Tag Archive: Manakkudi

உடலும் உள்ளமும் இருந்தால் போதும்

ஒரே நேரத்தில் உடலுக்கு உறுதியும் தந்து வளையும் தன்மையும் தரும் ஓர் உன்னதம் யோகா.  வீடு, வெளி, உள்ளே, வெளியே என எங்கும் செய்யலாம்.  யோகப் பயிற்சி செய்ய உடலும் உள்ளமும் இருந்தால் போதும். இன்று மணக்குடியில் வானம் பார்த்த வயலின் பாட்டையான பெருவரப்பில் வானத்துக்கடியில் இதோ ஓர் யோக ஆசனப் பயிற்சி! -பரமன் பச்சைமுத்துமணக்குடி,18.09.2021… (READ MORE)

பொரி கடலை

, , , , , ,

wp-1629016304303.jpg

குழந்தைகளோடிருக்கையில்…

குழந்தைகளோடிருக்கையில் இருக்கும் இடத்திலிருந்தே வேறோர் உலகிற்கு உடனடியாகக் கடத்தப்படுகிறோம். ஒரு குழந்தையைத் தூக்கும் போது உண்மையில் நாமே தூக்கப்படுகிறோம். (திண்டிவனம் அருகே தேசிய நெடுஞ்சாலை பயண வழி உணவக வளாகத்தில் மகிழ்ந்திருந்த தருணங்கள்) #Children #Dhuruvan பரமன் பச்சைமுத்து15.08.2021

பொரி கடலை

, , ,

wp-16106883271396509394169969006271.jpg

மாட்டுப்பொங்கல் கோலம்

எல்லா நாட்களிலும் மாக்கோலம்தான் என்றாலும், மார்கழியில் பூசணிப்பூவோடு பெரிதாகும் கோலம், தை பிறந்ததும் தெருவடைத்து போடப்படுகிறது.  தை இரண்டாம் நாள், மாட்டுப்பொங்கல் அன்று மணக்குடியில் போடப்படுவது மிக வித்தியாசமானது.  இதை கோலமென்றும் சொல்ல முடியாது கட்டங்கள் என்றும் சொல்ல முடியாது. இரண்டும் சேர்ந்தவை இவை. அரிசி மாவால் வெள்ளைக் கோடுகளும், செங்காமட்டை (செங்கல் துண்டுகளை இடித்து… (READ MORE)

பொரி கடலை

, , , , ,

wp-16011008007623596063854740053067.jpg

‘புள்ள வூடு’ அல்லது ‘நடேசம் பிள்ளை’

மணக்குடி ஒரு சிறு விவசாய கிராமம். அஞ்சலகம் கூட அடுத்த ஊரான குறியாமங்கலத்தில்தான் என்றால் மருத்துவமனையைப் பற்றிக் கேட்கவா வேண்டும்! மணக்குடி, குறியாமங்கலம், ஆயிபுரம் என்ற மூன்று கிராமங்களுக்கும் நடேசம் பிள்ளை என்றழைக்கப்படும் ஆர்ஐஎம்பி முடித்த ஹோமியோபதி கற்ற நடராஜன் பிள்ளை மருத்துவம் பார்த்தார். கிழக்குப் பார்த்த நத்தகோகாபால் பிள்ளையின் வீட்டு் வடவண்டைச் சுவற்றை வலது… (READ MORE)

மு பச்சைமுத்து அறக்கட்டளை

, , , , , ,

என் குரங்காசனக் காரணம்…

வள்ளியம்மைப் பாட்டி நல்ல உயரமும் திடகாத்திரமான உடலமைப்பும் கொண்டவர். உழவு தவிர நெல் விதை விதைத்தல்,  நடவு, களை பறித்தல், அறுவடை, உளுந்து – பயிறு விதைத்தல், உளுத்தஞ்செடி பிடுங்குதல் என எல்லா வேலைகளிலும் ஆட்களோடு சேர்ந்து தானும் இறங்கிச் செய்பவர். அறுவடை முடிந்த கோடை கால வயல்களில் மாடுகளைக் கூட்டிப் போய் மேய விடுபவர்…. (READ MORE)

Manakkudi Manithargal, Spirituality, பொரி கடலை

, , , , , , , , ,

ஒரு குளத்தின் கதை

அல்லிக் கொடிகளால் நிறைந்திருக்கும் பாப்பாக்குளம். அந்தக் குளத்தையும் சேர்த்து மொத்தம் ஐந்து குளங்கள் இருந்தாலும், மணக்குடியைப் பொறுத்தவரை குளமென்றால் இருப்பதிலேயே பெரிதாக இருந்த பாப்பாக்குளம்தான். குளத்தின் தென்கிழக்கு மூலையில் பிள்ளையார் கோவில் பின்புறமுள்ள அரசமரத்தையொட்டி ஒரு படித்துறை இருக்கும். தென்மேற்கு மூலையில் ஆலமரத்தையொட்டிய மற்றொரு படித்துறையும் உண்டு. ஆலமரத்துத்துறை என்று அதற்கு பெயர் என்றாலும், ஊரின்… (READ MORE)

Manakkudi Manithargal, Uncategorized

, , , , ,

எனக்கு மீன் பிடிக்கத் தெரியும் பன்னீரு…

சைவனென்றாலும், ரஷ்யாவின் விளாடிமிர் புடின் போல வெற்று மார்போடு குளிர் ஏரியில் இறங்கிப் பிடிக்கவில்லையென்றாலும், மீன் பிடித்த அனுபவங்கள் உண்டெனக்கு. வீராணத்தில் தண்ணீர் திறந்து விட்டால் மானம்பாத்தான் வாய்க்கால் வழியே சில தினங்களில் எங்கள் ஊரை வந்தடையும். வாய்க்கால்களில் மதகுகளில் நீர் புறண்டு ஓட, அதைக் காண சிறுவர்கள் நாங்கள் ஓடுவோம். ‘இங்க பாரு, ஆயிவரத்து… (READ MORE)

பொரி கடலை

, , , , , , ,

இலங்கையில் பிறந்து தமிழர்கள் இதயத்தில் வாழும் பாலநாதன் பெஞ்சமின் மகேந்திரன்… தமிழ் சினிமாவிற்கு நேச்சுரல் லைட்டிங் பார்க்கப் புதிய கண்களைத் தந்தவனே, நீ செல்லுலாய்டில் எழுதிப் போனது, தமிழ் சினிமாவின்  ‘அழியாத கோலங்கள்’, கமல், ஶ்ரீதேவி, அர்ச்சனா, ஷோபா,  பாலா, வைரமுத்து, சசிகுமார், தனுஷ், வெற்றிமாறன்… என்று தேசியவிருது குவிப்போர் அனைவரும், உன்னோடு கைகோத்தோர் அல்லது… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , , , ,