‘காக்கா முட்டை’ – திரை விமர்சனம்: பரமன் பச்சைமுத்து

Kakka muttai - Copy

Kakka muttai

இப்படி ஒரு படம் பார்த்து எவ்வளவு நாளாச்சு!

சிரிக்க வைக்கிறது, நெகிழ வைக்கிறது, கைதட்ட வைக்கிறது, படத்தின் அந்த சிறார்களுக்காக வருந்த வைக்கிறது, இப்படி எல்லாம் செய்கிறது படம்.

ப்ரகாஷ் ராஜ் பணியில் சொல்வதானால், ‘ஏய்… யார்ரா நீ?’ என்று பிடித்துக் கேட்கவேண்டும் படத்தின் இயக்குநரை.

‘ஊசிப் போனாதாண்டா நூல் நூலா வரும்!’ ‘சிம்பு இதத்தான் திம்பாரா, ரசம் சாதம்லாம் திங்கமாட்டாரா?’ என்பதான சுளீர் வசனங்கள், நம்மை கதைக்குள் தொலைந்து போகச்செய்யும் திரைக்கதை, தேவையான பின்னனி இசை என அழகாய்ச் செய்திருக்கிறார்கள்.

ஆரம்ப சிறுநீர் கழியும் சீன் முதல், ‘டேய் உனக்கு பிடிச்சிருக்காடா?’ என்னும் கடைசி காட்சி வரை சிறுவர்கள் இருவரும் பிரமாதப் படுத்தி துவம்சம் செய்திருக்கிறார்கள்.

பாக்யராஜ் படல்களில் வருவதைப் போல எல்லாப் பாத்திரங்களிலும் உயிர் இருக்கிறது.

தமிழ் சினிமாவின் முக்கியமான, கவனிக்கப் பட வேண்டிய ஒரு படம்.
இது போன்ற படங்கள் பெறும் வெற்றி பெற வேண்டும். அவசியம் பாருங்கள்.

வெர்டிக்ட்: காக்கா முட்டை – பொன் முட்டை. நல்ல கவிதை. I recommend.

பரமன் பச்சைமுத்து
08.06.2015

www.ParamanIn.com

1 Comment

  1. balawji

    பெரும் வெற்றி பெற வேண்டும்.

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *