Self Help

wp-1672289809192.jpg

அட காக்கையே!

சோறு வைத்தால் மறுத்து ஓடும் நொறுக்குத்தீனி வைத்தால் ஓடி வரும் சிறு பிள்ளையைப் போலவே செய்கிறது தினமும் காலையில் பால்கனியில் பிஸ்கட் துண்டுகள் கொத்தியுண்ண வரும் காக்கை. வைக்கும் சில பிஸ்கட் துண்டுகளை தின்றுவிட்டு அடுத்த நாள் மட்டுமே வரும் இப்பறவை, பிஸ்கட் தீர்ந்துவிட்டதே வெறும் (கையோடு!) அலகோடு அனுப்பக்கூடாதேயென்று சில துண்டுகள் மந்தைவெளி ‘சுஸ்வாத்’… (READ MORE)

Self Help, பொரி கடலை

,

IMG-20201017-WA0104.jpg

ஓர் ஆசிரியனுக்கான ஓர் உண்மையான பரிசு

கவின்மொழியாலும் குத்தாலிங்கத்தாலும் பரிந்துரைக்கப்பட்டு மலர்ச்சிக்கு வந்த பெண்மணியா இவர் என வியக்கவே செய்கிறேன். மாதத்திற்கொரு முறை கண்ணீரும் கம்பளையுமாய் கவுன்சிலிங் வேண்டி மலர்ச்சி அலுவலக கதவை தட்டிய பெண்மணி, எந்த வகுப்புகள் நிகழ்ச்சிகள் வந்தாலும் மலர்ச்சியோடு கலந்து வாலண்ட்டியராகவும் வளர்ச்சி இதழோடும் பயணித்து அழகாக வளர்ந்து நிற்கிறார். சமீபத்திய 10 பேட்ச்களில் முழுமலர்ச்சி செய்தவர்கள், உங்கள்… (READ MORE)

Paraman's Program, Self Help, VALARCHI Tamil Monthly

, , , , , ,

wp-15927307897578560722994003409731.jpg

யோகா – தினம் 2020

தினம் யோகா உடல் எடை கொண்டு தசை வலிமை செய்தல், தடகளம், ஓட்டம் என சில வித உடற்பயிற்சிகளை கலந்தும் மாற்றி மாற்றியும் செய்யும் எனக்கு மூச்சுப் பயிற்சியோடு இயைந்த யோக ஆசனங்கள் செய்யும் போது ஏற்படும் நிலை எதையும் தாண்டியது. அந்த ஆழ்ந்த சீரான மூச்சும், நெஞ்சுக் குழியை சுற்றிலும் ஏற்படும் உன்னத உணர்வும்,… (READ MORE)

Self Help, Spirituality

ஒரு வார்த்தையில் அடைத்து விட முடிவதா உணர்வு!

‘டைட்டானிக் பாபு ஆர் ஏ புரம் நியூஸ்பேப்பர்’ செல்லிடப்பேசியின் தொடுதிரையில் ‘காண்டாக்ட்ஸ்’ஸில் ‘ஆர்ஏ புரம் நியூஸ்பேப்பர்’ என்று டைப் செய்து தேடுகிறேன். புதிதாக ஒரு மனிதரின் எண்ணை  செல்லிடப்பேசியில் சேர்க்கும்போது, தேடும்போது எளிதாக இருக்கும் என்பதற்காக அவருக்கு ஒரு அடையாளத்தையும் சேர்த்து பதிவது நம் இயல்புதானே. ‘உமா ப்ரியாஸ் ஃப்ரண்ட்’ ‘ராஜேந்திரன் எலக்ட்ரிகல்ஸ்’ ‘வாணிஸ்ரீ கெமிஸ்ட்ரி… (READ MORE)

Self Help

அடுத்தவரின் நிலையை புரிந்து ஒத்துழைத்து உயர வேண்டிய நேரமிது – பரமன் பச்சைமுத்து

சீனா கையூன்றி எழுந்து இப்போது இயங்கத்தொடங்கிவிட்ட வேளையில் கிட்டத்தட்ட மொத்த உலகமும் முடங்கிக் கிடக்கிறது. இந்திய நாடு மொத்தமாய் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறது. மருத்துவர்களும், காவல்துறை மற்றும் அரசுப் பணியாளர்களும் வெளியில் தங்களைத் தந்து மற்றவர்களுக்காகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். மூன்று வாரங்கள் வீட்டுக்குள் இருங்கள், வீட்டு வாசலில் லக்ஷ்மணன் ரேகை இருப்பதாகக் கருதி அதைத் தாண்டி… (READ MORE)

Politics, Self Help

வித்தியாமில்லா நாள் வீணே

அதிகாலை துயில் நீங்குகையில் போர்வை உதறி எழுந்த அதே படுக்கைதான், இரவு படுப்பதற்கும். எழுந்து போனவனுக்கும் திரும்ப வருபவனுக்கும் வித்தியாசமில்லா நாள் வீணே. இரண்டுக்குமிடைப்பட்ட நாளின் பொழுதுகளில் எவ்வளவு பயணித்திருக்கிறேன், எவ்வளவு அனுபவம் பெற்றிருக்கிறேன், எத்தனை மனிதர்களைத் தொட்டிருக்கிறேன் என்பன உரைக்கின்றன எப்படி இந்த நாளை வாழ்ந்திருக்கிறேன் என்று. பரமன் பச்சைமுத்து 04.05.2018 சென்னை Facebook.com/ParamanPage

Self Help

,

மனித மன நிமிர்த்திகள்…

ஒலிம்பிக்ஸ், காமன்வெல்த், பேட்மிட்டன், டென்னிஸ் என்று தனி மனித ஆற்றலின் எல்லை உடைக்கும் விளையாட்டுக்கள் என்னுள் உற்சாகத்தை ஊற்றி என்னை முழுதும் உயிர்ப்பித்து விடுகின்றன. இந்த மாதிரி நேரங்களில் என்னால் உலகையே மறந்து விடக் கூட முடிகிறது. ஒரு நாள் இவற்றை நேரில் பார்த்து ரசிக்க வேண்டும். எவ்வளவு உழைத்திருப்பார்கள் இந்நிலை கைவர! அடுத்த மனிதனுக்கு… (READ MORE)

Self Help

, , , , , , , , , , ,

screenshot_20180330-143804791243021.jpg

ஐயய்யப்பா…. உஸ்ஸ்… என்னா வெய்யிலு!’

‘ஐயய்யப்பா…. உஸ்ஸ்… என்னா வெய்யிலு!’ என் அடுக்ககத்தின் அடித்தளத்தில் மின் தூக்கிக்காகக் காத்திருக்கும் ஒரு பெண்மணி அருகிலிருந்த சுவற்றிடம் தன் அங்கலாய்ப்பைக் கொட்டிக் கொண்டிருந்தார். அதைக் கேட்டுக் கொண்டே இரண்டாவது மாடி நோக்கி நடக்க படிகளில் ஏறுகிறேன் ‘மிஸ்டர் கூல்’ஆக. திருவண்ணாமலை செங்கத்தின் வெக்கை உமிழும் 41 டிகிரியையே பார்த்தவனுக்கு, சென்னை ஆர் ஏ புரத்தின்… (READ MORE)

Self Help, Uncategorized

, , , ,

எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,

🌹🌹 #TeachersDay டீச்சர்… அப்பா அம்மா வீடு தாண்டி ஒரு உலகம் உறவு இல்லா அந்தப் பிஞ்சு வயசில், திடீரென எங்கிருந்தோ வந்து உறவாகிப் போன என் ஒண்ணாம் வகுப்பு டீச்சர்… அதட்டினாலே அழுதுவிடும் அந்த வயசில் அன்பா அருகில் அமர்ந்து அனா ஆவன்னா சொல்லித் தந்த டீச்சர் எலியும் சிங்கமும், காகமும் நீர்க் குடுவையும்… (READ MORE)

Media Published, Self Help

, , , , , ,

சேவலும் நாயும் சொல்வதென்ன : காணொளி

எதற்குமஞ்சா துணிவோடு வீறு கொண்டெழுந்துவிட்டால், எதிரில் எவர் வரினும் முடியாது போகும். சிறியோனாயினும் கண்களில் அச்சமின்றி நிற்போன் முன்னே பெரியோனும் அஞ்சுவரே. சிறியோரொல்லாம் சிறியோரல்லர், பெரியோரெல்லாம் பெரியோரல்லர்! அச்சம் கண்ட வலியோன் எளியோனாகி ஓடுகிறான். அச்சம் தவிர்த்த எளியோன் வலியோன் ஆகிறான். அச்சம் தவிர்… ஆளுமை கொள்! பரமன் பச்சைமுத்து 02.09.2017 Facebook.com/ParmanPage

Self Help, Uncategorized, பொரி கடலை

, , ,

சொல்ல என்ன இருக்கிறது

உடலில் சில நூறு சிறு ஊசிகள் இறங்கி மறைந்து அமிழ்ந்து கிடந்த அனுபவத்திலிருந்து வெளிவரும் போது தோன்றுவது ‘சொல்ல என்ன இருக்கிறது!’ #தவம் #தியானம் 02.09.2017

Self Help, Spirituality

, , ,

தினமெழுந்தமர்ந்தால்…

அதிகாலை தினமெழுந்து கண்மூடியிருக்கும் தவம் பயிலப் பயில, குறிப்பிட்ட நேரம் வருகையில் தானாகவே தயாராகும் உடலையும் உள்ளத்தையும் உணர்ந்தல் இனிது. 30.08.2017

Self Help, Spirituality

, , , ,

அனுபவப் பகிரல் என்பது அதிகம் நல்லதையே செய்யும் என்றாலும் …

அனுபவப் பகிரல் என்பது அதிசயங்கள் செய்யக் கூடியது.  அறியாமையால் அடுத்த வர இருந்த தவறுகளை இங்கிருந்தே களையச் செய்து ஏற்றம் தரக்கூடியது. வாழ்க்கைப் பாதையில் பயணித்து ஒரு நிலையை கடந்து நிற்கும் ஒருவனிடம் துவக்க நிலையில் நிற்கும் ஒருவன் செவிமடுக்கும் போது செய்யப்படும் அனுபவப் பகிரல் அசாத்திய விளைவுகளை அவனுள் ஏற்படுத்தி அவனை தூக்கி விட்டுவிடும்…. (READ MORE)

Media Published, Self Help, VALARCHI Tamil Monthly

, , , , ,

Husband scolds

கேள்வி: எனது கணவர் ‘நீ வேஸ்டு!’ என்பது மாதிரியான வகையில் அடிக்கடி சொல்லி அவமானப்படுத்துகிறார்.

  கேள்வி: எனது கணவர் ‘நீ வேஸ்டு!’ என்பது மாதிரியான வகையில் அடிக்கடி சொல்லி அவமானப்படுத்துகிறார். இவ்வளவுக்கும் வீட்டில் எல்லா வேலையையும் நான்தான் செய்கிறேன்.   பரமன்: அடிக்கடி அதையே சொல்கிறார் என்றால் இதில் கோவப்பட என்ன இருக்கிறது. மனிதன் வேட்டையாடிய காலத்திலிருந்து பெற்ற குணம் ஒன்று இன்றும் தொடர்கிறது. எதைச் செய்தால் எதிரிலிருப்பவர்களை நிலைகுலையச்… (READ MORE)

Self Help, VALARCHI Tamil Monthly

, , , , , , , , ,

basheer

சாமானியப் பதிவுகள்: எப்படி பத்து மணிக்கு உங்களால் தூங்க முடிகிறது, தூக்கம் வருகிறது?

‘ஒழுங்காப் படிச்சு, ஒரு நல்ல வேலைக்கு போயிட்டா உருப்படலாம்!’ என்பது பொதுவிதியாகப் போனது இன்று. படித்து பட்டம் பெற்றால்தான் பெருநிறுவனங்களில் வேலை பெற முடியும் நிறைய சம்பாதிக்க முடியும் என்ற நிலையிருக்கும் இந்நாளில் பெரு நிருவனங்களும், படித்து பட்டம் பெற்று ஆராய்ச்சி மேற்கொள்பவர்களும் படிக்காத சாமானிய மனிதர் ஒருவரிடம் வந்து ‘வியாபாரம் செய்யும் விவரம் என்ன?’… (READ MORE)

Media Published, Self Help

, , , , , , ,

Daily Thanthi Agamum Puramum Review

தினத்தந்தி புத்தக மதிப்புரை – ‘அகமும் புறமும்’

சென்னை கடற்கரை சாலையின் மத்தியில் நிற்கும் கம்பீரமான சிவாஜிகணேசனின் சிலையைப் பார்த்து ஒரு வெளிநாட்டுப் பெண்மணி ‘ஹூ ஈஸ் தட் மேன்?’ என்று எழுப்பும் கேள்வியோடு தொடங்கும் எனது முந்தைய நூலான ‘அகமும் புறமும்’ குறித்த புத்தக மதிப்புரையை இன்று ‘தினத்தந்தி’ வெளியிட்டிருக்கும் வேளையில், அந்த சிவாஜி கணேசன் சிலை கடற்கரையில் இல்லை இப்போது. ‘பல்வேறு… (READ MORE)

Media Published, Self Help

, , , , , , ,

Agamumpuramum

அமெரிக்க நண்பர் ‘அகமும் புறமும்’ நூல் பற்றி

அதிகாலை வேளையிலேயே அமெரிக்க தேசத்தின் ஆஸ்டின் நகரிலிருந்து ஒரு பதிவு ‘அகமும் புறமும்’ நூல் அருமையென்று. நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் கட்டாயம் படிக்கவும் என்று பரிந்துரைக்கிறேன் என்று. படித்து பரவசப்பட்ட மென்பொருள் பொறிஞர் நண்பர் கட்செவியஞ்சலின் குழுமத்தில் பரிந்துரைத்து பதிவிட்டிருந்தார். அமேசான் கிண்டில் தொழில் நுட்பத்திற்கு நன்றி! வாழ்க! வளர்க! பரமன் பச்சைமுத்து 17.08.2017

Self Help

, , , , ,

அலாதித் தருணங்கள்

கை விரல்கள் கனத்து மெதுவே கண் விழிக்கும் வேளையில் நமது உடலே வெறும் உடலாகத் தெரிந்து கலைந்து போகும் அந்த சில விநாடிகள் அலாதியானவை! #தியானம் – பரமன் பச்சைமுத்து 17.08.2017 Www.ParamanIn.com

Self Help, பொரி கடலை

, , , , , ,

wp-image-14074033.jpg

பண்டோரா’ கிரகத்து ‘மதர் ஈவா ட்ரீ’…

ஆழ்நிலையில் அமிழத் தொடங்கும் முன்னே கண்ணுக்குத் தெரியா சிறு சிறு வயர்கள் வழியே உடலோடு ஏற்படும் இயற்கை இணைப்பை உணர்ந்திராமல் ‘பண்டோரா’ கிரகத்து ‘மதர் ஈவா ட்ரீ’ பற்றிய அந்தக்காட்சிகளை எழுதியிருக்கவோ படமாக்கியிருக்கவோ முடியாது ஜேம்ஸ் கேமரூனால்! #அவதார் Facebook.com/ParamanPage

Self Help, பொரி கடலை

, , , , ,

images.jpg

ஓடி ஓடி ஒரு தலைமுறைக்கேஉத்வேகம் தந்தவனே…

மனித ஆற்றலின் மகத்துவத்தை மாந்தர்க்குக் காட்டிய மின்னல் வீரனே ஓடி ஓடி ஒரு தலைமுறைக்கே உத்வேகம் தந்தவனே. ஒவ்வொரு முறை உன் இயங்குதலைப் பார்க்கும் போதும், உன்னைப் பற்றிப் படிக்கும் போதும் உள்ளே உயிர்த்தெழுந்தேன் நான். இறுதி விளையாட்டில் நீ இடறி விழுந்த போது இதயம் நின்றுபோய் எழுந்து நின்றோம் நாங்கள் உன்னத வீரனே, போய்… (READ MORE)

Self Help, கவிதை

, , , ,

ஆறுமுகம் 1 (3) - Copy

“சார், பணத்தை வச்சிட்டு இருந்தா வீணாக்கிடுவோம் சார்!”

ஞாயிறு முன்னிரவின் மகிழ்திருக்கும் பொழுதுகளில் ‘நாளை திங்கட்கிழமை வேலைக்குப் போகவேண்டும்!’ என்று வரும் சிறு எண்ணமே பல பேருக்கு மன அழுத்தத்தை உருவாக்கப் போதுமானது என்று சொல்கிறது சமீபத்தில் வந்திருக்கும் ஓர் ஆய்வறிக்கை. ஒரு வேலைக்குப் போவதற்கே இப்படியொரு அழுத்தம் வரும் உலகில்., மூன்று வேலையை மகிழ்ச்சியாய் செய்து வளைய வரும் ஒரு மனிதரைப் பார்த்திருக்கிறீர்களா?… (READ MORE)

Self Help

, , , , , , ,

‘கவலையா, அதெதுக்கு?’

வீட்டில் இப்படி இருக்கிறது நாட்டில் இப்படி நடக்கிறது உலகம் இப்படிப் போகிறது என்று ஒவ்வொரு மனிதனுக்கும் ஓராயிரம் கவலைகள் ஊறிப் பெருகும் இந்தக் காலவெளியில், பெரிய மனிதர்களும் ‘வல்லான்’களுமே கவலைகளில் கனத்துப் போகும் நிலையில், கவலைகளை அப்படிச் சட்டெனக் கடந்து போகும் ஒரு சாமானிய மனிதரைக் கண்டால் பிரமிப்பாக இருக்கும்தானே! இவரிடம் கற்றுக்கொள்ள சங்கதி இருக்கிறது… (READ MORE)

Media Published, Self Help

, , , , , , ,

Mohammaed koya

‘உங்களுக்கு ஒரு ஆறு லட்சம் ரூபாய் வந்தால் என்ன செய்வீர்கள்?’

பத்தாயிரம் சம்பாதித்தபோது ‘ஒரு பதினஞ்சாயிரம் வந்தா கொஞ்சம் சேக்கலாம். எதாவது செய்யலாம்!’ என்று நினைத்தோம். பதினைந்தாயிரம் வந்தபோது இரண்டாம் மாதத்திலிருந்து அதுவும் பற்றாமல் போனது. ‘ஒரு முப்பதாயிரம் வந்தால் எதாவது செய்யலாம்’ என்று சொல்லிக்கொண்டோம். ஆண்டுகள் ஓடின, ஊதியங்கள் ஏறின, வாழ்வின் தேவைகள் மாறின, நாம் சொன்ன அந்த ‘இன்னும் கொஞ்சம் கூட இருந்தா நல்லா… (READ MORE)

Media Published, Self Help

, , ,

nathipol 8

‘நதி போல ஓடிக் கொண்டிரு…’ – Part 8

8. ‘துணிச்சல் என்பது பயத்தை துறப்பது அல்ல, அது பயத்தைத் தாண்டிய பார்வை’   மிக உயரத்திலிருக்கும்போது கீழே குனிந்து பார்க்காதவரை உயரம் பற்றிய பிரக்ஞை எதுவுமேயில்லாமல் செய்வதை தொடரமுடியும்.  கீழே ஒரு முறை பார்த்துவிட்டால் ‘எவ்வளவு உயரம்!’ என்பதான ஒரு எண்ணம் வந்துவிடும். டோக்யோவின் ஷினகாவா பகுதியில் இருக்கும் பெரும்புகழ்பெற்ற ‘ஹோட்டல் ஷினகாவா பிரின்ஸ்’சின்… (READ MORE)

Self Help

, , , ,

mani 1

வேறுவழியின்றி முன்னேறியே செல்ல வேண்டும்!

‘நீங்கள் பார்க்கும் இந்த வேலையில் இருக்கும் கஷ்டங்கள் என்ன?’  – இந்த கேள்வியை உங்கள் முன் வைத்தால் என்ன பதில் சொல்வீர்கள் நீங்கள்? இந்தக் கேள்வியை முன்னால் வைத்தால் பொதுவான உலகம் சொல்லும் பதில் என்னவாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியும்.  ‘அய்யய்யய்யோ…அத ஏன் கேக்கறீங்க? மனுஷன் செத்து சுன்னாம்பா ஆவறேன் இங்கே!’ என்று ஆரம்பித்து… (READ MORE)

Self Help

, , , , ,

jesus

இயேசு பெருமானின் உள்ளத்து உயரத்தில் அசந்து போகிறேன்!

  வட இந்திய சிறு நகரம் ஒன்றிக்கு புதிதாக சென்ற ஒரு கணவனும் அவனது இளம் மனைவியும் அவ்வூரின் தெருவிலிறங்கி விலாசம் விசாரிக்கிறார்கள். இளம்பெண்ணைக் கண்ட ஒருவன் பின் புறத்திலிருந்து தவறாகத் தொட முயற்சிக்கிறான், அவளது துப்பட்டாவைப் பிடித்திழுக்கிறான். ‘ஏன் இப்படி செய்கிறீர்கள்?’ என்று நியாயம் கேட்ட கணவனை அடிக்க வருகிறான் அவ்வூர் இளைஞனொருவன். அவனைத்… (READ MORE)

Religion, Self Help, பொரி கடலை

, , , , , ,

nathi-5

நதி போல ஓடிக்கொண்டிரு… 

‘இறைவன் மிகப் பெரியவன்!’ என்று சொல்வது ஒரு நிலை. அதையே உள்ளூர உணர்வது வேறு நிலை. முன்னது உதடுகளில் உதிப்பது, பின்னது உள்ளத்தினுள்ளே உணர்வது. அந்நிலை வரும்வரையில் அதன் ஆழம் புரிவதில்லை. உணர்ந்ததாக எண்ணுபவர்கள் கூட அந்நிலை வரும்போதே அதன் உண்மை நிலை கண்டு ஆழம் கண்டு கசிந்துருகிப் போகிறார்கள். ‘நான்… நான்… நான்தான்!’ என்றே… (READ MORE)

Media Published, Self Help

“நதி போல ஓடிக் கொண்டிரு…” ‘வளர்ச்சி’ சுய முன்னேற்ற இதழில்

டோக்கியோ, ஜப்பான் ‘அரிகாதோ கொசைமாசே…!’ ஒரு அழகிய சிவந்த ஜப்பானிய இளம்பெண் கிட்டத்தட்ட ‘ட’வை கவிழ்த்துப் போட்டதை போல இடுப்பை ஒடித்து குனிந்து ‘வருகை புரிந்ததற்கு நன்றீய்…!’ என்பதாக ஜப்பானிய மொழியில் கூவிக் கொண்டிருந்தாள். நன்றியைக் கூட சத்தமாக கூவி உடல்மொழி கொண்டு வெளிப்படுத்துகிறார்கள் ஜப்பானியர்கள். வெளியே ஒரு இருபது பேர் இடம் பிடிக்க ஒழுங்கான… (READ MORE)

Self Help

aadukalam

தன் மீது நம்பிக்கை கொண்டவன்…

The one who beleives on himself will never hide, from where and whom he learnt what. How he sees things is his strength. அட்ட காப்பி அடிப்பவர்களெல்லாம் அசல்தான் என்பதாக காட்டிக்கொள்ளும் உலகில், மெக்சிகோவின் ‘அமோரஸ்பெரோஸ்’ நாய் சண்டையை மனதில் கொண்டு சேவல் சண்டையை செய்தேன் என்று… (READ MORE)

Self Help, பொரி கடலை

Great teacher is

Great teacher is one who gives great learning from simple things! An ordinary student become extraordinary when he goes in the hands of a great teacher! சிறிய விஷயங்களிலிருந்து பெரிய விஷயங்களை கற்பிக்கிறார்கள் சிறந்த ஆசிரியர்கள். ‘எது விஷயம்?’ என்று பார்க்கும்போது மாணவனாய் இருப்பவன், அதை… (READ MORE)

Self Help

o-LIFE-AFTER-DEATH-facebook

உலகத்தின் ஆகச் சிறந்த ஆசிரியன்…

வாழ்க்கை, உலகத்தின் ஆகச் சிறந்த ஆசிரியன். ஒவ்வொரு நாளும், பல நிகழ்வுகளை நாம் நடந்து போகும் பாதையில் வைத்து கடந்து போக வைத்து அதில் அனுபவம் கொள்ளச் செய்து நம்மை வார்க்கிறது, வளர்க்கிறது. நான் என்பவன், நான் கடந்து வந்த அனுபவங்களினால் வார்க்கப்பட்டவன். நீங்கள், நீங்கள் பயணித்த பாதையில் சந்தித்த அனுபவங்களினால் வார்க்கப்பட்டவர்.

Self Help

, , , , , ,

exclamation

வியப்பில்லா இயந்திரங்களைக் கண்டு வியக்கிறேன்

ஒரு பயணித்தின் இடையே புதுச்சேரியில் உணவருந்திவிட்டு திரும்ப தொடர்ந்த போது, ஒரு வெண்ணிறக் கட்டடத்தைப் பார்த்து என் மகள்கள் ஒரு சேரச் சொன்னது, ‘வாவ்!’ வியக்குமளவிற்கு இதில் என்ன இருக்கிறது? இது ஒரு கட்டிடம் அழகாக இருக்கிறது. அவ்வளவுதான்! ‘வாவ்’ எதற்கு? – என்பதே என் எண்ணமாக இருந்தது. ‘எந்திரன்’ திரைப்பட சிட்டி ரோபோவிற்கு வியப்பு… (READ MORE)

Self Help, பொரி கடலை

, , ,

cicketposter - Copy

Life Vs Cricket #India-WestIndies

#India-WestIndies match வரையறை என்பது ஒரு மெல்லிய கோடு;  நாம் கோட்டிற்கு உள்ளே இருந்துகொண்டு நம் வீச்சு கோட்டைத் தாண்டி பயணிக்கும்படி செய்யும்போது பெரும் வெற்றி , நாமே கோட்டைத் தாண்டிப் போகும்போது நமது முயற்சிகள் முழுதும் வீண் என்பது கிரிகெட்டுக்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் பொருந்தும். – பரமன் பச்சைமுத்து 01.04.2016 சென்னை    

Self Help

, , ,

wpid-images.jpg

அம்மாவின் தவம்…

சிலர் சிலவற்றை செய்யும் போது, வெறுமனே அதை பார்க்கும் நம்மையும் அது தொற்றிக் கொள்கிறது. உணர்ந்திருக்கிறீர்களா? சிலர் பிரார்த்தனை செய்யும் பாங்கு,  வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு உள்ளே வந்து ஒரு இறையுணர்வை ஏற்படுத்திவிடும். ஒரு அழகான குறத்தி அதை செய்துவிட்டாள் இன்று எனக்கு. தேசிய நெடுஞ்சாலையில் ஓரத்து விடுதியில் தேநீர் அருந்த இறங்கிய போது… (READ MORE)

Self Help

, , ,

ஏறுமுகம்…

உங்களை உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும் என்பதில் தொடங்குகிறது உங்கள் ஏறுமுகம்.   உங்களுக்கு உங்களிடம் பிடித்த ஒரு விஷயம் என்ன? – பரமன் பச்சைமுத்து Facebook.com/MalarchiPage

Self Help

Ethuvum nirpathillai yenbathey - Copy

ஓடிக் கொண்டே இருக்கும் உலகம்…

சிவாஜி – என்ன ஒரு கலைஞன். அவார்டுகளால் அளக்க முடியா ஆளுமை அவர்.  வைரமுத்து தனது நூலொன்றில்,  ‘கட்டபொம்மனை, கப்பலோட்டிய தமிழனை, அப்பரை, காத்தவராயனை கண்டதில்லை நாங்கள். உன்னைத்தான் திரையில் அவர்களாகப் பார்த்தோம்’ என்று எழுதியிருப்பார். அது எப்பேர்ப்பட்ட உண்மை, அவர் எப்பேர்ப்பட்டக் கலைஞன்!  நடிப்பு என்னும் கடலை கரைத்துக் குடித்த குறுமுனி அவர். நடிப்பிற்கு… (READ MORE)

Self Help

, , , , , , , , , , , , , , , , , ,

Marathinayam - Copy.jpg

மரத் தியானம்…

தியானத்திலிருந்து மெதுவே மீண்டு வெளி வருகையில் பால்கனிக்கு பக்கத்தில் நிற்கும் கருவேப்பிலை மரம் கூட தியானத்தில் உறைந்து நிற்பதாய் தோன்றுகிறது. மேற்பக்க கிளையின் இலைகள் காற்றில் ஆடினாலும் வேப்ப மரம் உள்ளே பெரும் அமைதி கொண்டு நின்று தியானிப்பதாகவே தோன்றுகிறது.  தூரத்து மொட்டைமாடியில் காயவைத்த துணிகளை எடுக்கும் யாரோ ஒரு அக்கா மட்டும் ஏன் இத்தனை… (READ MORE)

Self Help, Spirituality

, ,

‘சென்னை மீளும்!’

அடுக்ககக் குடியிருப்புக்கு வெளியே ஆறுபோல் சுழித்து ஓடும் நீர். ‘ஐயய்யோ தண்ணி, ஆட்சியாளர்கள் அக்ரமம், ஆக்ரமிப்பால் அவதி’ என்று அலறலாம் அல்லது நீரில் நடந்து வெளியே யாருக்கேனும் உதவமுடியுமா என்று பார்க்கலாம். இரண்டாவதை தேர்ந்தெடுத்து முழங்காலளவு நீரில் இறங்கிப் போகிறேன். போகப் போக இடுப்பளவு ஆழம், போகமுடியாது என்று போலீஸ் ஒருவர் தடுக்க வேறு புறம்… (READ MORE)

Self Help, பொரி கடலை

, ,

M2

அடுத்தவருக்கு காட்ட நினைத்து…

  அடுத்தவருக்குக் காட்ட வேண்டும் என்பதற்காகவே செயல்புரிபவன், உள்ளே சமநிலை இழப்பான், விழுந்து அடிபட நேரிடும். அடுத்தவருக்காக அல்ல, உங்களுக்காக செயல் புரியுங்கள்.  உன்னதம் தேடி வரும் – பரமன் பச்சைமுத்து

Self Help

, , , ,

nadigar-sangam-elction1

நம் ஞாயிறு நடிகர் சங்கத்திற்கல்ல…

நடிகர்கள் வாக்களிக்க வருவார்கள், ஊடகங்கள் இடைமறித்துக் கருத்துக் கேட்டு ஒளி பரப்பும், ரஜினி கருத்திற்கெதிராக கமல் கருத்தென்பார்கள், இரண்டு மார்க்கெட் இல்லாதவர்களை அழைத்து விவாதிப்பார்கள், விளம்பர இடைவேளை தருவார்கள், இதையேப் பார்த்துக் கொண்டிருந்தால் உங்கள் ஞாயிறு தீர்ந்து விடும். மாலை முடிவு எப்படியும் தெரியும், ஞாயிறை இதில் வீணடிக்காமல் உங்கள் நாளை பயனுள்ளதாக்குங்கள்! … வாழ்க!… (READ MORE)

Manakkudi Talkies, Self Help, பொரி கடலை

, , , , ,

Bangalore-to-Chennai - Copy

வாழ்க்கை வழிப் பயணம்…

இரண்டாண்டுகளுக்கு முன்பு இன்ஃபினி ஆல்ஃபா பேட்ச் 9 எடுக்க பேங்களூரை நோக்கிப் பயணித்த போது, அப்போது என்னிடம் இருந்த வெள்ளை நிற ஹோண்டா சிட்டி கிருஷ்ணகிரிக்கு அருகில் டயர் பஞ்ச்ர் ஆகி நின்றது. ஆள் கூட்டி வர சில கிலோ மீட்டர் நடத்தார் குத்தாலிங்கம். ஜாக்கியை எப்படிப் பயன்படுத்தி ஸ்டெப்னி மாற்ற வேண்டும் என்று நாங்களே… (READ MORE)

Self Help, பொரி கடலை

, , , , ,

Ulley oru

உள்ளே ஒரு மாணவன்…

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் நடத்திய தேசிய அளவிலான ‘மாடர்ன் டீச்சர் – நியூ ஐடியாஸ் ஆன் எஜுகேஷன்’  போட்டியில், தேசிய அளவில் 700க்கும் மேற்பட்ட கல்லூரி, பள்ளி ஆசிரியர்களிடையே நடந்த பங்கேற்பில், ஆன்ட்ராய்டை வைத்து ஆங்கிலம் கற்பிப்பது எப்படி என்று காண்பித்து முதலிடத்தை வென்றுள்ளார், விழுப்புரம் சத்தியமங்கலம் அரசுப் பள்ளி ஆசிரியர் எஸ்.திலீப். நம் மாநிலத்து அரசுப்… (READ MORE)

Self Help

, , , , ,

Backbiting - Copy

அச்சம் தவிர், ஆளுமை கொள் – 5

பிரபல வாரப் பத்திரிகையில் வரும் எனது ‘ அச்சம் தவிர், ஆளுமை கொள்’ தொடரிலிருந்து ஒரு பகுதி [Part 5 ] …………………………………… கேள்வி: “வணக்கம் பரமன். நான் உண்மையாய் வேலை பார்க்கும் ஊழியன். என் வேலைகளை மிகப் பொறுப்பாக பார்க்கிறேன். ஆனால் என் அலுவலகத்தில் சிலர், தங்களது வேலையில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, மேலிடத்தில்… (READ MORE)

Media Published, Self Help

, ,

IMG-20150214-WA0013

ஆதலினால் அன்பு காட்டுங்கள்…

  அன்பு காட்டுங்கள், அன்பு காட்டுங்கள், அடுத்தவர் மீது அன்பு காட்டுங்கள்.   ஒன்றாயிருந்ததை பிரித்து வைத்து இரண்டாய் செய்யும்  ஆசை, இரண்டாயிருந்ததை இணைத்து ஒன்றாய் ஆக்கும் உயிர் சிமென்ட் அன்பு.   அருகில் இருப்பவரை தூரமாக்கி விடுவது ஆசை, தூரத்திலிருப்பவரை அன்மையில் உணரவைப்பது அன்பு.   அன்பு ஊறும் அகத்தில் அழுக்குகள் அகற்றப்படும். கழுவித்… (READ MORE)

Self Help, ஆ...!, கவிதை

, ,

Formal dress

அச்சம் தவிர், ஆளுமை கொள் – 4

பிரபல வார இதழில் பிரசுரமாகி வரும் என் தொடர்வின் பகிர்வு: நான்கு: நம் சோழ மாமன்னன் ராஜேந்திர சோழன் பற்றியும், ஜப்பானின் டோக்யோ நகரில் எனக்கேற்பட்ட அனுபவங்கள் பற்றியும், ‘ஆங்கிலம் என்பது ஒரு மொழி, அறிவு அல்ல!’ ‘தாழ்ந்தவர்கள் சிலர் தமிழில் பேசியிருக்கலாம். தமிழில் பேசுவது தாழ்ந்ததல்ல’ ‘ஆங்கிலம் அறிந்துகொள்ள வெறும் 30 மணிநேர பயிற்சியே… (READ MORE)

Self Help, அச்சம் தவிர் ஆளுமை கொள்

, ,

Bhogi1 - Thumbnail

போகி என்றொரு பெயரில்…

  போகி என்றொரு பெயரில், போன வருஷத்து குப்பைகளைப் போட்டுத் தீயிலிட்டுக் கொளுத்தி பெரும்புகைக் கிளப்பி, பெரியவர்கள் மூச்சுத் திணற, பாரின் வளி மண்டலத்தில் வலி உண்டாக்கியது போதும்!   புற அழுக்குகளை பழங்குப்பைகளை களைந்து, தீயிட்டு காற்றில் குப்பையைக் கலந்தது போதும்.   அழுக்காறை, கெடும் அவாவை, இன்னாச் சொல்லை, புறங்கூறும் போக்கத்தப் பொழப்பை,… (READ MORE)

Self Help, ஆ...!

, , , ,

aalumai3.jpg - Copy

அச்சம் தவிர், ஆளுமை கொள் – Part 3

பிரபல வார இதழில் பிரசுரமாகி வரும் தொடர்: ‘எல்லாம் தெரிந்தவர் என்று எவருமே கிடையாது,’ ‘நீங்கள் உங்களிடம் கேட்டுக்கொள்ள வேண்டிய முக்கிய கேள்வி,’ ‘என்னதான் நடக்கும் நடக்கட்டுமே,’ அதற்கு தயாராவது எப்படி ஆகிய முக்கிய மூன்று விஷயங்களை சென்ற வாரம் பார்த்தோம். “பரமன் பச்சைமுத்து அவர்களுக்கு, வணக்கங்கள். தங்கள் தொடர் எனக்குள்ளே ஒரு தெம்பை தருகிறது. பெரிய… (READ MORE)

Media Published, Self Help, அச்சம் தவிர் ஆளுமை கொள்

, , , , , , , , , , , ,

ஸ்க்ரீன் ஷாட் 1

அச்சம் தவிர், ஆளுமை கொள் – 1 : பரமன் பச்சைமுத்து

பிரபல வாரப் பத்திரிகையில் வெளிவரும் தொடர்: “படித்தால் மட்டும் போதுமா?” சமர்ப்பணம்: சிறுகச் சிறுகச் சேர்த்ததையெல்லாம் மொத்தமாய் கொட்டியும், விளைநிலங்களை விற்றும், வியர்வையோடு தங்கள் ரத்தத்தையும் தந்து தங்கள் சக்திக்கு மீறி தங்கள் பிள்ளைகளை எப்படியாவது படிக்க வைத்துவிட்டு முன்னுக்கு வந்துவிடுவான் என்று காத்திருக்கும், தமிழகத்தின் தகப்பன்மார்களுக்கும், ‘ஆணிபோயி ஆவணி வந்தா என் புள்ள டாப்புல… (READ MORE)

Media Published, Self Help

Naan Mangalyaan Feb1st

நான் மங்கல்யான், செய்வாய் கிரக விண்கலம் பேசுகிறேன்…

“வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்,” என்றுப் பாடிப்போன வள்ளலார் வாழ்ந்திருந்த பகுதிகளில் வளர்ந்ததாலோ என்னவோ, வயல், வரப்பு, விவசாயம் என்றால் ஒரு தனி உற்சாகம் ஓடி வந்து ஒட்டிக்கொள்ளும் என்னுள்ளே. பச்சைப் பசேலென்று தலை நிமிர்த்தியோ அல்லது நன்றாய் விளைந்து, தங்க நிறத்தில் நெல்மணிகளின் கனத்தில் தலைசாய்த்தோ நிற்கும் நெல்வயல்களினூடே நடந்து போயிருக்கிறீர்களா? புல்மூடிய… (READ MORE)

Media Published, Self Help

, , , , ,

People will behind you - infinithoughtsJuy2014

Yes, People will speak behind you

[ Published in ‘infinithoughts’ July,2014 ] Yes, People will speak behind you – Paraman Pachaimuthu Dear Vini, I understand how one would feel when people around us speak badly about us.  Feel like earth should break, open wide and feel… (READ MORE)

Media Published, Self Help

, , , , , , , , , , , , ,