பொரி கடலை

Lee quan yu2

எம் இனத்து இளைஞர்களை ஏற்றி விட்டவரே

இப்படி ஒரு தலைவன் என் தேசத்திற்கு கிடைக்கமாட்டானா என பலதேசத்து இளைஞர்களை ஏங்க வைத்தவர், சொற்பமாய் இருந்ததை சொர்க்கமாய் மாற்றியவர், தமிழ்நாட்டின் பல குடும்பங்களில் வறுமையொழியக் காரணமானவர், ஒன்றுமில்லாத ஓர் ஊரில் உழைப்பை ஊற்றி ஒளிரச்செய்தவர், உலகத்தையே அதை நோக்கி வரச் செய்தவர், மனிதனின் மகத்தான ஆற்றலுக்கு முன் மாதிரி, ஒரே வாழ்நாளில் இரண்டு நூற்றாண்டுகளுக்கு… (READ MORE)

பொரி கடலை

,

அதிக ஆசைகள் கொண்டவன் நான்…

அதிக ஆசைகள் கொண்டவன் நான். என் ஆசைகளைப் பட்டியலிட்டால்,  ‘பறவையாய் பிறந்திருக்க வேண்டியவன் பரமனாய் பிறந்து விட்டான்,’ என்று சொல்லத் தோன்றும். ஈழத்தீவிற்கு படகில் போக, இமயத்துப் பனியை இமைக்காமல் பார்க்க, நைல் நதியில் நனைந்து நிற்க, திரும்பப் போய் டோக்கியோ தெருக்களில் திரிய, சுமிதா நதியில் சுகமாய் சவாரி செய்ய,  யுரால் மலையில் ஆசியாவில்… (READ MORE)

பொரி கடலை

சிதம்பரத்தில் - Copy

சிதம்பரத்தில் ஒரு ஜோதி தெரிகிறது!

நிலத்தடி நீர் குறைகிறது, நீர் ஆதாரங்கள் சுருங்குகிறது என்றே எல்லோரும் பேசிக்கொண்டேயிருந்தால், எல்லாம் சரியாகிவிடுமா, நீர் பெருகி ஓடி வருமா? சிதம்பரத்தில் ஒரு ஜோதி தெரிகிறது. நெஞ்சில் நம்பிக்கை பிறக்கிறது. சிதம்பரம் நகரில் நிலத்தடி நீர் குறைந்தது என்ற கதை போய், சுனாமிக்கப்புறம் உப்பு நீர் வருகிறது என்பது விசனமாய் போனது. எல்லோரும் கவலை கொண்டிருக்கும்… (READ MORE)

பொரி கடலை

, ,

sachin

சுயசரிதையில் வருத்தத்தை வெளிப்படுத்தும் சச்சின்

வெளிவருவதற்கு முன்பே, கிரேய்க் சாப்பல் வீட்டிற்கு வந்து இப்படியெல்லாம் பேசினார், என் மனைவி அஞ்சலியும் நானும் இப்படியெல்லாம் வருந்தினோம் என்று சர்ச்சை கட்டி தனது சுயசரிதை நூல் பற்றிய எதிர்பார்ப்பைப் பற்ற வைத்த சச்சின், தனது ‘ப்ளேயிங் இட் மை வே’ நூலை வெளியிட்டு விட்டார். தனது பெயரை பெரிதாகப் போட்டு, நூலின் பெயரை சிறிதாகப்… (READ MORE)

பொரி கடலை

, , ,

Rajini Award

உத்திரப் பிரதேச எம்.பி.யும், உச்சநட்சித்திரம் ரஜினியும்…

இன்று வந்ததில் இரண்டு செய்திகள் கவனம் ஈர்க்கின்றன. ஒன்று – தமிழுக்காக உழைக்கும் பாஜாகாவின் தருண் விஜய். மற்றது – பாஜாகா அரசு ரஜினிக்கு தரும் விருது. உத்திரப் பிரதேச தருண் விஜய்க்கு தமிழ் மீது ஆசை, உச்ச நட்சத்திரம் ரஜினி மீது பாஜாவிற்கு ஆசை! தருணின் ஆசை நிறைவேறுவது தமிழுக்கு நல்லது. தாமரைக் கட்சியின்… (READ MORE)

Politics, பொரி கடலை

, , , , ,

எருமைமாடும், ஏரோப்ளேனும்…

“எருமைமாடு கூட ஏரோப்ளானில் இடிக்கும் அளவிற்கு வளர்ச்சி பெற்ற மாநிலம் எங்கள் மாநிலம்!” – என்று சொல்வார்களோ! #Aircraft 737 hit a buffalo in its takeoff roll in Surat(Gujarat) and got damaged – News

பொரி கடலை

,

நாய் பேசுமா?

என்ன சொன்னாலும், ‘லொள்’என்றே சப்தமெழுப்பும் நாயை ‘லவ் யூ’வென சொல்ல வைக்க முடியுமா? முயன்றிருக்கிறார் ஒருவர். பாருங்களேன். (வாட்ஸ் அப்பில் வந்தது)

பொரி கடலை

தஞ்சையில்…

என்னை மலைத்துப் போகச் செய்த, மனங்கவர்ந்த மாமன்னன் ராஜராஜனின் மண்ணில், ஆகஸ்டு 4ல் பிறந்த அவன் மகன் 52 தேசங்களை ஆண்டபோது தலைநகராய் இருந்த தஞ்சையின் வீதிகளில் உலாத்துகிறேன். வந்தியத்தேவனும், குந்தவை தேவியும், வீரநாச்சியாரும், பஞ்சன்மாதேவியும், பரவையும் நடந்த பிரதேசத்தில் சுவாசிக்கிறேன்!  

பொரி கடலை

Soorasamharam

இன்று சூரசம்ஹாரம்

தமிழ்க் கடவுள் முருகப்பெருமான் தனது வெஹிக்கிள் டெலிவரி எடுத்த தினம் இன்று. எத்தனையோ யுகங்களுக்கு முன்பு, ‘மலை மாவு சிந்த அலை வேலையஞ்ச,’ என்று திருப்புகழில் வருவதுபோல் செந்தூர் கடற்கரையில் நின்று அவன் வடிவேலெறிந்த தினம். இன்று செந்தூரின் கடற்கரை சூரசம்ஹார விழாவால் அல்லோலகல்லோலப் படும். நீல சமுத்திரமும், மனித சமுத்திரமும் சங்கமிக்கும். நாள் முழுக்க… (READ MORE)

Spirituality, பொரி கடலை

, , , ,