Monthly Archive: April 2019

அவேங்கேர்ஸ்

அவெஞ்செர்ஸ் எண்டு கேம் : திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து

” // எல்லாம் முடிந்தது என்று எல்லோரும் வாழும் நிலையில், ஐந்து ஆண்டுகளுக்குப் பின் ‘ஒரு எலி அசைந்ததால் ஓர் எறும்பு எழுகிறது, எறும்பின் எழலால் மறு எழுச்சி பெறுகிறது உலகம்’ // “ ………….. பிரபஞ்சத்தையே கட்டுப்படுத்தும் சக்தி கொண்ட சக்தி கற்களை போராடிக் கைப்பற்றி தனது கை விரல்களுக்கு மேல் பதித்துக் கொண்ட… (READ MORE)

Manakkudi Talkies

, , , , ,

தி.மலை வெய்யிலில் திரியும் மனிதர்கள்

நடிகர் விஜய் நடித்த ‘புலி’ படத்தில் சுட்டெரிக்கும் நெருப்புக் குழாய்க்குள் நுழைந்து வெளியே வரும்படியான சோதனை ஒன்றை நடத்தி மனிதர்களையும் சிறப்பு சக்தி பெற்றவர்களையும்(வேதாளம்!) பிரித்துப் பார்ப்பதாக ஒரு காட்சி வரும். வேங்கிக்கால் – தண்டராம்பட்டு – சோமாசிப்பாடி – திருவண்ணாமலை சுற்று வட்டாரத்தில் இருப்பவர்கள் அப்படியொரு சக்தி பெற்ற வேதாளங்களைப் போலவே தெரிகிறார்கள். கொளுத்தும்… (READ MORE)

Uncategorized

கடவுளின் கதை : நேஷனல் ஜியாக்ரஃபிக்

‘திடீரென எழுந்த ஒரு பெரிய சுனாமி அலையால் எங்கள் கப்பல் தாக்கப்பட்டு நான் தூக்கியெறியப்பட்டேன். கடலின் அடியாழத்திற்குள் விழுந்த நான் கொஞ்சம் கொஞ்சமாக நினைவிழந்தேன். வெகுநேரம் கழித்து எங்கிருந்தோ ஓர் ஒளி வருகிறது. ஒளியை நோக்கிப் போகையில்தான் நான் தனியே செயலற்றுக் கிடக்கும் என் உடலைப் பார்க்கிறேன், இறந்து விட்டேனென்று அறிகிறேன். அந்த ஒளி, ‘உனக்கு… (READ MORE)

Uncategorized

‘இண்டிகோ விமானம் ஏறி கோவை வந்த திருவண்ணாமலைத் தண்ணீர்’: பரமன் பச்சைமுத்து

மார்வாடி மொழி பேசும் ராஜஸ்தானிய இன பெரும் புள்ளி ஒருவரது இல்லத் திருமணத்தின் விருந்திற்கு விமரிசையாக வேண்டும் என்று திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா ஆட்களை பெருந்தொகை கொடுத்து வரச் செய்தார்களாம். சென்னையில் வந்து இருட்டுக்கடை அல்வா செய்து தர ஆள், அம்பு, சேனை, சாமான், செட்டு என்று நெல்லையிலிருந்து எல்லாமும் கொண்டு வந்த அவர்கள்… (READ MORE)

Uncategorized

பூமியில் இருந்தாலும், வானத்தில் பறந்தாலும் விடாது இது என்னை!

குறிப்பு: மலர்ச்சி மாணவர்கள் / என்னிடம் வாழ்வியல் பயிற்சி வகுப்பிற்கு வந்தவர்களுக்கு மட்டுமே இது நன்றாகப் புரியும். 🌸🌸 சென்னையிலிருந்து கோவைக்கு இண்டிகோ விமானத்தில் பயணித்தேன். இருக்கையில் இருந்த என்னிடம் வந்த கொல்கத்தாவைச் சேர்ந்த விமானப் பணிப்பெண்… ‘மிஸ்டர் பரமன்’ ‘ஸார்… யு ஹேவ் பீன் புக்டு வித் ஸ்பெஷல் சர்வீஸஸ். அண்டு ஹியர் ஈஸ்… (READ MORE)

Uncategorized

காடை

‘தாய்க் காடை’ : பரமன் பச்சைமுத்து

‘மாமா… இதெல்லாம் எதுக்கு தட்டனும்?’ மூன்றாம் வகுப்புப் படிக்கும் ஆதிரையான் மாமாவிடம் கேட்டான். மாமாவோடு இருப்பதென்றால் ஆதிரையானுக்கு அலாதி விருப்பம், கூடவே வயலுக்கு போவதென்றால் கேட்கவா வேண்டும். அந்தி சாயும் வேளையில் தகர டப்பாக்களையும், தட்டுகளையும் எடுத்துக் கொண்டு சைக்கிளில் ஆதிரையானை வயலுக்குக் கூட்டி வந்தார் மாமா. மணக்குடியிலிருந்து தச்சக்காடு அய்யனார் கோவில் வரை சைக்கிள்… (READ MORE)

Manakkudi Manithargal, ஆ...!, பொரி கடலை

, , , , ,

20190418_0843233679278638902612156.jpg

ஒரேயொரு வாக்கைப் பதிவு செய்ய ஒரு நாள் ஒதுக்கி ஊருக்குப் போய் வருவது

வாக்குப் பதிவு செய்துவிட வேண்டும் என்பதற்காக மணக்குடி வந்தேன். வாக்கு பதிவு மையம் பொதுவான மற்ற இடங்களைப் போல மணக்குடியிலும் பள்ளிக்கூடம்தான். ஆரம்பமே அசத்தலாக இருந்தது. வாக்குச் சாவடியின் வாயிலில் பெரும் வளைவும், வாழைமரங்களும் இருந்தன. பல ஆண்டுகளாக எந்த பிரச்சினையும் இல்லாமல் பணிகள் மிக அமைதியாக நடந்தேறும் வாக்குச்சாவடியாம் இது. விருது பெற்ற வாக்குச்சாவடி… (READ MORE)

Uncategorized

p_ho000066265157473412004423994.jpg

 ‘சூப்பர் டீலக்ஸ்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து:

திருமணத்திற்கு முன்பு உயிராய்க் காதலித்த பழைய காதலன், கணவன் இல்லாத போது வீட்டிற்கு வரவே, அவனோடு உறவு கொள்கையில் அவன் இறந்து விடுகிறான்; வீட்டை விட்டு ஓடிப் போன மனிதன் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பி வருகிறானே என்று மனைவியும் மகனும் தவித்துக் காத்திருக்க, அவன் அப்பாவாக வராமல் அம்மாவாக வருகிறான்; பதின்ம வயது விடலைகள்… (READ MORE)

Manakkudi Talkies

, , , ,

கீத்து காஞ்சிடும்

‘புது இயர்ஃபோன் சரியாயிருக்கான்னு சோதிக்கனும்ப்பா!’ என்று மறுமுனையிலிருந்து பேசும் மகன் பரமனிடம், ‘தென்னங்கீத்து வெட்டி காயப் போட்டேன். இன்னும் பத்து நிமிஷத்துல அதை பின்னனும். இல்லன்னா வடிவம் மாறிடும், பின்ன முடியாது. அப்புறம் கூப்டட்டுமா!?’ என்று சொல்லும் தந்தை பச்சைமுத்து. மணக்குடி வீட்டின் பின்புறம். படமெடுத்து உதவியவர் – பரிக்‌ஷித். 🌸

Uncategorized