‘மாம்பிகு’ இப்படியொரு வார்த்தையைக் கேட்டிருக்கிறீர்களா? முன்பு எடப்பாடியார் இதை நிறைய பயன்படுத்தினார். இப்போது சட்டசபையில் கட்சி வித்தியாசமில்லாமல் பலரும் பயன்படுத்துகின்றனர்.
‘மாண்புமிகு’ என்கிற வார்த்தையைத் தான் பேசிப் பேசி இப்படி ‘மாம்பிகு’ என்றாக்கி விட்டார்கள்.
அந்தக் காலங்களில் ‘சோழ நாடு’ என்பது ‘சோணாடு’ என்று மக்கள் வழக்கில் இருந்ததாக சில வரலாற்று ஆசிரியர்கள் சொல்கிறார்கள். தேங்காயை ‘தெங்கம்’ ‘தெங்கம்பழம்’ என்று சொல்கிறது சங்கப் பாடல்கள்.
பார்த்தசாரதி – பாசாதி, முகுந்தன் – முந்தன், சிதம்பரம் – சேம்பரம், புவனகிரி – போனரி, மாயவரம் – மாயரம், திருவண்ணாமலை – திருநாமல, சிவகங்கை – சிவிங்க, திருவல்லிக் கேணி – ட்ரிப்லிக்கேணி போல வழக்கில் சொற்கள் மருவத்தானே செய்யும்.
‘மாம்பிகு’கள் இப்போது ‘மாம்பிகு’வை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
– மண்டு
#TNPolitics #tamil #Tamilwords #ParamanPachaimuthu #பரமன்பச்சைமுத்து #ParamanLifeCoach