ராஜேந்திர சோழன் தஞ்சையிலிருந்து ஜெயங்கொண்டத்திற்கு வெளியே தேர்வு செய்யப்பட்ட புதிய இடத்திற்கு தன் தலைநகரை மாற்றி, அதன் அருகிலேயே சிவனுக்கு ஒரு கற்றளி எழுப்பிய போதே, சில காத தூரத்தில் புதிய தலைநகருக்கு வெளியே தனது மூதாதைகள் உருவாக்கிய ஏரி போலவே ஒரு பெரிய ஏரியை உருவாக்கினான்.
புதிய நகரம், கற்றளி, சந்தைகள் செய்தவன் நிலம் செழிக்க நல்ல நீர்நிலையும் வேண்டுமென்று திட்டமிட்டுள்ளான்.
கரிகாலன் கட்டிய கல்லணைக்கு அருகில் அன்பில் பகுதியிலிருந்து கால்வாய் வழியாக இந்தப் புதிய ஏரி நீர் வரத்து பெற வழி செய்தான். மிஞ்சிய உபரி நீர் தன் மூதாதை வெட்டிய வீராணத்திற்கு போகும் படி வழி வகை செய்திருக்கிறான்.
மேலை சாளுக்கியம், ஒட்டரம், கலிங்கம், கோசலம், வங்கம் என படையெடுத்துப் போய் கங்கையின் நீரை தன் புதிய தலைநகருக்குக் கொணர்த்தவன், அதைக் கொண்டு தான் கட்டிய கோவிலுக்கு குடமுழுக்கு செய்தான், தான் வெட்டிய அந்த பெரிய ஏரியில் கங்கை நீரை நிரப்பி அதற்கு ‘சோழ கங்கம்’ என்று பெயர் வைத்தான்.
நகரம் கங்கை கொண்ட சோழபுரம் என்று ஆனது. ஏரி சோழ கங்கம் ஆனது.
ஏரியின் வடிகால் வசதிகள் ஆக்ரமிப்புக்கு உள்ளாயின என்கிறார்கள். பின்னாளில் வந்த ஆட்சியாளர்கள் ஏரியின் நடுவில் கொஞ்சம் துர்த்தும் குழாய்கள் அமைத்தும் நெடுஞ்சாலையை வேய்ந்துவிட்டார்கள்.
இன்று கும்பகோணத்திலிருந்து சென்னைக்கோ, சென்னையிலிருந்து கும்பகோணமோ நீங்கள் பயணித்தால் அதன் வழியேதான் பயணிப்பீர்கள். இது ராஜேந்திர சோழன் வெட்டிய ஏரி என்பது தெரியாமலே பயணிப்பீர்கள்.
ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் நீர்நிலையாக பரவிக் கிடக்கிறது சோழகங்கம் இன்று பெயர் மாற்றம் பெற்று. சோழ கங்கத்தின் இன்றைய பெயர் – பொன்னேரி.
ஏரியில் இறங்கியும் கரையிலிருந்தும் காட்சிப்படுத்திக் கொண்டு நின்றிருந்தோம் நாங்கள்.
‘Exploring CHOLAS with PARAMAN PACHAIMUTHU!’
மலர்ச்சி மாணவர்களோடு, வரலாற்றின் பக்கங்கள் வழியே ஒரு பயணம்!
(நிறைவுப் பகுதி)
– பரமன் பச்சைமுத்து
09.01.2026
#ExploreCholas #ParamanPachaimuthu #பரமன்பச்சைமுத்து #ParamanLifeCoach #MalarchiVolunteers #MalarchiMaanavargal #malaravar #Gangaikondacholapuram #Rajendrachozhan #chozhagangam #Cholagangam #Ponneri #CholaPalace #ராஜேந்திரசோழன்




