அப்பா…
எத்தனை எத்தனை கொடுத்தீர்கள் எங்களுக்கு!
உங்களிடம் பெற்றதை வைத்தே
இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
நீங்கள் தந்ததில்
பாதியையாவது பிள்ளைகளுக்குத் தந்துவிட்டால் நல்ல தகப்பனாவேன் நான்
வந்த வேலை முடிந்து
வாழ்ந்து முடிந்து நிறைவாகப் போய்விட்டீர்கள்
இன்னும் சில ஆண்டுகள் இருந்திருக்கலாம் என்ற
எண்ணம் ஆறாண்டுகள் ஆன பின்னும் இன்னும் ஈரமாகவே…
– பரமன் பச்சைமுத்து
#மார்கழி-மிருகசீரிடம்
02.01.2026
#பரமன்பச்சைமுத்து #ParamanPachaimuthu #MuPachaimuthu #MuPachaimuthuArakattalai #Manakkudi #Keezhamanakkudi