செம்பியன் மாதேவியின் மண்ணை…

திருவையாறு அருகேயிருந்த செம்பியன்குடி குறுநில மன்னன் மழவராயனின் மகள் செம்பியன் மாதேவி, சிவன் மீதுள்ள பக்தியால் சிவாலயங்களுக்குச் செலவது வழக்கமாம். அப்படி ஒரு நாள் செல்லும் போது தஞ்சை மன்னன் கந்தராதித்யர் பார்த்து காதல் கொண்டு திருமணம் செய்து கொண்டாராம். அவர்களுக்குப் பிறந்தவன் மதுராந்தகன் (உத்தம சோழன்) என்பதும், கந்தராதித்யர் இளம் வயதிலேயே இறந்து போக… (READ MORE)

Uncategorized

இலங்கை மங்கலக் குத்து விளக்கு தெரியுமா!?

முதல் முறை இலங்கை தமிழர்கள் பயன்படுத்தும் மங்கலக் குத்து விளக்கைக் கவனித்தேன். கொழும்புவின் பம்பலப்பிட்டி பகுதியின் சரஸ்வதி ஹால் மக்களால் நிரம்பியிருந்தது. நம் இலங்கை நண்பர்களின் ஏற்பாட்டில் நடக்க இருந்த ‘உறவுகளில் உன்னதம்’ மலர்ச்சி உரை தொடங்க இருந்த நேரத்தில், அறிவிப்பாளர் ‘ஐங்கரனைத் தொழுது மங்கல குத்து விளக்கை ஏற்றும் நிகழ்ச்சி’ என்று சொல்லி முக்கிய… (READ MORE)

Uncategorized

நிறைவுற்றது – ‘அச்சம் தவிர்…ஆளுமை கொள்!’ தொடர்

திரும்பிப் பார்ப்பதற்குள் ஒன்பது மாதங்கள் (முப்பத்தியைந்து வாரங்கள்) பறந்தோடி விட்டன. வாராவாரம் படித்ததை செயல்படுத்தி, ஓடிவந்து மின்னஞ்சல் மூலமும், ஈரோடு – திருச்சி – திருவண்ணாமலை – வேலூர் பகுதிகளில் நிகழ்ச்சிக்குச் சென்ற சில இடங்களில் அடையாளம் கண்டு அருகில் வந்து செய்த பகிர்வுகளின் மூலமும், வளர்ச்சியை பகிர்ந்து கொண்ட வாசகர்களுக்கு நன்றி. ‘சார்… நான்… (READ MORE)

Uncategorized

கோகோ

‘கோலமாவு கோகிலா’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

கும்மிடிப்பூண்டியில் இரண்டு பெண் பிள்ளைகளை வைத்துக் கொண்டு வரவிற்கும் செலவிற்கும் இழுத்துப் பிடித்துக் கொண்டு அல்லாடும் ஒரு குடும்பத்தில், அதன் மைய ஆதாரமான தாய்க்கு உயிர்க்கொல்லியான நுரையீரல் புற்று நோய் வந்தால் என்னவாகும், எப்படி அதை எதிர்கொள்வார்கள் அவர்கள் என்பதை நகைச்சுவை தெளித்துத் திரையில் தருகிறார்கள். பயம், சோகம், தனிமை, அழுத்தம் என எதையும் தனியாகக்… (READ MORE)

Manakkudi Talkies

, , , , ,

ஆளுமைக்கழகு… அச்சம் தவிர், ஆளுமை கொள்

தினமலரில் ஞாயிறன்று வரும் ‘அச்சம் தவிர்… ஆளுமை கொள்!’ என்ற எனது தொடரின் இரண்டாம் பாகம், அத்தியாயம் 32. நம்மூரின் கிராமப் பஞ்சாயத்தில் ஆளுமையாக உருவெடுத்து உலக நாடுகளை உற்றுக் கவனித்து வரச்செய்த ஒரு மனிதர் பற்றிய கட்டுரை இவ்வாரம். பார்க்க – இணைப்பு Facebook.com/ParamanPage

ஆளுமை கொள்

அந்தரத்தில் தூக்கியெறிந்து சுழற்றி

சிறுவர்களை பின்பக்கமாகத் தூக்கி அந்தரத்தில் சுழற்றியெறிந்து முன்பக்கம் பிடிப்பது ஒரு த்ரில் அனுபவம். தூக்கி காற்றில் விடும் போது, சிறுவன் கையை விட வேண்டும், இல்லையென்றால் களேபரமாகிவிடும். வரும் மே மாதம் திருமணம் செய்து கொள்ளவிருக்கும் குரு என்கிற மோகனேஸ்வரன் ( பேட்ச் 8) குழந்தையாக இருந்த போது பயந்து கையை இறுக்கி விட, தலைகுப்புற… (READ MORE)

Uncategorized

பல்லாயிரக்கணக்கானோரின் பயணங்கள் தொடரும்…

சென்னையிலிருந்து பெங்களூருவிற்கும், பெங்களூருவிலிருந்து சென்னைக்கும் அதிகம் பைக்கில் பயணித்தவர்கள் என்று கணக்கெடுத்தால் என் பெயர் முதல் பட்டியலில் வரக்கூடும். டிசம்பர் மாத நள்ளிரவில் பதினாறு டிகிரி வந்த 2001ன் பெங்களூரிலிருந்து புறப்பட்டு கிருஷ்ணகிரி மலை கடந்து சாலையோரம் உடல் நடுங்க விறைத்து தேநீர் குடித்துத் தொடர்ந்திருக்கிறேன் நண்பன் செந்திலோடு. லாரிகள் வரிசையாக நிற்கும் சாலையோர தேநீர்க்… (READ MORE)

Uncategorized

நம்பிக்கை வை… நம்பி கை வை – பரமன் பச்சைமுத்து, தினமலர்

தினமலரில் வரும் எனது ‘அச்சம் தவிர்… ஆளுமை கொள்!’ தொடரின் 31வது அத்தியாயம். ‘நம்பிக்கை வை… நம்பி கை வை ‘ Facebook.com/ParamanPage

Uncategorized

நல்ல தீர்ப்பு – யானைகளுக்கான இடத்தில் யானைகள் வாழட்டும் : – பரமன் பச்சைமுத்து

இந்தப் பூமிப் பந்து என்பது புல், புழு, பூச்சி, மரம், செடி, கொடி, பறவைகள், விலங்குகள் என பல்லுயிர்க்குமானது. மனிதனுக்கு மட்டுமேயானதல்ல. மொத்த பூமியும் எனக்குத்தான் என்று மனநிலையில் ஆக்கிரமிக்கும் மனிதனால்தான் பல்லுயிர்ப் பெருக்கம் தடைபடுகிறது. இயற்கையின் சுழற்சியில் எதுவுமே வீண் இல்லை. ஒவ்வொன்றுமே ஒரு சங்கிலிப் பிணைப்பால் இணைக்கப் பட்டு மொத்த சூழலும் காக்கப்… (READ MORE)

Uncategorized

சிவப்பு நிலா

‘குறுக்கே வந்து நின்று எனக்கு வரும் வெளிச்சத்தை மறைத்தாய் இல்லை? போ!’ என்று பூமியின் மீது சினம் கொண்டு சிவந்தது நிலா. #BloodMoon #சந்திரகிரகணம் #சிவப்புநிலா Facebook.com/ParamanPage

Uncategorized

‘சஞ்சு’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

பாலிவுட்டின் சர்ச்சை நாயகன் என்று பெயர் பெற்ற சஞ்சய் தத்தின் கதையை வைத்து ராஜ்குமார் ஹிராணி செய்திருக்கும் திரைப்படம் – சஞ்சு. துவக்க காலத்தில் போதையில் சிக்கிய சஞ்சய் தத், வெகு நாட்களுக்குப் பிறகு ஏகே – 56 வைத்திருந்த பயங்கரவாத தடுப்பு வழக்கில் சிக்கி சிறை சென்ற சஞ்சய் தத் என்ற இரண்டு பகுதிகளை… (READ MORE)

Uncategorized

images-12.jpeg

திரை விமர்சனம் – ‘கடைக்குட்டி சிங்கம்’ : பரமன் பச்சைமுத்து

காலம்காலமாய் பார்த்துப் பழகிய அதே குடும்பத்தோடு பாசத்தில் நெகிழும் ஊர்க்கார நாயகன், அவன் வழியில் குறுக்கிடும் காதலும் வில்லனும் என்ற வகை கதைதான். ஆனால் அதை ரசிக்கும் படி கொடுத்த விதத்தில் வெற்றி பெற்று விட்டார்கள். வயலும் வரப்பும் காடும் கழனியும் கூடவே பஞ்சவன் மாதேவி, வானவன் மாதேவி, கண்ணுக்கினியாள், தாமரை மணாள செண்டாளன் போன்ற… (READ MORE)

Manakkudi Talkies

, , , ,

போர்ட்டோ நோவா தெரியுமா உங்களுக்கு?

ஓர் இடத்தின் அல்லது ஒரு மனிதனின் பெயருக்குப் பின்னே காரணங்கள் இருக்கலாம், விளக்கங்கள் இருக்கலாம், யாருடைய சிந்தனையோ இருக்கலாம். ‘இடுகுறிப் பெயர்’ ‘காரணப்பெயர்’ என்றெல்லாம் பாடங்கள் வைத்துக் கற்பித்த நம் மொழி சொல்லுவதும் இதைத்தானே. ஒரு மொழியில் வழங்கப்படும் பெயரை வேற்று மொழியிலிருந்து வருபவனொருபவன் சரியாக உள்வாங்கிக் கொள்ளாத போது, பெயர் நாறடிக்கப் படுகிறது. அதன்… (READ MORE)

Uncategorized

தி ஜானகிராமனின் ‘கமலம்’ – காலச்சுவடு

ஒரு சிற்றூரின் வயல்களைத் தாண்டிய வாய்க்காலின் மதகில் தன் மாமாவோடு கால்களைத் தொங்கப் போட்டுக்கொண்டு உட்கார்ந்து மீன்கொத்தியை பார்க்கும் எம்ஏ படித்த காசு சேர்க்கத் தெரியாத ஒருவன், தன் அனுபவமாக அவ்வூரில் நடந்த நிகழ்வுகளைச் சொல்வதாகத் தொடங்கும் கதை மெள்ள மெள்ள படமாகக் காட்சியாக விரிந்து உச்சத்தில் ‘பொளேர்’ என்ற ஓர் அறையுடன் முடிந்து நிற்கிறது…. (READ MORE)

Uncategorized

கடல்மல்லை

சிறை பிடிக்கப்பட்டு நாடுகடத்தப் பட்ட பார்த்திபனைத் தேடி இளைய குந்தவை தேரில் ஓடிய பாதையில்… சிற்பி மகள் சிவகாமியோடு சிறு வயது சிநேகம் கொள்ள சிறுவன் நரசிம்ம வர்மன் தன் தந்தையோடு குதிரையில் பயணித்த பாதையில்… தமிழிலும் ப்ராக்ருத மொழியிரும் பெரும் புலமை கொண்ட கலைக் காதலன் காஞ்சித் தலைவன் மகேந்திர பல்லவன் பயணித்த பாதையில்…… (READ MORE)

Uncategorized

முடிவற்ற சாலை… எஸ். ராமகிருஷ்ணன்

ரயில் பயணங்கள் பற்றி, பாம்பைப் போல வளைந்து நெளிந்து ஓடும் ரயிலின் வயிற்றுப் பெட்டிக்குள் உண்டு. உறங்கி வசித்துப் பயணிக்கும் அனுபவம் பற்றி ‘வளர்ச்சி’ இதழில் எழுதிய கட்டுரைகளை மீண்டும் கொண்டு வந்து மனதில் நிழலாட வைத்தது, எஸ். ராமகிருஸ்ணனின் தொடர் ஒன்றை இன்று படித்த போது. ஒரிசாவிலடித்த புயலொன்றின் போது மின்சாரமற்ற இருட்டொழுகும் மழையில்… (READ MORE)

Uncategorized

IMG-20180709-WA0108.jpg

ஓங்கி உயர ஆசை – பரமன் பச்சைமுத்து

‘ஓங்கி உயர ஆசை’ – பரமன் பச்சைமுத்து எனது அடுத்த நூல். எழுத்துப் பிரசுரம் / ஜீரோடிகிரி பப்ளிஷிங் வெளியீடு. விரைவில்…. https://m.facebook.com/story.php?story_fbid=10216557528196615&id=1410976678

Paraman's Book

, , , , , ,

அச்சம் தவிர்… ஆளுமை கொள்!’ முதல் பாகம் முற்றிற்று.

குகவேலனின் திருமணத்திற்கு சில வாரங்கள் முன்பு தொடங்கியது தினமலரில் எனது ‘அச்சம் தவிர்… ஆளுமை கொள்!’ தொடர். அச்சில் வந்த முதல் தொடரின் பதிப்பைப் பார்க்க, நாகை தஞ்சைப் பதிப்பு தினமலர் தேடி மணக்குடியிலிருந்து பயணித்து சிதம்பரம் வழியே கொள்ளிடம் ஆற்றைக் கடந்து தைக்காலில் ஒரு தேநீர்க்கடையில் போய் வாங்கினோம். தேநீர்க்கடையிலேயே தினமலரை நான் பிடித்துக்… (READ MORE)

Uncategorized

வேம்புகள் அணிவகுக்கும் சாலை

நெடுஞ்சாலையின் இருமங்கிலும் புளியமரங்களைப் பார்த்திருக்கிறேன். தூங்குமூஞ்சி அல்லது ஐரோப்பிய ‘ஃபாரஸ்ட் பயர்’ மரங்களைப் பார்த்திருக்கிறேன். வரிசையாய் தொடர்ச்சியாய் ஆயிரம் வேப்பமரங்களைப் பார்த்ததில்லை. அதுவும் வெறும் வேப்ப மரங்கள் மட்டுமே. பல்லடம் வழியே பொள்ளாச்சி செல்லும் வழியில் கௌசிகா நதியையும், நொய்யலையும் கடந்ததும், நெகமத்திற்கு சற்று முன்னே வருகிறது இந்த வேம்பு அணிவகுக்கும் இடம். எவர் இதைச்… (READ MORE)

Uncategorized

நாம் வைத்த கன்றொன்று நம் கண் முன்னேயே வளர்ந்து நிற்பதைக் காணுமனுபவம் அலாதியானது

நாம் வைத்த கன்றொன்று நம் கண் முன்னேயே நெடுநெடுவென்று வளர்ந்து நிற்பதை பார்க்குமனுபவம் அலாதியானது. ஒரு பச்சிளம் குழந்தையைப் போல நம் கைகளில் தவழ்ந்த கன்று இன்று வேரூன்றி வளர்ந்து தலை(தழை)யசைப்பதைக் காண்கையில், தோளுக்கு மேலே வளர்ந்து நிற்கும் பிள்ளையைப் பார்க்கும் தகப்பனைப் போன்றொரு கிளர்ச்சி வருகிறது. நகரையே நாசம் செய்த வர்தாப் புயலின் மீது… (READ MORE)

Uncategorized

நாடுகளிலுள்ளோரின் நாக்குகளின் வழியே நடக்கட்டும் தமிழ்…

ஒரு மொழி, எத்தனை வளமுள்ள மொழியானாலும் அது வழக்கிலிருந்து ஒழிந்து போனால் சாவை நோக்கிச் சரிந்து விடும். செம்மொழியானாலும் எம்மொழியானாலும் பேசா மொழியானால் அவை வாழா மொழியாகி வீழும். இலக்கியங்களும், காப்பியங்களும், நூல்களும், கல்வெட்டுக்களும் மொழியின் செழுமையை மொழியின் பழமையை காலம் தாண்டிக் காட்ட உதவும். மொழியினுள்ளே மாந்தரை ஈர்க்க உதவும், நனைந்து திளைத்து மகிழச்… (READ MORE)

Uncategorized

பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஆடிய ஆட்டம்

😳😳😳 பத்து ஆண்டுகளுக்கு முன்பு பரமன் பச்சைமுத்து பெங்களூருவில் ஒரு விளையாட்டுப் பையன். எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் மேடையில் இருப்பான். அதிகம் ‘பப்ளிக் ஸ்பீக்கிங்’ போட்டிகள்தான் என்றாலும், ஆட்டம் பாட்டம் என எதையும் தவறவிட்டதில்லை. அல்மாமாட்டர் நாட்களில், ஏதோ ஒரு பேட்ச் பட்டமளிப்பு விழாவில் பெங்களூரில் ஆடிய காணொளித் துண்டின் இணைப்பு கிடைத்தது இப்போது. சிறிது… (READ MORE)

Uncategorized

இந்து தமிழ் திசை பெயர் மாற்றம்

பன்னெடுங்காலமாக மக்கள் வாழ்வில் கலந்து விட்ட ஆங்கில நாளிதழ், புதிதாக வந்த அதன் தமிழ் தினசரி… இரண்டும் ஒரே பெயரில் என்ற போது துவக்கத்தில் பெயர் குழப்பம் வரவே செய்தது. குழப்பம் தவிர்க்க மக்களாகவே ‘இந்து தமிழ்’ என்று சொல்லத் தொடங்கினர். இரண்டு குழுமங்களாகப் பிரிக்கும் போது, இதை கருத்திலெடுத்த நிர்வாகத்தைப் பாராட்டுகிறோம். நடுப்பக்கம் எப்படியிருக்க… (READ MORE)

Uncategorized

வாழ்வை மாற்றும் ‘வளர்ச்சி’ சுய முன்னேற்ற இதழ் நான்காம் ஆண்டில் நல்லது பல புரியும் பாதையில்…

🌸🌸 வாழ்வை மாற்றும் ‘வளர்ச்சி’ சுய முன்னேற்ற இதழ் நான்காம் ஆண்டில் நல்லது பல புரியும் பாதையில்… #ValarchiTamilMonthly Facebook.com/MalarchiPage

Uncategorized

images-7.jpeg

பெண் குயில், பட்டாம் பூச்சி… கருவேப்பிலை மரம்

குயிலென்றால் கருப்பாயிருக்கும், கன்னங்கரேலென்று இருக்கும் என்றே நினைத்திருந்தேன். நாற்பது ஆண்டுகளாக இப்படி நினைத்தே வாழ்ந்திருக்கிறேன் என்று நினைக்கையில் கொஞ்சம் அவமானமாக இருக்கிறது, வெட்கம் பிடுங்கித் தின்கிறது இன்னும் என்னை. ‘பெண் குயில் பாத்திருக்கீங்களா? அங்க பாருங்க, வந்து உட்காந்திருக்கு!’ என்று பால்கனிக்கு வெளியே பார்த்தவாறே அத்தை அவசரத்தை குரலில் ஏற்றி அதேசமயம் அதிராமல் மெல்லியதாய் கூப்பிட்ட… (READ MORE)

Uncategorized, பொரி கடலை

, , , ,

ஷாவோலின் – திரைப்படம்

மதம் பிடித்த யானை புகுந்த ஒரு வாழைத்தோட்டம் போல ஒரு பெரும்போரில் மிதிபட்டு நசுங்கி கிடக்கும் ஊரின் இடிபாடுகளிலிருந்து சடலங்களை கண்டெடுத்து அப்புறப்படுத்தி புத்தரின் பெயரால் சேவை செய்கிறார்கள் அவ்வூருக்கு வெளியே இருக்கும் ‘ஷாவோலின்’ கோயிலின் சீடர்கள். குவிந்து கிடக்கும் சடலங்களுக்கிடையே கொஞ்சம் முக்கலும் முணகலும் கேட்க, ‘ஹேய், இங்க ஒருத்தன் உயிரோட இருக்கான்!’ என்று… (READ MORE)

Uncategorized

இணைப்பில் இல்லாதபோதே பார்த்ததும் சார்ஜ்…

‘இன்னைக்கு என்னவோ நடந்திருச்சி. வளர்ச்சிப்பாதையில ரெண்டு எடத்துல உள்ளுக்குள்ள அப்படியே ஒரு உதறல் வந்துடிச்சி! இதுவரைக்கும் நடந்த எல்லாத்தையும் விட இந்த வளர்ச்சிப்பாதை வேற ஆழம்!’ – திருவண்ணாமலையில் வளர்ச்சிப்பாதை முடிந்தவுடன் பாபு பகிர்ந்தது. ‘இன்னும் க்ளாஸ் வைக்கலியே. ஏம்மா எப்பம்பா க்ளாஸுன்னு எல்லாருகிட்டயும் ஃபோன் பண்ணி கேட்டுகிட்டே இருந்தேன். பரமன், வாரம் ஒரு வீடியோ… (READ MORE)

Uncategorized

சாலைப்பயணத்தோடு நிலா

திருவண்ணாமலையில் வகுப்பெடுத்துவிட்டு வளைந்து வளைந்து செல்லும் பாதையில் பயணிக்கிறேன். வேலூருக்கு என் கூடவே வருகிறது நிலாவும். – பரமன் பச்சைமுத்து 21.06.2018 பாகாயம் Facebook.com/ParamanPage

Uncategorized

வெள்ளியை விதைத்தாயிற்று

குழந்தைகள் மிக எளிமையானவர்கள், விதைப்பதை பட்டென்று உறிஞ்சி உள்ளே பதித்து வளர்த்துக் கொள்ளும் தன்மை கொண்டவர்கள். நாம் வெகு இயல்பாய் செய்யும் எதை எப்போது பிடித்துக் கொள்வார்கள் என்பது தெரியாது. ஒரு மலர்ச்சி மாணவரின் வீட்டுக்கு சென்றிருந்தேன் இரு வாரங்களுக்கு முன்பு. உரையாடி மகிழ்ந்து விடைபெற்று வெளியே வந்து காரேறும் போது அவ்வீட்டின் சிறுமியிடம் வானத்தைக்… (READ MORE)

Uncategorized

அட…தாரை கருவி

ஊதல், தூம்பு, உயிர்த்தூம்பு, குறும்பரந்தூம்பு, எக்காளம், குழல், கொம்பு, சங்கு, நமரி, நாதசுவரம், திருச்சின்னம், தாரை என பாரம்பரிய ஊது(காற்று) இசைக் கருவிகள் பற்றி பெயரளவில் மட்டுமே தெரிந்திருந்த எனக்கு இன்று, ஈரோட்டில் நம் மாணவர்கள் லதா – ராமலிங்கம் – ராஜேஷ் இல்லத்திருமணத்தில் தாரை இசைக்கருவியை அருகிலிருந்து அனுபவிக்க முடிந்தது.”தாரை தப்பட்டை’ திரைப்படத்தில் பாக்கலியோ?’… (READ MORE)

Uncategorized

ஈரோடு தினமலரில் நம் எழுத்து

நாம் போகும் ஊரில் நம்மை நம் எழுத்து வரவேற்றால்… மகிழத்தானே செய்வோம்! பிரித்தானியர்களை எதிர்த்து போரிட்ட திப்பு, தீரன் சின்ன மலை ஆகியோர் வசமிருந்த மண் கோட்டை இருந்த பகுதியில், நரசிம்ம பல்லவனால் கட்டப்பட்டு எண்ணூற்றியைம்பது ஆண்டுகளாக வழிபடப்படும் ஆருத்ர கபாலீஸ்வரர் ஆலயம் அருகில், நமது எழுத்தைத் தாங்கி நிற்கும் ஞாயிறு தினமலரை ஏந்தி மகிழ்கிறேன்… (READ MORE)

Uncategorized

காவிரி வருகிறது

கேரள வயநாடுப் பகுதியில் பெருமழையைத் தந்ததன் மூலம் கர்நாடக கபினியை நிரம்பச் செய்து தமிழகத்துக்கு நீரைத் திறக்கச் செய்து, எல்லாருக்கும் மேலே நானிருக்கிறேனாக்கும் என்று கூறி இந்திய அரசியல்வாதிகளைப் பார்த்து வாய் விட்டுச் சிரிக்கிறது பெரும் இயற்கை! பெரும் சக்தியைப் போற்றுதும்! – பரமன் பச்சைமுத்து சென்னை 15.06.2018 Facebook.com/ParamanPage

Uncategorized

‘கலகக் கலைஞன்’ – ஜெயகாந்தன் – கவிஞர் வைரமுத்து கட்டுரை

தமிழாற்றுப்படை வரிசையில் ஜெயகாந்தனைப் பற்றிய ஆய்வுக் கட்டுரையை கவிஞர் வைரமுத்து வாசிக்கும் நிகழ்ச்சிக்கு உடல்நலம் குன்றிய எழுத்தாளர் சிவசங்கரி இருமல்களுக்கிடையே தலைமையுரை ஆற்றும் போதே புரிந்தது, ‘பரமன், இந்த ஆளுமை செய்யும் இந்தப் பகிர்வுகள் தவறவிடக்கூடாதவை. நல்லவேளை நீ வாய்க்கப் பெற்றாய்!’ என்று பல்லி கத்தியது மண்டைக்குள்ளே. ‘வடகிழக்கு – வடக்கு இந்தியாவின் இலக்கியத்தோடு என்னை… (READ MORE)

Uncategorized

20180613_175723.jpg

லேனா… ஆ…ஆ!

நாம் பார்த்து பார்த்து பெரும் உவமையாகக் கொண்டு வளர்ந்த ஆளுமைகளை, வாழ்க்கை திடீரென்று நம் முன்னே நிறுத்தினால் மகிழ்வில் திளைக்கத்தானே செய்வோம்! கூடவே எதிர்பாரத வகையில் அவர்களுக்கு நம்மைத் தெரிந்திருக்கிறதென்று வேறு அறிந்தால்… அதிர்ந்து போகத்தானே செய்வோம் இன்பத்தில்! கவிஞர் வைரமுத்து ஆய்வுக் கட்டுரையாற்றும் ஜெயகாந்தன் பற்றிய நிகழ்ச்சிக்கு அரங்கம் நோக்கி் நடக்கையில், அரங்கத்தின் வாயிலுக்குள்… (READ MORE)

பொரி கடலை

, ,

plastic

பிளாஸ்டிக் தடை – நல்ல செய்தி!

வரும் ஜனவரி முதல் குறிப்பிட்ட சில பயன்பாடுகளில் பிளாஸ்டிக்கை தடை செய்வதாக அறிவித்திருக்கிறது அரசு. நல்ல செய்தி! சரியாக நடைமுறைப் படுத்தப்பட்டால் பல்லுயிர்ச்சூழல் கெடாது காக்கப்படலாம். பிளாஸ்டிக் பைகளை விழுங்கி வயிறு சரிந்து மாயும் யானைகளும், பிளாஸ்டிக்கால் வதைபடும் குரங்குகளும், மீன்களும், மனிதர்களும் மற்ற பிற உயிர்களும் கொஞ்சம் காக்கப்படும். அப்படியே… கர்நாடாகாவிலும், இலங்கையிலும் இருப்பதைப்… (READ MORE)

பொரி கடலை

kaala-3600x2025-rajnikanth-karikaalan-tamil-telugu-hindi-4k-2018-8104

‘காலா’ – திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து

    சிவப்புத் திலகம் தீட்டிக்கொண்டு ‘தூய்மை மும்பை, ஒரே மும்பை’ ‘டிஜிட்டல் மாநிலம்’ என்று இயங்கும் ராமனை துதிக்கும் அதிகார வர்க்கத்தினர், அவர்களது கண்ணிற்கு கருப்பாக அழுக்காக தெரியும் ராவணனையும் அவனது மக்களையும் அழித்து அவர்களது நிலத்தை கைக்கொள்ள முயற்சிக்கிறார்கள் என்ற களத்தில் திரைக்கதை பின்னி  ரஜினியையும் நானா படேகரையும் வைத்து ப.ரஞ்சித் தந்திருக்கும்… (READ MORE)

Manakkudi Talkies

, , , ,

Vazhgai_finel2.jpg

‘வாழ்க்கைப் பாசறையில்’ – பரமன் பச்சைமுத்துவின் புதிய நூல்

முன்னுரை ‘தேர்ட்டி சிக்ஸ்த் சேம்பர்ஸ் ஆஃப் ஷாலியன்’ திரைப்படத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? எழுபதுகளின் இறுதியில் வந்து உலகைக் கவர்ந்த ஓர் அட்டகாசமான திரைப்படம் அது. ஓர் ஊரில் அதிகாரத்தில் உள்ளவர்களால் சொந்த மக்கள் அடித்துக் கொல்லப்படும்போது, காயங்களுடனும் தாங்கொணா வலியுடனும் உயிரைக் காத்துக்கொள்ள ஊரை விட்டு ஓடுவான் சிறுவனொருவன். பலம் மிக்க எதிரிகளிடமிருந்து தப்பிக்க காடு… (READ MORE)

Paraman's Book

, , , , , , ,

இலங்கையின் வீரகேசரி வெயிட்டிருக்கும் எனது திரைவிமரிசனம்

👏👏👏👏 👍👍👍 இலங்கை நாட்டின் மிகப்பெரிய தேசிய நாளிதழான ‘வீரகேசரி’ வெளியிட்டிருக்கும் எனது திரை விமரிசனம். எனது பெயரைப் போட்டாலும் போடா விட்டாலும் தெரிந்தேயிருக்காது எனக்கு. வேறு தேசத்தில் வசிக்கும் எனக்கு ‘வீரகேசரி’ பத்திரிக்கை பார்வைக்கே வராது. எனது எழுத்துக்களை எடுத்து அப்படியே வேறு பெயரில் வெளியிட்ட, பெயரில்லாமல் வெளியிட்டவர்களைக் கண்ட வலியான தொடக்க கால… (READ MORE)

Uncategorized

அம்மாவான மனைவி

‘கணவன் சரியில்லை! அவர் அம்மா பேச்சையே கேட்கிறார்!’ என்று பிரச்சினை செய்த மனைவி, குழந்தைகளை கணவனிடமிருந்து பிரித்துக் கூட்டிப் போனாள்… ‘என் பேச்சைக் கேட்கற மாதிரி ஒழுங்கா வளக்கனும் இதுங்கள!’ என்று கூறி. – பரமன் பச்சைமுத்து 24.05.2018 Www.ParamanIn.com

Uncategorized

‘நடிகையர் திலகம்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

ஆந்திர விஜயவாடாவின் அருகிலிருக்கும் ஒரு கிராமத்திலிருந்து புறப்பட்ட தந்தையை இழந்த ஒரு சிறுமி, தமிழ் – தெலுங்கு சினிமாவின் ‘நடிகையர் திலகம்’ ஆக உயர்ந்து,  இறுதியில் தன் வாழ்வை எப்படி முடித்துக் கொள்கிறாள் என்பதை ஒரு படமாகத் தந்து, நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்கள். ஒரு திரைப்படம்… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , ,

இலங்கை – கட்டுரை நிறைவுப் பகுதி

‘நீரிடை உறங்கும் சங்கம், நிழலிடை உறங்கும் மேதி, தாரிடை உறங்கும் வண்டு…’ என்று கோசல நாட்டைப் பற்றிக் கம்ப நாட்டாழ்வான் சொன்னதெல்லாம் நினைவுக்கு வருகிறது இலங்கையின் குறுக்கே பயணிக்கும் போது, அப்படி ஒரு செழிப்பு. ‘கேரளாவைப் போல் இருக்கிறதே!’ என்று தொடக்கத்தில் தோன்றினாலும், அதை விட செழிப்பான சூழல் என்று போகப்போக உணர முடிகிறது. அறுவடை… (READ MORE)

Uncategorized

, ,

20180520_232944-1.jpg

போய் வாருங்கள் பாலகுமாரன், உங்கள் ராஜேந்திர சோழன் சென்ற உலகத்திற்கு…

வாழ்க்கை மட்டும் ‘இதுதான் அறிய தருணம், இனி இது திரும்பக் கிடைக்காது!’என்று சப்-டைட்டில் போட்டு நிகழ்வுகளை அனுப்பினால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்! அப்படி மட்டும் இருந்திருந்தால், அன்று என் அடுக்ககக் குடியிருப்பின் முகப்பில் உங்களைப் பார்த்த தருணங்களை இன்னும் பயன்படுத்தியிருப்பேன், ‘பரமனை நமது விழாவிற்கு அழைக்கலாம், கூப்பிடுங்கள்!’என்று ரகுராமிடம் நீங்கள் தகவல் சொன்னபோது ஓடி வந்திருப்பேன்…. (READ MORE)

பொரி கடலை

,

இலங்கை ‘கதிர்காமக் கேள்வி!’

தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்படும் கதைகளாலும் பின்னப்படும் நம்பிக்கைகளாலுமே தலங்களும் அதன் கடவுளர்களும் முக்கியத்துவம் பெறுகிறார்கள். ‘கதிர்காமத்துல விபூதி செய்யறது இல்ல. அங்க விபூதி வெளையுது. மலையிலேருந்து வெட்டி எடுக்கறாங்க!’ – இது என் ஐந்தாம் வகுப்புக் கோடை விடுமுறையின் போது இலங்கை போய் வந்த என் அப்பா என்னிடம் சொன்னது. ‘எல்லா ஊரிலும் நேரில் போய்… (READ MORE)

ParamanInSriLanka

, , ,

இலங்கை – இலை அப்பம்

இலை அப்பம் வேணுமா? கதிர்காமத்திலிருந்து கொழும்புவை நோக்கிய சாலைப் பயணம் கொஞ்சம் நீண்டதுதான். ஐந்து மணி நேரங்கள் பிடிக்கும். ஒரே பயணத்தில் வியர்க்க வைக்கும் வெயில், வாகனம் ஓட்ட பார்வை மறைக்குமளவிற்கு ‘மவனே… வச்சுக்கோ!’ என்று அடித்துப் பெய்யும் மழை, குளுமை என எல்லாவற்றையும் பார்க்க முடிகிறது. இருமங்கிலும் பெரும் நீர்நிலைகள், மலைகள், வயல்கள், ரப்பர்… (READ MORE)

ParamanInSriLanka

, , , , ,

இலங்கையின் நெல் வயல்கள்

நீர் வளம் மிகுந்த இலங்கையின் நெல் வயல்கள். நெல் வயல்களில் எருவிட்டு உழுது ( இதன் பெயர் ‘புழுதி ஏர்), நீர் பாய்ச்சி ஊற வைத்து திரும்பவும் ஏர் உழுது சேறாக்கி மட்டப் பலகையை வைத்து சேற்றை ஒரே சீராக்கும் பழக்கம் சோழ தேசத்தில் இன்றும் உண்டு. ‘பறம்படித்தல்’ என்று பெயர் அதற்கு. காவிரி பொய்க்காத… (READ MORE)

ParamanInSriLanka

, , , ,

புத்தரின் பல்

புத்தர் இறந்த பிறகு அவரது நினைவாக இருக்கட்டுமென அவரது பல்லை புத்த பிக்கிணி ஒருவர் எடுத்து வைத்ததாகவும், வெகு ஆண்டுகளுக்குப் பிறகு ‘இந்திய நாட்டினருக்கு புத்தரின் மகத்துவம் புரியவில்லை, மதிக்கத் தெரியவில்லை, மதிக்கப்படும் இடத்தில் இது இருக்கட்டும்!’ என்று கூறி தந்த குமருவும் ஹேமமாலாவும் இலங்கை மன்னனிடம் அந்தப் பல்லைத் தந்ததாகவும் இலங்கையில் நம்பப்படுகிறது. அந்தப்… (READ MORE)

Uncategorized

பின்னவல –

மழைத் தண்ணீர் அடித்துக் கொண்டு செந்நிறமாக ஓடும் ‘மாஒய’ நதியில் வயிற்றளவு நீரில் இறங்கி குதூகலித்து விளையாடும் சிறிதும் பெறிதுமான காட்டு யானைகளின் கூட்டம், சில அடிகள் தூரத்தில் நின்று பார்த்து ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது இன்று, சிறீலங்காவின் ‘பின்னவல’ யானைகள் முகாமில். கொழும்பு நகரிலிருந்து கண்டி நோக்கிச் செல்லும் வழியில் இருக்கிறது இந்த இடம்…. (READ MORE)

Uncategorized

avengers

திரை விமர்சனம் – ‘அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்’ : பரமன் பச்சைமுத்து:

    ஏழு கடலுக்கு அப்பால், எட்டாவது மலையையொட்டிய பள்ளத்தாக்கில், கோமதி நதியின் முகத்துவாரத்தைத் தாண்டி இருக்கும் சமவெளியையொட்டிய பகுதியில் வாழும் கந்தரவர்களின் ஒருவனின் நெற்றியில் என உலகின் நான்கு சக்தி மிகுந்த கற்கள் இருக்கின்றன. எப்படியாவது அந்தக் கற்களையெல்லாம் எடுத்து வந்து தங்கக் காப்பில்  பதிந்து கொண்டு அதை வலது கையில் அணிந்து கொண்டால்,… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , , , ,

வித்தியாமில்லா நாள் வீணே

அதிகாலை துயில் நீங்குகையில் போர்வை உதறி எழுந்த அதே படுக்கைதான், இரவு படுப்பதற்கும். எழுந்து போனவனுக்கும் திரும்ப வருபவனுக்கும் வித்தியாசமில்லா நாள் வீணே. இரண்டுக்குமிடைப்பட்ட நாளின் பொழுதுகளில் எவ்வளவு பயணித்திருக்கிறேன், எவ்வளவு அனுபவம் பெற்றிருக்கிறேன், எத்தனை மனிதர்களைத் தொட்டிருக்கிறேன் என்பன உரைக்கின்றன எப்படி இந்த நாளை வாழ்ந்திருக்கிறேன் என்று. பரமன் பச்சைமுத்து 04.05.2018 சென்னை Facebook.com/ParamanPage

Self Help

,

தினமலரில் நான் எழுதிக் கொண்டிருக்கும் ‘அச்சம் தவிர்… ஆளுமை கொள்!’ தொடரின் அத்தியாயம் – 16. Facebook.com/ParamanPage

Uncategorized

நிசத்தம்

சத்தம் மட்டுமல்ல, அமைதி மண்டிக் கிடக்கும் நிசத்தமும் காதைத் துளைக்கவே செய்கிறது.’ புத்த பூர்ணிமா தினம் கொஞ்சம் கண் மூடி அமர்ந்திருக்கலாமேயென்று மலர்ச்சி அகத்திற்குள் போன போது உணர்ந்தது. -பரமன் பச்சைமுத்து 30.04.2018

Uncategorized

ஒரு கிண்ணம் பிரபஞ்ச சக்தி…

ஒரு கிண்ணம் பிரபஞ்ச சக்தி உச்சந்தலையில் கவிழ்த்து விடப்படுகிறது, நெற்றிக்கும் உச்சிக்கும் நடுவே சில துளிகள் உள்ளிறங்கி விடுகின்றன போலும், தவத்தில் அமர்ந்த கணங்களில். #தவம் #Meditation பரமன் பச்சைமுத்து 30.04.2018 Www.ParamanIn.com

Spirituality

, ,

முதல் பறவை

இன்னும் வெளுக்காத அதிகாலை இருட்டின் பேரமைதியை கிழித்துக் கொண்டு ‘நான்தான் ஊர்லயே ஃபர்ஸ்டு, தெரியுதா!’ என்பது போல பெரும் டெசிபெலில் ‘க்ரீச் க்ரீச் க்ரீச்’ என்று ஒரு லாரியின் ஏர் ஹார்னை விட அதிகமான அளவில் சத்தமெழுப்புகிறது இன்றைய நாளின் முதல் பறவை. சன்னலுக்கு வெளியே இருட்டில் அது இருக்கும் திசை நோக்கித் திரும்பி ‘லவ்… (READ MORE)

Uncategorized

சன்னலுக்கு வெளியே குட்டி மேகங்கள்

சன்னலுக்கு வெளியே வெள்ளை வெளேர் குட்டி மேகங்களாய் சிவப்பு மலர்களாய் காற்றில் மிதக்கின்றன ஏழெட்டு பட்டாம்பூச்சிகள். கருவேப்பிலை மரத்தில் இட்லி கொத்தைப் போல திட்டுத் திட்டாய் பூக்கள். பரமன் பச்சைமுத்து 26.04.2018

Uncategorized

வளர்ச்சிப் பாதை @திருவண்ணாமலை

🌸🌸 மொத்தம் இரண்டு மணி நேரம் என்று முன்பேயே அறிவித்து நடத்திய வளர்ச்சிப்பாதை இன்று திருவண்ணாமலையில். ஆரணியிலிருந்து சுரேஷ், சத்யா, வேலூர் குடியாத்தத்திலிருந்து சரளா ஆனந்த், திருக்கோவிலூரிலிருந்து நாமதுரை, சென்னையிலிருந்து விஜயகுமார், கார்த்திகேயன் என வேறு ஊர்களிலிருந்தும், போளூரிலிருந்தும், திருவண்ணாமலையிலிருந்து தொண்ணூறு சதவீத மலர்ச்சி மாணவர்களும் என நிறைந்ததிருந்தது வளர்ச்சிப் பாதை. சிரிப்பு, அடி, ஆழம்… (READ MORE)

Uncategorized

unnamed.jpg

அயலூர் சினிமா: ‘பரத் அனே நேனு…’ : பரமன் பச்சைமுத்து

ஒரு மாநிலத்தில் ஆட்சியையும் பெரிய கட்சியையும் தங்களிடம் வைத்திருக்கிறார்கள் உடன்பிறவா சகோதரர்கள் இருவர். திடீரென உடல்நலம் குன்றி மருத்துவமனைப் படுக்கையில் வீழ்ந்த முதல்வர் நண்பர் இறந்து விட , கட்சித் தலைமையை கையில் வைத்திருக்கும் பிரிய சிநேகிதருக்கு நெருக்கடி வருகிறது. பிரச்சினையை சரி செய்யலாம் என்று மறைந்த முதல்வரின் அபிமானத்திற்குரியவரைத் தேர்ந்தெடுத்து தனது கைப்பாவையாக இருக்கட்டுமென்று… (READ MORE)

Uncategorized

, , ,

உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா? அப்படியென்றால் உங்கள் திருமணத்தில் இந்தப் பாடல் இசைக்கப் பட்டிருக்கலாம்.

உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா? அப்படியென்றால் உங்கள் திருமணத்தில் இந்தப் பாடல் இசைக்கப் பட்டிருக்கலாம். இன்னும் ஆகவில்லையா? உங்கள் திருமணத்தில் இது பாடலாகவோ நாதஸ்வரத்திலோ இசைக்கப்படும். அறுபத்தியேழு ஆண்டுகளாக தமிழகத்தில் நடந்தேறும் பெரும்பான்மையான திருமண வைபவங்களில் மண அரங்கிற்கு மணப்பெண்ணை அழைத்து வரும் வேளையில் இதுதான் ஒலிக்கிறது. இன்று வரை மாற்றவே முடியாத இடத்தைப் பிடித்திருக்கிறது ‘வாராயென்… (READ MORE)

Uncategorized

மிஷன் இம்பாஸிபிள் : 2

‘டை ஹார்ட்’டின் ஜான் மெக்லைன் பிடிக்குமென்பதற்காக, ‘மிஷன் இம்பாஸிபிள்’ளின் ஈத்தன் ஹண்ட்டை பிடிக்கக் கூடாதா என்ன! ஜான் மெக்லைன் கிழ சிங்கமென்றால், ஈதன் ஹண்ட் அதைவிட இம்மியளவு வயது குறைந்த நவீன தொழில் நுட்பம் தெரிந்த புலி. ‘காக்கி சட்டை’ கமல்ஹாசன் – சத்யராஜ் – ராஜீவ் படகுத் துரத்தல்களை நினைவூட்டும் பைக் துரத்தல்கள், கப்ஸாக்கள்… (READ MORE)

Uncategorized

முத்தத்தி – நீச்சல்

‘பாபா’ திரைப்படம் பார்த்திருக்கிறீர்களா? எதனை நினைத்தாலும் அது உடனேயே இப்போதே நடந்து விடவேண்டும் என்ற மனநிலை கொண்ட பாத்திரமாகப் படைக்கப்பட்டிருக்கும் ஆஷிஸ் வித்யார்த்தி ஏற்று நடித்திருக்கும் வில்லன் பாத்திரம். ‘இப்போ ராமசாமி’என்ற பெயர் கொண்ட அவர் அடிக்கடி ‘இப்போ…இப்போ… இப்போ!’ என்று பரபரத்துக்கொண்டே இருப்பார். ராமு பெருமாளும், முகுந்தனும் நானும் அந்நாட்களில் கிட்டத்தட்ட இப்போ ராமசாமிகளாகவே… (READ MORE)

Uncategorized

, , , , ,

கண்களுக்கான ஆயுர்வேத சிகிச்சை

கண்களுக்கான முதல் நிலை ஆயுர்வேத மருத்துவம் (கண்களில் ஒரு பாயிண்ட் குறைந்துள்ளது. கண்கள் பொலிவு பெற்றுள்ளன) முடித்து, இரண்டாம் நிலை மருத்துவம் தொடங்கியது இன்று. வைணதீய க்ரதம் ( ஒரு வித நெய்), வர சூரணம் ஆகியவற்றுடன் இனிதே ஆரம்பம் இன்று. கொஞ்சம் கசப்பு! நல்லது தொடக்கத்தில் எப்போதும் கசக்கத் தானே செய்யும்! 🌸🌸😀 –… (READ MORE)

Uncategorized

யாரைக் குற்றம் சொல்ல…

மன்னம்பந்தலில் கல்லூரி விடுதியின் பின்பக்க வேலி திறந்து நடந்தால் வாழைக் கொல்லை. வாழைக் கொல்லையை ஊடறுத்து கொஞ்சம் போனால் எப்போதும் நீரோடும் காவிரி. இப்படியொரு வழியிருக்கிறதென்று எனக்கு ‘கேட்டீ’தான் எனக்குக் காட்டினார். பெண்ணாடம் பழனிவேலு, இன்னும் சிலரோடு நாங்கள் காவிரிக்குள் பாய்ந்து ஊறித் திளைத்து மகிழ்வோம். நீச்சல் தெரியா நெய்வேலி ஜமுக்குப் பாண்டியன் ஆழமில்லா கரையோரம்… (READ MORE)

Uncategorized, பொரி கடலை

, ,

‘வாழ்க்கை – ஒரு கொண்டாட்டம்’ – பரமன் பச்சைமுத்து – அண்ணா பல்கலை கழகம் – ஏழை மாணவர்களின் உயர்கல்விக்காக ஆனந்தம் ஃபவுண்டேஷன்ஸ் நிகழ்ச்சி

மன நிறைவான ஓர் உணர்வெனக்கு! கிராமப்புற ஏழை மாணவர்களின் மேற்படிப்பிற்காக உழைத்து வரும் ஆனந்தம் அறக்கட்டளையின் சார்பாக நிதி திரட்டுவதற்காக ‘வாழ்க்கை – ஒரு கொண்டாட்டம்!’ என்ற வாழ்வியல் பயிலரங்கை செய்தோம், நேற்று மாலை அண்ணா பல்கலைக்கழகத்தின் அரங்கம் ஒன்றில். முன்னூற்றியைம்பது பேர் என்று எப்போதோ செல்வக்குமார் சொன்னதை மனதில் வைத்துக்கொண்டு அரங்கில் நுழைந்தால் அறுநூற்றியைம்பது… (READ MORE)

Paraman's Program

மனித மன நிமிர்த்திகள்…

ஒலிம்பிக்ஸ், காமன்வெல்த், பேட்மிட்டன், டென்னிஸ் என்று தனி மனித ஆற்றலின் எல்லை உடைக்கும் விளையாட்டுக்கள் என்னுள் உற்சாகத்தை ஊற்றி என்னை முழுதும் உயிர்ப்பித்து விடுகின்றன. இந்த மாதிரி நேரங்களில் என்னால் உலகையே மறந்து விடக் கூட முடிகிறது. ஒரு நாள் இவற்றை நேரில் பார்த்து ரசிக்க வேண்டும். எவ்வளவு உழைத்திருப்பார்கள் இந்நிலை கைவர! அடுத்த மனிதனுக்கு… (READ MORE)

Self Help

, , , , , , , , , , ,

கோபி சந்த் – சாய்னா நேவால்

‘இவர் விளையாட்டு வீரங்கனையா இல்லை திரை நட்சத்திரமா!’ என்று பார்க்குமளவிற்கு அழகாக இருக்கும் பாகிஸ்தானின் இளம்பெண் மஹூரை இந்தியாவின் சாய்னா நேவால் முதல் செட்டில் துவைத்து எடுப்பதைப் பார்ப்பது அழகென்றால், அதை விட அழகு கிடைக்கும் சிறு இடைவெளியில் பயிற்சியாளர் கோபி சந்த் கொடுக்கும் திருத்தங்களைப் பார்ப்பது. #CommonWealth2018

Uncategorized

screenshot_20180330-143804791243021.jpg

ஐயய்யப்பா…. உஸ்ஸ்… என்னா வெய்யிலு!’

‘ஐயய்யப்பா…. உஸ்ஸ்… என்னா வெய்யிலு!’ என் அடுக்ககத்தின் அடித்தளத்தில் மின் தூக்கிக்காகக் காத்திருக்கும் ஒரு பெண்மணி அருகிலிருந்த சுவற்றிடம் தன் அங்கலாய்ப்பைக் கொட்டிக் கொண்டிருந்தார். அதைக் கேட்டுக் கொண்டே இரண்டாவது மாடி நோக்கி நடக்க படிகளில் ஏறுகிறேன் ‘மிஸ்டர் கூல்’ஆக. திருவண்ணாமலை செங்கத்தின் வெக்கை உமிழும் 41 டிகிரியையே பார்த்தவனுக்கு, சென்னை ஆர் ஏ புரத்தின்… (READ MORE)

Self Help, Uncategorized

, , , ,

சரணடையும் பொழுதில்…

அதிகாலையிலெழுந்து அவனை சரணடைவதில் கிடைக்கும் அனுபவம் அலாதியானது. பாசுரங்கள், பதிகங்கள், பாமாலைகளென்ற எந்த சத்தங்களுமின்றி, எதுவுமிலா இவன் எல்லாமுமான அவனை நோக்கி வெறுமனே இருத்தலிலிருந்து குவிப்பது ஓர் உணர்வின் உன்னதம். அங்கே கிடைக்கும் பிணைப்பு அவனருள்! ஆழ்வோம்! #தவம் #தியானம் #சரணடைதல் – பரமன் பச்சைமுத்து திருவண்ணாமலை 31.03.2018 www.ParamanIn.com

Spirituality

, , , , , , , ,

பரமன், நீங்கள் சித்த – ஆயுர்வேத மருத்துவத்தை அதிகம் பரிந்துரைப்பதாக ஓர் எண்ணம்

  கேள்வி: பரமன், நீங்கள் சித்த – ஆயுர்வேத மருத்துவத்தை அதிகம் பரிந்துரைப்பதாக ஓர் எண்ணம் (வளர்ச்சி இதழில் வரும் கட்டுரைகளில் உட்பட). நீங்கள் ஆங்கில மருத்துவத்திற்கு எதிரானவரா? பரமன்: ஆங்கில மருத்துவத்திற்கு எதிரானவன் அல்ல என்பதை முதலில் தெளிவு படுத்திவிடுகிறேன். இரண்டு நிகழ்வுகளை பகிர்கிறேன். நிகழ்வு – 1: படிப்பதற்கு கண்ணாடி அணியும் என்னை… (READ MORE)

Uncategorized

‘முக்கால் எம்எல்ஏ’

‘முக்கால் எம்எல்ஏ’ சோமாசிப்பாடி திருமலை மாமாவை சுப்புராய உடையார் மாமா இப்படித்தான் விளிப்பார் அக்காலங்களில். ‘பஉச’வும், ‘விவிஎஸ்’ஸும், ‘கலைமணி’யும் கட்சியில் களைகட்டிய அந்தக் காலங்களில் கட்சியில் கலகலவென்று வளைய வந்தார் அவர். எப்போதும் வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டியில் பளிச்சென்று இருக்கும் அவர் அப்போதெல்லாம் சோமாசிப்பாடி அரசமரத்தடி அருகிலிருக்கும் சோடாக்கடையில் அதிகம் தென்படுவார். திருமலை மாமாவிற்கு… (READ MORE)

Uncategorized

ஏழுநிமிடத்தில் ஷெனாய் நகர்

கோயம்பேடு பேருந்து நிலையத்தின் அருகில் இருந்துகொண்டு ஷெனாய் நகரில் இருக்கும் அலுவலகத்திற்கு அழைத்து, ‘வெங்கட், என்னோட லஞ்ச் பாக்ஸ ஆன் பண்ணி சூடு பண்ணேன். ஏழு நிஷத்துல வந்துடுவேன்.’ என்று சொல்லமுடியுமா? சொன்னாலும் கோயம்பேடு பேருந்து நிலையம் – திருமங்கலம் – அண்ணா நகர் கிழக்கு – அண்ணாநகர் டவர் வழியாகப் பயணித்து ஷெனாய் நகருக்கு… (READ MORE)

Uncategorized

அகரம் ஃபவுண்டேஷன்ஸில் வாலண்டையர்களுக்கு மலர்ச்சி உரை

ஏழை மாணவர்களின் கல்வி மற்றும் மேம்பாட்டிற்கு உதவும். ( நடிகர் சூர்யாவின்) ‘அகரம் ஃபவுண்டேஷன்ஸ்’ இயக்கத்தின் தன்னார்வல செயல் வீரர்களுக்கு வாழ்வியல் பயிற்சி அளித்து வலிமையேற்றும் வாய்ப்பு வாய்த்தது இன்று. பல்வேறு துறைகளில் பணியாற்றும் வெவ்வேறு வயதினர்கள் சமுதாயம் மீது கொண்ட நல்லெண்ணத்தால் களமிறங்கி தொண்டு செய்ய ஒன்று கூடி இருந்த சபையது. நம்மால் முடிந்ததை… (READ MORE)

Uncategorized

உள்ளே… வெளியே

(சன்னலுக்கு) வெளியே உயர்ந்து நிற்கும் திருவண்ணாமலை மலை, உள்ளே அகழ்ந்து ஆழ்ந்து போகச்செய்யும் மலர்ச்சி மகா முத்ரா… உன்னத அனுபவத்தோடு தொடங்குகிறது இன்றைய காலைப் பொழுது. பரமன் பச்சைமுத்து 24.03.2018 திருவண்ணாமலை

Uncategorized

மனிதரோடு மனிதர்…

மனிதன் என்பவன் நினைவுகளாலும் ஆசைகளாலும் செய்பாடுகளாலும் ஆனவன். அப்படியானால்… உயிருக்குயிரான ஒருவரின் ஆசைகளை நாம் செயல்படுத்தும் போது, அவரின் நினைவுகளை நாம் கொண்டிருக்கும் போது… அவரோடே வாழ்கிறோம்! பரமன் பச்சைமுத்து 18.03.2018 Www.ParamanIn.com

Uncategorized

என்ன பதில் சொல்லிவிட முடியும்!

ஓடிக்கொண்டேயிருந்தவள் மீளா ஓய்வுக்குப் போய் விட்டாள். மாராத்தான், ட்ரையத்லான், ட்ரெக்கிங், சைக்கிளிங் என்று ஓடித் துடித்த கால்களும் மூச்சும் இயக்கத்தை நிறுத்திக் கொண்டன. குரங்கணி காட்டில் தீ நாக்குகளால் தீண்டப்பட்ட அனுவித்தியா கண்ணாடிப் பேழைக்குள் வெறும் உடலாக. ‘பரமன்ன்ன்ன்…. ஏன் பரமன்? நெறைய சாதிக்கனும்ன்னு ஆசைப்பட்ட பொண்ண, சாதனை பண்ண அனுமதிச்சது தப்பா பரமன்? இமயமலையை… (READ MORE)

பொரி கடலை

, , , , ,

நடிகர் விசுவிடமிருந்து பரமன் பச்சைமுத்து பற்றி குறுஞ்செய்தி…

👏👏👏👏👏👏 🌸🌸 நடிகர் இயக்குனர் விசு அவர்களிடமிருந்து பரமன் பச்சைமுத்து பற்றி வந்துள்ள உணர்வுப் பகிரல்!!! ஹியூமர் கிளப் இண்டர்நேஷனல் நிகழ்ச்சியில் கடந்த ஞாயிறு மாலை நான் உரையாற்ற நேர்ந்த போது, நடிகர் இயக்குனர் விசு அவர்களும் முன் வரிசையில் அமர்ந்து கேட்டார். இரண்டு நாட்களுக்குப் பிறகு மலர்ச்சி உரையைப் பற்றிய தனது உணர்வை ஹியூமர்… (READ MORE)

Uncategorized

விசு அவர்களோடு ஓர் அனுபவம்

ஐந்தாம் வகுப்பு விடுமுறையில் அப்பா சித்தப்பா இலங்கை பயணித்து விட, அவர்களது சைக்கிளை (பழைய ராலே, புதிய ஹீரோ என்று இரண்டு) எடுத்துக் கொண்டு ராஜவேலு சித்தப்பாவிடமும், கருணாகரன் மாமாவிடமும் குரங்கு பெடல் ஓட்டக் கற்றுக் கொண்டேன். இலங்கையிலிருந்து திரும்பி வரும்போது ஜப்பானிய ‘டெட்ரெக்ஸ்’ சட்டைத் துணியோடு வாங்கிக் கொண்டு வந்த ‘நேஷனல்’ டேப் ரெக்கார்டர்தான்… (READ MORE)

Uncategorized

shape of water - Copy

‘ த ஷேப் ஆஃப் வாட்டர்’ – அன்பின் வழியது ‘உயிர் நிலை’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

அவள் (வாய்) பேசா மடந்தை. எவ்வளவோ பேர் வாழும் இவ்வளவு பெரிய உலகில் தனியாகவே இருக்கிறாளவள். அமெரிக்கா – ரஷ்ய பனிப்போர் நிகழ்ந்து கொண்டிருந்த அந்தக்காலத்தில், ஒரு வார்த்தைக் கூட பேசாத எலிசா என்னும் அவள் எப்போதும் எதைப்பற்றியாவது தொணத்தொணவென்று பேசிக்கொண்டே இருக்கும் செல்டாவுடன்   அரசின் ரகசிய ஆய்வுக்கூடமொன்றில் சுத்தம் செய்பவளாக தன் வாழ்க்கையை ஓட்டுகிறாள்…. (READ MORE)

Manakkudi Talkies

, , , , ,

என் மனைவி… குளித்துவிட்டு வருகையில் குரோமோசோம்கள், ஜீன்கள் என்கிறாள். டவலை உலர்த்தயில் டெல்லி சுல்தானேட், ஷேர்ஷா என்கிறாள். கடுகு தாளிக்கையில் கங்கைகொண்ட சோழன், கார்டீசியன் ஸிஸ்டெம்ஸ், ட்ரிக்னாமெட்ரி சொல்கிறாள். சோறு இறக்கும்போது சோடியம் குளோரைடின் சமன்பாடு சொல்லிப் பாக்கிறாள். நடந்து செல்லும்போது நியூட்டனின் இயக்க விதி ஒப்பிக்கிறாள். பால் காய்ச்சும்போது பாக்டீரியா, பிதாகரஸ் தியரமென்று எதையோ… (READ MORE)

Uncategorized

எப்படி இருந்திருப்பான் ராஜராஜ சோழன்?

கோப்பரகேசரி சிவபாதசேகரன் அருண்மொழி வர்மன் என்னும் ராஜராஜ சோழன் எப்படி இருந்திருப்பான் என்று சரியாய்க்காட்ட வடிவங்கள் இல்லை. ராஜராஜ சோழன் என்று இணையத்தில் கிடைக்கும் பித்தளைச் சிலை வள்ளுவர் உருவம் போல் அனுமானத்தால் உருவாக்கப்பட்டது என்பது என் எண்ணம் ( மார்ச் 2018 மாத ‘வளர்ச்சி’ இதழின் முகப்புக் கட்டுரைக்கும் அட்டைப் படத்திற்கும் இந்தச் சிலையையே… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , , , , , ,

கௌதமியை வைத்து கமலை நோக்கி சமையல் செய்யும் ஊடகங்கள் இனி

‘நான் அவரோடு இணைந்து செயல்படுவதாக சொல்கிறார்கள். இல்லை. நான் என் மகளுக்காகவும் எனக்காகவும் உழைக்கிறேன். அவர் என் சம்பளப் பாக்கியை இன்னும் தரவில்லை. ஆதாரங்கள் உள்ளன’ என சுட்டுரையில் கொளுத்திப் போட்டிருக்கிறார் கௌதமி. ஸ்ரீதேவி மகள்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு திரும்ப வந்த கமலிடம் அதைக்கேட்டும் விட்டனர் நிருபர்கள். ‘சம்மந்தம் இல்லை என்று அவர் சொல்லிவிட்டார். சம்பளப்… (READ MORE)

Politics

, , , , ,