ஏர் இந்தியா பணிப்பெண்ணுக்கு பய உணர்வு வந்து விட்டது நம்மால் இன்று. அந்த வகையில் ஒரு சின்ன சங்கடம்தான் நம் மனதில்.
‘சார்… பேட்டரி, பவர் பேங்க், எலக்ட்ரானிக் ஐட்டம் எதுவும் இருக்கா இதில்?’
போர்டிங் பாஸ் தரும் இடத்தில் என் பெட்டியை உள்ளே எடுத்துக்கொள்ளும் முன் ஏர்-இந்தியா ஊழியர் வழக்கமான பாதுகாப்பு நெறிமுறைகள் சார்ந்து செய்யும் விசாரணையை செய்தார்.
‘ம்… பவர்பேங்க், மொபைல் எல்லாம் என் கேபின் பேக்ல இந்த ஷோல்டர் பேக்ல இருக்கு!’
‘ஓக்கே சார்!’
‘ம்… அதில் ரேசர் இருக்கு. அதில் பேட்டரி இருக்குமே!’
‘சார்… என்ன பேட்டரி? ஐயோ! அது சார்ஜபிள் பேட்டரிதானே?’
‘இல்லம்மா! டியூராசெல் யூஸ் அண்ட் த்ரோ பேட்டரி பயன்படுத்தும் பவர் ரேசர்!’
முகம் மாறி அடுத்த கவுண்டரின் சக ஊழியரை பார்த்துக் கொண்டே நம்மிடம், ‘ட்ரிப்பிள் ஏ பேட்டரியா?’
‘ஆமாம்! அயர்ன் பாக்ஸ்ஸும் உள்ள இருக்கு!’
‘என்ன சார் சொல்றீங்க?’
‘எப்பயும் எடுத்துப் போறதுதான்!’
‘இதுக்கு முன்ன இதல்லாம் எடுத்துகிட்டு ட்ராவல் பண்ணிருக்கீங்களா?’
‘ஒரு 120 முறையாவது பண்ணிருப்பேன்! பல ஊரு, பல நாடுகள்!’
‘ம்… சார், எதுவும் ப்ராப்ளம்னா நீங்க வந்து க்ளியர் பண்ணனும்.’
‘நிச்சயம்!’
‘கேட் நம்பர் 3 சார்!’ என்று அவர் சொன்ன குறிப்போடு போர்டிங் பாஸ் வாங்கிக் கொண்டு நகர்ந்தவனை திரும்பவும் அழைத்தார் அந்தப் பெண்மணி, ‘சார் எதுக்கும் உங்க ஃபோன் நம்பர குடுத்துட்டு போங்களேன்!’
பல முறை பல நாடுகளுக்கு பல ஊர்களுக்கு இவற்றோடு நாம் பயணித்திருக்கிறோம்தான் என்றாலும், என் விமானம் கோவையில் இறங்கும் வரையில் அந்தப் பெண்மணி ஒரு லேசான கலவரத்திலேயே இருப்பார் என்று நினைக்கவே சங்கடமாக உள்ளது.
இனி அடுத்த முறையிலிருந்து ரேசரை தோள் பையில் வைக்க வேண்டுமோ!
– பரமன் பச்சைமுத்து
சென்னை விமான நிலையம்
31.05.2023
#ChennaiAirport #ParamanTouring #Paraman #ParamanPachaimuthu #ParamanLifeCoach #LifeCoach