
1938ல் கடற்கரையில் ஹிந்தி எதிர்ப்பு மாநாடு- மறைமலையடிகள், சோமசுந்தர பாரதி, ஈவெரா – ‘தமிழ் மாநிலம் தமிழருக்கே!’ முழக்கம்
1938 சிலம்புச் செல்வர் மபொசி ‘தமிழ் மாநிலம் வேண்டும்’ மாநிலம் முழுக்க மாநாடுகளும் போராட்டங்களும் நடத்திக் கொண்டே இருந்தார்.
1948 – ‘விசால ஆந்திரா’ ‘அகண்ட கர்நாடகம்’ ‘ஐக்கிய கேரளா’ ‘சம்யுக்த மகாராஷ்டிரம்’ ‘மகா குஜராத்’ என ஒவ்வொரு மொழி பேசும் மக்களும் தனி மாநிலம் கேட்டு போராட்டம்.
1952 – பொட்டி ஸ்ரீராமுலு தனி மாநிலம் கேட்டு உண்ணாவிரதம் இருந்து மரணமடைந்தது தெலுங்கு மக்களிடையே கொந்தளிப்பு உருவாக கலவரம் தொடங்கியது. 1.10.1953 ஆந்திரம் என்ற தனி மாநிலம் உதயம்.
27.07.1956 விருதுநகர் சங்கரலிங்கனார் ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி உண்ணாவிரதம். 76 நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு உயிர் நீத்தார்.
1.11.1956 பல இடங்களில் பல போராட்டங்களைத் தொடர்ந்து ‘மொழிவாரி மாநிலங்கள் செயல்படும்’ மத்திய அரசு அறிவிப்பு. நாடாளுமன்றத்தில் சட்டம். நடைமுறைக்கு வந்தது.
மெட்ராஸ் ஸ்டேட்டிலிருந்து கன்னடம் பேசுவோர் வசிக்கும் சில பகுதிகள் மைசூருடன் இணைக்கப்பட்டு கர்நாடகம் ஆனது, சில பகுதிகள் திருவிதாங்கூர் கொச்சி கட்டுப்பாடில் இருந்த பிரிந்து கன்னியாகுமரி மாவட்டம் என மெட்ராஸ் ஸ்டேட்டுடன் இணைப்பு, மலபார் பகுதிகள் கேரளத்துடன் இணைப்பு என மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கம். (கர்நாடகா, கேரளா ஆகியவை மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1ஐ கொண்டாடுகின்றனர்)
1957ல் தமிழ்நாடு பெயர் மாற்ற சட்டசபையில் நடந்த வாக்கெடுப்பு தோல்வி
1961 சோஷலிஸ்ட் கட்சியின் உறுப்பினர் பி சின்னத்துரை ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்ற பெயரை ‘தமிழ்நாடு’ என்ற மாற்ற தீர்மானம் கொண்டு வந்தார்.
1961ல் முதல்வர் காமராஜ் ‘நிர்வாகக் கடிதங்களில் மட்டும் மெட்ராஸ் ஸ்டேட் என்பதை மாற்றி தமிழ்நாடு என்று குறிப்பிட உத்தரவு பிறப்பித்து நடைமுறைக்கு கொண்டு வந்தார்.
1961 மாநிலங்களவையில் ஒன்று பட்ட மேற்கு வங்க கம்யூ கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பூபேஷ் குப்தா கொண்டு வந்த தீர்மானம் தோல்வி
1964 மாநிலங்களவையில் இராம. அரங்கண்ணல் கொண்டு வந்த தீர்மானம்.
1967 ஜூலை 18 சட்டமன்றத்தில் அண்ணாதுரை கொண்டு வந்த பெயர்மாற்றத்திற்கான தீர்மானம் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றது.
23.11.1968 நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு பெயர் மசோதா நிறைவேறியது.
14.01.1969 அன்றுதான் ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்பது அதிகாரபூர்வமாக ‘தமிழ்நாடு’ என்று அறிவிக்கப்பட்டது.
நாம் வசிக்கும் தமிழ்நாடு என்ற இந்த மாநிலத்திற்கு தமிழ்நாடு என்ற பெயர் இத்தனை முன்னெடுப்புகளால் வந்துள்ளது.
வாழ்க தமிழ்நாடு! வளர்க தமிழர்கள்!
– பரமன் பச்சைமுத்து
02.11.2026
பின் குறிப்பு:
எந்தக் கட்சிக்கும் சார்போ எதிர்ப்போ இல்லாமல், என்ன நடந்திருக்கிறது என்பதை தேடித் தேடிப் படித்து குறிப்பெடுத்து எழுதியது. உறுதி செய்து சரியானதையே தந்திருக்கிறேன். வேறு விவரங்கள் / திருத்தங்கள் இருந்தால் சொல்லவும், செவி மடுக்கிறோம். நன்றி!
#TamilNadu #MadrasState #MadrasPresidency #ParamanPachaimuthu #Sankaralinganar #Anna #Kamarajar #TamilnaduDay
