வயது முதிர்ந்து பேரப்பிள்ளையோடு விளையாடுதல் வீட்டுக்கு காய்கறி வாங்குதல் என அப்பிராணியாய் வாழும் ஓய்வுபெற்ற காவல்துறை சிறைத்துறை அதிகாரி நேர்மையான தன் பிள்ளைக்கு ஆபத்து வந்ததும் ரத்த ருசி கண்ட ‘டைகர்’ ஆக மாறி கோதாவில் இறங்கும், ஏழு கடல் ஏழு மலை தாண்டிய மந்திரக் கூண்டில் கிளியின் உயிர் எடுக்கும் கதையாக கிரீடம் எடுக்கும் கதை. அதை தன் வழக்கமான பாணி டார்க் ஹ்யூமர், ஆக்ஷன், எமோஷன் எல்லாம் கலந்து அதற்குள் ரஜினியை கனகச்சிதமாக பொருத்தி நெல்சன் செய்திருக்கும் அழகான வீச்சு ‘ஜெயிலர்’.
எஸ்பிபி குரலில் பாடல் ஆயிரம் பேர் சுற்றி ஆடல் என ‘என்ட்ரி சாங்’, காலை உயர்த்தி சுற்றினால் கீழே சுழலும் புயல்,
இளம் ஹீரோயினோடு டூயட், ‘லல்லல் லல்லல்லா…’ என உற்சாகமாக துள்ளி ஓடுதல் என வழக்கமான ரஜினியிஸங்களைத் துறந்து விட்டு வயதுக்கேற்ற பாத்திரத்தில் நிறைய உடல் மொழி காட்டும் ரஜினிக்கு ஒரு பூச்செண்டு. சாதாரணமாகத் துவங்கும் படத்தில் சாதாரணமாக வந்து இணைந்து கொள்கிறார் ரஜினி. அதன் பிறகு மொத்த படமும் அவரே.
‘சின்ன டைனோசர்தான் பேசறதே!’ தொடங்கி படம் முழுக்க ரசிகர்கள் கொண்டாடும் காட்சிகள் பல உண்டு. தளபதி, கபாலி போல ரஜினிக்கு நிறைய தெளிவான முகபாவங்கள் கொண்ட படம்.
பல இடங்களில் ரஜினி ரசிகர்களுக்கு விருந்து.
ரஜினிக்கு அடுத்த படியாக படத்தை ஆக்கிரமிப்பவர் அந்த மலையாள மொழி பேசும் வில்லன் விநாயகன். ஆசிட் தொட்டியோ, ஆர்பரிக்கும் வில்லத்தனமோ, அப்படியே பத்து ரூபாய் பிச்சை எடுப்பதோ அனைத்திலும் அள்ளுகிறார், ரத்தம் தெறிக்க தெறிக்க.
ரஜினி ஃப்ளாஷ் பேக் நன்று. வயதும் சோர்வும் தெரிகிறது என்றாலும் ரஜினிக்கு 73 வயது என்பது நம்பும்படி இல்லை.
அனிருத் பாடலிலும், பின்ணணியிலும் பட்டையைக் கிளப்புகிறார்.
முதல் பாதி தெறிக்க விடும் படம், இரண்டாம் பாதியில் கொஞ்சம் படுத்து எழுந்து மறுபடியும் கடைசி 45 நிமிடத்தில் பரபரவென்று பற்றிக் கொள்கிறது. ‘சிறையதிகாரி நாட்டின் கேங்ஸ்டர்களோடு கூட்டணியில் இருப்பாரா?’ போன்ற லாஜிக் கேள்விகள் வரவே செய்கின்றன. சுனில் – வைபவ் – தமன்னா காட்சிகளை நறுக்கினால் படம் வேகமெடுக்கும் என்ற எண்ணம் வரவே செய்கிறது. திரையிலிருந்து நம் முகத்தில் ரத்தம் தெறிக்கும் அளவிற்கு படத்தில் ரத்தம்.
நெல்சன் தானும் தப்பித்து படத்தையும் காப்பாற்றி விட்டார். படம் முழுக்க திரை முழுக்க ரஜினி.
வி-டாக்கீஸ் வெர்டிக்ட் : ‘ஜெயிலர்’ – ஜெயிக்கிறார். பாருங்கள்.
- திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து