‘விசாரணை’ – திரை விமர்சனம்: பரமன் பச்சைமுத்து
ஆட்டோ ஓட்டும் ஒருவர் தன் வாழ்க்கை அனுபவங்களைக் கொண்டெழுதிய ‘லாக்கப்’ எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட படமாம். நாவல் எழுதியவரை உலகத் திரைப்பட விழாவிற்கே கூட்டிச் சென்றும், படத்தில் பெயர் போட்டும் கௌரவித்து விட்டார் இயக்குநர். தங்களைக் காப்பாற்றிக் கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மனநிலையில் இருக்கும் உயர் அதிகாரம் கொண்டவர்களுக்கு… (READ MORE)
‘நம்ம சென்னை’!
அதிகாலைப் பனியில் ‘க்க்கோவ்வ்வ்…’ என்று குரலெழுப்பும் அதே ஆர் ஏ புரத்து மாமரத்துக் குயில்… அரை மணி நேரத்தில் கடக்கும் ஆயிரம் வாகனங்கள், அவை கிளப்பும் சத்தம், கக்கும் புகை, சுட்டெரிக்கும் சூடு, இவைகளைத் தாண்டி சேத்துப்பட்டு சிக்னல் இடப்புற சுவர்மீது மலர்ச்சியோடு சிரிக்கும் மஞ்சள் மலர்கள்… ‘யோவ் பெருசு, போலீஸ்தான் இல்லியே, போமாட்ட?’ என்று… (READ MORE)
கருந்துளைகளைத் தாண்டி கணக்கிட முடியா பெரியவன்’ :
அறிவியல் உலகம் ஆர்ப்பரிக்கிறது. ஊடகங்கள் உற்சாகத் தலைப்புகளிட்டு செய்திகள் தருகின்றன. வானியல் அறிவியலில் அடுத்த கட்டம் இது என்கிறார் டேவிட் ரிட்ஸ், லிகோ அமைப்பின் திட்ட செயல் இயக்குநர் (லேசர் இன்ட்டெர்ஃபெரோமீட்டர் க்ராவிடேஷனல்-வேவ் ஆப்சர்வேட்டரி). இன்டர்ஸ்டெல்லார் திரைப்படம் நினைவுக்கு வருகிறது சிலருக்கு. ‘சூரியனைப் போன்று 29 மற்றும் 36 மடங்குகள் பெரிய இரண்டு ராட்சத கருந்துளைகள்… (READ MORE)
கரிகுப்பம் பவர் ப்ளாண்ட்டும், ‘கெயில்’ வயல் வழியும்
நெல் வயல்களின் ஊடே மின்சார கம்பி தூக்கும் மின் மரங்கள் நடப்போவதாகவும், அந்த இடத்தை மட்டும் வெறுமனே விட்டுவிட வேண்டும், பயிர் வைக்கக் கூடாது, இடம் தருவதற்கு இவ்வளவு பணம், கரிக்குப்பம் பவர் ப்ளாண்ட்டிலிருந்து தரகர்கள் வந்து பேசிக்கொண்டுள்ளனர் என எங்கள் கிராமமே பரபரப்பாய் இருந்தது. அடுத்த முறை ஊருக்குச் செல்லும் போது கரிகுப்பம் பவர்… (READ MORE)
‘இறுதிச் சுற்று’ – திரை விமர்சனம்: பரமன் பச்சைமுத்து
சாதனை எதுவென்பது வாழ்வின் நிலையைப் பொறுத்து மாறிவிடுகிறது. விளையாட்டு வீரனாய் இருக்கும்போது அவனது சொந்த வெற்றி சாதனை. ஆசிரியனாய், பயிற்சியாளனாய் மாறும்போது, மாணவனின் வெற்றியே சாதனை! முந்தைய நிலையில் அரசியல் காரணங்களால் விட்ட வெற்றியை பிந்தைய நிலையில் பிடிக்க முயற்சிக்கும், உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை திமிர் தெனாவெட்டு கொண்ட, அதைவிட அதிகமாய் குத்துச் சண்டை விளையாட்டு… (READ MORE)
திருமண நாள்
‘ப்பா… ஹாப்பீ எய்ட்டீன்த் வெட்டிங் அஏன்னிவெர்ஸரி!’ மகள் கட்டிக்கொண்டு சொல்லும் போதுதான் பதினெட்டு வருடங்கள் ஓடியே விட்டன என்பது புரிகின்றது.’எத்தனை பேர் வாழ்த்தி வளர்ந்த திருமண வாழ்க்கை!’ என்று மனம் நெகிழ்கிறது. பயணித்த பாதைகள் மனதில் ஓடுகின்றன. ‘எங்கும் நிறைந்தவனே, எல்லை இலாதானே, எங்கேயும் எப்போதும் என் குலம் காப்பவனே… நன்றி!’ மனம் கை கூப்புகிறது…. (READ MORE)
Addressed LUGI Annual Convention, Chennai
Enjoyed the tear, laughter, profound, deep moments of those 40 people in LUGI Annual Convention, Chennai @Hotel HILTON. People bought my book ‘Manappalagai’
அம்மாவின் தவம்…
சிலர் சிலவற்றை செய்யும் போது, வெறுமனே அதை பார்க்கும் நம்மையும் அது தொற்றிக் கொள்கிறது. உணர்ந்திருக்கிறீர்களா? சிலர் பிரார்த்தனை செய்யும் பாங்கு, வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு உள்ளே வந்து ஒரு இறையுணர்வை ஏற்படுத்திவிடும். ஒரு அழகான குறத்தி அதை செய்துவிட்டாள் இன்று எனக்கு. தேசிய நெடுஞ்சாலையில் ஓரத்து விடுதியில் தேநீர் அருந்த இறங்கிய போது… (READ MORE)
தாரை தப்பட்டை – திரை விமர்சனம்: பரமன்பச்சைமுத்து
சென்ற வருடம் முகநூலில் ஒரு விவாதத்திற்காக ஒரு கேள்வியை கேட்டிருந்தேன். ‘அன்பென்பது என்ன, நீ அழுது கஷ்டப் பட்டாலும் பரவாயில்லை நான் பக்கத்திலிருக்க இடம் வேண்டும் என்பதா? அல்லது நான் தூரமாகப் போனாலும் பரவாயில்லை, நீ நன்றாக இருக்க வேண்டும் என்பதா?’ என்று கேட்டிருந்தேன். அதற்கான இயக்குநர் பாலாவின் பதில் ‘தாரை தப்பட்டை’ திரைப்படம். ராஜாவும்,… (READ MORE)
சாமி முன்ன வை…
சுடச் சுட அச்சகத்திலிருந்து வந்த என் முதல் நூலை எடுத்துக் கொண்டு ஓடோடி வந்து அப்பாவின் முன் வைத்தேன். ‘எந்த நல்லதையும் சாமிகிட்ட மொதல்ல வைக்கணும்ன்னு தெரியாதா! சிவசிவா’ என்று சொல்லி பூஜையறைக்கு எடுத்துப் போகிறார். ‘சாமி முன்னதான் வைச்சேன்!’ என்று எனக்குள் சொல்லிக்கொண்டு புன்னகைக்கிறேன் நான்! பரமன் பச்சைமுத்து மணக்குடி 16.01.2015
ஓடிக் கொண்டே இருக்கும் உலகம்…
சிவாஜி – என்ன ஒரு கலைஞன். அவார்டுகளால் அளக்க முடியா ஆளுமை அவர். வைரமுத்து தனது நூலொன்றில், ‘கட்டபொம்மனை, கப்பலோட்டிய தமிழனை, அப்பரை, காத்தவராயனை கண்டதில்லை நாங்கள். உன்னைத்தான் திரையில் அவர்களாகப் பார்த்தோம்’ என்று எழுதியிருப்பார். அது எப்பேர்ப்பட்ட உண்மை, அவர் எப்பேர்ப்பட்டக் கலைஞன்! நடிப்பு என்னும் கடலை கரைத்துக் குடித்த குறுமுனி அவர். நடிப்பிற்கு… (READ MORE)
விகடன் விருதுகள்…
அனிருத்தின் தர லோக்கலுக்கு ‘மாரி’ தனுஷ் போட்ட குத்தாட்டத்திற்கு, ‘காக்கா முட்டை’ படத்திற்கு, சிறுவர்களுக்கு மற்றும் இயக்குநருக்கு, ‘மாயா’ மற்றும் ‘காதும்மா’வாக வடிவெடுத்து உயர்ந்து நிற்கும் நயன்தாராவிற்கு, புத்தரின் அமைதியும் அபிமன்யுவின் தீவிர செயல்பாடுகளையும் கொண்ட அபூர்வ கலவை ‘சித்தார்த் அபிமன்யூ’ ‘தனி ஒருவன்’ அர்விந்த் சாமிக்கு, ‘மௌவாலா வா சலீம்’ பாடலுக்காக ஏ.ஆர். அமீனுக்கு,… (READ MORE)
மரத் தியானம்…
தியானத்திலிருந்து மெதுவே மீண்டு வெளி வருகையில் பால்கனிக்கு பக்கத்தில் நிற்கும் கருவேப்பிலை மரம் கூட தியானத்தில் உறைந்து நிற்பதாய் தோன்றுகிறது. மேற்பக்க கிளையின் இலைகள் காற்றில் ஆடினாலும் வேப்ப மரம் உள்ளே பெரும் அமைதி கொண்டு நின்று தியானிப்பதாகவே தோன்றுகிறது. தூரத்து மொட்டைமாடியில் காயவைத்த துணிகளை எடுக்கும் யாரோ ஒரு அக்கா மட்டும் ஏன் இத்தனை… (READ MORE)
நல்லதைப் பாராட்டுவோம் – பெருங்குடி ஏரி காக்கும் பேரார்வலர்கள்…
இரண்டு லட்சம் பேர் வெறுமனே புலம்பிக் கொண்டிருப்பதால் ஒன்றும் ஆகப்போவதில்லை, இருபது பேர் இறங்கிச் செய்தால் எல்லாம் மாறும் என நிரூபித்திருக்கிறார்கள் ‘பி-எல்-ஏ-என்’ (பெருங்குடி லேக் ஏரியா நெய்பர்ஹூட்) தன்னார்வலர்கள். பெருங்குடி ஏரிக்குள் இறங்கி பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றி ஏரியை சுத்தம் செய்கிறார்கள். ஜனவரி இருபத்தியாறன்று ‘பெருங்குடி ஏரித் திருவிழா’ கொண்டாடுகிறார்கள். பெய்யெனப் பெய்த பேய்… (READ MORE)
பிரச்சினைகளின் ஆணி வேர்…
‘இதுதான் நான்!’ ‘இப்படி நினைத்திருந்தேன்’ ‘இப்படிச் செய்துவிட்டேன்’ என்று உள்ளதை உள்ளபடி உரைக்காமல் மறைப்பதில் தொடங்குகின்றன வாழ்வின் பெரும்பாலான பிரச்சினைகள். உண்மையை போட்டு உடைப்பவனுக்கு ஒரே ஒரு பிரச்சினை, அதை சொல்லும் தருணத்தில். மறைப்பவனுக்கு ஓராயிரம் பிரச்சினைகள், காலம் முழுக்க. மலர்ச்சி வணக்கம்! -பரமன் பச்சைமுத்து Facebook.com/MalarchiPage
வேட்டி ‘தினம்’!
தமி்ழர் பற்றி அதிகம் பேசாதவர் என் தந்தை. தமிழை உயிராகக் கொண்டு தமிழனாகவே வாழ்கிறார் கிராமத்தில் அவர். தமிழர் பற்றி அதிகம் பேசி, ஆங்கிலம் அதிகம் பேசி அவ்வப்போது தமிழில் பேசி தமிழ் வளர்ப்பது பற்றி நிறைய பேசி நகரத்தில் வாழ்கிறேன் நான். அவருக்கு வேட்டி ‘தினம்’. எனக்கு ‘வேட்டி தினம்’! அப்பாவைப் போல, பாட்டனைப்… (READ MORE)
ஜெயமோகனோடு அதிக பரிச்சயமில்லை எனக்கு. ஆனால்..
ஜெயமோகனோடு அதிக பரிச்சயமில்லை எனக்கு. பெங்களூர் வாழ் காலங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் படித்திருக்கிறேன். மணக்குடியான் டாட் காம் தளத்தில் வந்திருந்த அப்போது வெளியான ‘நான் கடவுள்’ படத்தின் எனது விமர்சனத்தை தனது இணைய தளத்தில் அவர் இணைத்திருந்தது அப்போதைய பெரும் மகிழ்ச்சி எனக்கு அந்நாளில். ‘கடல்’ படத்தின் ஆரம்ப காட்சி வசனங்கள் (அர்விந்த் சாமி, சின்னப்… (READ MORE)
பிஜேபி, காங்கிரஸ், தீவிரவாதிகள்…
காலையில் தில்லியில் காப்பி, மதியம் லாகூரில் லஞ்ச், இரவு காபூலில் உணவு என்று கனவு காண்பதாக அன்று மன்மோகன் சிங் சொன்னபோது கைதட்டி மகிழ்ந்தவர்கள், இன்று அதையே ‘காபூலில் காலை உணவு, லாகூரில் லஞ்ச், டில்லியில் டின்னர்’ என்று மாற்றி செய்திருக்கும் போது எதிர்க்கிறார்கள். காங்கிரஸைத் தவிர, உலகத் தலைவர்கள் உட்பட அனைவரும் பாராட்டுகின்றனர் என்பது… (READ MORE)
தந்தைகளின் உலகத்தில்…
தந்தைகளின் உலகத்தில் மகள்கள் ராஜகுமாரிகளல்ல, தேவதைகள்! In the world of dads, daughters are not just princess, they are Angels! #Daughters #dad #masinagudi #nilgiris
துவக்கத்தில் பொருந்தாமல்…
துவக்கத்தில் பொருந்தாமல் இருப்பதாய் தெரியும் சில விஷயங்கள் போகப் போக பழகிப் போகிறது! #ஸ்ருதிஹாசன் – குரல் #வேதாளம்
தண்ணீர் கஷ்டம் – உள்ளே, வெளியே
‘ஏங்க பவர் வராதாம். தண்ணியே இல்லை!’ உள்ளிருந்து மனைவி சொன்னதை கேட்டான் வெளியே முழங்கால் அளவு தண்ணீரில் நின்றவன்! #சென்னை தெருக்களில் #வெள்ளம் – பரமன் பச்சைமுத்து
‘சென்னை மீளும்!’
அடுக்ககக் குடியிருப்புக்கு வெளியே ஆறுபோல் சுழித்து ஓடும் நீர். ‘ஐயய்யோ தண்ணி, ஆட்சியாளர்கள் அக்ரமம், ஆக்ரமிப்பால் அவதி’ என்று அலறலாம் அல்லது நீரில் நடந்து வெளியே யாருக்கேனும் உதவமுடியுமா என்று பார்க்கலாம். இரண்டாவதை தேர்ந்தெடுத்து முழங்காலளவு நீரில் இறங்கிப் போகிறேன். போகப் போக இடுப்பளவு ஆழம், போகமுடியாது என்று போலீஸ் ஒருவர் தடுக்க வேறு புறம்… (READ MORE)
அஞ்சமாட்டோம், அஞ்சமாட்டோம்னு சொல்லிட்டு…
தற்சமயம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘உப்புக்கருவாடு’ (மிக வித்தியாசமான தரமான ரசனைக்கான படம்) படத்தில் ஒரு காட்சி. இளம் இயக்குஞர் ஒருவர் தன் படத்தை எடுக்க தொடங்குவதற்கு முன்பே ஒரு சில சாதி அமைப்புகள் படத்தை தடை செய்ய வேண்டும் என்று போராட்டம் செய்து ரகளையில் ஈடுபடும். ‘அஞ்சமாட்டோம், அஞ்சமாட்டோம்னு சொல்லிட்டு எடுக்கவே உட மாட்டறீங்களே. தப்பா… (READ MORE)
பள்ளி – மழை
பள்ளி திறந்தால் பெய்யெனப் பெய்வேன், விடுமுறை விட்டால் வெயிலடிப்பேன் ‘இப்ப என்ன செய்வீங்க, இப்ப என்ன செய்வீங்க! வெவ்வேவ்வே’ என்று பம்மாத்து காட்டுகிறது சென்னை வானம்! -பரமன் பச்சைமுத்து
‘நானும் ரௌடிதான்’ : திரை விமர்சனம்
தாயைக் கொன்ற ரவுடியை வஞ்சம் தீர்த்து அழிக்கத் துடிக்கும் போலீஸ் அதிகாரியின் மகளும், போலீஸ் அதிகாரியின் ரவுடியாய் இருக்கும் (நடிக்கும்) மகனும் சேர்ந்தால்… என்னவாகும்? காதல், நிறைய காஸ்ட்யூம், மலேசியாவில் பாட்டு, படம் முழுக்க ரத்தம் வெட்டு குத்து? அதுதான் இல்லை. அழகான நகைச்சுவை திரைக்கதை செய்து, தேர்ந்த நடிப்பை கலந்து ரசிக்கும்படி தந்திருக்கிறார்கள். ‘காமெடிப்… (READ MORE)
Today’s DINAMALAR Newspaper published about my ‘Maanavar Malarchi’ student program @Puducherry!
Today’s DINAMALAR Newspaper published about my ‘Maanavar Malarchi’ student program @Puducherry! Puducherry Edition!
அடுத்தவருக்கு காட்ட நினைத்து…
அடுத்தவருக்குக் காட்ட வேண்டும் என்பதற்காகவே செயல்புரிபவன், உள்ளே சமநிலை இழப்பான், விழுந்து அடிபட நேரிடும். அடுத்தவருக்காக அல்ல, உங்களுக்காக செயல் புரியுங்கள். உன்னதம் தேடி வரும் – பரமன் பச்சைமுத்து
விஜயதசமியாம்…
அப்போதெல்லாம் விஜயதசமியில் பள்ளியில் சேர்ப்பார்கள். ‘பர்த் சர்ட்டிஃபிகேட்ஸ்’ எல்லாம் இல்லாத அந்நாளில், கையை தலைக்கு மேல் வைத்து காதைத் தொடச் சொல்வார்கள். அப்படித் தொட்டால், ஐந்து வயதென்பது அப்போதைய கணக்கு. ஒண்ணாம் வகுப்பில் உட்கார வைத்து ‘அம்மா இங்கே வா வா, ஆசை முத்தம் தா தா…’ ஆரம்பித்து விடுவார்கள் (டீச்சர் கிள்றான் டீச்சர் எல்லாம்… (READ MORE)
செலவை குறைக்க செலவு…
சில நேரங்களில் செய்யப்படும் சில செலவுகள், தொடர் பெருஞ்செலவுகளைக் குறைக்கும். செலவுகளைக் குறைக்க செலவு செய்யவேண்டியிருக்கிறது என்பதே உண்மை. இங்கே செலவென்பது முதலீடு! News: Govt. Distributes 2 crores LED bulbs to replace CFLs and saves Rs. 1,000cr a year – பரமன் பச்சைமுத்து
அனைத்து நாளும் ஆயுதபூஜையே…
செய்தொழிலை சீர்பட ‘புனிதமாய்’ செய்பவனுக்கு, செல்வம் வந்து சேரும், சிறப்பு வந்து கூடும்! உற்ற தொழிலை உயர்வாய் எண்ணுபவனுக்கு, அனைத்து நாளும் ஆயுதபூஜையே! – பரமன் பச்சைமுத்து #AyuthaPooja
Life GIVES What you CELEBRATE…
When we learn a message for life or realize something and mind mulling over the learnt wisdom, we would find some connection with the wisdom and the immediate experiences we get in life. ‘ Don’t give too much attention to… (READ MORE)
ரீல் ஹீரோ vs ரியல் ஹீரோ!
முப்பதாண்டுகளாக நடிகர் சங்கம் தன் வசம் என்று வைத்திருந்த ராதாரவியை, அரசியல் ஆள் பலமுள்ள கிட்டத்தட்ட அசைக்கமுடியாத சக்தியாக இருந்த சரத்குமாரை, இளம் விஷால் அணி வீழ்த்தியிருப்பது விழி விரியச்செய்கிறது. தனிப்பட்ட நபர்களை குறிவைத்துத் தாக்குதல், வாக்குப் பதிவின் போது நடந்த தள்ளு முள்ளு, ‘கமல்ஹாசனால என் பேண்ட்ட கூட கழட்ட முடியாது’ என்று ராதாரவி… (READ MORE)
நம் ஞாயிறு நடிகர் சங்கத்திற்கல்ல…
நடிகர்கள் வாக்களிக்க வருவார்கள், ஊடகங்கள் இடைமறித்துக் கருத்துக் கேட்டு ஒளி பரப்பும், ரஜினி கருத்திற்கெதிராக கமல் கருத்தென்பார்கள், இரண்டு மார்க்கெட் இல்லாதவர்களை அழைத்து விவாதிப்பார்கள், விளம்பர இடைவேளை தருவார்கள், இதையேப் பார்த்துக் கொண்டிருந்தால் உங்கள் ஞாயிறு தீர்ந்து விடும். மாலை முடிவு எப்படியும் தெரியும், ஞாயிறை இதில் வீணடிக்காமல் உங்கள் நாளை பயனுள்ளதாக்குங்கள்! … வாழ்க!… (READ MORE)
‘மார்ஷியன்’ – ‘செவ்வாய்க் கிரகத் தனிமை’ : பரமன் பச்சைமுத்து
‘மார்ஷியன்’ – ‘செவ்வாய்க் கிரகத் தனிமை’ : பரமன் பச்சைமுத்து பயணித்துச் சேர்வதற்கே பல மாதங்கள் ஆகும் தூரத்திலிருக்கும், உயிர்வாழக் காற்று, உணவு, உயிர்கள் என எதுவுமில்லாக் கிரகத்தில் ஒருவன் மாட்டிக் கொண்டால் எப்படி இருக்கும்? உயிர்வாழ இருக்கும் உணவும் சொற்ப நிலை, தொலைத் தொடர்போ அற்ப நிலை என்றால் அவனுக்கு எப்படி இருக்கும்? ‘திரும்பிப்… (READ MORE)
ஜாம் பஜார் ஜக்கு…
‘ஜாம் பஜார் ஜக்கு, நான் சைதாப்பேட்டை கொக்கு!’ என் அப்பா பாடினார், சிறுவனான நான் கேட்டு வளர்ந்தேன். ‘ட்ரியோனா… ட்ரியோனா… ட்ரியோனானா னானா, மெட்ராச சுத்திப் பார்க்கப் போறேன்!’ நான் பாடினேன், என் மகள்கள் கேட்டனர். நாளை என் மகள்கள் அவர்கள் பிள்ளைகளுக்குப் பாட? #RIP Manorama aachi
வாழ்க்கை வழிப் பயணம்…
இரண்டாண்டுகளுக்கு முன்பு இன்ஃபினி ஆல்ஃபா பேட்ச் 9 எடுக்க பேங்களூரை நோக்கிப் பயணித்த போது, அப்போது என்னிடம் இருந்த வெள்ளை நிற ஹோண்டா சிட்டி கிருஷ்ணகிரிக்கு அருகில் டயர் பஞ்ச்ர் ஆகி நின்றது. ஆள் கூட்டி வர சில கிலோ மீட்டர் நடத்தார் குத்தாலிங்கம். ஜாக்கியை எப்படிப் பயன்படுத்தி ஸ்டெப்னி மாற்ற வேண்டும் என்று நாங்களே… (READ MORE)
‘மாயா’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து
பணம் தந்துவிட்டு பயப்படத் தயாராக இருப்பவர்களை, எவ்வளவு பயம் காட்டி அனுப்புகிறார்கள் என்பதை வைத்தே பேய்ப் படங்களின் வெற்றி தீர்மானிக்கப் படுகிறது. ஆரம்பத்தில் இழுவையாக இருந்தாலும், சில சீன்கள் சரியாக இருந்தால் போதும் படம் தூக்கி நிறுத்தப்படும் என்ற லாஜிக் படி வந்திருக்கும் படம் ‘மாயா’. ஒதுக்குப் புறமான வீடு, அதைத் தேடி வந்து பேயிடம்… (READ MORE)
மாடு துன்பப் படக்கூடாது, மனிதன் துன்பப்படலாமா?: பரமன் பச்சைமுத்து
மாட்டிறைச்சி உண்டார் என்பதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதியை, மற்ற சிலர் கூடி அடித்துத் தாக்கியுள்ளனர். இடம், ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவை. தாக்கப் பட்டவர் ரஷீத் என்னும் சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர். தாக்கியவர்கள், பிஜேபி சட்டமன்ற உறுப்பினர்கள். … மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஒருவனை, அவ்வளவு பேர் முன்னிலையில் கூடி அடிப்பது மிருகச் செயல். மாட்டை… (READ MORE)
‘யானை, மனிதன் – யார் தவறு?’ – யானை புகுந்த ஊரில்…:
‘ஊருக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம், பயிர்கள் நாசம்’ என்று அடிக்கடி செய்தியில் வருவதை பார்க்கிறோம். பாதிக்கப் பட்ட இடத்திலிருந்து பார்த்தால் எப்படி இருக்கும்? நீலகிரி மலைத்தொடரில் இருக்கும் பந்திப்பூர் – முதுமலை வனச்சரகத்தில், மசினகுடியை ஒட்டியமைந்துள்ள கிராமங்கள் தொட்டலிங்கி, பொக்காபுரம், தெப்பக்காடு. … காட்டு முயல்களும், கடைமான்கள் என்று சொல்லப்படும் சாம்பா மான்பளும், புள்ளி மான்களும்,… (READ MORE)
‘காக்கா முட்டை’ – திரை விமர்சனம்: பரமன் பச்சைமுத்து
இப்படி ஒரு படம் பார்த்து எவ்வளவு நாளாச்சு! சிரிக்க வைக்கிறது, நெகிழ வைக்கிறது, கைதட்ட வைக்கிறது, படத்தின் அந்த சிறார்களுக்காக வருந்த வைக்கிறது, இப்படி எல்லாம் செய்கிறது படம். … ப்ரகாஷ் ராஜ் பணியில் சொல்வதானால், ‘ஏய்… யார்ரா நீ?’ என்று பிடித்துக் கேட்கவேண்டும் படத்தின் இயக்குநரை. ‘ஊசிப் போனாதாண்டா நூல் நூலா வரும்!’ ‘சிம்பு… (READ MORE)
எம் இனத்து இளைஞர்களை ஏற்றி விட்டவரே
இப்படி ஒரு தலைவன் என் தேசத்திற்கு கிடைக்கமாட்டானா என பலதேசத்து இளைஞர்களை ஏங்க வைத்தவர், சொற்பமாய் இருந்ததை சொர்க்கமாய் மாற்றியவர், தமிழ்நாட்டின் பல குடும்பங்களில் வறுமையொழியக் காரணமானவர், ஒன்றுமில்லாத ஓர் ஊரில் உழைப்பை ஊற்றி ஒளிரச்செய்தவர், உலகத்தையே அதை நோக்கி வரச் செய்தவர், மனிதனின் மகத்தான ஆற்றலுக்கு முன் மாதிரி, ஒரே வாழ்நாளில் இரண்டு நூற்றாண்டுகளுக்கு… (READ MORE)
அதிக ஆசைகள் கொண்டவன் நான்…
அதிக ஆசைகள் கொண்டவன் நான். என் ஆசைகளைப் பட்டியலிட்டால், ‘பறவையாய் பிறந்திருக்க வேண்டியவன் பரமனாய் பிறந்து விட்டான்,’ என்று சொல்லத் தோன்றும். ஈழத்தீவிற்கு படகில் போக, இமயத்துப் பனியை இமைக்காமல் பார்க்க, நைல் நதியில் நனைந்து நிற்க, திரும்பப் போய் டோக்கியோ தெருக்களில் திரிய, சுமிதா நதியில் சுகமாய் சவாரி செய்ய, யுரால் மலையில் ஆசியாவில்… (READ MORE)
Casualness = Casualties.
Casualness in few things lead to Casualties. People who take everything casual will suffer at the end. There are few aspects that matter your life. Be serious in those things, give yourself completely and life will reward you very high…. (READ MORE)
Organized life, tough?
Leave about those 100 things you have less control and mostly depend on world. Mark your timestamp on few activities. It could be your daily lunch time, salary date for your employees, your spiritual time or post dinner reading time… (READ MORE)
உள்ளே ஒரு மாணவன்…
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் நடத்திய தேசிய அளவிலான ‘மாடர்ன் டீச்சர் – நியூ ஐடியாஸ் ஆன் எஜுகேஷன்’ போட்டியில், தேசிய அளவில் 700க்கும் மேற்பட்ட கல்லூரி, பள்ளி ஆசிரியர்களிடையே நடந்த பங்கேற்பில், ஆன்ட்ராய்டை வைத்து ஆங்கிலம் கற்பிப்பது எப்படி என்று காண்பித்து முதலிடத்தை வென்றுள்ளார், விழுப்புரம் சத்தியமங்கலம் அரசுப் பள்ளி ஆசிரியர் எஸ்.திலீப். நம் மாநிலத்து அரசுப்… (READ MORE)
அச்சம் தவிர், ஆளுமை கொள் – 5
பிரபல வாரப் பத்திரிகையில் வரும் எனது ‘ அச்சம் தவிர், ஆளுமை கொள்’ தொடரிலிருந்து ஒரு பகுதி [Part 5 ] …………………………………… கேள்வி: “வணக்கம் பரமன். நான் உண்மையாய் வேலை பார்க்கும் ஊழியன். என் வேலைகளை மிகப் பொறுப்பாக பார்க்கிறேன். ஆனால் என் அலுவலகத்தில் சிலர், தங்களது வேலையில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, மேலிடத்தில்… (READ MORE)
ஆதலினால் அன்பு காட்டுங்கள்…
அன்பு காட்டுங்கள், அன்பு காட்டுங்கள், அடுத்தவர் மீது அன்பு காட்டுங்கள். ஒன்றாயிருந்ததை பிரித்து வைத்து இரண்டாய் செய்யும் ஆசை, இரண்டாயிருந்ததை இணைத்து ஒன்றாய் ஆக்கும் உயிர் சிமென்ட் அன்பு. அருகில் இருப்பவரை தூரமாக்கி விடுவது ஆசை, தூரத்திலிருப்பவரை அன்மையில் உணரவைப்பது அன்பு. அன்பு ஊறும் அகத்தில் அழுக்குகள் அகற்றப்படும். கழுவித்… (READ MORE)
‘Shamitabh’ – Movie Review : Paraman Pachaimuthu
பிறவி ஊமையாய் பிறந்தபோதும், பிறவி எடுத்ததே பெரும் நடிகனாக வேண்டும் என்பதற்காகவே என்றிருக்கும் இளைஞனொறுவனும், என் அடிக் குரலின் வசீகரம் அத்தனைபேரையும் கட்டிப் போடும் என்று இறுமாப்பில் இருக்குமோர் முதியவனும் ஒன்று சேர்ந்தால் என்னவாகும், பெயர், பணம், புகழ், இவற்றோடு போதையும் சேர்ந்தால் என்னவாகும் என்று போகும் (‘மைக் மோகன் – எஸ் என் சுரேந்தர்’… (READ MORE)
அச்சம் தவிர், ஆளுமை கொள் – 4
பிரபல வார இதழில் பிரசுரமாகி வரும் என் தொடர்வின் பகிர்வு: நான்கு: நம் சோழ மாமன்னன் ராஜேந்திர சோழன் பற்றியும், ஜப்பானின் டோக்யோ நகரில் எனக்கேற்பட்ட அனுபவங்கள் பற்றியும், ‘ஆங்கிலம் என்பது ஒரு மொழி, அறிவு அல்ல!’ ‘தாழ்ந்தவர்கள் சிலர் தமிழில் பேசியிருக்கலாம். தமிழில் பேசுவது தாழ்ந்ததல்ல’ ‘ஆங்கிலம் அறிந்துகொள்ள வெறும் 30 மணிநேர பயிற்சியே… (READ MORE)
எதைப் பார்க்க வேண்டும்
கண்ணுக்கு முன்னே பரந்து விரிந்த அலையடித்து ஆர்ப்பரிக்கும் அழகுக் கடல், காலுக்கு சில அடி தூரத்தில் சகதி. இப்போதைக்கு இங்கே எதையும் மாற்ற முடியாது என்ற நிலையில், எதைப் பார்க்க வேண்டும், எதைப் பார்த்தால் உங்களுக்கு நன்மை என்று முடிவு செய்து செயல்படுங்கள். வாழ்க! வளர்க! – Paraman Pachaimuthu Facebook.com/MalarchiPage
‘ஐ’ – Movie Review – பரமன் பச்சைமுத்து
வாழ்வின் குறிக்கோளே வடிவழகு, உடற்கட்டு காப்பதுதான் என்று வாழும் ஒருவன், புற அழகை வைத்துப் புகழ் பொருள் சேர்க்கும் ஒரு புதிய உலகத்திற்குள் வரும்போது, கனவிலும் நினையாக் காதலும் கைகூடும் வேளையில், வாழ்வாய் நினைத்த வடிவமே சிதைந்துபோனால்… என்னவாகும்? ‘உடலழகை தாண்டி உள்ளத்தழகு பார்க்கப்படுமா?’ (‘அங்கம் குறைந்தவனை அழகில்லா ஆண்மகனை, மங்கையர்கள் நினைப்பதுண்டோ சொல்லம்மா!’ என்ற… (READ MORE)
போகி என்றொரு பெயரில்…
போகி என்றொரு பெயரில், போன வருஷத்து குப்பைகளைப் போட்டுத் தீயிலிட்டுக் கொளுத்தி பெரும்புகைக் கிளப்பி, பெரியவர்கள் மூச்சுத் திணற, பாரின் வளி மண்டலத்தில் வலி உண்டாக்கியது போதும்! புற அழுக்குகளை பழங்குப்பைகளை களைந்து, தீயிட்டு காற்றில் குப்பையைக் கலந்தது போதும். அழுக்காறை, கெடும் அவாவை, இன்னாச் சொல்லை, புறங்கூறும் போக்கத்தப் பொழப்பை,… (READ MORE)
‘Taken 3’ – Movie review
திரைக்கதை சரியாய் இருந்தால் யார் நடித்தாலும் படம் மின்னும், சரியான பாத்திரத்தில் கூடவே, சரியான ஆளும் அமைந்தால்…பட்டையைக் கிளப்பும். அதுதான் நடக்கிறது இப்படத்தில். ‘போர்ன் ஐடென்டிடி, சுப்ரிமசி’ வரிசை படங்களுக்கப்புறம், ‘இப்படி ஒரு ஆக்ஷன் படம் பார்த்து எவ்வளவு நாளாச்சி!’ என்று நினைக்கச் செய்யும் படம். மகளுக்காக எதையும், எதையுமென்றால் எதையும் செய்யும், முந்தைய ‘டேக்கன்’… (READ MORE)
ஆழ்ந்த வரிகள் – திருப்புகழ்
‘அறிவால் அறிந்து உன்னிருதாள் இறைஞ்சும் அடியார் இடைஞ்சல் களைவோனே!’ – திருப்புகழ் வரிகளின் ஆழமான அர்த்தம் ஆடிப்போகச் செய்கிறது!
திருவாதிரை திருநாள் இன்று!
அடைமழை பெய்தபோதும் ஆடற்பெருமான் அவனாகவே சென்று அடியார் சேந்தனார் குடிலில் களி உண்டு களித்தத் திருவாதிரை திருநாள் இன்று! ஆயிரங்கால் மண்டபத்தில் ஆடி ஆடி வருவதை காணக் கண் ஆயிரம் வேண்டும். அழகிய சிற்றம்பலத்தான் அருள் மழை பொழியட்டும்,… அகிலத்தோர் வாழ்வு சிறக்கட்டும். அமைதி வரட்டும்! : பரமன் பச்சைமுத்து
‘கனவு மெய்ப்படவேண்டும்’ on 1st Jan’15
‘கனவு மெய்ப்படவேண்டும்’ Program On 01.01.15 @ Muththamizh Peravai 10am-12pm
அச்சம் தவிர், ஆளுமை கொள் – Part 3
பிரபல வார இதழில் பிரசுரமாகி வரும் தொடர்: ‘எல்லாம் தெரிந்தவர் என்று எவருமே கிடையாது,’ ‘நீங்கள் உங்களிடம் கேட்டுக்கொள்ள வேண்டிய முக்கிய கேள்வி,’ ‘என்னதான் நடக்கும் நடக்கட்டுமே,’ அதற்கு தயாராவது எப்படி ஆகிய முக்கிய மூன்று விஷயங்களை சென்ற வாரம் பார்த்தோம். “பரமன் பச்சைமுத்து அவர்களுக்கு, வணக்கங்கள். தங்கள் தொடர் எனக்குள்ளே ஒரு தெம்பை தருகிறது. பெரிய… (READ MORE)
‘அச்சம் தவிர், ஆளுமை கொள்!’ – Part 2
பிரபல வாரப் பத்திரிகையில் பிரசுரமாகி வரும் தொடர்: சென்ற இதழில் பெங்களூருவில் நடந்த ஒரு நிஜ சம்பவத்தைப் பார்த்தோம். அதில் பார்த்த கார்த்திக், அருண் கதையில் மட்டுமல்ல, இவ்வுலகத்தின் நிதர்சனமான உண்மை – ‘படிப்பு மட்டுமே போதாது!’. ‘படிச்சவன் பாட்டக் கெடுத்தான், எழுதனவன் ஏட்டைக் கெடுத்தான்,’ என்று நீட்டி முழக்கி குத்திப் பேசும் பாரதிராஜா பட… (READ MORE)
‘PK’ – Movie review
வானுலகிலிருந்து மண்ணுலகிற்கு வரும் கடவுளின் சக்தி வாய்ந்த ரிமோட்டை சிங்காரச் சென்னையில் யாரேனும் அபகரித்துக் கொண்டால், என்னாவாகும்? ‘அறை எண் 305ல் கடவுள்’ இருப்பார். வானுலகிலிருந்து மண்ணுலகிற்கு வரும் வேற்றுகிரகவாசி ஒருவனின் சக்தி வாய்ந்த ரிமோட்டை ராஜஸ்தான் பாலைவனத்தில் யாரேனும் அபகரித்துக் கொண்டால், அவன் தலைநகர் தில்லிக்குப் போனால், என்னவாகும்? அவனது தேடலும், அவனது விகல்பமில்லா… (READ MORE)
வையம் மேம்பட, வைக்கோலில் வந்துதித்தவனே…
மாக்களாயிருந்தோரை, மக்களாய் மாற்றிடவே மரதச்சன் வீட்டு மாட்டுத்தொழுவத்தில் மலர்ந்தவனே… வையம் மேம்பட, வைக்கோலில் வந்துதித்தவனே வணங்குகிறோம்! தன் கருத்துக்களை நிலைநாட்ட எவர் உயிரையும் எடுக்கலாம் என்ற விதிகொண்ட உலகில், தன் உயிரையே கொடுத்து உயர் கருத்துக்களுக்கு உயிர் கொடுத்தவனே… எபிரேயம் இயம்பிய எருசலேமின் ஏசுவே… முப்பது வெள்ளிக்காக உன்னைக் காட்டிக்… (READ MORE)
மின்பிம்பங்களுக்கு உயிர் தந்தவர், மின் எரியூட்டலுக்கு உடல் தந்துவிட்டார்!
நன்னிலம் பகுதியில் பிறந்தவர், நானிலம் போற்ற வாழ்ந்தவர், தமிழ் நிலம் தவிக்கப் போய்விட்டார்! ஏஜீஸ் ஆஃபீஸில் நாடகத்தை தொடங்கியவர், நேற்று தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டார். பல பாத்திரங்களுக்கு வாழ்வளித்து ஏற்றிவிட்டவர், தன் பாத்திரங்களை மட்டும் உலகிற்கு விட்டுவிட்டு உலகை துறந்து விட்டார். காலத்தை மீறிய படங்களைத் தந்தவர், காலதேவனிடம் போய் சேர்ந்துவிட்டார். அடடா,… (READ MORE)
அச்சம் தவிர், ஆளுமை கொள் – 1 : பரமன் பச்சைமுத்து
பிரபல வாரப் பத்திரிகையில் வெளிவரும் தொடர்: “படித்தால் மட்டும் போதுமா?” சமர்ப்பணம்: சிறுகச் சிறுகச் சேர்த்ததையெல்லாம் மொத்தமாய் கொட்டியும், விளைநிலங்களை விற்றும், வியர்வையோடு தங்கள் ரத்தத்தையும் தந்து தங்கள் சக்திக்கு மீறி தங்கள் பிள்ளைகளை எப்படியாவது படிக்க வைத்துவிட்டு முன்னுக்கு வந்துவிடுவான் என்று காத்திருக்கும், தமிழகத்தின் தகப்பன்மார்களுக்கும், ‘ஆணிபோயி ஆவணி வந்தா என் புள்ள டாப்புல… (READ MORE)
தினமணி – “கம்ப ராமாயணம் படித்தால் கடவுளை உணரலாம் – பரமன் பச்சைமுத்து”
கம்பன் கழகம், திருப்பத்தூர் First Published : 07 September 2014 04:04 AM IST கம்ப ராமாயணத்தைப் படித்தால் கடவுளை உணரலாம் என திருப்பத்தூர் கம்பன் விழாவில் பரமன் பச்சைமுத்து பேசினார். திருப்பத்தூர் கம்பன் கழகத்தின் சார்பில் 36ஆம் ஆண்டு கம்பன் விழா ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி அரங்கில்… (READ MORE)
சூரியப் பிள்ளைக்கு சுகமில்லையாம்…
சூரியப் பிள்ளைக்கு சுகமில்லையாம், ‘ஒரு நாள் ஓய்வெடுத்தால் ஒன்றும் குறைந்து விடாது, போ!’ என்று கூறி எட்டு ஆகியும் எழாமல் இருக்கட்டும் என்று இழுத்துப் போர்த்திவிட்டு விட்டாள் இயற்கை அன்னை, இருண்ட வானம் அழுகிறது! தழிழகத்தில் மழை. – பரமன் பச்சைமுத்து
ரஜினி என்னும் மனிதனே…
மனிதனே… அந்த வயதில், ‘‘இந்தப் பீடி முடியறதுக்குள்ள உன் தலைவன முடிக்கிறேன் பாரு!’ என்று சொல்லி தீக்குச்சித் தெறிக்கப் பத்தவைத்து நீ சண்டையிட சென்றபோது, சண்டை போடுவதற்கு முன்பே எங்களை ஜெயித்தாய். … ‘கண்ணா நாம வாங்கனத எப்பவுமே வச்சிக்கமாட்டோம், திருப்பிக் குடுத்திடுவோம், இப்புடுச் சூடு,’ என்று கூறி புரட்டியெடுத்த போது தியேட்டரில்… (READ MORE)
சிதம்பரத்தில் ஒரு ஜோதி தெரிகிறது!
நிலத்தடி நீர் குறைகிறது, நீர் ஆதாரங்கள் சுருங்குகிறது என்றே எல்லோரும் பேசிக்கொண்டேயிருந்தால், எல்லாம் சரியாகிவிடுமா, நீர் பெருகி ஓடி வருமா? சிதம்பரத்தில் ஒரு ஜோதி தெரிகிறது. நெஞ்சில் நம்பிக்கை பிறக்கிறது. சிதம்பரம் நகரில் நிலத்தடி நீர் குறைந்தது என்ற கதை போய், சுனாமிக்கப்புறம் உப்பு நீர் வருகிறது என்பது விசனமாய் போனது. எல்லோரும் கவலை கொண்டிருக்கும்… (READ MORE)
அகப் பிளவு நோய்
முகப் பிளவு நோய் கொண்ட பாகிஸ்தான் பிள்ளைக்கு சென்னையில் முகச்சீரமைப்பாம், அகப் பிளவு நோய் கொண்டோர்க்கு அகச் சீரமைப்பு எங்கே?
இன்ட்டர்ஸ்டெல்லார்
b ‘அண்டப் பெருவெடிப்பில் அசாதாரண பயணத்தில் ஐம்பரிமாணத்தில் வரும் கோளாறு,’ என்று எழுத சுஜாதா இல்லையே என்று தோன்றியது, ‘இன்ட்டர்ஸ்டெல்லார்’ பார்த்துவிட்டு வெளியே வரும்போது! – பரமன் பச்சைமுத்து
‘காவியத் தலைவன்’ – Movie review
தன்னுடன் இருப்பவனுக்கு பெயரும் புகழும் வருவது கண்டு பொறுக்காது, சூழ்ச்சிகள் பல செய்து, சூழ்நிலைகளைப் பயன்படுத்தி அவனை வெளியேறச் செய்யும் மேடை நடிகனின் கதை. வெளியே ஊர் உலகத்திற்கு என்னதான் கதை சொல்லி நம்ப வைத்தாலும், உள்ளத்தினுள்ளே ஓர் நாள் உண்மை வந்து உறுத்தும் என்று முடிகிறது. வெள்ளையர்களை வெளியேறச் செய்ய வேண்டுமென்ற விடுதலை… (READ MORE)
சொக்கப் பானை சுடரில்…
வெப்பம் குறைந்து வென்பனி பொழியட்டும், எல்லோர் வாழ்விலும் குளுமை வரட்டும் அந்தி மாலையில் தோன்றும் ஆறு கார்த்திகை நட்சத்திரங்களும் நல்ல சேதிகள் சொல்லி மின்னட்டும். சொக்கப்பானைச் சுடரில் சோம்பலும், சோர்வும் ஒழிந்து போகட்டும். அக இருள் அழிந்து உள்ளே சுடர் வரட்டும் திருக்கார்த்திகை தீப நாளில்! வெளிச்சம் பெருகட்டும், வெற்றி… (READ MORE)
பூஜையறைக் குரங்கு…
வயிற்றுப் பசி தீர்க்க திறந்திருந்த பால்கனி வழியே எங்கள் வீட்டு ஹாலுக்குள் வந்து டாட்டா ஸ்கை பாக்சை தள்ளிப் பார்த்து, ஏதும் கிடைக்காமல் அருகிலிருந்த பூஜையறைக்குள் புகுந்து விக்ரகத்தின் மீதிருந்த சாமந்தியையெடுத்து பிய்த்துப் பிய்த்துப் போட்ட வேளையிலே, அடுத்த அறையிலிருந்து வந்த அத்தை அலறியது பார்த்து பாய்ந்து ஓடிப் போனது. பசிக்கு வழி தேடி பால்கனி… (READ MORE)
இறையருளால்…
ஒன்றுமே நடக்காமல் ஓராண்டு கழியலாம் இரண்டே நாட்களில் எல்லாம் மாறிப்போகும் இறைவன் திருவருளால்! :பரமன் பச்சைமுத்து
Fury – Movie review : Paraman Pachaimuthu
A Super scene – Movie Clip here – CLICK HERE to see VIDEO ‘கொள்கையாவது, குடைமிளகாயாவது, உயிர்தான் முக்கியம். கொல்லப்படாமல் இருக்க, கொல்வது முக்கியம்’ என்று எதிலும் பிடிப்பில்லாமல் மூர்க்கமாய் போர்த்தொழில் புரிந்து வாழும் ஒரு குழுவிற்குள், ‘இதெல்லாம் என் கொள்கைக்கு எதிரானவை, செய்யமாட்டேன். என்னை வேண்டுமானால் கொன்று போடு. கொல்லமாட்டேன்…. (READ MORE)
சுயசரிதையில் வருத்தத்தை வெளிப்படுத்தும் சச்சின்
வெளிவருவதற்கு முன்பே, கிரேய்க் சாப்பல் வீட்டிற்கு வந்து இப்படியெல்லாம் பேசினார், என் மனைவி அஞ்சலியும் நானும் இப்படியெல்லாம் வருந்தினோம் என்று சர்ச்சை கட்டி தனது சுயசரிதை நூல் பற்றிய எதிர்பார்ப்பைப் பற்ற வைத்த சச்சின், தனது ‘ப்ளேயிங் இட் மை வே’ நூலை வெளியிட்டு விட்டார். தனது பெயரை பெரிதாகப் போட்டு, நூலின் பெயரை சிறிதாகப்… (READ MORE)
மழைநேர மனசு
‘வீட்டை விட்டுக் கூடப் போகச் சொல்லு, போய்விடுகிறேன். ஆனால் செய்திகளை மட்டும் பார்க்கச் சொல்லாதே!” என்று காததூரம் ஓடும் பெண்மணிகளையும், குழந்தைகளையும்கூட அதிகாலையில் எழுந்து பல்கூடத் துலக்காது சிரத்தையாய் செய்திகள் பார்க்க வைத்து விடுகிறது இந்த மழை. ‘இன்னைக்கு பள்ளி இருக்கா, விடுமுறையா?’ …. சீஃப் மினிஸ்ட்ரே நமக்கும் சி.இ.ஓ.வாக இருந்திருக்கலாம் என்று நினைக்கத் தோன்றுகிறது… (READ MORE)
உத்திரப் பிரதேச எம்.பி.யும், உச்சநட்சித்திரம் ரஜினியும்…
இன்று வந்ததில் இரண்டு செய்திகள் கவனம் ஈர்க்கின்றன. ஒன்று – தமிழுக்காக உழைக்கும் பாஜாகாவின் தருண் விஜய். மற்றது – பாஜாகா அரசு ரஜினிக்கு தரும் விருது. உத்திரப் பிரதேச தருண் விஜய்க்கு தமிழ் மீது ஆசை, உச்ச நட்சத்திரம் ரஜினி மீது பாஜாவிற்கு ஆசை! தருணின் ஆசை நிறைவேறுவது தமிழுக்கு நல்லது. தாமரைக் கட்சியின்… (READ MORE)
எருமைமாடும், ஏரோப்ளேனும்…
“எருமைமாடு கூட ஏரோப்ளானில் இடிக்கும் அளவிற்கு வளர்ச்சி பெற்ற மாநிலம் எங்கள் மாநிலம்!” – என்று சொல்வார்களோ! #Aircraft 737 hit a buffalo in its takeoff roll in Surat(Gujarat) and got damaged – News
“Life – Lord Krishna’s way…”
[Got Published in a leading English Magazine] Viewing the same thing, two people can process two different thoughts and have two completely different experiences. From the terrace of a building, Vasudha, my friend, and I were watching schoolchildren, in uniform,… (READ MORE)
நாய் பேசுமா?
என்ன சொன்னாலும், ‘லொள்’என்றே சப்தமெழுப்பும் நாயை ‘லவ் யூ’வென சொல்ல வைக்க முடியுமா? முயன்றிருக்கிறார் ஒருவர். பாருங்களேன். (வாட்ஸ் அப்பில் வந்தது)
பேசிப் பேசி…
பேசிப் பேசி தீர்வு காணலாம். பேசிக்கொண்டு மட்டுமே இருந்தால், பேசிப் பேசி சோர்வு காணலாம். வெறும் பேச்சு மட்டுமே போதாது வேலையில் இறங்குங்கள், வெற்றி வேண்டும் நமக்கு!
‘கத்தி’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து
அந்தக் காலத்தில் மிகப் பெரிய ஹிட்டடித்த ‘வாணி – ராணி’, எம்ஜியாரின் ‘எங்க வீட்டுப் பிள்ளை’, ரஜினியின் ‘ராஜாதிராஜா’ ‘அதிசய பிறவி’ ரக சாதுவான நல்லவர் ஒருவரின் இடத்தில், அவரைப் போலவே உருவம் கொண்ட பொல்லாதவர் வந்து உட்கார்ந்து ஆடும் அதே ஆள்மாராட்ட ஆக்ஷன் கதை, புதுக்களம் என்ற ஆயில் பிரிண்ட் போடப்பட்டிருக்கிறது. உழுதுண்டு வாழ்ந்தவர்கள்… (READ MORE)
இப்படிக்கு, இக்கால மனிதன்…
நேற்று, ஓடி ஓடி உழைத்து, வேளா வேளைக்குப் பசியார உணவுண்டேன், உடல் நலம் கண்டேன். இன்று, ருசியார உணவு கண்டு, கண்ட வேளையில் உண்டேன், உடல் கெட்டேன், ஓடி ஓடி உழைக்கிறேன், நலம் பெற. இப்படிக்கு, இக்கால மனிதன் By – பரமன் பச்சைமுத்து [இன்ஃபினி இதழில் பிரசுரமாயிற்று]
தீரா நதி
காலைவரை கைவீசி நடந்த கமலவள்ளி இப்போது கண்ணாடிப் பேழையில் கண்ணுறங்குகிறாள். காலையில் கடைசி ஊர்வலமாம். கடைசிக்காலம்வரையிருப்பாளென்றிருந்த கணவன், கடன்களையாற்ற கையூன்றி எழத்தான் வேண்டும். வாழ்க்கை ஒரு தீரா நதி. எவர் பொருட்டும் அது நிற்பதில்லை. சிலசமயம் வேகமாய் போகும் நடுப்பகுதிக்கு இழுத்துப் போய் வெகு தூரம் கொண்டு விடுகிறது. சிலகாலம் மெதுவாகப்… (READ MORE)
My decision – right or wrong! – Paraman Pachaimuthu
[ Published in an English Magazine ] ‘Eega eega eega… Eedaa Eedaa Eedaa… kannu rendil theda… hey… Eega Eega Eegaaaa.’ A small boy cut my way and ran to the other side road, singing this song very loudly, with a… (READ MORE)
நான் மங்கல்யான், செய்வாய் கிரக விண்கலம் பேசுகிறேன்…
“வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்,” என்றுப் பாடிப்போன வள்ளலார் வாழ்ந்திருந்த பகுதிகளில் வளர்ந்ததாலோ என்னவோ, வயல், வரப்பு, விவசாயம் என்றால் ஒரு தனி உற்சாகம் ஓடி வந்து ஒட்டிக்கொள்ளும் என்னுள்ளே. பச்சைப் பசேலென்று தலை நிமிர்த்தியோ அல்லது நன்றாய் விளைந்து, தங்க நிறத்தில் நெல்மணிகளின் கனத்தில் தலைசாய்த்தோ நிற்கும் நெல்வயல்களினூடே நடந்து போயிருக்கிறீர்களா? புல்மூடிய… (READ MORE)
Yes, People will speak behind you
[ Published in ‘infinithoughts’ July,2014 ] Yes, People will speak behind you – Paraman Pachaimuthu Dear Vini, I understand how one would feel when people around us speak badly about us. Feel like earth should break, open wide and feel… (READ MORE)
தெருச்சந்தி பிள்ளையார் படம்
கடவுள் நம்பிக்கையில் அல்ல, யாரும் குப்பை போட்டு சிறுநீர் கழிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் தொங்க விடப்படுகிறது தெருச் சந்தி சுவரில் பிள்ளையார் படம்! : பரமன் பச்சைமுத்து
தஞ்சையில்…
என்னை மலைத்துப் போகச் செய்த, மனங்கவர்ந்த மாமன்னன் ராஜராஜனின் மண்ணில், ஆகஸ்டு 4ல் பிறந்த அவன் மகன் 52 தேசங்களை ஆண்டபோது தலைநகராய் இருந்த தஞ்சையின் வீதிகளில் உலாத்துகிறேன். வந்தியத்தேவனும், குந்தவை தேவியும், வீரநாச்சியாரும், பஞ்சன்மாதேவியும், பரவையும் நடந்த பிரதேசத்தில் சுவாசிக்கிறேன்!
தேடலும், தேர்வும்
நல்ல தமிழ் எழுதவேண்டி இன்று ஐய ஓகாரம், குற்றியலுகரம், ‘என்ற’ ‘என்னும்’ வித்தியாசங்கள் படிக்கும்போது, அன்று வாழ்க்கைக்குப் படிக்காமல், தேர்வுக்குப் படித்தது புரிகிறது. தேடலுக்குப் படிப்பதற்கும், தேர்வுக்குப் படிப்பதற்கும் ஆழ அகல உயரங்கள் வேறுவேறு! -பரமன் [‘இன்ஃபினி’ இதழில் பிரசுரமாயிற்று]
மனைவி படிக்கிறாள்
என் மனைவி… குளித்துவிட்டு வருகையில் குரோமோசோம்கள், ஜீன்கள் என்கிறாள். டவலை உலர்த்தயில் டெல்லி சுல்தானேட், ஷேர்ஷா என்கிறாள். கடுகு தாளிக்கையில் கங்கைகொண்ட சோழன், கார்டீசியன் ஸிஸ்டெம்ஸ், ட்ரிக்னாமெட்ரி சொல்கிறாள். சோறு இறக்கும்போது சோடியம் குளோரைடின் சமன்பாடு சொல்லிப் பாக்கிறாள். நடந்து செல்லும்போது நியூட்டனின் இயக்க விதி ஒப்பிக்கிறாள். மர்ச்சனட் ஆஃப் வெனிஸும், ஷேக்ஸ்பியரும் மனனம் செய்கிறாள்…. (READ MORE)





