நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை விழாவில்…

IMG_20200105_215119_469.jpg

ஒரு நாள் அல்ல, ஒவ்வொரு முறையும் வாழ்வின் வேறுவேறு அத்தியாயங்களில் என்னை நெகிழ வைக்கிறார் நடிகர் சூர்யா.

அகரம் அறக்கட்டளையோடு கொஞ்சோண்டு தொடர்பு ( மாணவர்களுக்கு சில பயிற்சி வகுப்புகள் எடுத்துள்ளேன்) உள்ளவன் என்பதால் ஓரளவு தெரியும், தனது சினிமா சங்கதிகளை கொஞ்சம் கூட உள்ளே கொண்டுவராமல் அறக்கட்டளையின் நிறுவனராகவே இருப்பார், நடப்பார் என்று. இன்று மாலை இந்திப் பிரசார சபாவில் நடந்த ‘அகரம் அறக் கட்டளை’யின் நூல்கள் வெளியீட்டு விழாவிலும் அதை உறுதி செய்தார்.

பள்ளிக் கல்வித்துறையமைச்சர் செங்கோட்டையன், ராமராஜ் காட்டன் உரிமையாளர் நாகராஜ், சத்தியபாமா பல்கலைகழகத்து மரியஜீனா ஜான்சன் என பலர் வீற்றிருந்த மேடையிலேயே அகரம் மாணவி காயத்ரி பேசிய போது தேம்பியழுததால் மட்டும் சொல்ல வில்லை, அகரம் பற்றி கொஞ்சம் தெரிந்ததால் சொல்கிறேன், நிறைய நல்ல செயல்களைச் செய்யும் நல்ல மனம் படைத்த மனிதர் சூர்யா.

அகரம் என்ற அமைப்பு அட்டகாசம், அமைப்பாகக் கட்டமைக்கப்பட்டு அது செய்யும் உதவிகள் உன்னதம். 2020வோடு பத்தாண்டுகளாக ஏழைப் பிள்ளைகளை கையிலேந்தி கல்வி புகட்டி ஒளியேற்றி வாழ்க்கையை உருவாக்குகிறார்கள்.

சமுதாயத்திற்கு உதவுபவர்கள் நன்றாக இருக்க வேண்டும். நடிகர் சூர்யா நீண்ட ஆயுளும் நல்ல ஆரோக்கியமும் செல்வமும் பெற்று வாழட்டும்.

( அவர்களது நூல் வெளியீட்டு விழாவில், நமது பெயரைச் சொல்லி அழைத்து மேடையிலேற்றி சூர்யா கையால் சிறப்புப் பிரதியை தருவார்கள் என்பதை எதிர்பார்க்கவே இல்லை. இன்ப அதிர்ச்சி!

இது நிகழவில்லையென்றாலும், இந்தப் பதிவை எழுதியேற்றியிருப்பேன். )

வாழ்க! வளர்க!

– பரமன் பச்சைமுத்து
சென்னை
05.01.2020

#ActorSurya
#Malarchi
#AgaramFoundations

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *