சோழகங்கம் – சரித்திர ஆதாரம்

ராஜேந்திர சோழன் பற்றிய நமது பயணக்கட்டுரை தொடர் பதிவுகளில் ஒன்றான ‘சோழகங்கம்’ பற்றிய பதிவை படித்துவிட்டு, ‘அன்பிலிலிருந்து கொள்ளிடம் நீரை கொண்டு சென்றதற்கு ஆதாரம் இருந்தால் பதிவிடுங்கள்’ என்று ஆர்வத்துடன் கேட்டிருந்தார் Ponparappi Krishnamurthi பொன்பரப்பி கிருஷ்ணமூர்த்தி என்பவர்.

இதுதான் விஷயமென்பது மண்டையில் பதிந்து போய் இருக்கிறது, ஆதாரம் என்று கேட்கும் போது சரியான உறுதியான தகவல்களை தர வேண்டும் என்பதற்காக,
சோழர்கள் பற்றி நான் படித்த புத்தகங்களை மறுபடியும் அலமாரியிலிருந்து எடுத்து புரட்ட வேண்டியிருந்ததால் உடனே பதிவிட முடியவில்லை. இன்று நேரம் வாய்த்தது.

1. கல்கி, பாலகுமாரன் என புதினங்கள் செய்பவர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் என, சோழர்கள் என்றாலே உலகமே அடிப்படையாகக் கொள்ளும் முதல் நூலான நீலகண்ட சாஸ்திரியின் ‘சோழர்கள்’ ஆராய்ச்சி நூல் பாகம் 1ல் பக்கம் 314ல் ஆதாரம் உள்ளது.

2. தமிழ் வளர்ச்சித்துறை பதிப்பித்துள்ள டாக்டர் ராஜமாணிக்கனார் எழுதிய ‘சோழர்கள் வரலாறு’ நூலில் பக்கம் 192ல் ஆதாரம் உள்ளது.

3. தற்போதைய ஆனந்த விகடன் ஆசிரியரான வெ.நீலகண்டன் குங்குமத்தில் இருந்த போது எழுதி சூரியன் பதிப்பகத்தில் வெளியான ‘தமிழ்ப் பேரரசன் ராஜேந்திரன்’ நூலில் பக்கம் 85ல் ஆதாரம் உள்ளது. (இந்த நூலை அவரிடமிருந்து பரிசாகப் பெற்றேன் சில ஆண்டுகளுக்கு முன்பு).

இந்த முதல் சில நூல்களிலேயே போதுமான ஆதாரங்கள் இருந்ததால் குடவாயில் பாலசுப்பிரமணியம் போன்றோரை நோக்கி நான் செல்லவில்லை.

இந்த தகவல்கள் வேறு சிலருக்கும் பயன்படலாம், வியப்பை கூட்டலாம், சிந்திக்க வைக்கலாம் என்பதால் இங்கே அதை பதிவு செய்கிறேன்.

(‘Exploring CHOLAS with PARAMAN PACHAIMUTHU!’

மலர்ச்சி மாணவர்களோடு, வரலாற்றின் பக்கங்கள் வழியே ஒரு பயணம்! )

நன்றி!

வாழ்க!

– பரமன் பச்சைமுத்து
சென்னை
17.01.2026

#ExploreCholas #ParamanPachaimuthu #பரமன்பச்சைமுத்து #ParamanLifeCoach #MalarchiVolunteers #MalarchiMaanavargal #malaravar #Gangaikondacholapuram #Rajendrachozhan #chozhagangam #Cholagangam #Ponneri #CholaPalace #ராஜேந்திரசோழன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *