ஊருணியை குளங்களை காக்கும்…

‘பல்லவபுரி’யாக இந்த ஊர் இருந்த காலத்தில் பரமேஸ்வர பல்லவன், இரண்டாம் நந்தி வர்மன், பிறகு வந்த காகாதியர்கள், பிறகு வந்த பிற்கால சோழர்கள், பிறகு வந்த விஜயநகரத்து கிருஷ்ண தேவராயன் என காஞ்சிபுரத்தை ஆண்ட அத்தனை பேரும் இந்த குளத்தை சீர் செய்து பராமரித்துத்தான் இருந்திருக்கிறார்கள்.

ஊர் நடுவில் ஒரு குளம் என்பது சமய சம்பிரதாயம் என்பதோடு மண்ணுக்கும், பல்லுயிர்ப்பெருக்கத்துக்கும் எத்தனை உதவிகள் செய்யும் நோக்கம் கொண்டிருக்கிறது! அதனால்தானோ புதுக்கோட்டை நீர்நிலையில் ‘இந்த நீர்நிலையை தூர் வாருகிறவரின் பாதத்தை என் சிரத்தில் ஏந்துகிறேன்’ என்று பொறித்து வைத்திருக்கிறான் போல முதலாம் ராஜராஜ சோழன்.

ஊருணியையும், குளங்களையும், ஏரிகளையும் பொறுப்போடு சீரமைத்து மண்ணையும் மண்ணுயிர்களையும் காக்கும் ஒவ்வொரு மனிதரும் போற்றத்தக்கவரே!

அவர்கள் வாழ்வாங்கு வாழட்டும்,
அவர் தம் குலம் தழைக்கட்டும்!

வாழ்க! வாழ்க!

– பரமன் பச்சைமுத்து
காஞ்சிபுரம்
06.12.2025

#ParamanLifeCoach #ParamanPachaimuthu #ParamanTouring #பரமன்பச்சைமுத்து #ekambareswarartemple #kanchipuram #environment #environmentalprotection #Waterbodies #குளங்கள்
20251206_105038(2)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *