
தினசரி செய்யப்படும் மூச்சுப் பயிற்சியும் தவமும் தொடக்கத்தில் நேரடி மாயமந்திரங்கள் எதுவும் புரியாது. ‘சூ… மந்திரக்காளி!’ என்று கையை உயர்த்தினால், எதிரிலிருக்கும் செடியெல்லாம் ஒன்றும் வீழாது.
‘அப்புறம் எதுக்கு பரமன் இதையெல்லாம் செய்யனும்?’
பயிற்சிகள் தொடர தொடர, உள்ளே எதுவோ ஊறும். மனநிலை மாறும், அது வாழ்வை பார்க்கும் விதத்தையே மாற்றியே போடும்.
பயிற்சிகள் தொடரத் தொடர, உயர்நிலை சக்தித் துளிகள் படரும். ஒவ்வொரு நாளும் செய்ய செய்ய கண்ணுக்குத் தெரியா, கையால் தொடமுடியா கம்பியில்லா பிணைப்பொன்று பிரபஞ்சத்திலிருந்து வரும் அவ்வேளைகளில். வேறென்ன சொல்வது? தினசரி செய்வதை, செய்ய வேண்டியதை தொடருங்கள்!
– பரமன் பச்சைமுத்து
19.08.2022
#Spiritual #Existense #MalarchiMahaMudra #Meditation #Pranayama #Moochu #Yoga #ParamanOnSpirituality