Tag Archive: chennai

ட்ராஃபிக் சிக்னலில் வழிகிறது இசை: பெருநகர போக்குவரத்து காவல்துறை அசத்தல்

ஒரு காலை அண்ணாநகர் ரவுண்டானாவில் ஒளிரும் சிவப்பு விளக்கு அணைந்து பச்சை விளக்கு வரட்டுமென சிந்தாமணி நோக்கி வலதில் திரும்பக் காத்திருக்கிறேன்.  ஏதேதோ சிந்தனைகள் ஓட இருந்தவனை ‘டொய்ங் டொய்ங் டொய்ங் டொய்ங்க் டோடம் டோடங்…’ என்று எங்கிருந்தோ வந்த மெல்லிய வீணை இசை உலுக்கியது. உள்ளம் பாடலை கண நேரத்தில் கண்டறிந்து கூடவே பாடவும்… (READ MORE)

பொரி கடலை

, , , ,

ராம்ஜீயை நினைத்துக் கொள்வேன்…

‘பரமன், ஒரு எடத்துக்குப் போறோம்! வாங்க!’ ராம்ஜீயின் அழைப்புகள் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கும்.  லதா கிருஷ்ணசாமியும், சாமுவேல் மேத்யூவும், சில நேரங்களில் ஏஆர்கேயும் சேர்ந்து கொள்ள, இணைந்து போவோம்.  டிசம்பர் என்றால் கச்சேரி சீசன். ‘அந்நியன்’ திரைப்படத்தில் வருவது போல சபா மேலாளர்கள் சிறிய கலைஞர்கள், பெரிய கலைஞர்கள் என பிரித்து நேரம் ஒதுக்கி நிர்வகித்து… (READ MORE)

Margazhi

, , , , , , , , ,

செப்பரம்பாக்கம் திறந்தால் நல்லது

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு பற்றி நகைப்பு மீம்ஸ் போடுவோருக்கும், அதைக் கண்டு பீதியடைவோர்க்கும்… வணக்கம். ஏரியைத் திறந்து விட வேண்டும். திறந்து விடுவதே நல்லது. 2015ல்…ஒரே நாளில் 50cm மழை பெய்து ஏரி நிரம்பி உடைந்தது. இன்று 2020ல்…தற்போது வரை 20cm பெய்துள்ளது. செம்பரம்பாக்கத்தை இப்போதே திறந்து கொஞ்சம் நீரை வெளியேற்றுவது நல்லது. ஏரியையும் மக்களையும்… (READ MORE)

பொரி கடலை

, , , , , ,

images-255619014787562127170..jpg

உலகிலேயே மிகச்சிறந்த இடம்…

பூங்கானத்தாயா என்று பேரப்பிள்ளைகளால் அழைக்கப்பட்ட பூங்காவனம் கிழவி இறக்கும் வரை படுக்கவேயில்லை. கம்பும் கேழ்வரகும் களியும் உண்ட திருவண்ணாமலைச் சீமையின் அந்தக் காலத்து உடம்பு கிழவிக்கு, கடைசி நாள் வரை நடமாடிக் கொண்டேயிருந்தது. வயதானவர்களுக்கு வரும் அல்ஜைமர் என்னும் மறதி நோய் பற்றி விழிப்புணர்வு இல்லாத அந்நாளில் கிழவி அந்நோயினால் பாதிக்கப்பட்டிருந்தது. எங்காவது புறப்பட்டு நடந்து… (READ MORE)

Manakkudi Manithargal, Uncategorized, பொரி கடலை

, , , , ,

screenshot_20180330-143804791243021.jpg

ஐயய்யப்பா…. உஸ்ஸ்… என்னா வெய்யிலு!’

‘ஐயய்யப்பா…. உஸ்ஸ்… என்னா வெய்யிலு!’ என் அடுக்ககத்தின் அடித்தளத்தில் மின் தூக்கிக்காகக் காத்திருக்கும் ஒரு பெண்மணி அருகிலிருந்த சுவற்றிடம் தன் அங்கலாய்ப்பைக் கொட்டிக் கொண்டிருந்தார். அதைக் கேட்டுக் கொண்டே இரண்டாவது மாடி நோக்கி நடக்க படிகளில் ஏறுகிறேன் ‘மிஸ்டர் கூல்’ஆக. திருவண்ணாமலை செங்கத்தின் வெக்கை உமிழும் 41 டிகிரியையே பார்த்தவனுக்கு, சென்னை ஆர் ஏ புரத்தின்… (READ MORE)

Self Help, Uncategorized

, , , ,

Chennai-Copy

‘நம்ம சென்னை’!

அதிகாலைப் பனியில் ‘க்க்கோவ்வ்வ்…’ என்று குரலெழுப்பும் அதே ஆர் ஏ புரத்து மாமரத்துக் குயில்… அரை மணி நேரத்தில்  கடக்கும் ஆயிரம் வாகனங்கள், அவை கிளப்பும் சத்தம், கக்கும் புகை, சுட்டெரிக்கும் சூடு, இவைகளைத் தாண்டி சேத்துப்பட்டு சிக்னல் இடப்புற சுவர்மீது மலர்ச்சியோடு சிரிக்கும் மஞ்சள் மலர்கள்… ‘யோவ் பெருசு, போலீஸ்தான் இல்லியே, போமாட்ட?’ என்று… (READ MORE)

ஆ...!, பொரி கடலை

, , , , , , , ,

‘சென்னை மீளும்!’

அடுக்ககக் குடியிருப்புக்கு வெளியே ஆறுபோல் சுழித்து ஓடும் நீர். ‘ஐயய்யோ தண்ணி, ஆட்சியாளர்கள் அக்ரமம், ஆக்ரமிப்பால் அவதி’ என்று அலறலாம் அல்லது நீரில் நடந்து வெளியே யாருக்கேனும் உதவமுடியுமா என்று பார்க்கலாம். இரண்டாவதை தேர்ந்தெடுத்து முழங்காலளவு நீரில் இறங்கிப் போகிறேன். போகப் போக இடுப்பளவு ஆழம், போகமுடியாது என்று போலீஸ் ஒருவர் தடுக்க வேறு புறம்… (READ MORE)

Self Help, பொரி கடலை

, ,

குளித்தவுடன் வியர்த்து ஊத்தினால்

குளிர்காலக் காலையிலும் குளித்தவுடன் வியர்த்து ஊத்தினால், ஒன்று, வெளியே வானிலையில் குறைந்தழுத்த மண்டலம் உருவாகிள்ளது அல்லது நீங்கள் சென்னையில் இருக்கிறீர்கள் என்று அறிக!   :பரமன் பச்சைமுத்து

ஆ...!

,