ஒவ்வோர் வாழ்விலும் ஒளி கூடட்டும்!

அடுத்தவர் வளர்வதைக் கண்டு பொறுக்கா பொறாமை அரக்கன்,

இனத்தை தாழ்வாய் நினைக்கச் செய்யும்
அந்நிய மோக அரக்கன்,

உடலை ஓம்ப விடாமல்
உரிய வேலையை செய்ய விடாமல் தடுக்கும் சோம்பல் அரக்கன்,

‘நானே எல்லாம்’ ‘நான் இல்லையென்றால் அவ்ளோதான்’ என்று ‘தான்’ வளர்க்கும் ஆணவ அரக்கன்,

உயிராய் இருப்பவரையும் கடித்துத் துப்பச் செய்யும்
சினம் எனும் அரக்கன்,

உறவை உற்றாரை மறக்கடித்து பொருளை மட்டுமே தேடி ஓடத் தூண்டும் பேராசை அரக்கன்,

மற்றுமுள எல்லா அரக்கர்களையும் உள்ளே வைத்துக் கொண்டு வெளியில் என்ன தீபாவளி!

அழியட்டும் இவ்வரக்கர்கள் யாவரும், மலரட்டும் அகமும் புறமும்!

ஒப்பிலாதவன் அருள் புரியட்டும்,
ஒவ்வோர் வாழ்விலும் ஒளி கூடட்டும்!

தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள்!

– பரமன் பச்சைமுத்து

Www.ParamanIn.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *