யோகா தமிழர்களின் கலை…

சீமானுக்கோ, ஜக்கிக்கோ, வேறு எவருக்கும் எல்லா அம்சங்களிலும் ஆதரவு என்ற நிலை எடுப்பதில்லை நான். இது ஒரு பெருஞ்சுதந்திரம். அவர்கள் சொல்லும் எல்லாவற்றையும் ஏற்றாக வேண்டிய கட்டாயமில்லை. அதே மாதிரி அவர்களிடம் இருந்து நல்லது வந்தால் எதிர்க்க வேண்டியதில்லை. நான் எந்த வண்ணமும் பூசிக் கொள்ளாததால் இதைச் செய்ய முடிகிறது.

சமீபத்திய சீமானின் யோகா பற்றிய அறிக்கை வரவேற்புக்குரியது. உதயசந்திரன் வழியே செங்கோட்டையன் செய்த கல்வி மாற்றங்களை எப்படிப் பாராட்டினேனோ, தமிழை செம்மொழியாக்கிய அன்று கலைஞரை எப்படிப் பாராட்டினேனோ, மழைநீர் சேகரிப்பு கட்டாயம் என்ற போது ஜெயலலிதாவை எப்படிப் பாராட்டினேனோ, உலக யோகா தினத்திற்கு எப்படி மோடியை பாராட்டினேனோ, அப்படியே இன்று சீமானை பாராட்டுகிறேன்.

👏👏👏

– பரமன் பச்சைமுத்து
சென்னை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *