Tag Archive: Paraman Pachaimuithu

wp-1684430993390.jpg

வளர்ச்சிப் பாதை – தொடர்ந்த வளர்ச்சி…

நம்மை நேரியத்தில் வைத்திருக்கும் ஓரிடத்தில், நமக்கு உற்சாகமும் தெளிவும் தரும் ஓரிடத்தில் நம்மை இணைத்துக்கொள்வது நமக்கு பெரும் வளர்ச்சியைத் தந்து நம்மை தொடர்ந்து வழி நடத்தும். மலர்ச்சி மாணவர்களுக்கு மாதாமாதமாக தொடர்ந்து வரும் ‘வளர்ச்சிப் பாதை’ அதை செய்துகொண்டே இருக்கிறது. கடந்த வாரம் திருவண்ணாமலையில், இந்த வாரம் புதுச்சேரியில் நிகழ்ந்த ‘வளர்ச்சிப் பாதை’கள் வந்திருந்த மலரவர்களுக்கு நிறைய… (READ MORE)

MALARCHI

, , , ,

wp-1679809970130.jpg

ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி!

சூரியன் ஓர் அதிசயம்! 152 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து கொண்டு இங்கேயிருக்கும் நமக்கும், செடிக்கும், கொடிக்கும், உயிரினங்களுக்கும் மொத்த பூமிக்கும் ஆற்றலை அள்ளி வழங்கிக்கொண்டே இருக்கிறது. அட, ஆமாம் சந்திரனுக்கும் கூட! ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சூரியன் வலம் வருவதாக கொள்கிறது சமய நம்பிக்கை. அதையொட்டியே சூரியனின் அம்சம் பெற்ற சூரியனின்… (READ MORE)

பொரி கடலை

, , , , ,

பொன்னியின் செல்வன் : வரலாற்றை மாற்றுகிறார்களா?

மலர்ச்சி வணக்கம் பொன்னுஸ்வாதி! ‘கல்கியின் கதையும் மணிரத்னத்தின் திரைக்கதையும் மக்களுக்கு தவறான வரலாற்றை தந்துவிடுமே!’ என்ற உங்கள் பின்னூட்டம் கண்டேன். ஒரு வரலாற்று நிகழ்வை அல்லது வரலாற்றில் உள்ளவரின் வாழ்விலிருந்து சில நிகழ்வுகளை எடுத்துக் கொண்டு அதைச் சுற்றி கற்பனைகள் புனைந்து கதை செய்வது காலகாலமாக வழக்கத்தில் உள்ளது. நம் புராணங்களிலேயே அத்தனை ‘வெர்ஷன்கள்’ இருப்பது… (READ MORE)

பொரி கடலை

, , , ,

wp-16545851418324918622564134180898.jpg

வகுப்பென்பது வெறும் வகுப்பல்ல எனக்கு…

வகுப்பென்பது வெறும் வகுப்பல்ல எனக்கு. மாணவர்களும் ஆசிரியனும் சேர்ந்து ஒருமித்து ஒருமுகப்பட்டு தங்களை தரும் தருணங்கள் அவை. ‘எந்திரன்’ படத்தில் சிட்டி ரோபோ செய்யும் ‘ஸிக்பி ப்ரோட்டோகால்’லையெல்லாம் கடந்தவொரு கடத்தும் பரிமாற்றம் அது. தேடல் உள்ள உள்ளத்திற்குள் மேலும் தூண்டல் உருவாக்கி தீண்டல் இல்லாமல் உள்ளே ஊற்றப்படும் ஒட்பம் அது. அதுவும் தன் மடியில் வந்தமரும்… (READ MORE)

MALARCHI, Paraman's Program

, , , , , , ,

wp-1650609481779.jpg

‘யாருக்கு வேண்டும் பன்னீர் டிக்கா சாண்ட்விச்!’

‘எக்ஸ்க்யூஸ் மீ… யூ ஆர் பிகேவிங் ஃபன்னி!’ கருநீல இறுக்கமான உடையணிந்து, சாயாலி என பெயர் பொறித்த பட்டையை மார்பில் அணிந்திருந்த,  கண்ணிமையில் சிவப்பு வண்ணம் பூசியிருந்த விமான பணிப்பெண் சற்று அதிகமான சத்தத்திலேயே கூவினாள்.  தூங்கத் தொடங்கிய நான் அதிர்ந்து கலைந்து எழுந்தேன். கவிஞர் வைரமுத்து கழுத்து இறங்க தூங்கிக் கொண்டிருந்தார். அவருக்கு நேராய்… (READ MORE)

பொரி கடலை

, , , ,

wp-1617080021159.jpg

சாய்ந்து கொள்ள ஒரு தோள்…

மகிழ்வான தருணங்கள், துயரமான நேரங்கள், இவை எதுவுமில்லாமல் வெறுமனே இருக்கும் சமநிலையான நேரங்கள் என எதுவாயினும் சாய்ந்து கொள்ள ஒரு தோள் இருப்பது வாழ்வின் பெரும் வரம். அம்மா மடி, அப்பாவின் தோள், வாழ்க்கைத்துணையின் நெஞ்சு, ஆசானின் தாள், தோழமையின் அரவணைப்பு என மனிதர்க்கு சாய ஓரிடம் தேவைப்படவே செய்கிறது.  ‘சாய்ந்து கொள்ள ஒருவர்’ என்பது… (READ MORE)

பொரி கடலை

, , , ,

wp-16029283386754784143118184582684.jpg

‘முதற்கனல்’ – வெண்முரசு – ஜெயமோகன் : பரமன் பச்சைமுத்து

நூலைப் பற்றிப் பேசுவதற்கு முன் ஒரு பெரும்வியப்பை முதலில் வெளிப்படுத்திவிடுவோம். 2014ல் தொடங்கி 7 ஆண்டுகளில் 26 பாகங்களாக 25,000 பக்கங்களில் தமிழின் ஒரு பெரும் நாவலை (உலகின் பெருநாவல்களில் ஒன்று என்கிறார்கள், சரியாகத் தெரியவில்லை நமக்கு) வடித்துத் தள்ளியிருக்கும் நூலாசிரியர் ஜெயமோகனை எண்ணுகையில், ‘ஒரு பாகத்தை சரியாக ஆழ்ந்து வாசித்து முடிக்கவே இவ்வளவு நாள்களாகிறதே… (READ MORE)

Books Review

, , , , , , ,

wp-16011008007623596063854740053067.jpg

‘புள்ள வூடு’ அல்லது ‘நடேசம் பிள்ளை’

மணக்குடி ஒரு சிறு விவசாய கிராமம். அஞ்சலகம் கூட அடுத்த ஊரான குறியாமங்கலத்தில்தான் என்றால் மருத்துவமனையைப் பற்றிக் கேட்கவா வேண்டும்! மணக்குடி, குறியாமங்கலம், ஆயிபுரம் என்ற மூன்று கிராமங்களுக்கும் நடேசம் பிள்ளை என்றழைக்கப்படும் ஆர்ஐஎம்பி முடித்த ஹோமியோபதி கற்ற நடராஜன் பிள்ளை மருத்துவம் பார்த்தார். கிழக்குப் பார்த்த நத்தகோகாபால் பிள்ளையின் வீட்டு் வடவண்டைச் சுவற்றை வலது… (READ MORE)

மு பச்சைமுத்து அறக்கட்டளை

, , , , , ,

wp-15789334671788644114339697143521.jpg

‘உறுதியோடு உயர்வோம்’ : பரமன் பச்சைமுத்து : ஜீரோ டிகிரி பப்ளிஷிங்

My 11th book ‘Uruthiyodu Uyarvom’ from Zero Degree Publishing ‘உறுதியோடு உயர்வோம்’ – பரமன் பச்சைமுத்து : ஜீரோ டிகிரி பப்ளிஷிங் #UruthiyoduUyarvom #ZeroDegree #ZeroDegreePublishing #AuthorParaman #ParamanPachaimuthu #Malarchi #Inspring #SelfHelp #SelfHelpBook #Growth #Motivational #MotivationalBook

Paraman's Book

, , , , , , , , ,

ஒரு குளத்தின் கதை

அல்லிக் கொடிகளால் நிறைந்திருக்கும் பாப்பாக்குளம். அந்தக் குளத்தையும் சேர்த்து மொத்தம் ஐந்து குளங்கள் இருந்தாலும், மணக்குடியைப் பொறுத்தவரை குளமென்றால் இருப்பதிலேயே பெரிதாக இருந்த பாப்பாக்குளம்தான். குளத்தின் தென்கிழக்கு மூலையில் பிள்ளையார் கோவில் பின்புறமுள்ள அரசமரத்தையொட்டி ஒரு படித்துறை இருக்கும். தென்மேற்கு மூலையில் ஆலமரத்தையொட்டிய மற்றொரு படித்துறையும் உண்டு. ஆலமரத்துத்துறை என்று அதற்கு பெயர் என்றாலும், ஊரின்… (READ MORE)

Manakkudi Manithargal, Uncategorized

, , , , ,

20190621_1619473270350158394201439.jpg

தினம் யோகா என்பவனின்  யோகா தினம்!

தினம் யோகா என்பவனின் யோகா தினம்! என் தந்தை தினசரி் யோக ஆசனப்பயிற்சிகள் செய்வதைப் பார்த்தே நான் வளர்ந்தேன். வளர வளர யோகம் என்பது வெறும் ஆசனப்பயிற்சிகள் அல்ல வாழ்வியல் முறை என்று உணர்ந்து பழகிய போது வயது நின்று போவதை சக்தி பெருகுவதை உணர்ந்தேன். ‘யோகத்தைக் கொடுத்தவன் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்!’ என்று நண்பர்களிடமும்… (READ MORE)

Spirituality

, , , , , , ,

Gaja Cyclone

காவிரிப் படுகையின் மக்களுக்குத் தேவை இன்றைய நிவாரணம் மட்டுமல்ல, நிவாரணம் தாண்டிய நாளைக்கான வழி!

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த இடும்பாவனம் கிராமம் இரண்டு லட்சம் மரங்களை இழந்து நிற்க, அதே ஊரின் விவசாயி சீனு மட்டும் ஒரு பாதிப்புமின்றி நூற்றுக்கணக்கான தென்னைகளோடு நிற்கிறார். ஊரின் எல்லா வீடுகளையும் கலைத்துப் போட்ட ‘கஜா’ இவரது வீட்டை மட்டும் விட்டுவிட்டது எப்படி? குறைந்த சேதாரங்களோடு நிற்கிறார் விவசாயி சீனு. ‘கஜா புயல் கடலூருக்கும்… (READ MORE)

Media Published

, , , , , , , , , ,

Vazhgai_finel2.jpg

‘வாழ்க்கைப் பாசறையில்’ – பரமன் பச்சைமுத்துவின் புதிய நூல்

முன்னுரை ‘தேர்ட்டி சிக்ஸ்த் சேம்பர்ஸ் ஆஃப் ஷாலியன்’ திரைப்படத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? எழுபதுகளின் இறுதியில் வந்து உலகைக் கவர்ந்த ஓர் அட்டகாசமான திரைப்படம் அது. ஓர் ஊரில் அதிகாரத்தில் உள்ளவர்களால் சொந்த மக்கள் அடித்துக் கொல்லப்படும்போது, காயங்களுடனும் தாங்கொணா வலியுடனும் உயிரைக் காத்துக்கொள்ள ஊரை விட்டு ஓடுவான் சிறுவனொருவன். பலம் மிக்க எதிரிகளிடமிருந்து தப்பிக்க காடு… (READ MORE)

Paraman's Book

, , , , , , ,

unnamed.jpg

அயலூர் சினிமா: ‘பரத் அனே நேனு…’ : பரமன் பச்சைமுத்து

ஒரு மாநிலத்தில் ஆட்சியையும் பெரிய கட்சியையும் தங்களிடம் வைத்திருக்கிறார்கள் உடன்பிறவா சகோதரர்கள் இருவர். திடீரென உடல்நலம் குன்றி மருத்துவமனைப் படுக்கையில் வீழ்ந்த முதல்வர் நண்பர் இறந்து விட , கட்சித் தலைமையை கையில் வைத்திருக்கும் பிரிய சிநேகிதருக்கு நெருக்கடி வருகிறது. பிரச்சினையை சரி செய்யலாம் என்று மறைந்த முதல்வரின் அபிமானத்திற்குரியவரைத் தேர்ந்தெடுத்து தனது கைப்பாவையாக இருக்கட்டுமென்று… (READ MORE)

Uncategorized

, , ,

unnamed.jpg

‘நாச்சியார்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

சொந்த மகள், ஊரின் பிரபல மருத்துவர், அரசியல் செல்வாக்குள்ள தொழிலதிபர், அன்றாடங்காய்ச்சிகளின் சமையல் காண்ட்ராக்டர், தனது நிலையத்தில் பணிபுரியும் அதிகாரிகள் என உலகில் எவரது மனதைப் பற்றியும் சட்டை செய்யாமல் தனது செய்கைகளால் வன்முறை காட்டும், ‘அடிச்சிட்டுத்தான் பேசுவாள், இதயமே இல்லாதவள்!’ என்றே விளிக்கப்படும் ஒரு தடாலடி முரட்டுப் பெண் காவல்துறையதிகாரி… உலகமே வன்முறை காட்டும்… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , , , ,

அருமையான புத்தகங்க

‘வணக்கங்க. ‘நதி போல ஓடிக்கொண்டிரு…’ படிச்சேங்க. எட்டு சாப்டர் படிச்சிட்டேன். ரொம்ப பிரமாதமா இருக்கு. ஒரு மனிதனுக்கு, அலுவலகம் போறவனுக்கு அன்றாட வாழ்க்கையில் தேவையான எல்லா விஷயங்களையும் கொடுத்து, ஒரு கதை மாதிரி சொல்லி அருமையா இருக்குங்க. இது எல்லாருக்கும் கிஃப்டா தரப்பட வேண்டிய புத்தகம். படிச்ச உடனே சொல்லனும்னு தோணிச்சி அதான் கூப்டேன்ங்க. ரொம்ப… (READ MORE)

Paraman's Book

, ,

imagesJLE35TA2

கருவூர்த் தேவர் ராஜராஜனின் குருவே இல்லை!

  கல்கியைப் படிக்கையில் சோழர்கள் மீது ஏற்படும் பெரும் அபிமானம், அரு. ராமநாதனைப் படிக்கையில், பாண்டியர்களே சாதி மதம் தாண்டிய தமிழ்ப் பார்வை கொண்டிருந்தனர் – சோழர்கள் வடவர்களின் சாதீயத்தை கொண்டு புகுத்தியவர்கள் என்று தகர்ந்து போகிறது. சேர சோழ பாண்டியர்கள் பற்றிய பெருமையெல்லாம் பொடியாகி போகிறது சு வெங்கடேசனின் பறம்பின் வேள்பாரி பற்றிய ஆராய்ச்சிப்… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , , ,

புத்தகத்தை மூடி வைத்தேன், அவர்கள் உள்ளே எதுவோ திறக்கப் பட்டிருக்கும்

தமிழ் எழுத்து நடையை தமிழ் எழுத்தாளர்களை அறிமுகப் படுத்தலாமென்ற எண்ணத்தில் மகள்களை அமர வைத்து, ஒரு நூலை எடுத்துக் கொண்டு, ஒரு கதை சொல்லியாக உருவெடுத்து வரிகளைப் படித்துப் படித்து விளக்கிக்கினேன். மகள்கள் மெல்ல மெல்ல கதையில் ஆழ்ந்து ஒன்றிப் போனார்கள். ‘மறுநாள் அந்திவேளை அழகு பங்களா வீட்டின் அதே திண்ணையில்… ‘ என்று இறுதி… (READ MORE)

பொரி கடலை

, , , , , ,

விவசாயம் காக்க வேண்டுமானால்

நெல்லுக்கு விலையுயர்வு, நிறைய கொள் முதல் நிலையங்கள் திறப்பு என்றோர் அறிவிப்பை செய்திருக்கிறது தமிழக அரசு. விலையுயர்வு நல்லதுதான் என்றாலும், எங்கள் உண்மை நிலவரப் பிரச்சினை வேறு. அரசு எவ்வளவு கொள்முதல் விலை வைத்தாலும் பல காரணங்களால், இரண்டு காணி மூன்று காணி நிலங்கள் கொண்ட சிறு விவசாயிகளால் கொள்முதல் நிலையங்களுக்குள் நுழையவே முடிவதில்லை. கொள்முதல்… (READ MORE)

பொரி கடலை

, , , , ,

images-3.jpeg

‘அருவி’ – திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து

‘இந்த சமூகம் எப்படி இயங்குகிறது? இந்த சமூகம் அப்படி ஆகி விட்டதுப்பா!’ என்று சமூகத்தைக் குறித்து நிறைய கருத்து சொல்லும் மனிதர்களை, ஊடகங்களை செவிட்டில் அறைந்து ‘டேய் சமூகம் என்பது யார்ரா?’ என்று கேள்வி கேட்டு, ‘ நீயும், நானும், இதோ இந்த மனிதனும், அதோ அந்த மனிதனும் என எல்லோரும் சேர்ந்ததே சமூகம். சமூகம்… (READ MORE)

Manakkudi Talkies

, , , , ,

‘தீரன் அதிகாரம் -்ஒன்று’ – திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து

பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் குறிப்பிட்ட சமூகத்தினரை குற்றப் பரம்பரையாக அறிவித்து ஊரைவிட்டே ஒதுக்கி வைக்க, பொது மக்களின் தாக்குதல்களிலிருந்து தப்பிக்கக் காடுகளில் ஒளிந்து வேட்டையாடி வாழ்ந்த அம்மக்கள், ஒரு நாள் ஊருக்குள் திரும்ப வந்து மக்களை வேட்டையாடி கொள்ளையடிக்கத் தொடங்கினர். ஹவேரியாக்கள் என்றழைக்கப்படும் இவர்கள் மகாராஸ்டிரம், உத்தரபிரதேசம், ஆரவல்லி மலைத்தொடர்கள், ஆந்திரம், கர்நாடகம், கும்பகோணம் என இப்போது… (READ MORE)

Manakkudi Talkies

, , , , ,

எனக்கு மீன் பிடிக்கத் தெரியும் பன்னீரு…

சைவனென்றாலும், ரஷ்யாவின் விளாடிமிர் புடின் போல வெற்று மார்போடு குளிர் ஏரியில் இறங்கிப் பிடிக்கவில்லையென்றாலும், மீன் பிடித்த அனுபவங்கள் உண்டெனக்கு. வீராணத்தில் தண்ணீர் திறந்து விட்டால் மானம்பாத்தான் வாய்க்கால் வழியே சில தினங்களில் எங்கள் ஊரை வந்தடையும். வாய்க்கால்களில் மதகுகளில் நீர் புறண்டு ஓட, அதைக் காண சிறுவர்கள் நாங்கள் ஓடுவோம். ‘இங்க பாரு, ஆயிவரத்து… (READ MORE)

பொரி கடலை

, , , , , , ,

மழையைப் பற்றியெழுதிய மற்ற பெரியோரே…

‘மாமழை போற்றுதும்!’ என்று காப்பியம் செய்த சேர சோதரா, ‘நீர்இன்று அமையாது உலகெனின்’ என்றெழுதிய வள்ளுவப் பேராசானே, மழையைப் பற்றியெழுதிய மற்ற பெரியோரே, தேர்வுக்காக மட்டுமே படித்த உங்கள் வரிகளை தேர்வோடே விட்டுவிட்டோம் நாங்கள். மழையைக் கொண்டாடி வரவேற்ற முன்னோரே, மாரியை அம்மனாக வழிபட்ட மூத்தோரே, மன்னிக்கவும். மழை என்றால் ‘சங்கடம்’ என்றே பதம் கொள்ளும்… (READ MORE)

கவிதை

, , ,

யார் அந்தப் புண்ணியவானோ, அவருக்கு என் பெரும் வணக்கம்! …

தேவனூர் பகுதியில் வாழும் இருளர்கள் வாழ்வில் திடீரென்று ஒரு ஒளி பாய்ந்துள்ளது. தேவனூர் பகுதியில் திடீரென அதிக அளவில் மீன்களும் நண்டுகளும் வளர்ந்துள்ளன. அதைப் பிடித்து விற்பதில் அவர்களது வாழ்வாதரங்களும் மகிழ்ச்சியும் உயர்ந்துள்ளன. தேவனூர், சாத்தனஞ்சேரி, பழவேரி, சீதாவரம், படூர், அரும்புலியூர் உட்பட முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. குடிநீர் தேடியலைந்தவர்களும்… (READ MORE)

பொரி கடலை

, , , , , , ,

கண்ணுக்குள்ளே கருந்திரை

வெளியே இலகுவாக மூடப் பட்ட இமைகளுக்கு உள்ளே கருந்திரை போர்த்தப்படும் கண்கள் இறுகும் அந்தக் கணம் தொடங்குகிறது உள்முகப்பயணம்! #தவம் #தியானம் பரமன் பச்சைமுத்து 24.10.2017 Www.ParamanIn.com

Spirituality

, , , , ,

பேராவூர் கிராமத்திற்கு பெருவணக்கம்

அரசு செய்யும் அரசு அதிகாரிகள் வருவார்கள் என்று காத்திருக்காமல் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒருவர் என்று இறங்கி மொத்த ஊரையும் கூட்டித் துடைத்து கழுவி காயப் போட்டுள்ளனர் ஒரு ஊர் மக்கள். சீமைக் கருவேலத்தையும் வேண்டாப் புதர்களையும் களைந்து குப்பைகளைக் கூட்டி எரித்தும் புதைத்தும் சுத்தப் படுத்தி ஒரு ஊரையே குப்பைகளில்லா ஊராக மாற்றியிருக்கிறார்கள். ராமநாதபுர மாவட்டத்தின்… (READ MORE)

பொரி கடலை

, , , ,

கில் த புத்தா…

‘ஈஃப் யூ மீட் அ புத்தா, கில் த புத்தா’ என்று சொன்னவன் எப்பேர்ப்பட்ட ஆசானாக இருந்திருக்கக் கூடும்! #தவம் #தியானம் பரமன் பச்சைமுத்து 20.10.2017 Www.ParamanIn.com

Spirituality

, , ,

ஒவ்வோர் வாழ்விலும் ஒளி கூடட்டும்!

அடுத்தவர் வளர்வதைக் கண்டு பொறுக்கா பொறாமை அரக்கன், இனத்தை தாழ்வாய் நினைக்கச் செய்யும் அந்நிய மோக அரக்கன், உடலை ஓம்ப விடாமல் உரிய வேலையை செய்ய விடாமல் தடுக்கும் சோம்பல் அரக்கன், ‘நானே எல்லாம்’ ‘நான் இல்லையென்றால் அவ்ளோதான்’ என்று ‘தான்’ வளர்க்கும் ஆணவ அரக்கன், உயிராய் இருப்பவரையும் கடித்துத் துப்பச் செய்யும் சினம் எனும்… (READ MORE)

Media Published, VALARCHI Tamil Monthly

, , , ,

கின்னத்தை கவிழ்த்து மெழுகி…

மெல்ல மெல்ல உணர்வுகள் ஒடுங்கி ஒரு நிலைப்படும் புள்ளிக்கு முன்னே, உயிராற்றல் நிறைந்திருந்த ஒரு கின்னத்தை மேலே கவிழ்த்து உடலில் ஊற்றி மெழுகுவதைப் போன்ற அந்த இணைப்பைத் தாண்டி இனி எந்த உருவம் இருக்கிறது வணங்குவதற்கு! பரமன் பச்சைமுத்து 17.10.2017 Www.ParamanIn.com

Spirituality

, , , , , , ,

உடலே நானல்ல…

உடலே நானல்ல. இது நான் இப்போது நிறைந்திருக்கும் ஒரு கருவி; அதி உன்னதமான, எனது இப்போதைய, தலையாய கருவி. பரமன் பச்சைமுத்து 16.10.2017 www.ParamanIn.com

Spirituality

, , , ,

தியானம் போதையல்ல…

தியானம் போதையல்ல, ‘தியானத்தில் அமர்கிறேன் நான்’ என்றுக் காட்ட முயற்சிப்பது போதை. விபூதியும், குறிப்பிட்ட நிறத்தை அணிவதும், சின்னங்கள் தரிப்பதுவும் கூட போதையை ஊற்றி வளர்ப்பவைதானே. ஆன்ம பயிற்சி செய்கிறேன் நான் என்று எவர்க்கு காட்டவேண்டும், எதற்கு காட்ட வேண்டும்! பரமன் பச்சைமுத்து 15.10.2017

Spirituality

, , , , ,

சும்மா இருக்க…

‘சும்மா இரு’ என்று சும்மா சொல்லவில்லை அவர்கள். ஏதும் செய்யா சும்மா இருக்கும் நிலை வர நிறையச் செய்ய வேண்டியிருக்கிறது. #தவம் #தியானம் #Trance பரமன் பச்சைமுத்து 13.10.2017 Www.ParamanIn.com

Spirituality

, , , ,

ராஜாவும் ரஹ்மானும் சில தலைமுறைகளை காப்பாற்றியிருக்கிறார்கள்

கிழக்குக் கடற்கரைச் சாலையில் சென்னையை நோக்கி பயணிக்கிறோம். பாதையை பார்வையை என என் எல்லாக் கவனத்தையும் சுருட்டி இழுத்துக் கொள்கிறது என் ஓட்டுனர் ஒலிக்க விட்டப் பாடலின் இசைச்கலவை. சுக்விந்தர் சிங், எஸ்பிபி, ஸ்வர்ணலதா என மூவரும் மூன்று திணுசில் பாட இவர்களை மீறி ஆனால் சன்னமாய் வருகிறது தபலா ( ரஹ்மான் என்பதால், டிஜிட்டல்… (READ MORE)

பொரி கடலை

, , , , ,

பச்சைக் கடல் சிஷெல்ஸ்

இந்துமாக் கடலின் இந்தக் கோடியில் நீர் பச்சையாக இருக்குமென்று அறியேன், சிஷெல்ஸ் வந்திறங்கும் வரை. தமிழ் மன்றத்தில் மலர்ச்சி உரையாற்ற வந்த என்னை ஊர் சுற்றிக் காட்டிய இவ்வூர் நண்பர்கள் இங்கேயும் அழைத்துச் சென்றனர். மலையும் மலையின் பச்சைப் பசேல் காட்டையொட்டிய கடலின் பச்சை நிற நீரையும் பார்த்துப் பரவசப் பட்டேன். இறங்கிக் மூழ்கிக் குளித்துக்… (READ MORE)

பொரி கடலை

, , , , , , ,

வைரமுத்துவிற்கு மதிப்பு கூட்டித் தந்த மதன் கார்க்கி…

கவிப்பேரரசு வைரமுத்துவின் தமிழ் மேல் மரியாதையும், கொடுக்கப் பட்ட தலைப்பிற்கு எப்போதும் அவர் மதிப்பு கூட்டுவார் என்பதில் நம்பிக்கையும் உண்டெனக்கு. தி இந்து நாளிதழின் ‘யாதும் தமிழே’ தலைப்பிலிருந்து அரங்கு அதிர ‘தமிழே யாதும்’ என்று மாற்றி உரைத்ததில், நவோதயாப் பள்ளிகள் வந்தால் இருமொழிக் கொள்கையோடு வரட்டும் என்று முழங்கியதில், பாணன் – பாடிணி பற்றிய… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , , , , , , , , , ,

உடல் நிலை, உள்ளத்து நிலை கடந்தால்…

யோக ஆசனங்கள் உடல் நிலை பயிற்சிகள். உடல் நிலைப் பயிற்சிகள் உள்ளத்து நிலைப் பயிற்சிகளுக்கு இழுத்துப் போகலாம். மூச்சுப் பயிற்சி உடல் கடந்து உள்ளத்து ஒருநிலைப்பாட்டு நிலைக்கு இழுத்துப் போகலாம். இந்த உடல் நிலை, உள்ளத்து நிலைகளை கடந்தால் வருவது உன்னத நிலை. வெவ்வேறு இயக்கங்களிலிருந்து வெறுமனே இருக்கும் நிலை, உன்னத நிலை. வாய்ப்பது அவனருள்!… (READ MORE)

Spirituality

, , , , , , , ,

எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,

🌹🌹 #TeachersDay டீச்சர்… அப்பா அம்மா வீடு தாண்டி ஒரு உலகம் உறவு இல்லா அந்தப் பிஞ்சு வயசில், திடீரென எங்கிருந்தோ வந்து உறவாகிப் போன என் ஒண்ணாம் வகுப்பு டீச்சர்… அதட்டினாலே அழுதுவிடும் அந்த வயசில் அன்பா அருகில் அமர்ந்து அனா ஆவன்னா சொல்லித் தந்த டீச்சர் எலியும் சிங்கமும், காகமும் நீர்க் குடுவையும்… (READ MORE)

Media Published, Self Help

, , , , , ,

சேவலும் நாயும் சொல்வதென்ன : காணொளி

எதற்குமஞ்சா துணிவோடு வீறு கொண்டெழுந்துவிட்டால், எதிரில் எவர் வரினும் முடியாது போகும். சிறியோனாயினும் கண்களில் அச்சமின்றி நிற்போன் முன்னே பெரியோனும் அஞ்சுவரே. சிறியோரொல்லாம் சிறியோரல்லர், பெரியோரெல்லாம் பெரியோரல்லர்! அச்சம் கண்ட வலியோன் எளியோனாகி ஓடுகிறான். அச்சம் தவிர்த்த எளியோன் வலியோன் ஆகிறான். அச்சம் தவிர்… ஆளுமை கொள்! பரமன் பச்சைமுத்து 02.09.2017 Facebook.com/ParmanPage

Self Help, Uncategorized, பொரி கடலை

, , ,

wp-image-60849838..jpg

எப்படி விளையாடினோம் என்பது பார்க்கத்தக்கது…

வெற்றியும் தோல்வியும் விளையாட்டில் சகஜமே. எப்படி விளையாடினோம் என்பது பார்க்கத்தக்கது. தோல்விதானது என்றாலும் இரண்டு மணி நேரமாகியும் இறுதி வரைப் போராடிய பாங்கு மகிழ்வையே தந்தது. வாழ்த்துக்கள் சிந்து! கோபிசந்த் மீது மரியாதை கூடுகிறது. வாழ்க! வளர்க! பரமன் பச்சைமுத்து 27.08.2017 Www.ParamanIn.com

Uncategorized

, , , , , , ,

basheer

சாமானியப் பதிவுகள்: எப்படி பத்து மணிக்கு உங்களால் தூங்க முடிகிறது, தூக்கம் வருகிறது?

‘ஒழுங்காப் படிச்சு, ஒரு நல்ல வேலைக்கு போயிட்டா உருப்படலாம்!’ என்பது பொதுவிதியாகப் போனது இன்று. படித்து பட்டம் பெற்றால்தான் பெருநிறுவனங்களில் வேலை பெற முடியும் நிறைய சம்பாதிக்க முடியும் என்ற நிலையிருக்கும் இந்நாளில் பெரு நிருவனங்களும், படித்து பட்டம் பெற்று ஆராய்ச்சி மேற்கொள்பவர்களும் படிக்காத சாமானிய மனிதர் ஒருவரிடம் வந்து ‘வியாபாரம் செய்யும் விவரம் என்ன?’… (READ MORE)

Media Published, Self Help

, , , , , , ,

ஆறுமுகம் 1 (3) - Copy

“சார், பணத்தை வச்சிட்டு இருந்தா வீணாக்கிடுவோம் சார்!”

ஞாயிறு முன்னிரவின் மகிழ்திருக்கும் பொழுதுகளில் ‘நாளை திங்கட்கிழமை வேலைக்குப் போகவேண்டும்!’ என்று வரும் சிறு எண்ணமே பல பேருக்கு மன அழுத்தத்தை உருவாக்கப் போதுமானது என்று சொல்கிறது சமீபத்தில் வந்திருக்கும் ஓர் ஆய்வறிக்கை. ஒரு வேலைக்குப் போவதற்கே இப்படியொரு அழுத்தம் வரும் உலகில்., மூன்று வேலையை மகிழ்ச்சியாய் செய்து வளைய வரும் ஒரு மனிதரைப் பார்த்திருக்கிறீர்களா?… (READ MORE)

Self Help

, , , , , , ,

mani 1

வேறுவழியின்றி முன்னேறியே செல்ல வேண்டும்!

‘நீங்கள் பார்க்கும் இந்த வேலையில் இருக்கும் கஷ்டங்கள் என்ன?’  – இந்த கேள்வியை உங்கள் முன் வைத்தால் என்ன பதில் சொல்வீர்கள் நீங்கள்? இந்தக் கேள்வியை முன்னால் வைத்தால் பொதுவான உலகம் சொல்லும் பதில் என்னவாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியும்.  ‘அய்யய்யய்யோ…அத ஏன் கேக்கறீங்க? மனுஷன் செத்து சுன்னாம்பா ஆவறேன் இங்கே!’ என்று ஆரம்பித்து… (READ MORE)

Self Help

, , , , ,