ஹாரி பார்ட்டரின்
துடைப்பமோ
பஞ்சாபில் வென்ற
ஆம் ஆத்மியின் சின்னமோ
குனிந்து நிற்கும்
முள்ளம்பன்றியின் முதுகோ
சீனத்துப் பெண்ணின் சிகை போல வேண்டுமென்று ஸ்ட்ரெயிட்னிங் செய்த
உள்ளூர் சிங்காரியின் காற்றில் பறக்கும் சிகையோ
மருத்துவக் கல்லூரி பதிவாளரின் கையொப்பமாம்!
வழுக்கைத் தலை வரப்பெற்று கையெழுத்திலாவது இருக்கட்டும் மயிரென்று வரைந்தாரோ!
樂
– பரமன்
( பொறுப்புத் துறப்பு: பகிர்வில் வந்த பதிவுக்கு நகையாய் எருதியது, யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை)