சிறுவனாக இருந்தபோது என்னை என் தந்தை இதே இடத்தில் தூக்கிச் சுமந்து மகிழ்ந்திருக்கிறார். என் மகள்களை தூக்கிக் கொண்டு இதே இடத்தில் மகிழ்ந்து திரிந்திருக்கிறேன்.
மூத்த தலைமுறை, இளம் தலைமுறை, இப்போது பிறந்து தவழும் வரும் தலைமுறை என வேர்கள், கிளைகள், விழுதுகள் மொத்தமாக ஆண்டுக்கொரு முறை போகும் குலதெய்வ வழிபாடு கூடலை ரசிக்கிறேன்.
‘இந்த இடத்தில் அந்த பாட்டி இருந்தார்!’ ‘பிறகு அவரது மகன்களான சித்தப்பாக்கள் இருந்தார்கள்’ ‘அப்பா இருந்தார், இன்று இவர்கள் இருக்கிறார்கள்’ ‘கூடவே, அடுத்தடுத்த வாரிசாக குழந்தைகளும் வந்து விட்டார்கள்’ என இருந்தவர்களையும், இருப்பவர்களையும், வருகிறவர்களையும் பற்றிய சிறுவயது முதலான அதி விரைவு மன ஓட்டம் சிலிர்ப்பைத் தரவே செய்கிறது.
அதே குலதெய்வக் கோவில், மரம், குளம், ஏரி, ஏரிக்கரை… குலம் தொடர்கிறது, தலைமுறைகள் நகர்கின்றன.
இறைவா நன்றி!
– பரமன் பச்சைமுத்து
(பண்ருட்டி)
15.08.2025
#ParamanTouring #ParamanPachaimuthu #ParamanLifeCoach #பரமன்பச்சைமுத்து #Kolapakkam #Panruti #Pachaivazhiyamman #Manakkudi