Yearly Archive: 2022

பச்சையப்பாஸ் சில்க்ஸ் திருவண்ணாமலை

🌸 ‘திருவண்ணாமலை வகுப்புக்கு வர்றீங்க! அப்படியே நம்ம புது ஷோருமூக்கு வரணும்!’ என்று நம் மலர்ச்சி மாணவரின் அழைப்பின் பேரில், திருவண்ணாமலை ‘பச்சையப்பா சில்க்ஸ்’க்கு போயிருந்தேன். (அவர்கள் விரும்பியபடி அங்கிருந்த பிள்ளையாருக்கு தீபம் காட்டினேன். நான் விரும்பிய படி கண் மூடி பிரார்தனை செய்தேன்) உண்மையைச் சொல்ல வேண்டுமானால் அசந்து போனேன். ஒரு திருமணத்திற்கு என்று… (READ MORE)

பொரி கடலை

மீன் கத்தரிக்கா

சுத்த சைவம்தான்,சாப்பிட உட்கார்ந்தேன்வதக்கித் தாளித்த கத்தரிக்காயை தட்டிலிருந்து எடுத்துக் கடிக்கையில்மீன் வறுவல் வாசனை வருகிறது… அடுத்த மனை கீழ்வீட்டில் வறுக்கிறார்கள்! – பரமன் பச்சைமுத்து

ஆ...!, கவிதை

, ,

இயக்குநர் வசந்த் : புத்தகக் கண்காட்சியில்

இயக்குநர் சிகரம் பாலசந்தர் சாரின் பாசறையிலிருந்து வந்தவர் என்பதைத் தாண்டி, ‘எஸ்பிபியை இப்படிப் பார்க்கிறாரே இவர்!’ என்று வியக்க வைத்து, அதை நமக்கும் கடத்தி எஸ்பிபி மீதான நம் பார்வையின் அடர்த்தியையும் கூட்டிவிட்டுப் போன திரைப்பட இயக்குநர் வசந்த் அவர்களோடு, நேற்று சென்னைப் புத்தகக் கண்காட்சியில்  ஜீரோ டிகிரி பப்ளிஷிங் அரங்கில் கொண்ட அளவளாவுதல் சில… (READ MORE)

பொரி கடலை

, , , , , ,

ஆசிரியனாக அகமகிழ்கிறேன்

‘நிறைய பண்ணிப் பாத்துட்டேன். எதையும் சரியா பண்ண முடியலை. மனசு கஷ்டமா இருக்கு. எதில போறதுன்னே வழி தெரியல! எனக்கு எது வரும்ன்னே எனக்குப் புரியல!’ சில ஆண்டுகளுக்கு முன்பு மனக்குமுறலோடும் கண்ணீரோடும் மாணவனாக வந்து நின்று நம்மிடம் செய்யப்பட்ட பகிர்வு இது.  சில சந்திப்புகள், சில முடிவுகள், புதிய பாதை தீர்மானிப்பு,  புதிய இலக்குகள்,… (READ MORE)

MALARCHI, Malarchi Maanavargal, பொரி கடலை

, , , ,

wp-16452038669085980429362768020932.jpg

என்னது திருக்கோஷ்டியூரா…!

பிள்ளையார்பட்டி கோவிலிலிருந்து வெளியே வந்து காரிலேறி ‘சிவனையும் பெருமாளையும் வணங்குவோர்க்கேயுள்ள திமிர்…’ என்ற முந்தைய பதிவை செல்லிடப் பேசியில் மூழ்கி எழுதி பதிவிட்டுவிட்டு நிமிர்கையில், ‘இறங்குங்க சார்!’ என்கிறார்கள். ‘இது என்ன ஊரு?’ ‘திருக்கோஷ்டியூர்?’ ‘அடடா! ராமானுஜர் திருக்கோட்டியூர் நம்பியிடம் கத்துகிட்டாரே, அதை மத்தவங்களுக்கு சொல்லிக் கொடுத்தாரே… அந்த ஊரா?’ ‘ஆமாம்!’ ‘ரெண்டு நாள் முன்னால… (READ MORE)

பொரி கடலை

, , , ,

wp-1645200769336.jpg

வணக்கம் பிள்ளையார்பட்டி

சிவனை பெருமாளை வணங்குவோர்க்கேயுள்ள திமிர் நமக்கும் கொஞ்சம் இருக்கிறது. ‘பிள்ளையாரைப் போய் பாக்கனுமா? சரி, நமக்காக ஸ்பெஷல் ஏற்பாடுகள் பன்றாங்க, போயிடுவோம்!’ என்றுதான் பிள்ளையார்பட்டி போனேன். அற்புதமான கட்டமைப்பு உள்ள கோவில். நேராக பிள்ளையார் அருகிலேயே கொண்டு போய் உட்கார வைத்தார்கள். விஐபி தரிசன ஏற்பாடுகள்! மாலை போட்டார்கள், பெரிய ஃப்ரேம் போட்ட படம் தந்தார்கள்…. (READ MORE)

பொரி கடலை

, , ,

21: புவனகிரி பள்ளி: நிறைவுபுவனகிரி பள்ளி: நிறைவு

*21* *புவனகிரி பள்ளி: நிறைவு* திரவியம் தேட திரைகடல் ஓடி, அனுபவங்களோடு திரும்ப வந்து ஊரெல்லாம் சுற்றி,முப்பத்தியேழு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் திடீரென்று உள்ளெழுந்த ஓர் உந்துதலால் புவனகிரிப் பள்ளியில் உடன் படித்த மாணவர்களைத் தேட, ஜெகன், சங்கர், பாலு, ராஜாராமன் என நால்வர் அகப்பட, வாட்ஸ்ஆப் குழுவொன்றைத் தொடங்கி வைத்தோம். ‘பள்ளி நினைவுகளை… (READ MORE)

புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

,

20:‘புவனகிரி பள்ளி : புவனகிரி டுடோரியல் சென்டர்கள்’

*’20’* *’புவனகிரி பள்ளி:’* ( சென்ற பதிவில் ஜனார்த்தனன் சார் பற்றிப் படித்து விட்டு அவர் நினைவுகளை சிறிதும் பெரிதுமாக பலர் எழுதியிருந்தனர். ‘தறி வாத்தியார் ஒருவரல்ல, இருவர்!’ என்று தகவல்களும் அனுப்பியிருந்தனர்.  புவனகிரி பள்ளி பற்றிய தொடர் பதிவு ஓர் அனுபவமாக உள்ளது என்று பலரும் மின்னஞ்சல் செய்திருந்தனர். தொடர்ந்து வாசிப்பதற்கும், வாசித்து வந்த… (READ MORE)

புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

,

கப்பக்காரத் தாத்தா : வெள்ளை முயல்

‘முயல் ரத்தம் குடிச்சிட்டு மைலுக்கு மைலு ஓடனும்!’ கப்பக்காரத்தா சொல்லிதான் இதை முதன்முதலில் கேட்டேன். கப்பக்கார தாத்தா முயல் வளர்த்தார். பள்ளியிலும் கதைகளிலும் அறிந்திருந்த முயலை வாழ்வில் முதன் முறையாக சிறுவனாக பார்த்தது அவர் வீட்டில்தான். கப்பக்காரத் தாத்தா என்று என் வயது சிறுவர்களும், ‘கப்பக்காரர்’ என்று மொத்த மணக்குடியும் அழைத்த அந்த தாத்தாவின் உண்மை… (READ MORE)

Manakkudi Manithargal

, , , ,

சார்பதிவாளர் அலுவலகங்கள் அசத்தல்

குடும்ப சொத்து ஒன்றை முறைப்படி எங்களுக்குள் பதிவு செய்து கொள்வதற்காக புவனகிரி சார் பதிவாளர் அலுவலகம் வந்தேன். வெளியில் பத்திரம் விற்பனையாளர், பத்திரம் எழுதித் தருபவர் என அந்த நிலை பணிகளும் பணியாளர்களும் அப்படியேதான் உள்ளனர். ஆனால், அரசின் பதிவாளர் அலுவலகம் அசத்துகிறது. ‘இந்த நேரத்திலிருந்து இந்த நேரம் உங்கள் வேலை, அப்போது வந்தால் போதும்!’… (READ MORE)

பொரி கடலை

,

19: புவனகிரி – பள்ளி : ஆசிரியர் நினைவுகள்’புவனகிரி – பள்ளி : அடிக்கும் வாத்தியார்’

19 புவனகிரி – பள்ளி : ஆசிரியர் நினைவுகள்’ 🌸 புவனகிரி பள்ளியில் அடிக்கும் வாத்தியார் எவரையாவது நினைவில் வைத்திருக்கிறீர்களா? அடி வாங்கியிருக்கிறீர்களா அல்லது எவனாவது அடி வாங்குவதை பார்த்து ஒடுங்கி நிமிர்ந்து உட்கார்ந்திருக்கிறீர்களா? ‘கொசகொச’வென்று பேசிக் கொண்டிருக்கும் வகுப்பில், ஒருவனுக்கு ‘பொளிச்’சென்று அடி விழுந்தால், மொத்த வகுப்பும் சப்தநாடிகளும் ஒடுங்கி முதுகின் முள்ளந்தண்டு ‘சர்க்’கென்று… (READ MORE)

புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

‘வாட் ஈஸ் எக்ஸ்டஸி?’

‘வாட் ஈஸ் எக்ஸ்டஸி?’ பல்வேறு பணிகளுக்கிடையே, எதை எழுவது எதைப்பற்றி எழுதுவது என்று தெரியாத ஆனால் பத்திரிக்கைக்கு முக்கிய முகப்புக் கட்டுரை கொடுத்தே ஆகவேண்டும் என்ற கெடு நிலையில், உட்கார்ந்து ஓர் அலைவரிசையில் ஏதோவொன்று பிடிபட்டு உள்ளுக்குள் அது வடிவமெடுக்க அதை எழுதத்தொடங்கி சுற்றியுள்ள உலகையே மறந்து லயித்து முடிக்கும் போது, மொத்தமாக ஒரு நல்… (READ MORE)

பொரி கடலை

,

18 : ‘புவனகிரி பள்ளி : தறி கூடம்’

*18* *’புவனகிரி பள்ளி : தறி கூடம்’* புவனகிரி பள்ளி அரசுப் பள்ளிதான், ஆனால் அதில் இங்கிலீஷ் மீடியம் இருந்தது தெரியுமா உங்களுக்கு? … (சென்ற பதிவைப் படித்து விட்டு ‘பன்னு ராமலிங்கம் கூரை மேல உட்கார்ந்தது, இந்த ரெண்டு பேரு இறந்து போனது பத்திதான் அப்ப மொத்த புவனகிரியும் பேசிச்சு பரமன்!’ என்று இ… (READ MORE)

புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

, , ,

‘புவனகிரி பள்ளி – புவனகிரி பாலம் தொட்ட வெள்ளாற்று வெள்ளம்’17: ‘புவனகிரி பள்ளி – புவனகிரி பாலம் தொட்ட வெள்ளாற்று வெள்ளம்’

17 ‘புவனகிரி பள்ளி – புவனகிரி பாலம் தொட்ட வெள்ளாற்று வெள்ளம்’  புவனகிரியில் ஓடுவது சுவேத நதி என்கிறார்களே? உண்மையா?…..  புவனகிரி பள்ளியில் படித்த ஜெயக்குமாரை தெரியுமா உங்களுக்கு? மொத்த புவனகிரிக்கும் தெரியும் அவனை. நான் ஒரேயொரு முறை புவனகிரி பள்ளியில் அவனை பார்த்தாக நினைவு. கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறந்து… (READ MORE)

புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

, , ,

16: புவனகிரி பள்ளி: புவனகிரியின் கத்தி வெட்டு ‘பெராக்கு’ வைபவம் புவனகிரி பள்ளி: புவனகிரியின் கத்தி வெட்டு ‘பெராக்கு’ வைபவம் ( ‘பரமன், புவனகிரியில் ஏதோ சமீபத்திய அதிசயம் என்று ஒரு பதிவில் குறிப்பிட்டு விட்டு அதை அப்படியே விட்டுவிட்டீர்களே?’ சரி, இந்த பதிவில் எழுதி விடுவோம்!) … சுமாராக 150 ஆண்டுகள் கொண்ட புவனகிரி… (READ MORE)

Uncategorized, புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

, , , ,

15: புவனகிரி பள்ளி : காமராசரின் திட்டம் – எம்ஜிஆர் திட்டம் – கீரப்பாளையம் பி.டி வாத்தியார்புவனகிரி பள்ளி : காமராசரின் திட்டம் – எம்ஜிஆர் திட்டம் – கீரப்பாளையம் பி.டி வாத்தியார்

15 புவனகிரி பள்ளி : காமராசரின் திட்டம் – எம்ஜிஆர் திட்டம் – கீரப்பாளையம் பி.டி வாத்தியார் (சென்ற பதிவில் நாராயண ஐயர் ஹோட்டல் பற்றி எழுதியிருந்ததைப் படித்து விட்டு ‘கணேஷ் பவன்’ ‘துர்கா பவன்’ என வேறு வேறு காலகட்டங்களில் அவ்வுணவகம் கொண்டிருந்த வேறு பெயர்களையும் இயங்கிய வேறு வேறு இடங்களையும் குறிப்பிட்டு நெகிழ்ந்து… (READ MORE)

புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

, , , ,

ஆசிரியரிடம் அடி வாங்கினேன் நேற்று

முப்பத்தியேழு ஆண்டுகள் கழித்து உங்கள் தமிழாசிரியரை ஒரு மேடையில் சந்திக்கிறீர்கள். அங்கேயே மேடையிலேயே கையை நீட்டச் சொல்லி அடிக்கிறார். எப்படியிருக்கும் உங்களுக்கு. எனக்கு பெரும் மகிழ்ச்சி! மேடையிலேயே கையை நீட்டச் சொல்லி ஓங்கி அடிக்கிறார். வலித்து இழுத்து விடுவேன் என்று நினைத்து அடித்தவருக்கு அதிர்ச்சி, ‘வலிக்கலியா உனக்கு?’ என்று மறுபடியும் அடிக்கிறார். இத்தனையாண்டுகள் கழித்து நமக்கு… (READ MORE)

மு பச்சைமுத்து அறக்கட்டளை

, , ,

14 புவனகிரி பள்ளி

*14* *புவனகிரி பள்ளி* புவனகிரி ‘நாராயண ஐயர் ஹோட்டல்’ தெரியுமா, உங்களுக்கு? …. (விளையாட்டாக புவனகிரி பள்ளியில் என்னோடு படித்த வகுப்புத் தோழர்கள் கொண்ட கட்செவியஞ்சல் குழுவிற்காக நாம் எழுதத் தொடங்கிய இந்த ‘புவனகிரி பள்ளி’ தொடர் வெளியிலும் பகிரப்பட்டு பல வகையான பின்னூட்டங்களைப் பெற்றிருக்கிறது. அதில் மிக முக்கியமானவை இரண்டு. ஒன்று – தமிழாசிரியர்… (READ MORE)

புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

wp-16410883621398515048242616711124.jpg

சுடச்சுட வெண்ணெய்

அதிகாலை 05.50க்கு அருகில் வந்து ‘சிவா, ஆ… காட்டு! வாயத் தொற!’ என்று ஊட்ட வருகிறார் அம்மா. சுடச்சுட இப்போதுதான் கடைந்த வெண்ணெய்! லேசான புளிப்போடு வாயிலிருந்து, தொண்டையில் வழிந்து நெஞ்சு வரை வழிக்கிக் கொண்டே சூடாய் இறங்குகிறது வெண்ணெய்.  தயிர் நிறைந்த பெரிய பானையை வைக்கோல் பிரி சிம்மாடில் வைத்து, தரையில் தண்டாசனம் இட்ட… (READ MORE)

Manakkudi Manithargal

, ,