முன் உழைப்பு

‘ஜக்கியை பதற வைத்து விட்டார் சமஸ்!’ ‘சமஸின் கேள்விகளுக்கு சரியான பதில்கள் தந்துள்ளார் ஜக்கி!’ என்றெல்லாம் இரு வகையாக செய்யப்படும் விவாதங்களுக்கு வெளியே நின்று ஒன்றைப் பார்க்கிறேன்.

ஒருவரை நேர்காணல் செய்யும் முன் அவரைப் பற்றி மேய்ந்து ஆராய்ந்து விவரம் சேகரித்துக் கொண்டு போவது மொத்த நேர்காணலையும் சத்தானதாக மாற்றிவிடும். கேள்விகளும் ஆழமாகும், கடைவதால் வரும் பதில்களில் அனுபவமும் மனிதரும் வெளிப்படுவர்.

தமிழின் மிக முக்கிய தொலைக்காட்சி சானல் ஒன்றில் நேர்காணலுக்கு போயிருந்த போது, ‘உங்களைப் பத்தி நெறைய சொல்ல வேணாம். எனக்கு டைம் இல்ல.  நீங்க சொல்ல சொல்ல லைவ்ல கேட்டுகிட்டு, அப்படியே அதிலிருந்து கேள்வி கேட்டுக்கறேன்!’ என்று என்னிடம் சொன்ன அந்த ‘புகழ்பெற்ற தொகுப்பாளினி’யை நினைத்துப் பார்க்கிறேன்.

சமஸ் முன் உழைப்பு செய்திருக்கிறார். ஊடகவியலாளர்கள் கொள்ள வேண்டிய நெறி இது.

வாழ்க!

– பரமன் பச்சைமுத்து
மதுராந்தகம்
27.02.2023

#Samas #JaggiInterview #Paraman #ParamanPachaimuthu

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *