸ்வதி சபதம்’… (READ MORE)

Uncategorized

தமிழ்ப்பெயர்கள் – சு வெங்கடேசன் – வேள் பாரியில்…

கொற்றன், அலவன், முடிநாகன், குறுங்கட்டி, அவுதி, மடுவன், உளியன், வண்டன், சங்கவை, ஆதிரை, வாரிக்கையன், நீலன், மயிலா, காலம்பன், தேக்கன், புங்கன், பழையன், திசை வேழன்… இவை (கபிலர், செங்கனச் சோழன், உதியஞ்சேரல், பொதிய வெற்பன், குறுங்கைவாணன், பொற்சுவை போன்ற வரலாற்றுக் கதாபாத்திரங்களோடு) பறம்பு நிலத் தலைவன் வேள்பாரி பற்றிய சரித்திரப் புனைவில் சு. வெங்கடேசன்… (READ MORE)

Uncategorized

சூழலியல் என்பது…

வாசல் திருத்தி கோலமிடுவதென்பது மங்களமென்பதற்காக மட்டுமல்ல, பல்லுயிர்ப்பெருக்கத்திற்காகவும். தனது வீட்டைச் சுற்றி வாழும் உயிர்களை காக்கும் கடமை தனதென்று பொறுப்பேற்றுக் கொள்ளும் செயல். பெண்மகளிட்ட கோலத்தில் கணவன் கால் பட்டால் தாலி தழைக்குமென்ற வகை ஆணாதிக்க இட்டுக்கதைகளைத் தாண்டி ஈக்கும், எறும்புக்கும், காக்கைக்கும், அணிலுக்கும் உணவிடும் உன்னதம். ‘வயிற்றிற்கு சோறிட வேண்டும் இங்கு வாழும் உயிர்களுக்கெல்லாம்!’… (READ MORE)

Uncategorized

தமிழாராய்ச்சி தரவகம்…

உலகம் முழுதும் நடந்துள்ள தமிழாராய்ச்சிக் கட்டுரைகளை ஒரே தரவகத்தில் வைக்க ஏற்பாடு என்று அறிவித்திருக்கிறார் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். எழுந்து நின்று வரவேற்கிறேன். ProjectMadurai.Orgயைப் போல இன்னும் பெரிதாய் இயங்கட்டும் இது. பேரறிஞர்களின் தமிழ் பற்றிய ஆராய்ச்சிகள் அனைவருக்கும் காணக் கிடைக்கட்டும். கட்சிகள் கடந்த தமிழாராய்ச்சி தரவமாக இது இருக்கட்டும். வாழ்க! வளர்க! Facebook.com/ParamanPage

பொரி கடலை

, , , , ,