Tag Archive: meditation

தவம்

ஆழ் தியானம் ஒரு சாதகருக்குள் கொண்டு வந்து ஊற்றும் சக்தியை எந்த புரத பல்நுண்சத்து பானங்களாலும் தர முடியாது. தியானம் ஒருவரின் உடலையும் உடலைத்தாண்டிய சங்கதிகளையும் உயிர்ப்படைய செய்து விடுகிறது. – பரமன் பச்சைமுத்து 28.11.2023

Uncategorized

, ,

கண்ணுக்குத் தெரியா பிணைப்பொன்று

தினசரி செய்யப்படும் மூச்சுப் பயிற்சியும் தவமும் தொடக்கத்தில் நேரடி மாயமந்திரங்கள் எதுவும் புரியாது. ‘சூ… மந்திரக்காளி!’ என்று கையை உயர்த்தினால், எதிரிலிருக்கும் செடியெல்லாம் ஒன்றும் வீழாது. ‘அப்புறம் எதுக்கு பரமன் இதையெல்லாம் செய்யனும்?’ பயிற்சிகள் தொடர தொடர, உள்ளே எதுவோ ஊறும். மனநிலை மாறும், அது வாழ்வை பார்க்கும் விதத்தையே மாற்றியே போடும். பயிற்சிகள் தொடரத்… (READ MORE)

Spirituality

, , , , , , , ,

ஒரு கிண்ணம் பிரபஞ்ச சக்தி…

ஒரு கிண்ணம் பிரபஞ்ச சக்தி உச்சந்தலையில் கவிழ்த்து விடப்படுகிறது, நெற்றிக்கும் உச்சிக்கும் நடுவே சில துளிகள் உள்ளிறங்கி விடுகின்றன போலும், தவத்தில் அமர்ந்த கணங்களில். #தவம் #Meditation பரமன் பச்சைமுத்து 30.04.2018 Www.ParamanIn.com

Spirituality

, ,

சரணடையும் பொழுதில்…

அதிகாலையிலெழுந்து அவனை சரணடைவதில் கிடைக்கும் அனுபவம் அலாதியானது. பாசுரங்கள், பதிகங்கள், பாமாலைகளென்ற எந்த சத்தங்களுமின்றி, எதுவுமிலா இவன் எல்லாமுமான அவனை நோக்கி வெறுமனே இருத்தலிலிருந்து குவிப்பது ஓர் உணர்வின் உன்னதம். அங்கே கிடைக்கும் பிணைப்பு அவனருள்! ஆழ்வோம்! #தவம் #தியானம் #சரணடைதல் – பரமன் பச்சைமுத்து திருவண்ணாமலை 31.03.2018 www.ParamanIn.com

Spirituality

, , , , , , , ,

நானற்றுக் கிடந்த பொழுதுகளில்…

நானற்றுக் கிடந்த அந்த பொழுதுகளில் நான் எங்கே போயிருந்தேன், எப்படித் திரும்ப வந்தேன்! பரமன் பச்சைமுத்து 01.11.2017 Www.ParamanIn.com

Spirituality

, , , , ,

கண்ணுக்குள்ளே கருந்திரை

வெளியே இலகுவாக மூடப் பட்ட இமைகளுக்கு உள்ளே கருந்திரை போர்த்தப்படும் கண்கள் இறுகும் அந்தக் கணம் தொடங்குகிறது உள்முகப்பயணம்! #தவம் #தியானம் பரமன் பச்சைமுத்து 24.10.2017 Www.ParamanIn.com

Spirituality

, , , , ,

கில் த புத்தா…

‘ஈஃப் யூ மீட் அ புத்தா, கில் த புத்தா’ என்று சொன்னவன் எப்பேர்ப்பட்ட ஆசானாக இருந்திருக்கக் கூடும்! #தவம் #தியானம் பரமன் பச்சைமுத்து 20.10.2017 Www.ParamanIn.com

Spirituality

, , ,

கின்னத்தை கவிழ்த்து மெழுகி…

மெல்ல மெல்ல உணர்வுகள் ஒடுங்கி ஒரு நிலைப்படும் புள்ளிக்கு முன்னே, உயிராற்றல் நிறைந்திருந்த ஒரு கின்னத்தை மேலே கவிழ்த்து உடலில் ஊற்றி மெழுகுவதைப் போன்ற அந்த இணைப்பைத் தாண்டி இனி எந்த உருவம் இருக்கிறது வணங்குவதற்கு! பரமன் பச்சைமுத்து 17.10.2017 Www.ParamanIn.com

Spirituality

, , , , , , ,

உடலே நானல்ல…

உடலே நானல்ல. இது நான் இப்போது நிறைந்திருக்கும் ஒரு கருவி; அதி உன்னதமான, எனது இப்போதைய, தலையாய கருவி. பரமன் பச்சைமுத்து 16.10.2017 www.ParamanIn.com

Spirituality

, , , ,

தியானம் போதையல்ல…

தியானம் போதையல்ல, ‘தியானத்தில் அமர்கிறேன் நான்’ என்றுக் காட்ட முயற்சிப்பது போதை. விபூதியும், குறிப்பிட்ட நிறத்தை அணிவதும், சின்னங்கள் தரிப்பதுவும் கூட போதையை ஊற்றி வளர்ப்பவைதானே. ஆன்ம பயிற்சி செய்கிறேன் நான் என்று எவர்க்கு காட்டவேண்டும், எதற்கு காட்ட வேண்டும்! பரமன் பச்சைமுத்து 15.10.2017

Spirituality

, , , , ,

சும்மா இருக்க…

‘சும்மா இரு’ என்று சும்மா சொல்லவில்லை அவர்கள். ஏதும் செய்யா சும்மா இருக்கும் நிலை வர நிறையச் செய்ய வேண்டியிருக்கிறது. #தவம் #தியானம் #Trance பரமன் பச்சைமுத்து 13.10.2017 Www.ParamanIn.com

Spirituality

, , , ,

உள்ளே உயிர் ஊற…

உள்ளே உயிர் ஊற வைக்கின்றன தொடர்ந்து செய்யும் மூச்சுப் பயிற்சியும் ஒரு சில நிமிடத் தவநிலையும். பரமன் பச்சைமுத்து 04.09.2017 Www.ParamanIn.com

Spirituality

, , , , , , ,

உடல் நிலை, உடல் கடந்த நிலை

உயிராற்றல் பாய உடலை வைத்திருப்பது வேறு, உள்ளே கரைந்து கிடப்பது என்பது வேறு. முதலானது இரண்டாவதிற்குக் கூட்டிப்போக உதவலாம், ஆனால் அதுவே இதில்லை. வாய்க்கும் போதே விளங்குகிறது சில ஆழமான உண்மைகள். பரமன் பச்சைமுத்து 03.10.2017

Spirituality

, , , , , , ,

அலாதித் தருணங்கள்

கை விரல்கள் கனத்து மெதுவே கண் விழிக்கும் வேளையில் நமது உடலே வெறும் உடலாகத் தெரிந்து கலைந்து போகும் அந்த சில விநாடிகள் அலாதியானவை! #தியானம் – பரமன் பச்சைமுத்து 17.08.2017 Www.ParamanIn.com

Self Help, பொரி கடலை

, , , , , ,

Marathinayam - Copy.jpg

மரத் தியானம்…

தியானத்திலிருந்து மெதுவே மீண்டு வெளி வருகையில் பால்கனிக்கு பக்கத்தில் நிற்கும் கருவேப்பிலை மரம் கூட தியானத்தில் உறைந்து நிற்பதாய் தோன்றுகிறது. மேற்பக்க கிளையின் இலைகள் காற்றில் ஆடினாலும் வேப்ப மரம் உள்ளே பெரும் அமைதி கொண்டு நின்று தியானிப்பதாகவே தோன்றுகிறது.  தூரத்து மொட்டைமாடியில் காயவைத்த துணிகளை எடுக்கும் யாரோ ஒரு அக்கா மட்டும் ஏன் இத்தனை… (READ MORE)

Self Help, Spirituality

, ,