Monthly Archive: September 2017

யோகா தமிழர்களின் கலை…

சீமானுக்கோ, ஜக்கிக்கோ, வேறு எவருக்கும் எல்லா அம்சங்களிலும் ஆதரவு என்ற நிலை எடுப்பதில்லை நான். இது ஒரு பெருஞ்சுதந்திரம். அவர்கள் சொல்லும் எல்லாவற்றையும் ஏற்றாக வேண்டிய கட்டாயமில்லை. அதே மாதிரி அவர்களிடம் இருந்து நல்லது வந்தால் எதிர்க்க வேண்டியதில்லை. நான் எந்த வண்ணமும் பூசிக் கொள்ளாததால் இதைச் செய்ய முடிகிறது. சமீபத்திய சீமானின் யோகா பற்றிய… (READ MORE)

Uncategorized

பச்சைக் கடல் சிஷெல்ஸ்

இந்துமாக் கடலின் இந்தக் கோடியில் நீர் பச்சையாக இருக்குமென்று அறியேன், சிஷெல்ஸ் வந்திறங்கும் வரை. தமிழ் மன்றத்தில் மலர்ச்சி உரையாற்ற வந்த என்னை ஊர் சுற்றிக் காட்டிய இவ்வூர் நண்பர்கள் இங்கேயும் அழைத்துச் சென்றனர். மலையும் மலையின் பச்சைப் பசேல் காட்டையொட்டிய கடலின் பச்சை நிற நீரையும் பார்த்துப் பரவசப் பட்டேன். இறங்கிக் மூழ்கிக் குளித்துக்… (READ MORE)

பொரி கடலை

, , , , , , ,

சிசெல்சு தமிழ்மன்றத்தில் உரையாற்றினேன்…

கிழக்கு ஆப்பிரிக்காவின் தீவுகளின் தேசமான சிசெல்சு தேசத்தின் தமிழ் மன்றத்தின் ஆடித்திருவிழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று ‘மகிழவே பிறந்தோம்’ என்ற தலைப்பில் மலர்ச்சி உரை ஆற்றினேன். தமிழர்கள் ஒரு குடும்பமாய் வாழ்கிறார்கள், தமிழ்ப்பள்ளி வழியே அடுத்த தலைமுறையிடம் தமிழ் வளர்க்கிறார்கள். நிகழ்ச்சியின் முடிவில், ‘சார்… இந்த நாட்டுக்கும் நம்ம ஆளுங்களுக்கும் தேவையான விஷயத்தை சொன்னீங்க… (READ MORE)

Paraman's Program

, , , , , , ,

திட்டமிட்டு நாம் இயங்குவதும், திட்டமிடாமல் சில நிகழ்தேறுவதும் கலந்ததே வாழ்க்கை…

வாழ்வின் பெரும்பாலான முக்கிய நிகழ்வுகள் நமது முன்கூட்டிய திட்டமிடலை மீறி தானாகவே நிகழ்பவையே. திட்டமிட்டு நாம் இயங்குவதும், திட்டமிடாமல் சில நிகழ்தேறுவதும் கலந்ததே வாழ்க்கை. ‘நானெல்லாம் திட்டமிடுவதே இல்லை. இந்த நேரத்திற்கு இதைச் செய்யணும், இதுக்குள்ள இதை முடிக்கணும் என்ற கட்டுப்பெட்டியான வாழ்வை நான் வாழ்வதில்லை!’ என்று சொல்பவர்களிடம் ‘வீட்டிற்கு இந்த மாதம் முழுதிற்கும் தேவையான… (READ MORE)

Media Published, VALARCHI Tamil Monthly

, , , , , , ,

sanjeekumar - Copy

தந்தைக்குதவும் தனயன்…

‘எனக்கு எக்ஸாம் இருக்குல்ல, அப்புறம் ஏன் என்னை வேலை செய்யச் சொல்ற?’ ‘அப்பா ஐ ஃபோன் X வருது. நீ எப்ப வாங்குவே?’ ‘பிக் பாஸ் பாக்கறது ஒன்னும் தப்பு கெடையாது’ ‘நான் நல்லாத்தான் படிக்கறேன், அவங்க ஏனோ மார்க் போட மாட்டேங்கறாங்க’ என்று சிணுங்கும் பிள்ளைகள் வளரும் அதே நகரத்தின் மையப்பகுதியில் இது எதற்கும்… (READ MORE)

VALARCHI Tamil Monthly

, , , , , , , , , , ,

வைரமுத்துவிற்கு மதிப்பு கூட்டித் தந்த மதன் கார்க்கி…

கவிப்பேரரசு வைரமுத்துவின் தமிழ் மேல் மரியாதையும், கொடுக்கப் பட்ட தலைப்பிற்கு எப்போதும் அவர் மதிப்பு கூட்டுவார் என்பதில் நம்பிக்கையும் உண்டெனக்கு. தி இந்து நாளிதழின் ‘யாதும் தமிழே’ தலைப்பிலிருந்து அரங்கு அதிர ‘தமிழே யாதும்’ என்று மாற்றி உரைத்ததில், நவோதயாப் பள்ளிகள் வந்தால் இருமொழிக் கொள்கையோடு வரட்டும் என்று முழங்கியதில், பாணன் – பாடிணி பற்றிய… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , , , , , , , , , ,

யாதும் தமிழே…

கல்வெட்டு ஆராய்ச்சியாளர் ஐராவதம் மகாதேவன் (தினமணி முன்னாள் ஆசிரியர்), வில்லிசைச் கலைஞர் சுப்பு ஆறுமுகம், இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி, கரிசல்காட்டு கதைசொல்லி கி.ரா, திண்டிவனத்து தமிழ்ப்பள்ளி பேராசிரியர் ஆகியோர்க்கு இந்து தமிழ் நாளிதழ் ‘தமிழ் திரு’ விருதுகள் தந்து கௌரவித்தது அட்டகாசம். குடவாயில் பாலசுப்ரமணியம் சொன்ன தமிழக நீர் மேலாண்மையைப் பற்றிய அரிய தகவல்கள் சில… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , ,

தூக்கமல்ல தூக்கத்தைப் போன்றதோர்…

தூக்கமல்ல தூக்கத்தைப் போன்றதோர் ஆழ் நிலை. ஓய்வென்றால் அது ஓய்வு. தியானமென்றால் அது தியானம். கண் விழித்ததும் உடல் கொண்டிருக்கும் இறுக்கம் இல்லா தளர்வு உன்னதம். பரமன் பச்சைமுத்து 15.09.2017

Spirituality

, , , , , , ,

IMG_5891 - Copy

மாணவர் மலர்ச்சி 2017

பன்னிரண்டாம் வகுப்புப் பயிலும் மாணவர்களும் மாணவிகளுமாக இருநூற்றியைம்பது பேர் தங்களது ஆசிரியப் பெருமக்களோடு கலந்து அமர்ந்திருக்கும் அவையில் ‘படிப்பில் சுட்டி தேர்வில் வெற்றி!’ என்னும் தலைப்பில் உரையாற்றும் வாய்ப்புப் பெற்றேன். பள்ளி மாணவர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் மலர்ச்சி மாணவர்கள் நிர்வகித்து நடத்தும் ‘மாணவர் மலர்ச்சி’ திட்டத்தின் இவ்வாண்டு வேலைகள் தொடங்கும் இடமாக சென்னை அரும்பாக்கம்… (READ MORE)

Paraman's Program

, , , ,

eating - Copy

‘வயிறு நிறைந்ததை வயிறே சொல்லும், முதல் ஏப்பம் உணர்த்தும்’

கேள்வி: ‘வயிறு நிறைந்ததை வயிறே சொல்லும், முதல் ஏப்பம் உணர்த்தும்’ என்று ஒரு கல்லூரி விழாவில் நீங்கள் பேசியதை கேட்க நேரிட்டது. வயிறு நிறைந்து முதல் ஏப்பம் வருவதே தெரிவதில்லை எனக்கு. எனக்கென்ன வழி? பதில்: வயிறு நிறைந்ததும் ஒரு வித சமிக்ஞை செய்து ‘போதும்டா தம்பீ!’ என்று சொல்கிறது நம் வயிறு. அதுவே அந்த… (READ MORE)

VALARCHI Tamil Monthly

, ,

நல்லழுகை…

வெறுமனே கிடந்த நிலையிலிருந்து மீண்டெழும் முன் உயர்த்திய கைகளின் வழியே பாய்ந்து கைகளை இறுக்கி முகத்தை தலையை நிறைக்கும் அந்த பிணைப்பு சில சமயம் கதறியழ வைத்துவிடுகிறது. அழுகை… நல்லழுகை! பரமன் பச்சைமுத்து 14.09.2017

Spirituality

, , , , ,

ஒவ்வொரு சமூகத்தின் பின்னேயும்…

கேரளத்தில் மன்னர்களுக்கும் கோவில் விக்கரகங்களுக்கும் பல்லக்குத் தூக்கும் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த அந்த சமூகத்தின் அந்நாளைய வலியை, அவர்களது பெண்டிர்களை அடிமையாக்க நடந்த துயரங்களை, அதிலிருந்து மீண்டெழுந்து நின்ற கதையை உணர்ச்சியோடு பகிர்ந்து கொண்டார் மலர்ச்சி மாணவர் ஒருவரின் தந்தை அவர்களது கடைக்கு நான் சென்றிருந்த போது. நாடார்கள் வணங்கும் பெரியாண்டவர் பற்றி விவரித்தார் அவர். ‘சாணர்கள்’… (READ MORE)

பொரி கடலை

,

மூச்சியக்கம் நடைபெறுகிறதா, நின்று விட்டதா!’…

மூச்சியக்கம் நடைபெறுகிறதா, நின்று விட்டதா!’ என்று மெல்லியதாய் இயங்கும் மனமும் அடங்கிப் போகும் அந்த நிலை அலாதியானது. எவ்வளவு முயற்சி செய்தாலும் விளக்க முடியா அந்நிலையை அனுபவித்தால் உணரலாம். பரமன் பச்சைமுத்து 13.09.2017 Www.ParamanIn.com

Spirituality

, , , , , ,

உடல் நிலை, உள்ளத்து நிலை கடந்தால்…

யோக ஆசனங்கள் உடல் நிலை பயிற்சிகள். உடல் நிலைப் பயிற்சிகள் உள்ளத்து நிலைப் பயிற்சிகளுக்கு இழுத்துப் போகலாம். மூச்சுப் பயிற்சி உடல் கடந்து உள்ளத்து ஒருநிலைப்பாட்டு நிலைக்கு இழுத்துப் போகலாம். இந்த உடல் நிலை, உள்ளத்து நிலைகளை கடந்தால் வருவது உன்னத நிலை. வெவ்வேறு இயக்கங்களிலிருந்து வெறுமனே இருக்கும் நிலை, உன்னத நிலை. வாய்ப்பது அவனருள்!… (READ MORE)

Spirituality

, , , , , , , ,

வைரமுத்துவின் உவேசா பற்றிய கட்டுரை அனுபவம்…

எழுத்தாளனை ஆழமாய் தெரிந்து கொள்ளும் போது முன்பு படித்த அதே அவனது எழுத்துக்கள் இன்னும் ஆழமாய் புரியும். அதே எழுத்துக்களை எழுதுபவனே படிக்கக் கேட்க இன்னும் சிறப்பாக விளங்கும், உள்ளே இறங்கும். சிறப்பாய் எழுதவும் அதை வாசித்து வெளிப்படுத்தவும் தெரிந்தவராயிருந்தால்… கிடைக்கும் அனுபவம் ஒரு கொண்டாட்டம். வைரமுத்துவின் ஆழமான ஓர் ஆராய்ச்சிக்கட்டுரையை அவர் வாயாலேயே படிக்கக்… (READ MORE)

பொரி கடலை

, , , , , , ,

wp-image-889211178.jpg

மாற்றத்தில் சிறியது பெரியதென்று இல்லை…

நேற்று மலர்ச்சி உரை நிகழ்ந்த கல்லூரியின் பேராசிரியை ஒருவரிமிருந்து வந்துள்ள குறுஞ்செய்தி இது. ஆசிரியர் தின நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மலர்ச்சி உரை ஆற்ற அழைக்கப்பட்டேன். பேராசிரியர்கள் பேராசிரியைகள் மற்றுமுள்ளோர் என இருநூற்றைம்பது பேர் இருந்த அந்த அரங்கில் வியர்வை சொட்டச் சொட்ட இரண்டு மணி நேரம் நிகழ்த்திய உரை உள் நுழைந்திருக்கிறது மாற்றம் நிகழ்த்தியிருக்கிறது… (READ MORE)

Paraman's Program, பொரி கடலை

, , , , , , , ,

wp-image-889211178.jpg

மாற்றத்தில் சிறியது பெரியதென்று இல்லை…

நேற்று மலர்ச்சி உரை நிகழ்ந்த கல்லூரியின் பேராசிரியை ஒருவரிமிருந்து வந்துள்ள குறுஞ்செய்தி இது. ஆசிரியர் தின நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மலர்ச்சி உரை ஆற்ற அழைக்கப்பட்டேன். பேராசிரியர்கள் பேராசிரியைகள் மற்றுமுள்ளோர் என இருநூற்றைம்பது பேர் இருந்த அந்த அரங்கில் வியர்வை சொட்டச் சொட்ட இரண்டு மணி நேரம் நிகழ்த்திய உரை உள் நுழைந்திருக்கிறது மாற்றம் நிகழ்த்தியிருக்கிறது… (READ MORE)

Paraman's Program, பொரி கடலை

, , , , , , , ,

தகப்பன் மனசு

‘காலேஜ் ஃபெஸ்ட்’டாம் மலையாள ஓணம் விழாவாம் தலைக்கு ஸ்பா செய்து சேலையுடுத்தி நிற்கின்றன செல்லக்கிளிகள்! ‘இங்க பாரு பொட்டு வச்சிக்கோ, கையில வளையல போடு!’ பரபரக்கிறது அம்மாக்காரியின் மனசு. ‘வளர்ந்து விட்டோம் நாங்களென்று சேலை கட்டி நின்னாலும் குழந்தைகளாத்தான் தெரிகிறார்கள்’ என்கிறது என் தகப்பன் மனசு. 08.09.2017 சென்னை www.ParamanIn.com

பொரி கடலை

, , ,

எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,

🌹🌹 #TeachersDay டீச்சர்… அப்பா அம்மா வீடு தாண்டி ஒரு உலகம் உறவு இல்லா அந்தப் பிஞ்சு வயசில், திடீரென எங்கிருந்தோ வந்து உறவாகிப் போன என் ஒண்ணாம் வகுப்பு டீச்சர்… அதட்டினாலே அழுதுவிடும் அந்த வயசில் அன்பா அருகில் அமர்ந்து அனா ஆவன்னா சொல்லித் தந்த டீச்சர் எலியும் சிங்கமும், காகமும் நீர்க் குடுவையும்… (READ MORE)

Media Published, Self Help

, , , , , ,

சேவலும் நாயும் சொல்வதென்ன : காணொளி

எதற்குமஞ்சா துணிவோடு வீறு கொண்டெழுந்துவிட்டால், எதிரில் எவர் வரினும் முடியாது போகும். சிறியோனாயினும் கண்களில் அச்சமின்றி நிற்போன் முன்னே பெரியோனும் அஞ்சுவரே. சிறியோரொல்லாம் சிறியோரல்லர், பெரியோரெல்லாம் பெரியோரல்லர்! அச்சம் கண்ட வலியோன் எளியோனாகி ஓடுகிறான். அச்சம் தவிர்த்த எளியோன் வலியோன் ஆகிறான். அச்சம் தவிர்… ஆளுமை கொள்! பரமன் பச்சைமுத்து 02.09.2017 Facebook.com/ParmanPage

Self Help, Uncategorized, பொரி கடலை

, , ,

சொல்ல என்ன இருக்கிறது

உடலில் சில நூறு சிறு ஊசிகள் இறங்கி மறைந்து அமிழ்ந்து கிடந்த அனுபவத்திலிருந்து வெளிவரும் போது தோன்றுவது ‘சொல்ல என்ன இருக்கிறது!’ #தவம் #தியானம் 02.09.2017

Self Help, Spirituality

, , ,