காஃபி ஒரு காரணம்!

பல சமயங்களில் காஃபி ஒரு தேவையல்ல, மற்ற பிற காரியங்களை நிறைவேற்ற கொள்ளப்படும் காரணம், ‘காஃபி ஒரு காரணம்!’

தொடர் நெடுஞ்சாலைப் பயணத்தின் இறுக்கம் களைந்து தளர்வு பெற, தூக்கக் கலக்கம் உதிர்க்க, உட்கார்ந்தே வந்ததால் ஒரே நிலையில் அழுத்தம் பெற்ற L1,L2,L3களும் ‘ஸ்பைன் எரெக்ட்’ தசைகளும் நீட்சியும் தளர்வும் பெற, டீக்கடையில் இருக்கும் ஒரு மனிதனிடம் பெற, யாரோ வளர்த்து விட்டுப் போன தெருநாய் போல திரியும் துறவி போல வயிறு ஒட்டிய ராஜபாளையம் நாயை நெருங்கி அமர்ந்து தொடாமல் பார்க்க, காரிலேறியது முதல் தூங்கிக் கொண்டேயிருக்கும் பரியை எழுப்பி உட்கார வைக்க, டிரைவர் தூங்காமல் இருக்க, இப்படி ஒரு படமெடுத்துக் கொள்ள.. என பல காரியங்களுக்காக என் இந்த காஃபி ஒரு காரணம். காஃபி பல நேரங்களில் ஒரு காரணம்!

– பரமன் பச்சைமுத்து
புதுச்சேரி
09.03.2025

#ParamanTouring #பரமன்பச்சைமுத்து #ParamanPachaimuthu #lifecoaching #Coffee #Puducherry

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *