ஜோ எனப்பட்ட ஜெகன்நாதன்,
52லேயே அவசரமாகப் புறப்பட்டுப் போய் விட்டான்
நண்பர்களிடம் கடன் வாங்காதவன்
நன்னயம் மட்டுமே செய்தவன்
உறவுக்காக பொருளை விட்டவன்
உள்ளொன்று வைக்காதவன்
தாய் தந்தை போற்றியவன்
தாரத்தை தாங்கு தாங்கென்று தாங்கியவன்
சர்க்கரையை விட இனிமையானவன்
சர்க்கரை தின்ன உடலை தந்தவன்
பிள்ளைகளை தவிக்க விட்டு
புறப்பட்டுவிட்டான் வைகுந்தத்திற்கு
தேடித் தேடி நான் கொண்ட நண்பன்
தேட முடியா உலகிற்குப் போய்விட்டான்
எது நடக்கக் கூடாதென்று போராடினேனோ அதுவே நடந்துவிட்டதே, ஐயோ!
பத்து நாள் முன்பு பார்த்தேனே,
பாவி… நான் பார்க்க முடியாமலே போய்விட்டான்
எப்படிக் கடப்பேன் இனி புவனகிரியை,
எங்கே தேடுவேன் என் நண்பனை?
எப்படிப் பார்ப்பேன் அவன் தாயை தந்தையை மகளை மகனை மனைவியை!
கதறுகிறேன் கண்ணீர் வடிக்கிறேன், காணவே முடியாதே இனி அவனை!
ஜோ! ஐயோ, போய் விட்டாயே
கதறும்
பரமன் பச்சைமுத்து
06.05.2026
#joe #Jho #RipJagan #Bhuvanagiri #பரமன்பச்சைமுத்து #ParamanPachaimuthu #ParamanLifeCoach

