தலையாலங்கானத்துப் போர் மற்போராம்!

தலையாலங்கானத்துப் போர் பற்றி பாடமாகப் படித்திருக்கிறோம். ஆட்சியில் இருப்பது சிறுவன்தானே என எண்ணி, சோழன் பெருநற்கிள்ளி, சேரன் சேரல் இரும்பொறை, வேளிர்கள் திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருநன் (பெயர்களை கவனியுங்கள்!) ஆகிய எழுவரும் படையெடுத்து வந்ததும், ‘தன் கால் கிண்கிணி களைந்து ஒண்கழல் அணிந்து, தன் முதற்போருக்குப் புறப்பட்ட அன்றுதான் பால் குடித்தலை விட்டு சோறுண்டான்’ என்று புறநானூற்றுப் பாடல் (கொஞ்சம் ஓவர் மிகை!) சொல்லும் வண்ணம் போருக்குப் போனான் பாண்டிய நெடுஞ்செழியன் என்று படித்தறிந்திருக்கிறோம்.

(இதை தங்கள் பாடல்களில் பதிவு செய்த நக்கீரனாருக்கும், மாங்குடி மருதனாருக்கும் நன்றி!)

(அந்த ‘தலையானங்கானம்’ என்பது இன்றைய திருவாரூர் மாவட்டத்தில், குடவாசல் வட்டம் சிமிழி ஊராட்சியில் ஒரு கிராமாம். இன்று தலையாலங்காடு என்று மருவி அழைக்கப்படுகிறதாம்)

தலையாலங்கானத்து செருவென்ற அந்நிகழ்வு, இருபக்க நாற்படைகளும் மோதிக்கொண்ட பெரும்போர் அன்று. போர்க்கருவிகளின்றி உடல் வலிமையால், போர்த்திறத்தால் மல்லாடிப் பகைவர்களை வீழ்த்தும் மற்போர் அது என்று புதிய தகவலை ‘தமிழ்மணி’யில் தன் கட்டுரையில் தந்துள்ளார் முனைவர் வாணி அறிவாளன்.

நியூஸ்! வியப்பு!

இன்று டோக்கியோ ஒலிம்பிக்ஸில் நாடுகள் மல்போரில் விதிகளோடு மல்லுக்கட்டுவது போல, அன்றே படைகளை தூர நிறுத்திவிட்டு, விதிகளோடு மல்போரில் செய்திருக்கிறார்கள். தலைவனின் வெற்றி தோல்வியை நாட்டின் வெற்றி தோல்வியாக ஏற்றிருக்கிறார்கள். தோற்றவர் தோல்வியை ஏற்றுக் கொண்டு வெண் கொற்றக் குடையைக் கூட தந்துவிட்டு திரும்பியிருக்கிறார்கள்.

போரிலும் விதிகளோடு இயங்கியிருக்கிறார்கள்!

– பரமன் பச்சைமுத்து
25.07.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *