ஆசிரியனாக அகமகிழ்கிறேன்

‘நிறைய பண்ணிப் பாத்துட்டேன். எதையும் சரியா பண்ண முடியலை. மனசு கஷ்டமா இருக்கு. எதில போறதுன்னே வழி தெரியல! எனக்கு எது வரும்ன்னே எனக்குப் புரியல!’

சில ஆண்டுகளுக்கு முன்பு மனக்குமுறலோடும் கண்ணீரோடும் மாணவனாக வந்து நின்று நம்மிடம் செய்யப்பட்ட பகிர்வு இது. 

சில சந்திப்புகள், சில முடிவுகள், புதிய பாதை தீர்மானிப்பு,  புதிய இலக்குகள், கிட்டத்தட்ட தினந்தோறும் செவுளில் அடி என்பது போன்ற கடினமான கண்டிப்புடன் கூடிய திருத்தங்கள், தொடர் கண்காணிப்புகள், பயிற்சி வகுப்புகள், ஒன்றையே திரும்பத் திரும்ப செய்யச் சொல்லுதல் என வழிகாட்டுதல் – செயல்படுத்துதல் என இருபுறமும் உழைப்பு என செய்ததன் பலன் இதோ இன்று…

‘தேர்வெழுதி இண்டஸ்ட்ரி சர்ட்டிஃபிகேஷன்’ முடித்து வென்ற ‘மாஸ்டர் இல்லுஸ்ட்ரேட்டர்’ சான்றிதழை கையில் வைத்துக் கொண்டு நிற்கிறான்.  வரைகலை, வடிவமைப்பு, காணொளியாக்கம், எடிட்டிங் என திறன்களை வளர்த்துக் கொண்டு உறுதியான கரங்கள் பெற்று நிற்கிறான், மலர்ச்சி மாணவனாக.

‘டேய்… ஆஃபீஸ்ல என் அக்கவுண்ட்ல காசு வாங்கிட்டுப் போய், ஸ்வீட் வாங்கிட்டு வா! மொத்த ஆஃபீஸுக்கும் குடு!’

( என் தந்தைக்கு கொடுத்த வாக்குகளில் ஒன்று அவரது ஆசியால் நிறைவேறுவதாக உணர்கிறேன்!)

எல்லோருக்குள்ளும் அளப்பரிய ஆற்றல் உண்டு. சரியான வழிகாட்டுதலின் மூலம், தொடர் உழைப்பின் மூலம் ஆற்றலை வெளிக்கொணர்ந்து திறமைகள் கைவரப் பெற்று உயரங்கள் தொடலாம்.

வளர்வதற்கு இன்னும் வெளி இருக்கிறது, தொடுவதற்கு நிறைய வானம் இருக்கிறது.

ஆசிரியனாக அகமகிழ்கிறேன்,
இறைவனருளில் இன்புறுகிறேன்!

வாழ்க! வளர்க!

– பரமன் பச்சைமுத்து
01.03.2022

#Malarchi
#TeacherMoments
#MalarchiMaanavargal
#AdobeIllustrator
#Illustrator
#Paraman
#Sivavelan
#Parikshith

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *