மஞ்சளாறு பாயும் அந்த ஊரு
‘பச்சக் கிளி பாயும் ஊருபஞ்சு மெத்தப் புல்லப் பாருமஞ்சளாறு பாயும் அந்த ஊரு…’ இந்தப் பாடலைக் கேட்டிருக்கிருக்கிறீர்களா? ‘கருத்தம்மா’ படத்தில் வரும் ஒரு பாடலின் தொடக்க வரிகள் இவை. …. கடல்மட்டத்திலிருந்து 2133 மீ (கிட்டத்தட்ட 7000 அடி) உயரத்தில் இருக்கும் கொடைக்கானல் மார்ச் மாத காலை 6 மணிக்கு 11 டிகிரியில் இருக்கிறது. சங்க… (READ MORE)
என்னை வரவேற்பவர்…
என்னை வரவேற்பவர்… இரவெல்லாம் பயணித்து கொடைக்கானல் மலையேறி எனக்கான அறையை திறந்து பின்கட்டின் கதவைத் திறந்தால்… 11 டிகிரியிலும் நடுங்காமல், என்னைக் கூர்மையாக பார்த்தபடி வரவேற்கிறார் இவர் ( இவள்!?) ‘வந்தாச்சா… மலர்ச்சி வணக்கம்! என்ன? படம் எடுக்கறியா? சரி எடு, நீ நம்மாளு, நான் ஓட மாட்டேன். ஒழுங்கா எடுத்துக்கோ! எடுத்தாச்சா… வர்ட்ட்டா!’ பரமன்… (READ MORE)
மேற்படிப்பு
முப்பத்திமூன்று ஆண்டுகளுக்கு முன்பு முதன்முறையாக வீட்டை விட்டு வெளியூரி்ல் தங்கி கல்லூரியில் படிக்கப் போனபோது, என் அம்மா அழுதார்களாம், சில நாட்கள் தொடர்ந்து. நான் சிரித்தபடியே உற்சாகமாகப் புறப்பட்டுப் போனேன். இன்று என் மகளை படிப்பிற்காக வெளியூர் அனுப்பும் வேளையில் என் கண்களில் எட்டிப்பார்க்கிறது கண்ணீர். சிரித்தபடியே உற்சாகமாகப் புறப்பட்டுப் போகிறாள் மகள்! பரமன் பச்சைமுத்து06.03.2021
சசிகலா துறப்பு – 2
(சசிகலா – தொடர்ச்சி) அதிமுக பற்றிய அவரது வழக்கு மார்ச் 15 வரை நீதிமன்றத்தில் இருக்கிறது. அது வரை தேர்தலை எதிர்கொள்வதில் அவருக்கு நிலைப்பாடு குறித்து சிக்கல் இருக்கலாம். அமமுகவில் இறங்கி வேலை செய்தால், அவர் அதிமுக இல்லை என்றாகிவிடும். அதிமுகவில் அவர் இறங்கினால் சட்டச் சிக்கல்கள், ஈபிஎஸ் ஓபிஎஸ் அணி மற்றும் அமைச்சர்கள் பாய்வர்…. (READ MORE)
சசிகலா அரசியல் துறப்பு!
அரசியலை விட்டு விலகுவதாக சசிகலா அறிவித்துள்ளதாக செய்திகள் வருகின்றன.விவரங்கள் முழுதாகத் தெரியாமல் கருத்து சொல்ல முடியவில்லை. முழுதும் துறப்பா, தேர்தல் வரையா… என்பதை பொறுத்திருந்தே பார்க்க முடியும். ஆனால்… இதே நிலையை டிடிவி தினகரன் முன்பு எடுத்தது தேவையில்லாமல் நினைவுக்கு வந்து தொலைக்கிறது இப்போது. ‘நான் தொந்தரவா இருக்கேன்னு சொன்னாங்க. வேணாம்னு ஒதுங்கிட்டேன்!’ என்று பேட்டியெல்லாம்… (READ MORE)
பெருமாள் கவுண்டர்
🌸 மூப்பின் அல்சைமர் மறதி நோய் முடங்கிப் படுக்கையிலேயே வாழ்க்கை முதுகில் ‘பெட் சோர்’ புண்கள் முடிந்தது எல்லாம்பெருமாள் கவுண்டருக்கு உடலின் சிறுமை உடைத்துஉயிரின் சுதந்திரம் இனி புன்னை பூலைமலர்கள் இட்டேமகள்கள் வழியனுப்ப தலைமழித்த மகன் ராமுதந்தையை ஏந்திச் சென்றார் கணப்பொழுதில் அஸ்தியானவரைகரைத்தாயிற்று காவிரியில் காலையில் இறந்த கவுண்டருக்குகருக்கலில் கருமாதியும் முடித்தாயிற்றுகாக்காய்க்கு சோறும் இட்டாயிற்றுகாதில் ஒலிக்கிறதுகடைசி… (READ MORE)
கட்சி கடந்த பாராட்டுவிழாவில்
அழைத்தது திராவிட பாரம்பரியம் கொண்டவரும் திமுக நண்பர் என்பதாலும், மக்கள் நீதி மய்யத்தின் சிகே குமரவேலு, வைரமுத்து பேரவை நண்பர்கள் என எல்லாப் பக்கங்களிலிருந்தும் நண்பர்கள் வருகிறார்கள் என்று உறுதியானதாலும், இன்று வெல்கம் ஹோட்டலில் ( பழைய சோழா செரேட்டன்) நடந்த, வானதி சீனிவாசனுக்கு நண்பர்களால் நடத்தப்பட்ட விழாவிற்கு சென்றிருந்தேன். பல ஆண்டுகள் கழித்து பல… (READ MORE)
காமுட்டி விழா
‘மன்மதன்’ என்றதும் உங்களுக்கு யார் நினைவில் வருவார்கள்? (சிம்பு என்று சொல்லாதீர்கள்) மணக்குடியில் ‘மன்மதன்’ என்றால் நாங்கள் மந்தான் அவர்களையே நினைப்போம். ‘முத்துவோட அப்பா’ ‘தர்மலிங்கம்’ என பல பெயர்கள் இருந்தாலும் ‘மந்தான்’ என்பதே அவரின் பொது வழக்குப் பெயர். நல்ல உயரமாக வாட்டசாட்டமாக உடலும் நீண்ட முகமும் கொண்டவர் மந்தான். நாசிக்கும் தடித்த உதட்டிற்கும்… (READ MORE)
‘த்ரிஷ்யம் – 2’ – திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து
எல்லா மொழிகளிலும் மக்களால் கொண்டாடப்பட்ட மாபெரும் வெற்றி பெற்ற ஒரு திரைப்படத்திற்கு இரண்டாம் பாகம் எடுப்பதென்பது கத்தி மேல் நடப்பது போன்றது. அதை அநாயாசமாக செய்திருக்கிறார்கள். முந்தைய ‘த்ரிஷ்யம்’ (தமிழ் ‘பாபநாசம்’) நடந்ததிலிருந்து ஆறு ஆண்டுகள் கழித்து நடக்கும் நிகழ்வுகளால் ஆனது கதை. கேபிள் டிவி வைத்திருந்த சினிமா பைத்தியமான ஜார்ஜ்குட்டி, இப்போது வளர்ந்து சொந்த… (READ MORE)
‘என்னைக் கடவுளாக்கி வணங்காதீர்கள்’ – நூல் விமர்சனம் : பரமன் பச்சைமுத்து
உலகின் மிகச் சிறந்த தலைவர்கள் என்று பட்டியல் செய்தால் அதில் தவிர்க்கவே முடியாதவர் முதலில் வருபவர் என்று இறைத்தூதர் முகம்மது நபி அவர்களை சொல்வார்கள். அவரை இறைத் தூதராகவும், இஸ்லாம் மார்க்கத்தை தந்தவராகவும் மட்டுமே தெரிந்து கொண்டவர்களுக்கு, அவரது பிறப்பிலிருந்து 63 வயதில் அவருக்கு நிகழ்ந்த இறப்பு வரை உள்ள முக்கிய சங்கதிகளை தொகுத்து எளிதில்… (READ MORE)
12 ஆவது அன்னதானம் : மு பச்சைமுத்து அறக்கட்டளை
🌸🌸 இன்று மாசி – மிருகசீரிடம், தந்தையின் பெயரால்வடபழனியில் வழக்கமாக செய்யும் இடங்களில், மதிய உணவு வழங்கப்படுகிறது. இறையருள் மிகப் பெரிது 🌸🌸 பரமன் பச்சைமுத்து,மு பச்சைமுத்து அறக்கட்டளை21.02.2021
ஆண்டுகள் ஆன பின்னும் அடுத்தவரையே இன்னும் குறை சொல்வது ஆட்சியாளருக்கு அழகல்ல.
‘இந்தியாவின் எரிசக்தி இறக்குமதியைக் குறைப்பதில் முந்தைய அரசு கவனம் செலுத்தத் தவறியதே பெட்ரோல் விலை உயர்வால் நடுத்தர மக்கள் இப்போது பாதிக்கப்படுவதற்குக் காரணம்’ என்று குற்றம் சாட்டியுள்ளார் பிரதமர் மோடி. சென்ற முறை ஆட்சிக்கு வந்த போது சொல்லியிருந்தால் கூட பரவாயில்லை. ஆறு ஆண்டுகளுக்கு ஆட்சியில் இருந்து விட்டு, அதற்கும் முந்தைய ஆட்சியை இப்போது இழுத்து… (READ MORE)
‘மாஸ்க்’கோடு மகிழ்ந்து குலாவி…
முகத்தைப் பார்த்தே ஒருவரை அடையாளம் காண்போம் என்ற நிலை மாறி முன்னேறி விட்டது உலகம். பாதி முகத்தை மறைத்து சுவாசக் கவசம் அணிந்து கொண்டு ஆர் ஏ புரத்தின் தெருவொன்றில் இளநீர் வாங்க போனாலும், ‘ஹலோ பரமன் சார்!’ என்கின்றனர் எதிரே போகிறவர்கள். முழு முகமும் தெரியாவிட்டாலும் மொத்த உடலமைப்பை கண்டு நொடியில் மூளையில் பதிந்திருக்கும்… (READ MORE)
Tiruvarur Meet – 91 Batch Avccp : Final episode
*3* ’91 Batch – AVCCP – Tiruvarur Meet – 2021′ 13,14,15 Feb 2021 ( நிறைவுப் பகுதி) மதிய உணவு முடித்து டீ பார்ட்டீ ஹாலுக்கு வந்த போது, அலங்கரிப்பு மேடையில் கீர்த்தனாவோடு கவிதாவும் அழகாக நின்று ஃப்ரேம் ஒன்றைப் பிடித்துக் கொண்டு ஃபோட்டோ எடுத்துக் கொள்ள முயல, நாங்கள் உள்ளே… (READ MORE)
‘Tiruvarur Meet – 2021’ – 91 batch -Avccp
2 2 ’91 Batch – AVCCP – Tiruvarur Meet – 2021′ 13,14,15 Feb 2021 ( சென்ற பகுதியின் தொடர்ச்சி) ‘செம்மனார் கோவில்’ பிரகாஷை பாராட்டியே ஆக வேண்டும்.( முன்கதை: சென்ற ஆண்டு டிசம் 28 நம் ‘சவேரா மீட்’ படங்களை நான் ஃபேஸ்புக்கில் பகிர, அதைப் பார்த்து விட்டு ‘அடடா…… (READ MORE)
Tiruvarur Meet – Batch 91 – Avccp – Feb 2021
’91 Batch – AVCCP – Tiruvarur Meet – 2021′ 13,14,15 Feb 2021 பல பகுதிகளிலிருந்தும் 91 பேட்ச் கம்ப்யூட்டர் சயின்ஸ் வகுப்புத் தோழர்கள், திருவாரூரில் ஒரே இடத்தில் குவிந்து கலந்து களித்து மகிழ்ந்தோம். தம்பதி சமேதராய் மணிமாறன், நப்பின்னை, மீனாட்சி சுந்தரி, வசுமதி, ராஜவேல் ஆகியோர் வந்திருந்து அசத்த, நெடிதுயர்ந்த மகனோடு… (READ MORE)
ராஜேந்திர சோழனின் தலைநகரத்தில்
பாண்டிய ஆபத்துதவிகளும் ஒற்றர்களும் நெரிசலும் மிகுந்த நகராகிவிட்டது இது. நிர்வாகத்திற்காகவும் என் விருப்பத்திற்காகவும் புதிய தலைநகரை நிர்மாணிக்கிறேன், மொத்தமாக புலம் பெயர்ந்து போகிறேன்!’ என்று முடிவெடுத்து சோழப் பேரரசன் ராஜேந்திர சோழன் நிர்மாணித்த சோழத் தலைநகரத்தை கடந்த போது ஒரு படமெடுத்துக் கொண்டேன். இந்த நகருக்கு வெளியேதான் தந்தை வழியில் சிவனுக்கு கற்றளி அமைத்து வடக்கிலிருந்து… (READ MORE)
ஏவிசிசி பி – திருவாரூர் மீட்
வகுப்புத் தோழியின் மகள் திருமணத்திற்கு வகுப்புத் தோழர்கள் குவிந்தோமே, திருவாரூரில்! வனிதா மகள் விஷ்ணுப்பிரியா திருமணத்தில், 91 பேட்ச் ஏவிசிசிபி மக்கள்.
ஆரூர் கோவிலில்…
ராஜேந்திர சோழனின் இதயராணியின் இதயம் திருவாரூர் பெரிய கோவில். ஆரூர் ஈசனிடம் பெறும் பற்று கொண்டிருந்த பரவையார் (ஈசனே தூது போனதானக வரும் சுந்தரரின் பரவையார் அல்ல இது. ஆரூர் கோவில் இரண்டு பரவையார்களை இணைப்பில் கொண்டுள்ளது) தன் காதற் கணவன் பெருவேந்தன் ராஜேந்திரனிடம் வேண்ட, வீதி விடங்கப்பெருமானுக்கு பெரும் தொண்டும் கோபுர சீரமைப்பும் செய்தான்…. (READ MORE)
ஆரூர் கோவிலில்…
ராஜேந்திர சோழனின் இதயராணியின் இதயம் திருவாரூர் பெரிய கோவில். ஆரூர் ஈசனிடம் பெறும் பற்று கொண்டிருந்த பரவையார் (ஈசனே தூது போனதானக வரும் சுந்தரரின் பரவையார் அல்ல இது. ஆரூர் கோவில் இரண்டு பரவையார்களை இணைப்பில் கொண்டுள்ளது) தன் காதற் கணவன் பெருவேந்தன் ராஜேந்திரனிடம் வேண்ட, வீதி விடங்கப்பெருமானுக்கு பெரும் தொண்டும் கோபுர சீரமைப்பும் செய்தான்…. (READ MORE)
ஆரூர் கோவிலில்…
ராஜேந்திர சோழனின் இதயராணியின் இதயம் திருவாரூர் பெரிய கோவில். ஆரூர் ஈசனிடம் பெறும் பற்று கொண்டிருந்த பரவையார் (ஈசனே தூது போனதானக வரும் சுந்தரரின் பரவையார் அல்ல இது. ஆரூர் கோவில் இரண்டு பரவையார்களை இணைப்பில் கொண்டுள்ளது) தன் காதற் கணவன் பெருவேந்தன் ராஜேந்திரனிடம் வேண்ட, வீதி விடங்கப்பெருமானுக்கு பெரும் தொண்டும் கோபுர சீரமைப்பும் செய்தான்…. (READ MORE)
ஆரூர் கோவிலில்…
ராஜேந்திர சோழனின் இதயராணியின் இதயம் திருவாரூர் பெரிய கோவில். ஆரூர் ஈசனிடம் பெறும் பற்று கொண்டிருந்த பரவையார் (ஈசனே தூது போனதானக வரும் சுந்தரரின் பரவையார் அல்ல இது. ஆரூர் கோவில் இரண்டு பரவையார்களை இணைப்பில் கொண்டுள்ளது) தன் காதற் கணவன் பெருவேந்தன் ராஜேந்திரனிடம் வேண்ட, வீதி விடங்கப்பெருமானுக்கு பெரும் தொண்டும் கோபுர சீரமைப்பும் செய்தான்…. (READ MORE)
ஆரூர் கோவிலில்…
ராஜேந்திர சோழனின் இதயராணியின் இதயம் திருவாரூர் பெரிய கோவில். ஆரூர் ஈசனிடம் பெறும் பற்று கொண்டிருந்த பரவையார் (ஈசனே தூது போனதானக வரும் சுந்தரரின் பரவையார் அல்ல இது. ஆரூர் கோவில் இரண்டு பரவையார்களை இணைப்பில் கொண்டுள்ளது) தன் காதற் கணவன் பெருவேந்தன் ராஜேந்திரனிடம் வேண்ட, வீதி விடங்கப்பெருமானுக்கு பெரும் தொண்டும் கோபுர சீரமைப்பும் செய்தான்…. (READ MORE)
இளையாராஜா விகடன் பேட்டி
சில மனிதர்களின் நேர்காணல்களை சில பக்கங்களில் அடைத்து சுருக்கி விட முடியாது, சுருக்கி விடவும் கூடாது. புதிய ஒலிப்பதிவுக் கூடத்தைத் திறந்து விட்ட இளையராஜாவின் பேட்டி வந்திருக்கிறது இன்று காலை வந்த விகடனில். உங்கள் பாடல்கள் ஆழ்ந்த மனநிலையைத் தருகின்றன. இதை அடையும் மாயநிலை என்ன? பாடலின் தன்மையை எப்படித் தீர்மானிக்கிறீர்கள்? பிண்ணனிக்குரலின் பங்கு என்ன?… (READ MORE)
சித்தப்பா மணிவிழா
‘முத்தையனுக்கு மணி விழா பண்ணிடனும்!’ வெவ்வேறு சமயங்களில் என அப்பா மூன்று முறை சொன்னார் இதை. ‘மாமன் ஆசைப்பட்டத நாம செஞ்சிடனும்டா தம்பீ!’ அம்மா இது குறித்து சொல்லிக்கொண்டேயிருந்தது. (அப்பாவை மாமன் என்றே குறிப்பிடுவார் அம்மா). இனைவனருளால் மலர்ச்சி ஐம்பதாவது பேட்ச்சின் ஏழாவது வகுப்புக்கும் எட்டாவது வகுப்புக்கும் இடையே இன்று புதன் கிழமை மிக மிக… (READ MORE)
கண்ணெதிரே ஓர் ஏரி
கண்ணெதிரே அழிகிறதே ஓர் ஏரி! இனியேனும் கவனம் கொள்ள வேண்டும், இருப்பதையாவது காக்க வேண்டும். நீர் வெளியேறும் வழி, நீர் வரத்து வழி, ஏரியின் பகுதி என தாம்பரம் பெரிய ஏரியில் 436 இடங்களில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு கட்டுமானங்கள் கட்டப்பட்டுள்ளனவாம். இவை ஒரு நாளிலா நடந்திருக்கும், ஆண்டாண்டு காலங்களாக நடந்திருக்கும்! இந்தக் கட்சி, அந்தக் கட்சி… (READ MORE)
வரட்டும் சிட்டு இங்க…
தைமாசம் பொறந்ததுமேதைதைன்னு குதிக்கும் ஆத்தா வயலெல்லாம் வெளஞ்சி நிக்கும்ஆத்தா மனசெல்லாம் நெறஞ்சி நிக்கும் தகதகன்னு தங்கமாதலை சாய்ஞ்சி நிக்கும் கதிரு ஆளுங்கள கூட்டியாந்துஅறுப்ப ஆரம்பிக்கும் மானத்த காக்கும் சேலையையெடுத்து சொருவும்வானத்த பாக்கும் கையெடுத்து கும்புடும் அறுவாள எடுத்துகிட்டுஆத்தா வயலில் இறங்கும் ‘சளக் புளக்’ சேத்துல காலு‘சரக் சரக்’ கதிருல அறுவாளு மொத கதிரு முருகன்சாமிக்குரெண்டாங் கதிரு… (READ MORE)
திரை விமர்சகனை கூப்பிட்டார்கள்
சன் டிவி வானிலை மோனிகாவிடமிருந்து அழைப்பு. ‘இந்த நிகழ்ச்சிக்கு நீங்க வரணும் பரமன்!’ ………. சுஜாதா குமுதம் ஆசிரியராக இயங்கிய காலம் நிறைய வாசகர்களுக்கு பொற்காலம் என்பது போல் எனக்கும். அப்போது வெளியாகியிருந்த ‘இருவர்’ படத்திற்கு அவர் பெயரிலேயே அவர் எழுதியிருந்த சிறப்பு விமர்சனத்தை 20 முறையாவது படித்திருப்பேன். எழுத்தாளன் என்பதை விட சினிமா விமர்சகன்… (READ MORE)
The book of Mirdad
‘ …..தனது அந்திமக் காலத்தில் நோவா தன் மகனை அழைத்து, ‘மகனே… இனி வரும் மனிதர்கள் ஆதிப் பெருவெள்ளத்தையும், அதன் ஆழத்தையும்,நூற்றியைம்பது நாட்கள் அதில் நாம் தத்தித் தவித்து வெற்றி கண்டதையும் மறந்து விடுவார்கள் என்று பயம் வருகிறது. இந்தப் பகுதியின் உயர்ந்த சிகரத்தில் ஒரு பலிபீடம் கட்டு. அதன் எதிரிலேயே கப்பல் வடிவில் ஒரு… (READ MORE)
டீசல் கக்கும் பழைய வண்டிகள்…
குறிப்பட்ட கால இடைவெளி கடந்த பழைய வாகனங்களுக்கு பசுமை வரி என்பது மத்திய அரசால் இப்போது கொண்டு வரப்படுகிறதாம். மேற்கத்திய நாடுகள் போல ‘இத்தனை ஆண்டுகளுக்கு மேற்பட்ட வண்டிகளை வைத்துக் கொள்ளக்கூடாது, நசுக்கி அழித்து விட வேண்டும்’ எனும் வகையில் நேரடியாக சொல்லி கட்டுப்படுத்தும் சட்டங்கள் இந்தியாவில் இது வரையில் இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை… (READ MORE)
எருக்கூர் மக்களுக்கு வணக்கம்
பணத்திற்கு ஆசைப்பட்டு திட்டம் போட்டு ராஜஸ்தானிலிருந்து நண்பர்களை வரவழைத்து சீர்காழியில் தான் பணிபுரியும் வீட்டிலேயே இரட்டைக் கொலைகள் செய்து நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்த கொள்ளையர்களை நான்கு மணி நேரத்தில் பிடித்த காவல்துறைக்கு பாராட்டுக்கள். காரை பாதி வழியில் நிறுத்தி விட்டுநகையையும் பணத்தையும் எடுத்துக் கொண்டு வயல் வழியே போன கொள்ளையர்களை ‘யார்ரா நீங்க? இங்க என்ன… (READ MORE)
நின்று கொண்டிருக்கிறது புளிய மரம்
காஞ்சி நகரின் உள்ளே பயணிக்கும் போது, கீழே நீரோடிக்கொண்டிருக்கும் அந்த சிறு பாலத்தைக் கார் கடந்தாலும், அந்த வேகவதி ஆற்றை சற்றென்று கடந்து வந்துவிட முடிவதில்லை. நீண்ட தூரம் போன பின்பும் மனம் மட்டும் வேகவதியிலேயே நின்று, மகேந்திர பல்லவன், இரண்டாம் புலிகேசி, காஞ்சி நகர் வெளிப்புறம் தீக்கிரையாதல், சாளுக்கிய வாதாபி, பதின்ம வயது நரசிம்ம… (READ MORE)
11 வது அன்னதானம் – மு பச்சைமுத்து அறக்கட்டளை
🌸🌸 இன்று தை – மிருகசீரிடம், தந்தையின் பெயரால்கே கே நகர் இஎஸ்ஐ மருத்துவமனையில் உள்ளவர்கள், வடபழனியில் வழக்கமாக செய்யும் இடம் என இரண்டு இடங்களிலும் மதிய உணவு தரப்பட்டது. 🌸🌸 பரமன் பச்சைமுத்து,மு பச்சைமுத்து அறக்கட்டளை25.01.2021
கண்ணப்ப மாலை
🌸 கபாலியை வணங்கி விட்டு ஐயர் தந்த சாமந்தியையும் வில்வத்தையும் கையில் வைத்துக்கொண்டு உள்பிரகாரத்தை சுற்றி வர நடக்கிறேன். ‘பெருமிழலைக் குரும்ப நாயன்மார்’ சிலையை இன்னைக்கு பாத்துடனும்!’ என்ற நினைப்புடனே நடக்கிறேன். திருநீலகண்டர் தொடங்கி வரிசையாய் அறுபத்து மூவரும் இருக்குமிடத்தில் ஒரு மனிதர் நிற்கிறார். சுவரில் இருக்கும் நாயனார்கள் சிலைகளுக்கும் அவருக்கும் இடையில் வெண்கல வண்ண… (READ MORE)
முழுமலர்ச்சி பேட்ச் 50
வானின் நீல நிற சட்டையும், யானை பழுப்பு நிற கோட்டும் அணிந்து கொண்டு ராயப்பேட்டை மேம்பாலத்தின் அருகிலிருந்த அந்த ஹோட்டலின் பேங்கொயட் ஹாலுக்குள் நுழைந்ததும், விஜய் சிவா படிகளில் என்னைப் படம் பிடித்ததும், சுதர்சனா, குத்தாலிங்கம், ராஜலட்சுமி, ஜெயகாந்தன், பூர்ணிமா நீத்து, பாலாஜி, அனீஷ் அன்பரசன், ஜெயந்தி, முத்துக்குமார், மோகன்குமார், கார்த்திகேயன், தனுஜா, சக்திவேல், அருள்பிரகாசம்,… (READ MORE)
என் மனைவி பள்ளிக்குப் போகிறாள்…
என் மனைவி பள்ளிக்குப் போகிறாள்… கொரோனா தீ நுண்மி முடக்கத்திற்குப் பிறகு, நீண்ட காலம் கழித்து பள்ளி திறக்கப்பட்டது இன்று.வகுப்புகளில் மர பெஞ்சுகள் நீக்கப்பட்டு தனி நபர் இடைவெளி நெறியோடு நாற்காலிகள் சிறு மேசைகள் போடப்பட்டுள்ளனவாம் மாணவர்கள் அமர்வதற்கு. கழிப்பறைகளில் தொடாமல் இயங்குவதற்கு தானியங்கி தண்ணீர்க்குழாய்களாம். நுழையுமிடம் தொடங்கி ஒவ்வொரு தளத்திலும் முக்கிய இடங்களிலும் கால்களால்… (READ MORE)
‘மாஸ்டர்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து:
தன் கடந்தகால வாழ்க்கையின் கசப்புகளால் குடிபோதையில் மூழ்கி எதையும் சிரத்தையாக எடுத்துக் கொள்ளாமல் வாழும், ஆனால் மிகச்சிறந்த அறிவும் ஆற்றலும் உள்ளே கொண்ட ஒரு கல்லூரிப் பேராசிரியர் தண்டனையாக சில காலம் ஒரு பள்ளிக்கு பொறுப்பேற்று வரும்போது, இன்னும் இத்தனை நாட்களை கழித்து விட்டு போய்விடுவேன் என அதே மேம்போக்கு அசிரத்தையில் அங்கும் வாழும்போது, அவரது … (READ MORE)
மாற்றுமத நம்பிக்கைகள் மதிக்கப்பட வேண்டும்
ஆந்திர மாநிலத்தில் பல இடங்களில் 700 கோவில்களின் வழிபாட்டு சிலைகள் உடைத்து துண்டாக்கப் பட்டுள்ளன. பவன் கல்யாணும், தெலுங்கு தேசமும், பாஜகவும் ஆளும் குரல் கொடுத்ததால் விசாரணை நடந்தது. அதுவும் தெலுங்கு தேசம் கட்சியினரையும் பாஜகவினரையும் கைது செய்தது காவல்துறை. இந்நிலையில்,‘ஆமாம் நான்தான் 699 இந்துக்கோயில்களின் சிலைகளை உடைத்தேன். கோவிலில் இருந்த அந்த ராமர் சிலையையும்… (READ MORE)
வளர்ச்சி வாசிக்கும் காவல் நிலையம்…
திருப்பூர் பகுதியின் குன்னத்தூர் காவல் நிலையத்தில், காலை காவலர்கள் கூடும் போது பணி பொறுப்பு பிரித்தளிக்கப்படும் தினசரி நிகழ்வில், நம் ‘வளர்ச்சி’ சுய முன்னேற்ற இதழ் வாசிக்கப் படுகிறதாம். சுழற்சி முறையில் தினம் ஒரு காவலர் ‘வளர்ச்சி’ இதழின் ஒரு கட்டுரையை வாசிக்கிறார்கள். நாளின் தொடக்கத்தை மலர்ச்சி இறைவணக்கப் பாடலோடும், வளர்ச்சி கட்டுரையோடும் தொடங்குகிறார்கள். அந்த… (READ MORE)
மாட்டுப்பொங்கல் கோலம்
எல்லா நாட்களிலும் மாக்கோலம்தான் என்றாலும், மார்கழியில் பூசணிப்பூவோடு பெரிதாகும் கோலம், தை பிறந்ததும் தெருவடைத்து போடப்படுகிறது. தை இரண்டாம் நாள், மாட்டுப்பொங்கல் அன்று மணக்குடியில் போடப்படுவது மிக வித்தியாசமானது. இதை கோலமென்றும் சொல்ல முடியாது கட்டங்கள் என்றும் சொல்ல முடியாது. இரண்டும் சேர்ந்தவை இவை. அரிசி மாவால் வெள்ளைக் கோடுகளும், செங்காமட்டை (செங்கல் துண்டுகளை இடித்து… (READ MORE)
போகி – முதல் மாற்றம்!
பெங்களூருவில் வாழ்ந்த காலங்கள், சென்னையில் வசிக்கும் காலம் என எங்கிருந்தாலும் மார்கழியின் கடைசிநாளான போகியன்று சொந்த ஊருக்குப் பயணிப்பது இருபத்தியொன்பதாண்டுகளாக இறையருளால் தொடரும் வழக்கம். கர்நாடக பெங்களூருவாக இருந்தாலும் சரி, சென்னையாக இருந்தாலும் சரி. போகி அன்று நடத்தப்படும் சம்பிரதாய முறைகளால் மூச்சுத்திணற வைப்பதையே கண்டிருக்கிறேன். விடிந்த பிறகும் விலகாத மூட்டமாக போகி கொளுத்திய புகை… (READ MORE)
பயிர்கள் அழுகுகின்றன
தீபாவளியின் போது வெளுத்துக்கட்டும் மழை பொங்கல் நேரங்களில் இருப்பதில்லை. நெற்கதிர்கள் விளைந்து பொன்னிறமாக மாறி அறுவடைக்குத் தயாராகும் வேளையில், நிற்காமல் அடித்து ஊற்றுகிறது மழை. பயிர்கள் படுத்துவிட்டன. எல்லா நெல்லும் நாசம். விவசாயிகள் உயிர் போனதாக குமைந்து வருந்தி தவிக்கின்றனர். அவரவர்க்கு தெரிந்த புரிந் த வகையில் இறையை இறைஞ்சுகின்றனர். மணக்குடி கோபாலகிருஷ்ண ஐயர், குழவியில்… (READ MORE)
ஏவிசிசி – பெங்களூரு மீட்
Bengaluru – Meet நண்பர்களை சந்திப்பது போல எதுவுமில்லை உலகில். அதுவும் கல்லூரியில் ஒன்றாய்ப் படித்த வகுப்புத் தோழர்களை, தோழிகளை! பெங்களூரு ஹெச்எஸ்ஸார் லேஅவுட்டில் மலர்ச்சி மாணவரின் நிறுவனத்தி்ன் புதிய கிளையொன்றை திறந்து வைக்க வர இருப்பதால், நண்பர்களை செல்லிடப்பேசியில் அழைத்து ‘சந்திக்கலாமா?’ என்று கேட்டிருந்தேன். மூவரும் ‘நிச்சயமாக!’ என்றார்கள். அதிகாலை நான் விமானத்திலிருக்கும்… (READ MORE)
வாசிப்பு பெருகட்டும்
செய்தித்தாள்களைக் கூட வாசிக்காமல் வெறும் மீம்ஸை படித்துவிட்டு பேசும் இளசுகளாக இருக்கிறார்களே, வாசிப்புப் பழக்கமே குறைகிறதே என்று கவலைப்படுவோர்க்கு ஒரு சிறு புள்ளி வெளிச்சம் தந்திருக்கிறது தமிழ்நாட்டு அரசுப்பணியாளர்கள் தேர்வு மையம். சமீபத்தில் நடந்த குரூப் 1 முதல் நிலைத் தேர்வில் இளைஞர்களை கலை பண்பாடு நோக்கி நகர்த்தும் முயற்சியாக ‘வேள் பாரி’ புதினம் பற்றியும்… (READ MORE)
‘மழைப்பாடல்’ – ஜெயமோகன் : பரமன் பச்சைமுத்து
பள்ளிப் பாடங்களில் காந்தாரம் பற்றி காந்தாரக் கலை பற்றிப் படித்திருப்போம், பாகிஸ்தானுக்கு அடுத்த பெருமணல் வெளி பாலையைக் கடந்து இருக்கிறது ஆப்கானிஸ்தான் என்று அறிந்திருப்போம், மகாபாரதக் கதையில் திரிதராஷ்டிரனுக்கு மனைவியாக கண்ணைக் கட்டிக் கொண்டு வரும் காந்தாரி பற்றியும் கதைகள் கேட்டிருப்போம்… இவையெல்லாம் ஒரே இடத்தை குறிக்கின்றன, ஆப்கன் நாட்டிலிருந்து வந்த இளவரசி வசுமதியே காந்தார… (READ MORE)
கோதாவரி ஆற்றில் சிலீர் அனுபவம்
ஆந்திரா செழித்திருப்பதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று. இந்தியாவின் இரண்டாவது நீண்ட ஆறான கோதாவரி. தமிழ், தெலுங்கு, இந்தித் திரைப்படங்களின் முக்கிய படபிடிப்புப் பகுதியான ராஜமுன்ட்றியில் கோதாவரியில் இறங்கி மார்கழி மாதத்தின் ஜஸ் நீரில் காலாற நிற்கும் வாய்ப்பை வாழ்க்கை தந்தது இன்று. சாளுக்கிய மன்னன் ராஜ மகேந்திரன் ஆண்ட இடம் என்பதால் ‘ராஜமகேந்திரவரம்’ என்று… (READ MORE)
உப்புமா பெஸ்ரெட்டு @ஆந்திரா
ஆந்திர துவரம் பருப்பை அரைத்து கலக்கப்பட்ட மாவை, நல்ல சூடான கல்லில் மெலிதாக வார்த்து, பதத்திற்கு வரும் போது அதில் ஏசியன் பெயிண்ட்ஸ் வெளிப்பூச்சு போல பச்சை வண்ண சட்னியொன்றை பூசி, சில நிமிடங்கள் காய்ந்ததும், அதன் மீது அப்படியே உப்புமாவை கொட்டி (ஆமாம்பா… ஆமாம், உப்புமாதான்! ஆவ்வ்வ்வ்…) அள்ளியடித்த சிமெண்ட் கலவையை கொற்றர் கரணையால்… (READ MORE)
ஓராண்டிற்குப் பிறகு விமானம்
சரியாக ஓராண்டிற்குப் பிறகு விமானமேற வருகிறேன். ‘டிக்கெட் தேதோ, ஐடி கார்ட்..’ என்று முரட்டு இந்தி இங்கிலீஷில் சொல்லி வாங்கி பார்த்துத் தரும்வாயிற்காவலர்கள், இப்போது இரண்டையும் தொடாமல் பார்க்கிறார்கள். ‘மாஸ்க் டவுன்..’ என்கிறார்கள் புதிதாய் முகம் பார்க்க. செல்ஃப் செக்இன் இயந்திரங்கள் கூடுதலாக உள்ளன என்றாலும் மக்கள் இன்னும் வரிசையிலே அதிகம் இருக்கிறார்கள். எல்லா இடங்களிலும்… (READ MORE)
நல்ல ஆண்டாக அமையும் 2021
🌸 ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 1, மலர்ச்சியின் புத்தாண்டு நிகழ்ச்சி 400 பேர்களுக்கு என்று நடத்தியே வழக்கம். நோய்த்தொற்றிலிருந்து உலகம் மெதுவாக மீண்டு கொண்டிருந்தாலும்,வழக்கமான பெரிய அரங்கு எடுத்து மலர்ச்சி உரை நிகழ்த்த நிறைய கட்டுப்பாடுகள். ஒவ்வோர் ஆண்டும் புத்தாண்டு நிகழ்ச்சிக்கு வருபவர்கள் ஆவலோடு எதிர்பார்ப்பர் என்பதால் அவர்களுக்காகமலர்ச்சி அரங்கிலேயே இம்முறை நிகழ்ச்சியை வைத்தோம். அறிவித்த… (READ MORE)
மக்கள், பல்லுயிர் சூழல் முக்கியமல்லவா!
மத்திய அமைச்சர் தில்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளோடு ஒன்றாக இணைந்து அவர்களது உணவை கரண்டியால் கிளறியும் உண்டும் மகிழ்கிறார். இரண்டு சட்டங்களை மாற்ற ஒத்துக்கொண்டிருக்கிறார் என்றும் உடன்பாடு ஏற்பட்டிருக்கிறதென்றும், அடுத்த கட்ட பேச்சு வார்த்தை சில நாட்களில் தொடரும் என்றும் இன்று ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. ‘விவசாயிகள்… விவசாயிகள்!’ என்று உணர்ச்சி வசப்பட்டவர்கள் சிலர் அமைதியாயிருப்பர்…. (READ MORE)
சிவ வழிபாட்டு மாலை
பதிப்புரை சிவ ஆகமங்களின்படி பூசைகள் செய்த, செய்து கொடுத்த என் தந்தை மு. பச்சைமுத்து அவர்கள், எல்லா நிகழ்வுகளிலும் திருமுறைகள் ஓதினார், ஓதச் செய்தார், ஓதப்பட வேண்டுமென்று விரும்பினார். கோவில் குடமுழுக்கு, வேள்வி, வீட்டில் பூசை, இறப்பு என எல்லா நிகழ்வுகளுக்கும் சரியான திருமுறை, பஞ்ச புராணப் பதிகங்களைத் தேர்ந்தெடுத்து நிகழ்த்தித் தருவார்.அவர் ஆசைப்பட்டு செய்த… (READ MORE)
17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்னுமொரு நூல்…
பெங்களூருவில் ஐடி இஞ்சினியராக இருந்த காலத்தில், அப்பாவிற்கு மணி விழா வந்தது (60 வயது). அப்பாவும் அம்மாவும் முறைமைகள் செய்து சிவலிங்கம் கட்டிக் கொள்ள முடிவெடுத்து, ‘லிங்காயத்’ சமூகம் அதிகம் வாழும் கர்நாடகாவிலிருந்து ‘செச்சை’ (சிவலிங்கத்தை வைத்து மூடி மார்பில் அணிய உதவும் வெள்ளியிலான கூடு) வாங்கி வரச் சொன்னார். அப்பா கொண்டாடி மகிழ்வார் என்பதற்காகவே,… (READ MORE)
வைகுந்த ஏகாதசி அடையாறில்
பலவிதமான மக்கள் ஓரிடத்தில் குவிந்து இருப்பதை வெறுமனே கவனிக்கப் பிடிக்கும் எனக்கு. எல்லோரும் குளித்து உடை திருத்தி ஒரே ஒழுங்கோடு மனது குவித்து இயங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் உற்சாகம் வராதா என்ன! அடையாறு அனந்த பத்மநாப சுவாமி கோவிலில் இன்று காலை அந்த சிறப்பு உற்சாகம் எனக்கு. வைகுந்த ஏகாதசி, பரம்பத வாசல் திறப்பு என… (READ MORE)
ராம்ஜீயை நினைத்துக் கொள்வேன்…
‘பரமன், ஒரு எடத்துக்குப் போறோம்! வாங்க!’ ராம்ஜீயின் அழைப்புகள் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கும். லதா கிருஷ்ணசாமியும், சாமுவேல் மேத்யூவும், சில நேரங்களில் ஏஆர்கேயும் சேர்ந்து கொள்ள, இணைந்து போவோம். டிசம்பர் என்றால் கச்சேரி சீசன். ‘அந்நியன்’ திரைப்படத்தில் வருவது போல சபா மேலாளர்கள் சிறிய கலைஞர்கள், பெரிய கலைஞர்கள் என பிரித்து நேரம் ஒதுக்கி நிர்வகித்து… (READ MORE)
தூங்குவது போல பாசாங்கு செய்து நடித்திருக்கிறீர்களா?
குட்டிப் பையனாக இருக்கும் போது வீட்டுக்கு யாரேனும் விருந்தினர்கள் வந்திருக்கும் வேளையில், அவர்கள் முன்பு வெறுந்தரையில் கண்ணை மூடிக் கொண்டு உறங்குவது போல பாசாங்கு செய்து நடித்திருக்கிறீர்களா? கண்களை மூடிக்கொண்டு, ‘நம்மள பத்தி ஏதாவது பேசறாங்களா!’ என்று காதுகளைத் திறந்து வைத்துக் கொண்டு கிடந்திருக்கிறீர்களா, நீங்கள்? ‘அக்கா, இவன் தூங்கனாலும் கண்ணு மட்டும் அலையிது பாருங்கக்கா!’… (READ MORE)
தில்லை நடராசரின் தேர் திருவீதியுலா வரட்டும்
ஒரு புறம் மார்கழித் திருவாதிரை தில்லை நடராசர் உற்சவத்திற்கு கோவில் தயாராகிறது. அதற்கு முந்தைய நாள் நடராஜர் தேரை இயக்குவதற்கு கொரோனாவைக் காரணம் சொல்லி அனுமதி மறுக்கப் படுகிறது. வடம் பிடித்து இழுப்பதில் தொற்று வந்துவிடும் எனக்கூறி என்எல்சி பொறியாளர்களை வைத்து தேரை இயந்திரங்கள் மூலம் இழுக்க வைக்க முடியுமா என்று மதிப்பீடு செய்வதாக தகவல்… (READ MORE)
கார்த்தி சுற்றிருக்கிறீர்களா!
‘பன்னீர் மாதிரி கார்த்தி சுத்தனும்’ ‘பன்னீரோட கார்த்தியில மட்டும் எவ்வளோ நல்லா நெருப்பு பொறி வருது!’ ‘ஒரு நாளு நானும் பன்னீரு மாதிரி சுத்துவேன்’ எனக்கு மட்டுமல்ல மணக்குடி சிறுவர்களில் பலர் இவ்வகை ஏக்கத்தை கண்ணில் தேக்கியே ‘கார்த்தி’ சுற்றுவர். உறுதியாகவும் நீள் வடிவமும் கொண்ட பனம் பூவை பறித்து வந்து, உதிர்ந்துவிடாமல் இருக்க அதைச்… (READ MORE)
சில கணங்கள் கிடைக்கப்பெற்றாலும்…
‘சென்னை என்பது ஒரு நகரமல்ல, வெவ்வேறு உலகங்களைக் கொண்ட இரு நகரங்கள்’ என்று பல ஆண்டுகளுக்கு முன்பு தனது ‘புதுப்பேட்டை’ திரைப்படத்தின் கதைக்களனைப் பற்றிப் பேசுகையில் விகடன் பேட்டியில் சொல்லியிருந்தார் இயக்குநர் செல்வராகவன். என் உணர்வுகளை வார்த்தையாகப் பிரதிபலித்தன அவரது வார்த்தைகள். பிழைப்பிற்காக முதலில் வந்த போது அறிந்த சென்னையின் உலகமும், பெங்களூரு – கலிஃபோர்னியா… (READ MORE)
பசுஞ்சாண பூசணிப்பூ
நம் வீட்டு வாசலில் திடீரென்று கையளவு பெரிய மஞ்சள் பூ ஒன்று முளைத்து சிரித்தால் உங்கள் மனநிலை என்னவாக இருக்கும்? அதுவும் நீங்கள் அரைக்கால் சட்டையணியும் சிறுவன் என்றால்! அதிகாலை வாசல் திருத்தி தெருவடைக்கும் வகை பரந்து விரிந்த பெரும் மாக்கோலம் இட்டு அதன் ஓர் ஓரத்தில் பசுஞ்சாணியில் பாத்தி கட்டி அதன் குழிவில் ஆலக்கரைசலை… (READ MORE)
சில மனிதர்கள்…
‘இந்நேரம் பாடத் தொடங்கியிருப்பார்…!’ அதிகாலை நீராடி வேட்டியுடுத்தும் போதே அப்பா நினைவுதான். மார்கழி என்றால், ஊரை எழுப்பும் மணக்குடியின் சேவலையே அப்பாவின் பதிகம்தான் எழுப்பும். ஐந்து மணிக்கு முன்னேயே ஆர்மோனியத்தின் இசையும் அப்பாவின் ‘போற்றியென் வாழ் முதலாகிய பொருளே… புலர்ந்தது பூங்கழற்கிணை துணை மலரடி…’ பாடலும் மணக்குடியின் வெளியில் நிறையும். ஐந்தரை மணி பேருந்துக்கு நிற்பவர்கள்,… (READ MORE)
சில கதவுகள் திறக்கின்றன
பரமன் ரெண்டு நிமிஷம் பேசனும். உங்க கிட்ட ஒண்ணு சொல்லனும்!’ என்று அழைத்த மலரவன், சென்னை பெருநகரை தூய்மையாக வைத்திருக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனத்தின் உயர்நிலை இரண்டாம் கட்ட பொறுப்பு அதிகாரி. ‘சொல்லுங்க! ஆமாம் இன்னைக்கு வீட்லதான் இருக்கேன். சொல்லுங்க!’ ‘எங்க ஜோன்ல துப்புறவு பணியாளர் வேலைகள் காலி இருந்துச்சி. அதுக்கு, மேல பேசி ட்ரான்ஸ்ஜென்டர… (READ MORE)
திருவண்ணாமலை வளர்ச்சிப்பாதை
கொரோனா தீ நுண்மிக் காலம் என்பதே தெரியாத அளவிற்கு எப்போதும் போல அரங்கை நிறைத்து வந்தமர்ந்திருந்தனர் மலரவர்கள் திருவண்ணாமலை வளர்ச்சிப் பாதைக்கு. கூடுதலாக அனைவரும் சுவாசக்கவசம் அணிந்திருந்தனர். ஆண்டாள் சிங்காரவேலர் அரங்கின் நீள் வடிவ அமைப்பு தனி்நபர் இடைவெளிக்கு மிக உகந்ததாக அமைந்திருந்தது. சென்னை வளர்ச்சிப்பாதையில் பதிவு செய்து இடம் பிடிக்க முடியாமல் நேராக திருவண்ணாமலை… (READ MORE)
உறவினர் நிகழ்வு
உறவினர்கள் நிகழ்வில் கலந்து கொள்வதில் உள்ள நல்ல விஷயம் நம் ஆட்களை ஒன்றாக சந்திக்க முடியும். உறவினர் நிகழ்வு ஒன்றில் சற்று முன்பு எடுத்தது் ##Somasippadi ##Gangashree 13.12.2020
கேள்வி ஒன்று
உள்நாட்டில் பெட்ரோல் விலையைத் தீர்மானிப்பது யார்? எதனடிப்படையில் அது முடிவு செய்யப்படுகிறது?எண்ணெய் / எரிபொருள் விற்கும் நிறுவனங்களின் கூட்டமைப்பே அதை தீர்மானிக்கின்றன என்பதைத் தாண்டி இவற்றில் எனக்கு ஆழ் அறிவில்லை. உலக சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் விலை குறையும் போது உள்நாட்டில் விலை குறையும், அது கூடும் போது உள்நாட்டில் விலை கூடும் என்கிறார்கள். … (READ MORE)
சபாநாயக சந்திப்பு
சென்ற ஆண்டு ‘டிசம்பர் 28 – 91 பேட்ச் – சவேரா மீட்’டிற்குப் பிறகு ஓராண்டு கழித்து சபாநாயகத்தை சந்தித்தேன் இன்று. திருவண்ணாமலை வருவதற்கு முன்பே சபாவோடு சில நிமிட சந்திப்பு என்பது முடிவு செய்யப்பட்டது. ‘ரத்தபூமி’ வாட்ஸ்ஆப் க்ரூப்பில் இருப்பதால் தினமும் தொடர்பிலிருப்பதால், ஓராண்டு கழித்தே சந்திக்கிறோம் என்ற உணர்வே இல்லை. மன்னம்பந்தல் கல்லூரி… (READ MORE)
பஞ்ச புராண திரட்டு
சிவ ஆகமம் படி பூசைகள் செய்த, செய்து கொடுத்த, செல்லுமிடமெல்லாம் திருமுறைகளை பாடிய, தன்னால் முடிந்தவரை அடுத்தவருக்குக் கடத்திய என் தந்தையின் முதலாம் ஆண்டு நாள் (குருபூசை என்போம்) வருகிறது சில தினங்களில். சிவபூசனை செய்வோர், இறைவனை வழிபட விரும்புவோர் பஞ்ச புராணங்களை திருமுறை பதிகங்களை பாடி வழி பட விரும்பினால், அவர்களுக்கு உதவ சில… (READ MORE)
ஓதுவாரோடு வீதியில் நடந்தது
இரண்டாண்ணுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வில் என்னை அதிரச் செய்த காஞ்சிபுரத்து நிகழ்வு, இன்று திரும்பவும் அதிர வைக்கிறது. மலர்ச்சி மாணவர் கீர்த்திநாதனின் கந்தன் எஸ்டேட்டின் புதிய லே அவுட் திறப்புவிழா மரம் நடுதலுக்கு போனபோது,நீரணிந்த சிவநெறி ஓதுவார்கள் இருவர் திருமுறைகளை ஓதிய படியே நம் இருபக்கமும் நடந்து வரும் படி செய்திருந்தார். ‘ஐய்யோ, இது ஓவர்…. (READ MORE)
ஊடகங்கள் செல்லட்டும் கடலூர் சிதம்பரம் வயல்களுக்கு
நிவர் புயல் வீசப்போகிறதென்றதும் அதிகாரிகள், பாதுகாப்புப் பணிகள் என அரசு நல்ல முன்னேற்பாடுகளோடு நின்றது. எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் அவர்கள் மழைக்கோட்டு அணிந்து கொண்டு மழைநீரில் இறங்கி நீர் சூழ்ந்த பகுதிகளுக்கே சென்றார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மழையில் செம்பரம்பாக்கம் ஏரிக்குப் போனார். ஸ்டாலின் அவர்கள் இறங்கி செய்வது எப்போதும் அரசிற்கு அழுத்தம் தரும், அது… (READ MORE)
ரஜினி வருகிறாராமே!
‘ரஜினி காந்த் ஒரு நல்ல நடிகர். அவர் பாட்டுக்கு நடிச்சிட்டு போகட்டும்’ ‘இங்கல்லாம் வரக்கூடாது. வந்தா செஞ்சி வுட்ருவோம்! ஹஹ்ஹாஹ்ஹா!’ என கிண்டலும் கேலியும், அவரை ஒரு டம்மி பீஸ் என்றெல்லாம் மீம்ஸ் தட்டி எகத்தாளமாக சிரித்தவர்கள் என்ன செய்வார்கள் இப்போது என்பதை இனி பார்க்கலாம். ‘நீ வரக்கூடாது. அவரு வரக்கூடாது. தமிழன் இல்ல. மராட்டி,… (READ MORE)
வேட்டி மறைப்பிற்கு இருபுறம் நின்றபடி திருமணம்
நாதஸ்வரமும் தவிலும் இசைக்கத் தொடங்கிய உடனேயே ஒரு இடமானது நல்நிகழ்வுக்குத் தயாராகிவிடுகிறது. லாஷ்கர காந்தார தேசத்திலிருந்து படையெடுத்து வந்து டெல்லியை ஆட்சி செய்த சுல்தான்களுக்கு நாதஸ்வர இசை புதியதாகவும் இடைஞ்சலாகவும் இருந்ததென்றும் மாலிக்காபூர் மட்டும் அதில் மயங்கிக் கிடந்தான் என்றும் சாகித்ய விருது பெற்ற தனது ‘சஞ்சாரம்’ புனைவில் எழுதியிருப்பார் எஸ்ரா.நாதஸ்வரமும் தவிலும் மிக எளிமையான… (READ MORE)
பாஜக தேர்தல் கணக்கு
சென்னை வந்த போது முதல்வர் வரவேற்க, திரும்பிப் போகும் போது துணை முதல்வர் வழியனுப்ப என்று நிகழ்ந்த அமித்ஷாவின் தமிழக வருகை இரண்டு சங்கதிகளை வெளிப்படையாக செய்துள்ளன. அதிமுக கூட்டணியில் பாஜக இருந்தாலும், அதிமுக தங்கள் வசதிக்கு பாஜகவை நடத்த முடியாது. ‘திமுக எதிரி பாஜக’ என்று நிலையை தொடங்கி வைத்தாயிற்று எதிர்காலக் கணக்கை குறிவைத்து…. (READ MORE)
செப்பரம்பாக்கம் திறந்தால் நல்லது
செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு பற்றி நகைப்பு மீம்ஸ் போடுவோருக்கும், அதைக் கண்டு பீதியடைவோர்க்கும்… வணக்கம். ஏரியைத் திறந்து விட வேண்டும். திறந்து விடுவதே நல்லது. 2015ல்…ஒரே நாளில் 50cm மழை பெய்து ஏரி நிரம்பி உடைந்தது. இன்று 2020ல்…தற்போது வரை 20cm பெய்துள்ளது. செம்பரம்பாக்கத்தை இப்போதே திறந்து கொஞ்சம் நீரை வெளியேற்றுவது நல்லது. ஏரியையும் மக்களையும்… (READ MORE)
மலர்ச்சி வகுப்பில் நேரடியாய் அமர்ந்து அமிழ்வது ஓரனுபவம்!
சோகம், வலி, ஏமாற்றம் என்றுஅழுகையில் பல்வேறு வகைகள் உண்டு. தனக்கு நேர்ந்ததை நினைவு கூர்ந்து உணர்ந்து வருவது ஒரு வகை அழுகை. தனக்கு எதுவும் நடக்காத போதிலும், நல் ஆழமான உணர்ச்சியின் மிகுதியாக பொசுக்கென வெளிப்படும் நேரிய அழுகை பிறிதொரு வகை. இவ்விரு வகையும் உணரப்பட்டது சென்ற சனிக்கிழமை ‘வளர்ச்சிப்பாதை’யில். உறவுகள் பற்றிய வளர்ச்சிப்பாதை சிலரை… (READ MORE)
‘சூரரைப் போற்று’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து.
‘ஒரு கர்நாடக பிராமணரை மதுரையின் பிற்படுத்தப்பட்ட வகுப்பின் பெரியாரிய மனிதராக காட்டியிருப்பது நியாயமா?’ ‘ஏர்ஃபோர்ஸ்ல இப்படியா நடக்கும்?’ போன்ற கேள்விகளை எழுப்புகிறவர்கள் படத்தின் தொடக்கத்தில் போடப்பட்ட வரிகளையும் சில காட்சிகளின் போது இடப்பக்க மூலையில் போடப்படும் வரிகளையும் சரியாக கவனிக்கவில்லை என்பது புரிகிறது. மேற்கண்ட கேள்விகளை மனதில் வைத்துக் கொண்டே நீங்கள் படத்தைப் பார்த்தாலும், உங்களை… (READ MORE)
அடிக்கடி தேர்தல் வரட்டுமேயென்கிறது அடிமனது
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வி, விடுதிச் செலவை அரசே ஏற்கும், சுழல் முறையில் நிதி ஒதுக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார் முதல்வர். இப்படியொன்று நடப்பதற்கு காரணமானவர் மு.க.ஸ்டாலின் என்பதை முன் வைத்தே ஆக வேண்டும். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்விச் செலவை திமுக ஏற்கும் என ஸ்டாலின் அறிவித்ததன்… (READ MORE)
காவலர்களுக்கு ஒரு நாள் ஓய்வு…
காவல்துறையில் பணி புரிவோருக்கு சுழற்சி முறையில் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை என்று சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸ் செய்துள்ள அறிவிப்பு வரவேற்கத்தக்கது. (சேலத்திலோ எங்கோ ஒரு காவல் ஆணையர் இதை முன்பு முயன்று பார்த்ததாக நினைவு) காவல்துறையினரின் மனவழுத்தத்தைக் குறித்து எழுதி மனு தாக்கல் செய்த அந்த மனிதருக்கு நன்றி.அதை விசாரித்து… (READ MORE)
‘வைரமுத்து சிறுகதைகள்’ – நூல் விமர்சனம் : பரமன் பச்சைமுத்து
இருநூறு பக்க நாவல் எழுதுவது எளிது, அதை வெட்டிச் சுருக்கி சிறுகதையாக்குவது பெருங்காரியம் எனும் பொருள்பட சுஜாதா சொல்லியிருந்தார் எப்போதோ. ஒவ்வொரு சிறுகதையும் உண்மையில் ஒரு நாவலுக்கான உள்ளடக்கமே. ஒரு பாத்திரம் அல்லது சில பாத்திரங்கள், ஒரு நிகழ்வு இவற்றை வைத்துக் கொண்டு சில பக்கங்களில் வாசிக்கும் வாசகனுக்குள் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும், அனுபவம் தர… (READ MORE)
சென்னை நிலத்தடி நீர் உயர்வு…
அக்டோபரில் பெய்ய வேண்டிய அளவுக்கு குறைவாகவே பெய்துள்ளது மழை என்ற போதிலும் சென்னையின் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. பகுதிவாரியாக உயர்ந்துள்ள அளவு வெளியாகியிருக்கிறது. கோயில் குளங்களை, ஏரிகளை, பயன்படுத்தாத கிணறுகளை என நீர்நிலைகளை மழை நீர் சேமிப்பிற்காக செப்பனிட்ட மாநகராட்சியின் பணிக்கு கிடைத்த பரிசு இது. வீடுகள், அடுக்ககங்கள், கட்டிடங்கள், தொழிற்சாலைகளில் மழைநீர் சேமிப்பு… (READ MORE)
பளபள முகம்
‘க்வாலியர்…!’ பாவாடை மாமாவைப் பற்றிப் பேசுவதானால் ராமலிங்கம் சித்தப்பா சொல்லும் முக்கிய வார்த்தை இதுவாகத்தான் இருக்கும். தெரிந்த மனிதர்களையும் அறிந்து கொள்ள சிலர் உதவுகிறார்கள். இளம் பிராயத்தில் நான் விரும்பி நெருங்கி இருந்தது ராஜவேல் சித்தப்பாவோடும் ராமலிங்கம் சித்தப்பாவோடும்தான். ராமலிங்கம் சித்தப்பாவுக்கு பாவாடை மாமா என்றால் பெருமை, மதிப்பு. ராமலிங்கம் சித்தப்பாவால் பாவாடை மாமா மீது… (READ MORE)
முழுமலர்ச்சி Batch 49
இரண்டு தொலைபேசிக் கவுன்சிலிங்கள், பிசினஸ் பக்கம் கட்டுரை எழுதியது, ஒரு வழிகாட்டல் உதவி என்பதைத் தாண்டி வேறு சில கூடுதல் நிகழ்வுகளாலும் இன்றைய நாள் சிறப்பான நாளாக அமைந்தது. இறைவனின் அருளால், முழுமலர்ச்சி திரள் 49 தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது என்பது நல்ல நிகழ்வு. இரண்டாவது வகுப்பான இன்றே மனம் விட்டு வாய் விட்டழுது பகிர்வு… (READ MORE)
மு பச்சைமுத்து அறக்கட்டளை 10வது அன்னதானம்
🌸🌸 🌸 இன்று ( ஐப்பசி மாதம் ) மிருகசீரிடம். வடபழனி சிவன் கோயில் தெருவிலும், இன்னும் சில இடங்களிலும்தந்தையின் பெயரால் செய்யப்படும் 10வது அன்னதானம் நிறைவேற்றப்பட்டது சில மணி நேரங்களுக்கு மழையை நிறுத்தி உணவு பெறுவோருக்கும் நாம் வழங்குவதற்கும் ஏதுவாக வசதி செய்து தந்தான் இறைவன். இன்று மதிய உணவு வழங்கப்பட்டது வாழ்க! :மு…. (READ MORE)
வண்டலூர் ஏரி உயிர் பெறுகிறது
102 ஏக்கர் பரப்பளவுள்ள 100 ஏக்கர் விவசாயத்திற்கு பாசனம் தந்த வண்டலூர் ஏரி, பொது மக்கள் குப்பைகளை கொட்டி வந்ததாலும் வண்டலூர் ஊராட்சி குப்பையைக் கொட்டி எரித்ததாலும்(!!!) தனியார் ஆலைக்கழிவுகள் கொட்டப்பட்டதாலும் துர்ந்து 60 ஏக்கர் விவசாயப் பானத்திற்கு மட்டும் அளவிற்குச் சுருங்கிப் போனது. இந்தியன் சுற்றுச்சூழல் அறக்கட்டளை என்ற தனியார் நற்சங்கம் இறங்கி வேலை… (READ MORE)
திறந்திருக்க வேண்டாம் திரையரங்குகளை
மெரீனா கடற்கரை, தி நகர் ரெங்கநாதன் தெரு என பொது இடங்களில் மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கி விட்டது. பள்ளிகள் 16ஆம் தேதியிலிருந்து திறக்கலாம், புறநகர் ரயில்கள் ஓடலாம் என்பனவும் தளர்வுகளில் அறிவிக்கப்பட்டுள்ளன. அரக்கோணத்திலிருந்து சென்னைக்கு நேரடி பேருந்தும் இல்லாமல் புறநகர் ரயில்களும் இல்லாமல் தவித்த சிறு குறு வியாபாரிகளுக்கு இது நற்செய்தி. பள்ளிகளைப் பொறுத்த… (READ MORE)
இலங்கை மஞ்சள் மூட்டைகள்
மீன் பிடி நாட்டுப் படகில் நேற்றும், இலங்கைக்குக் கடத்த முயன்ற 2,000 கிலோ மஞ்சளை (73 மூட்டைகள்) பறிமுதல் செய்திருக்கிறார்கள் ராமேசுவரத்தில் என்று செய்திகள் வந்துள்ளன. இது வரையில் 8,000 கிலோ பிடிக்கப்பட்டுள்ளனவாம். சமீபமாக அடிக்கடி ‘இலங்கைக்கு மஞ்சள் மூட்டை கடத்தல்’ வகை செய்திகள் வருகின்றனவே! 😯
வந்து விட்டது வடகிழக்குப் பருவமழை
வானகச் சிறுவர்கள் சிலர் ஊரளவு பெரிய சல்லடையொன்றின் மீது வாய்க்காலின் மதகைத் திறந்து நீரை விட்டது போல பெய்து கொண்டேயிருந்தது மழை.அதிகாலை மூன்றுக்கு வெட்டிய தொடர் மின்னல்களின் வெளிச்சமும் இடித்த பேரிடிகளும் அப்போதிலிருந்து காலை ஏழு வரை அடித்த மழையும் மிரள வைத்தன. வானியலாளர்கள் கணித்த படி வட கிழக்குப் பருவமழை தொடங்கி விட்டது நகரங்களின்… (READ MORE)
கண்ணே நீ கமலப்பூ…
‘அன்னமிடுவாருண்டோ அனாயாதையான இந்த ஏழை அரும் பசிக்கு… அன்னமிடுவாருண்டோ…’ இந்தப் பாடலை, தான் நடத்தும் ‘காரக்காலம்மையார்’ வில்லுப்பாட்டில் என் தந்தை பாடும் பாங்கை ஒரு முறை நீங்கள் கேட்டிருந்தால், மறக்கவே முடியாதபடி மனதினுள்ளே ஓடி வந்து ‘பச்சக்’கென்று ஒட்டிக்கொள்ளும். ‘வள்ளித் திருமணம்’ கதையில் குறிஞ்சித் திணை வயலில் வள்ளிக் கிழங்குத் தோட்டத்தில் வளர்ந்த குழந்தை வள்ளியை… (READ MORE)
‘புத்தம் புது காலை’ – திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து
நாடு முழுக்க ஒரே ஊரடங்குதான் என்றாலும் ஒவ்வொருவருக்குமான ஊரடங்கும் அதன் தாக்கங்களும் வேறுவேறுதான் உண்மையில். நாடு தழுவிய ஊரடங்கை பாரதப்பிரதமர் அறிவிக்கும் வேளையில் ஐந்து வேறு வேறு இடங்களில் நடக்கும் நிகழ்வுகளை வைத்து தமிழின் முக்கிய ஐந்து இயக்குனர்கள் குறும்படமாக இயக்கி ஐந்தையும் ஒன்றாகச் சேர்த்து ஒரே படமாக – ‘புத்தம் புது காலை’ என்று… (READ MORE)
‘முதற்கனல்’ – வெண்முரசு – ஜெயமோகன் : பரமன் பச்சைமுத்து
நூலைப் பற்றிப் பேசுவதற்கு முன் ஒரு பெரும்வியப்பை முதலில் வெளிப்படுத்திவிடுவோம். 2014ல் தொடங்கி 7 ஆண்டுகளில் 26 பாகங்களாக 25,000 பக்கங்களில் தமிழின் ஒரு பெரும் நாவலை (உலகின் பெருநாவல்களில் ஒன்று என்கிறார்கள், சரியாகத் தெரியவில்லை நமக்கு) வடித்துத் தள்ளியிருக்கும் நூலாசிரியர் ஜெயமோகனை எண்ணுகையில், ‘ஒரு பாகத்தை சரியாக ஆழ்ந்து வாசித்து முடிக்கவே இவ்வளவு நாள்களாகிறதே… (READ MORE)
ஓர் ஆசிரியனுக்கான ஓர் உண்மையான பரிசு
கவின்மொழியாலும் குத்தாலிங்கத்தாலும் பரிந்துரைக்கப்பட்டு மலர்ச்சிக்கு வந்த பெண்மணியா இவர் என வியக்கவே செய்கிறேன். மாதத்திற்கொரு முறை கண்ணீரும் கம்பளையுமாய் கவுன்சிலிங் வேண்டி மலர்ச்சி அலுவலக கதவை தட்டிய பெண்மணி, எந்த வகுப்புகள் நிகழ்ச்சிகள் வந்தாலும் மலர்ச்சியோடு கலந்து வாலண்ட்டியராகவும் வளர்ச்சி இதழோடும் பயணித்து அழகாக வளர்ந்து நிற்கிறார். சமீபத்திய 10 பேட்ச்களில் முழுமலர்ச்சி செய்தவர்கள், உங்கள்… (READ MORE)
தாகம் தீர்க்கும் ஆந்திரத்திற்கு நன்றி
பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு நீர்க் கொடை தந்து சென்னை மக்களின் அடுத்த ஐந்து மாத குடிநீர்த் தேவையை தீர்த்து வைத்த ஆந்திரத்திற்கு நன்றி! பிரார்த்தனைகள்! வாழ்க! KrishnaWater KrishnaRiver Chennai Facebook.com/ParamanPage
யிப் மேன் – பெரும் மாஸ்டர்
யிப் மேன் மிகப்பெரிய மாஸ்டர். நம் தலைமுறையினரின் வாழ்வு தொடங்கிய காலத்தில், நெருப்புச் சக்கரமென சுழன்று வெம்மையும் ஒளியையும் தந்து அடங்கிங்கொண்டிருந்தார். தன்னுள் எழுந்த தீரா ஒளியினாலும் ஆர்வத்தாலும் தான் கற்ற பாரம்பரிய சீனக் கலையான வின்ச்சுன்னை உணர்வு வழியில் மெருகேற்ற முயன்றதில், தான் குருவாக மதித்தவராலேயே தனது மனமுவந்த பள்ளியிலிருந்து வெறுத்து விலக்கப் பட்டவர்…. (READ MORE)
நீர்க்கோழி்
கடற்கரையில் படுத்துக்கொண்டு தலையை மட்டும் மணலுக்குள் புதைத்துக் கொண்டு கிடப்பவனைப் போல உடலை நீரின் மேலே மிதக்க விட்டபடி கழுத்தை மட்டும் வளைத்து நீட்டி நீருக்குள் விட்டு இரைகளைத் தேடிப்பிடிக்கும் நீர்க்கோழியைக் கண்டிருக்கிறீர்களா? நான் முதன்முதலில் நீர்க்கோழியைப் பார்த்தது மணக்குடியின் பாப்பாக் குளத்தில்தான். மொத்த ஊரும் பயன்படுத்திய அந்தக்குளம் நீர் நிறைந்து பனை கருக்குப் போன்ற… (READ MORE)
மு பச்சைமுத்து அறக்கட்டளை : 9 வது அன்னதானம்
இன்று ( புரட்டாசி மாதம் ) மிருகசீரிடம். வடபழனி சிவன் கோயில் தெருவிலும், இன்னும் சில இடங்களிலும்தந்தையின் பெயரால் செய்யப்படும் 9வது அன்னதானம் நிறைவேற்றப்பட்டது இன்று மதிய உணவு வழங்கப்பட்டது வாழ்க! :மு. பச்சைமுத்து அறக்கட்டளை பரமன் பச்சைமுத்து08.10.2020
கொரோனா : ட்ரம்புக்கு புது மருந்து
அமெரிக்க மருத்துவர்கள் உறுதி செய்யாத போதும், ‘ஹைட்ராக்ஸிகுளோரோகுயீன்’தான் கொரோனாவிற்கான மருந்து, இந்தியப் பிரதமரை அழைத்து உடனடியாக அந்த மருந்தை அமெரிக்காவிற்கு அனுப்ப வேண்டும் என்றெல்லாம் பெரும் ஒலி எழுப்பிய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அமெரிக்காவில் கொத்துக் கொத்தாய் கோவிட் தீ நுண்மி தொற்றால் செத்து வீழ்ந்தபோதும், ‘சீட் பெல்ட்டா… அதெல்லாம் நான் போட மாட்டேன்!’… (READ MORE)
புதுச்சேரி வழி காட்டுகிறது!
புதுச்சேரி வழி காட்டுகிறது! மொத்த விமான நிலையத்தையும் சூரிய சக்தி மின்சாரத்தால் வெற்றிகரமாக இயங்கவைத்து அசத்தி உள்ளனர். இப்படி முழு நிலையமும் சூரிய சக்தியால் இயங்குவதில் இந்தியாவின் முதல் நிலையம் புதுச்சேரிதானாம்! மாதத்திற்கே 10,00,000/- ரூபாய் மிச்சமாம். இதைவிட முக்கியமான நம்மை ஈர்த்து மகிழ்விக்கும் சங்கதி – இந்த அளவுள்ள ஒரு விமானநிலையம் இயங்க என்எல்சியிலிருந்து… (READ MORE)
துப்புரவாளர்கள் மாறுகிறார்கள் சென்னையில்
எனது பகுதியின் குப்பைத் தொட்டிகள் மாறியுள்ளன. வேறு சீருடையணிந்த சில புதியவர்கள் வந்து ஒரே நாளில் பலமுறை துப்புரவு செய்கிறார்கள். ‘உர்பசர் சமீட்’ நிறுவனம் சென்னைப் பெருநகரில் எடுத்துக் கொண்டுள்ள ஏழு பகுதிகளில் ஒன்றான அடையாறு மண்டலப் பகுதியில் வருகிறது ஆர்ஏபுரம். தொடர்ந்து நல்லது நடைபெறட்டும். மற்ற பகுதிகளுக்கும் இது பரவட்டும். 😃
துப்புரவாளர்கள் மாறுகிறார்கள் சென்னையில்
எனது பகுதியின் குப்பைத் தொட்டிகள் மாறியுள்ளன. வேறு சீருடையணிந்த சில புதியவர்கள் வந்து ஒரே நாளில் பலமுறை துப்புரவு செய்கிறார்கள். ‘உர்பசர் சமீட்’ நிறுவனம் சென்னைப் பெருநகரில் எடுத்துக் கொண்டுள்ள ஏழு பகுதிகளில் ஒன்றான அடையாறு மண்டலப் பகுதியில் வருகிறது ஆர்ஏபுரம். தொடர்ந்து நல்லது நடைபெறட்டும். மற்ற பகுதிகளுக்கும் இது பரவட்டும். 😃
கட்சிகளைக் கடந்தல்லவா காணப்பட வேண்டியவர் காந்தியார்
ஊரே போற்றி மதிக்கும் சில அப்பாக்களை அவர்களது சொந்தப் பிள்ளைகளே அறியாமலிருப்பது போல காந்தியை அடுத்தத் தலைமுறைக்குக் கடத்தாமல் விட்டுவிட்டோம். அவர்களுக்கு அத்தனை கோடிகளை அள்ளித்தந்து விட்டார் என்பது போன்றவற்றை மட்டுமே எடுத்தியம்பி இளந்தலைமுறைக்கு முன்னே சில திரைகளை எழுப்பி காந்தியின் முக்கிய மற்ற பண்புகளை பார்க்கவிடாமலே செய்து விட்டோம். டால்ஸ்டாய் பண்ணை உருவான விதமும்,… (READ MORE)
