‘SALES Plus’ MALARCHI 1 Day Sales Workshop – Super Results!!!

திருநெல்வேலியிலிருந்து, பொள்ளாச்சியிலிருந்து, செங்கல்பட்டிலிருந்து, காஞ்சியிலிருந்து, புதுச்சேரியிலிருந்து, ஓசூரிலிருந்து, ஈரோட்டிலிருந்து, சென்னை பகுதிகளிலிருந்து என பல ஊர்களிலிருந்தும் தேடலோடு வந்து முதல் நாள் முன்னிரவு தொடங்கி நிற்காமல் அடித்துப் பெய்து மழையிலும் நிற்காமல் வந்து அரங்கு நிரம்ப கலந்து கொண்டவர்கள், மலர்ச்சி ‘SALES Plus’ முழுநாள் கருத்தரங்கிலிருந்து அள்ளிக் கொண்டு போனார்கள்.

’20 வருஷமா சேல்ஸ்ல இருக்கேன். இப்ப என் பார்வையும் வேகமும் மொத்தமாக மாறியிருக்கு. இனி வேற லெவல்ல சேல்ஸ் பண்ணுவேன்!’ என்று முதல் முறை மலர்ச்சிக்கு வந்த ஹரிஷ் என்பவரின் பகிர்வு,

‘எங்க முழுவேலையுமே சேல்ஸ்தான், மாசம் பல லட்சம் பண்றவங்க நாங்க. ஆனா, இந்த ஒரு கண்ணோட்டம், அந்த ஒரு முக்கிய பாயிண்ட்ட இத்தனை வருஷமா கவனிக்கவேயில்லீங்க. ச்சே! இனிமே பாருங்க!’ என்ற நொட்வொர்க் விற்பனையாளர் ஒருவரின் பகிர்வு,

‘தமிழின் மிக முக்கிய மிகப்பெரிய பத்திரிக்கையின் விற்பனைப் பிரிவில் பல ஆண்டுகளாக பணி செய்து நிறைய அனுபவம் கொண்டவன். இந்த ‘SALES Plus’ என்னை புதுப்பிச்சி, ஃபார்முலாஸ் குடுத்து நிமிர்த்தி உட்கார வைத்துள்ளது. மொத்த பார்வையும் மாறிவிட்டது. என் வேலை செய்யும் முறையை கொஞ்சம் மாற்றப் போகிறேன். எனர்ஜி நிறைய கிடைத்துள்ளது!’ என்று முன்னணி நாளிதழ் ஒன்றின் உயர் மட்ட விற்பனை அதிகாரி செய்த பகிர்வு,

‘எனக்கு சேல்ஸே தெரியாது. பட் எங்க நிறுவனத்துக்கு அது இப்ப தேவைப்படுது. அடிப்படை, பேஸ் தேவைப்பட்டது. அதான் வந்தேன், நிறைய கத்துகிட்டேன்!’ என்ற பெண்மணியின் பகிர்வு என இவை எல்லாமே மலர்ச்சி ‘SALES Plus’ உருவாக்கிய மாற்றங்களுக்கான உதாரணங்கள்.

மலர்ச்சி ‘SALES Plus’ல் பயிற்சி கொண்ட இவர்களது விற்கும் விதமும், இயங்கும் விதமும் மாறும். அவர்கள் பணியில் சிறக்கட்டும், தறுவனங்கள் உயரட்டும்! பிரார்த்தனைகள்!

அரங்கின் அளவு, இருக்கை எண்ணிக்கையால் பலருக்கு இடமளிக்க முடியவில்லை. அடுத்த பேட்ச்சில் வேறு ஊரில் உதவுவோம், விரைவில். இறைவன் துணை செய்வான்!

வாழ்க! வளர்க!

  • பரமன் பச்சைமுத்து
    சென்னை
    02.11.2022

‘Sales Plus’ – MALARCHI 1 Day Sales Workshop with PARAMAN PACHAIMUTHU

SalesPlus #Selling #Sales #SalesExcellence #SalesTraining #SalesCoaching #Paraman #LifeCoach #Coach #ParamanLifeCoach #ParamanPachaimuthu #SalesSkills #SalesForce #SalesWorkshop #Malarchi #MalarchiCourse #MalarchiWorkshop #MalarchiSalesWorkshop #MalarchiSalesProgram #Leadership #Market #BusinessDevelopment #Business #Entreprenuers #BusinessExcellence #VirpomVelvom #Malarchi1DayProgram

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *