ஆண்டு அனுபவித்து துறவறம்…

ஆட்சியின் அதிகாரத்தில் முக்கிய பொறுப்பில் பெரு உயரத்தில் அமர்ந்து மொத்த செல்வங்களையும் அளந்து அனுபவித்த ஒருவரால் அத்தனையையும் துறந்து துறவறம் பூண முடியுமா!

துறந்தாரே அவர்! அவரது ஈரடிச் சீர் பாடல்கள்தான் இன்றுவரை ஆறாம் வகுப்பு மாணவர்களின் பாடத்தில் உள்ளது தமிழ்நாட்டில்.

தாயுமானவர்! திருச்சியை ஆண்ட விஜயரகுநாத சொக்கலிங்கரிடம் தலைமைக் கணக்கராக இருந்தாராம். இந்த ஊரில்தான் வாழ்ந்து ஆண்டு அனுபவித்து துறந்திருக்கிறார்.

வணக்கம் திருச்சி!

– பரமன் பச்சைமுத்து
25.10.2026

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *