Author Archive: paramanp

சென்னை - Copy

வாழ்க சென்னை!

    நாயக்கர்கள் காலத்துக்கு முன்பேயே நீ இருந்தபோதிலும், நாவாய்கள் வழியே வந்தவனுக்கு விற்றதிலிருந்தே கணக்கில் வந்தாய்.   மராட்டியர்கள் கொண்டாடும் வீரசிவாஜி உன் மண்ணின் காளிகாம்பாளை வழிபட்டே பெறுவானாம் வெற்றி   வான்புகழ் வள்ளுவனை வளர்த்துத் தந்த மயிலாப்புரி, ஊன் வென்று ஒளியான வள்ளல்பெருமான் வாசம் செய்த ஏழு கிணறு, பெருமாளின் பெயர் சொன்னாலுருகும்… (READ MORE)

கவிதை, பொரி கடலை

, , , , , , , , , , , , , , , ,

பாயும் மீன்கள்…

இப்படி ஒரு நதியில் படகில் பயணித்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்? எத்தனைப் பெரிய மீன்கள், எப்படித் துள்ளிப் பாய்கின்றன அவை? பாருங்கள் – பரமன் பச்சைமுத்து

Uncategorized

உடலை இலகுவாக்கும் சில ஆசனங்களும் மூச்சுப் பயிற்சியும் முடித்து அதிகாலையில் கண் மூடி கிடப்பது ஒரு அனுபவம். அந்நேரங்களில் உச்சந்தலையில் ஏற்படும் விளக்கவொண்ணா இணைப்பும் பரவும் உயிராற்றலும் ஓர் அனுபவம். 21.08.2017

Uncategorized

wp-image-1446808128.jpg

‘Jeyippathu Nijam’ @Kanchi

காஞ்சியில் நடைபெறும் ஒரு பயிலரங்கில் சென்னையிலிருந்தும் செங்கல்பட்டிலிருந்தும் வந்து கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியும். திருநெல்வேலியிலிருந்தும் தூத்துக்குடி ஏரலிலிருந்தும் வருவார்கள் என்றா எதிர்பார்க்க முடியும்! பண்ருட்டியிலிருந்தும் ஜெயங்கொண்டத்திலிருந்தும் தூத்துக்குடி ஏரலிலிருந்தும், மத்தியப்பிரதேச இந்தூரிலிருந்தும் வந்திருந்தார்கள். ‘சார்! பர்மிஷன் குடுக்கல சார் ஸ்க்கூல்ல. லீவ் போட்டுட்டு பையன கூட்டுட்டு வந்திட்டன் சார். இந்த நிகழ்ச்சிக்காவே மதுரைலேருந்து பையன… (READ MORE)

Paraman's Program

, , , , , , , ,

‘ஜெயிப்பது நிஜம்…’ – காஞ்சி மாநகரில்

‘செய் தொழிலில் நேர்த்தி’ பற்றிய ஒரு நாள் மலர்ச்சி வகுப்பு நாளை காஞ்சி மாநகரத்தில், ‘ஜெயிப்பது நிஜம்’ என்ற பெயரில். மலர்ச்சி மாணவர்களுக்கு இது வேண்டியிருக்காது என்று எவ்வளவு முறை கூறிய போதும், ‘எதாவது ஒரு பாயிண்ட் சர்ருன்று உள்ள எறங்கும், புது உத்வேகம் வரும் நாங்க வர்றோம்பா, பரவாயில்ல!’ ‘ தெரிஞ்சவங்கள கூட்டிட்டு வரோம்,… (READ MORE)

Uncategorized

Daily Thanthi Agamum Puramum Review

தினத்தந்தி புத்தக மதிப்புரை – ‘அகமும் புறமும்’

சென்னை கடற்கரை சாலையின் மத்தியில் நிற்கும் கம்பீரமான சிவாஜிகணேசனின் சிலையைப் பார்த்து ஒரு வெளிநாட்டுப் பெண்மணி ‘ஹூ ஈஸ் தட் மேன்?’ என்று எழுப்பும் கேள்வியோடு தொடங்கும் எனது முந்தைய நூலான ‘அகமும் புறமும்’ குறித்த புத்தக மதிப்புரையை இன்று ‘தினத்தந்தி’ வெளியிட்டிருக்கும் வேளையில், அந்த சிவாஜி கணேசன் சிலை கடற்கரையில் இல்லை இப்போது. ‘பல்வேறு… (READ MORE)

Media Published, Self Help

, , , , , , ,

Agamumpuramum

அமெரிக்க நண்பர் ‘அகமும் புறமும்’ நூல் பற்றி

அதிகாலை வேளையிலேயே அமெரிக்க தேசத்தின் ஆஸ்டின் நகரிலிருந்து ஒரு பதிவு ‘அகமும் புறமும்’ நூல் அருமையென்று. நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் கட்டாயம் படிக்கவும் என்று பரிந்துரைக்கிறேன் என்று. படித்து பரவசப்பட்ட மென்பொருள் பொறிஞர் நண்பர் கட்செவியஞ்சலின் குழுமத்தில் பரிந்துரைத்து பதிவிட்டிருந்தார். அமேசான் கிண்டில் தொழில் நுட்பத்திற்கு நன்றி! வாழ்க! வளர்க! பரமன் பச்சைமுத்து 17.08.2017

Self Help

, , , , ,

அலாதித் தருணங்கள்

கை விரல்கள் கனத்து மெதுவே கண் விழிக்கும் வேளையில் நமது உடலே வெறும் உடலாகத் தெரிந்து கலைந்து போகும் அந்த சில விநாடிகள் அலாதியானவை! #தியானம் – பரமன் பச்சைமுத்து 17.08.2017 Www.ParamanIn.com

Self Help, பொரி கடலை

, , , , , ,

wp-image-14074033.jpg

பண்டோரா’ கிரகத்து ‘மதர் ஈவா ட்ரீ’…

ஆழ்நிலையில் அமிழத் தொடங்கும் முன்னே கண்ணுக்குத் தெரியா சிறு சிறு வயர்கள் வழியே உடலோடு ஏற்படும் இயற்கை இணைப்பை உணர்ந்திராமல் ‘பண்டோரா’ கிரகத்து ‘மதர் ஈவா ட்ரீ’ பற்றிய அந்தக்காட்சிகளை எழுதியிருக்கவோ படமாக்கியிருக்கவோ முடியாது ஜேம்ஸ் கேமரூனால்! #அவதார் Facebook.com/ParamanPage

Self Help, பொரி கடலை

, , , , ,

அதிகாலை வானம்

ஆகச் சிறந்த ஓவியனின் தூரிகையை விடச் சிறந்திருக்கும் அதிகாலை வானத்தைக் காணாதவர்கள் அதிகம் இழக்கிறார்கள். – பரமன் பச்சைமுத்து, 16.08.2017

பொரி கடலை

,

images.jpg

ஓடி ஓடி ஒரு தலைமுறைக்கேஉத்வேகம் தந்தவனே…

மனித ஆற்றலின் மகத்துவத்தை மாந்தர்க்குக் காட்டிய மின்னல் வீரனே ஓடி ஓடி ஒரு தலைமுறைக்கே உத்வேகம் தந்தவனே. ஒவ்வொரு முறை உன் இயங்குதலைப் பார்க்கும் போதும், உன்னைப் பற்றிப் படிக்கும் போதும் உள்ளே உயிர்த்தெழுந்தேன் நான். இறுதி விளையாட்டில் நீ இடறி விழுந்த போது இதயம் நின்றுபோய் எழுந்து நின்றோம் நாங்கள் உன்னத வீரனே, போய்… (READ MORE)

Self Help, கவிதை

, , , ,

karkai-nandrey-original-imaewgye3scbkrf2

‘Karkai Nandrey’ Book authored by PARAMAN PACHAIMUTHU available in Amazon.in, Flipkart.com now…

‘Karkai Nandrey’ authored by Paraman Pachaimuthu Published by Emerald Publishers is avaiable in amazon and Flipkart : Flipkart: https://www.flipkart.com/karkai-nandrey/p/itmewk6fhnnj997z?pid=9788193454336 Amazon http://www.amazon.in/dp/8193454332 Emerald Publishers: http://emeraldpublishers.com/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%87/   Flipkart https://www.flipkart.com/karkai-nandrey/p/itmewk6fhnnj997z?pid=9788193454336 Amazon http://www.amazon.in/dp/8193454332 Website http://emeraldpublishers.com/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%87/

Karkai Nandrey - Book, Media Published

, , , , , , , , ,

Karkai Nandrey - Copy

“கற்கை நன்றே” – : எனது ஆறாவது நூல் : ‘வாழ்வின் மாணவனாகிய நான்… ‘

      வாழ்வின் மாணவனாகிய நான்… ‘…. ….. …இன்று திரும்பிப் பார்க்கையில் ஒன்று புரிகிறது. வாழ்க்கையில் எல்லாமே யாரிடமோ கற்றவையே. நாம் பயணிக்கும் பாதையில் மனிதர்கள், மரங்கள், நிகழ்வுகள் என எதையாவது அனுப்பிக் கற்பித்துக் கொண்டேயிருக்கிறது வாழ்க்கை. கற்றல் இல்லாதபோது தேக்கம் வருகிறது. கற்றல் தொடரும் போது வளர்ச்சி வருகிறது. வாழ்வு உயர்கிறது……. (READ MORE)

Karkai Nandrey - Book, Media Published

, , , ,

bigboss

‘நூறு கண்கள்’ கொண்டு எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார் ‘பிக்பாஸ்’

இத்தனை நாள்கள் இருந்து ஆக வேண்டும் என்ற குறிப்போடுதான் அனுப்பி வைக்கப்படுகிறோம். நம்மைச் சுற்றி இருக்கும் எல்லா மனிதர்களையும் நாம் தேர்ந்தெடுக்க முடிவதில்லை. நாம் விரும்பும் வண்ணமே அவர்கள் அமைவதில்லை. தவறை ஏற்றுக் கொள்ளாத ஆரவ்களையும் சக்திகளையும், தவறென்றாலே ‘தவறுதான் சார்… தவறுதான் சார்!’ என்று எல்லாத்தையும் ஏற்றுக்கொண்டு ஒரு முறை கூட உள்ளே உணராமல்… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , , ,

ஆறுமுகம் 1 (3) - Copy

“சார், பணத்தை வச்சிட்டு இருந்தா வீணாக்கிடுவோம் சார்!”

ஞாயிறு முன்னிரவின் மகிழ்திருக்கும் பொழுதுகளில் ‘நாளை திங்கட்கிழமை வேலைக்குப் போகவேண்டும்!’ என்று வரும் சிறு எண்ணமே பல பேருக்கு மன அழுத்தத்தை உருவாக்கப் போதுமானது என்று சொல்கிறது சமீபத்தில் வந்திருக்கும் ஓர் ஆய்வறிக்கை. ஒரு வேலைக்குப் போவதற்கே இப்படியொரு அழுத்தம் வரும் உலகில்., மூன்று வேலையை மகிழ்ச்சியாய் செய்து வளைய வரும் ஒரு மனிதரைப் பார்த்திருக்கிறீர்களா?… (READ MORE)

Self Help

, , , , , , ,

dunkirk1 - Copy

‘டங்கிர்க்’ – திரை விமர்சனம்: பரமன் பச்சைமுத்து

      அண்டப் பெருவெளியின் அடையமுடியா கருந்துளைக்குள் மாட்டிக்கொண்டு புகுந்து வெளியேறும் அதிபுத்திசாலி நாயக நாயகியர்களைப் பற்றியும், உறங்கச் செய்து கனவுக்குள் மூழ்கி அதன் வழியே அடுத்தவனின் கனவுக்குள் புகுந்து உள்ளே ஆழ்மனதை சரி செய்துவிட்டு தனது கனவுக்குத் திரும்பி வட்டத்தை முடித்து மெதுவாக உறக்கத்திலிருந்து வெளியேறி விழித்து உட்காரும் புத்திசாலி நாயக நாயகி… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , ,

விக்ரம் வேதா - Copy

‘விக்ரம் வேதா’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

ஒவ்வொரு முறை விக்ரமாதித்தன் எதிர்கொள்ளும் போதும் அவனது முதுகின் பக்கமாக வந்து அவனது கழுத்தை நெருக்கி ‘இதற்கான சரியான விடையை சொல், இல்லாவிடில் உன் தலை சுக்கு நூறாக வெடித்து விடும்’ என்று ஒரு கதையைச் சொல்லி பிறகு மறுபடியும் முருங்கை மரத்தில் வேதாளம் ஏறிக்கொள்ளும் என்று காலங்காலமாய் நாம் கேட்ட விக்ரம்(மாதித்யன்) – வேதா(ளம்)… (READ MORE)

Manakkudi Talkies

, , , ,

இதெல்லாம் நடந்தால் நன்றாக இருக்கும்!

சில விஷயங்கள் நம்ப முடியாதவையாகத் தோன்றும், ஆச்சரியப் படுத்தும், ‘நடந்தால் எவ்வளவு நல்லாருக்கும்!’ என்று ஆசைப்பட வைக்கும். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் சமீபத்திய அறிவிப்புகள் சில நாட்களாகவே இவற்றை ஏற்படுத்துகின்றன என்னுள். பொது அறிவு மொழியறிவு வளர்க்க பள்ளிகளுக்கு நாளிதழ்களும் சிறுவர் இதழ்களும், மாவட்டத்திற்கு ஆறு ஆசிரியர்களுக்கு ‘கனவு ஆசிரியர்’ அங்கீகாரம், தனித் திறன்… (READ MORE)

Uncategorized

‘இது எத்தன தடவ கேட்ட பாட்டு!’ என்ற எண்ணத்திலேயே

‘இது எத்தன தடவ கேட்ட பாட்டு!’ என்ற எண்ணத்திலேயே எத்தனையோ நல்ல பாடல்களைத் தாண்டிப் போய் விடுகிறோம், பல இசைக் கலவைகளை தவற விட்டுவிடுகிறோம். Facebook.com/ParamanPage

Uncategorized

ருக்மணியக்கா இன்று உறக்கத்தில் சிரிக்கக் கூடும்

    ருக்மணியக்கா இன்று உறக்கத்தில் சிரிக்கக் கூடும் அல்லது சிரித்துக்கொண்டே உறங்கக்கூடும் மகிழ்ச்சியில். ருக்மணியக்கா மட்டுமல்ல, பரமசிவன் அண்ணா, அதிசயமும் மகிழ்ச்சியும் வெட்கமும் கலந்த கலவையான பாவனைகளை முகத்தில் கொண்டிருந்த மற்றப் பெண்களும், ஆண்களும் என தீபக் சில்க் வீவர்சின் எல்லா ஊழியர்களும்.   மலர்ச்சி M2 மாணவர் கோபி – பிரவீனாவின் புதிய… (READ MORE)

பொரி கடலை

, , , , ,

‘கவலையா, அதெதுக்கு?’

வீட்டில் இப்படி இருக்கிறது நாட்டில் இப்படி நடக்கிறது உலகம் இப்படிப் போகிறது என்று ஒவ்வொரு மனிதனுக்கும் ஓராயிரம் கவலைகள் ஊறிப் பெருகும் இந்தக் காலவெளியில், பெரிய மனிதர்களும் ‘வல்லான்’களுமே கவலைகளில் கனத்துப் போகும் நிலையில், கவலைகளை அப்படிச் சட்டெனக் கடந்து போகும் ஒரு சாமானிய மனிதரைக் கண்டால் பிரமிப்பாக இருக்கும்தானே! இவரிடம் கற்றுக்கொள்ள சங்கதி இருக்கிறது… (READ MORE)

Media Published, Self Help

, , , , , , ,

‘சிவகாமியின் சபதம்’ : நாடகம்

ஏழாம் நூற்றாண்டுக்கே போய் இருந்துவிட்டு வந்த திகைப்பு வந்தது எனக்கு நேற்று மாலை. ‘ராஜராஜசோழன்’ எடுத்து முடித்த வெற்றிக்களிப்பில் சிவாஜியை வைத்து உமாபதி எடுக்க விரும்பியதும், தானே தனது சொந்தத் தயாரிப்பில் எடுக்கிறேன் என்று எம்ஜியார் விரும்பி அறிவித்து எடுக்கமுடியாமல் போனதுமான, அமரர் கல்கியின் மூன்று முத்தாய்ப்பான படைப்புகளில் ஒன்றான ‘சிவகாமியின் சபதம்’ புதினத்தை மூன்று… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , , , , , , ,

CIA - Copy

‘சிஐஏ – காம்ரேட் இன் அமெரிக்கா’ – மலையாளம் – திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து:

“…அயலூர் சினிமா…” கம்யூனிசத்தில் ஊறிய அஜி மேத்யூ என்ற ஒரு காம்ரேட் இளைஞன் இரவில் கவலையோடு தனது அலுவலகத்திற்கு திரும்புகிறான். படிகளில் மேலே ஏறும்போது கம்யூனிசத் தலைவர் ஸ்டாலின் எதிரில் அவனைக் கடந்து போகிறார். கதவைத் திறந்து உள்ளே போனால்… புத்தகத்தைப் பிரித்துப் படித்துக் கொண்டு கார்ல் மார்க்ஸ், அவருக்கு எதிரே லெனின், சன்னலுக்கு அருகில்… (READ MORE)

Manakkudi Talkies

a rk 1 - Copy

ஏ ஆர் கிருஷ்ணன் என்ற மனிதனை இயற்கை அழைத்துக் கொண்டது.

  எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாததுபோல் தோன்றுமே, எல்லோரும் இருக்கும்போதும் யாருமே இல்லாதது போல் உணர்வோமே, அப்போது உடனே அழைத்து பேசுவதற்கு, மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் போது உள்ளம் பூரித்து நிற்கும் அவ்வேளையில் உள்ளே ஒரு தனிமை உருவாகுமே, அப்போது உடனே அழைத்து பேசுவதற்கு, ஒரு பெரும் வெற்றி வரும்போது அதை பகிர்ந்து கொண்டாடுவதற்கு, …… (READ MORE)

பொரி கடலை

DinaThanthi Review - Udal Valartheney - Copy

எனது நூலை மதிப்புரை செய்து வெளியிட்டிருக்கிறது இன்றைய தினத்தந்தி நாளிதழ்.

    எனது நூலை மதிப்புரை செய்து வெளியிட்டிருக்கிறது இன்றைய தினத்தந்தி நாளிதழ். ‘சிறந்த மருத்தவ நூல்’ என்று குறிப்பிட்டிருக்கிறது.   பெரும் மகிழ்ச்சி!   –        பரமன் பச்சைமுத்து –          03.05.2017

Media Published

, , ,

Baahubali-2-New-Poster-Maha-Shivaratri - Copy

‘பாகுபலி – 2 ‘ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

      தொடர் படங்கள் எடுக்கும் போது முந்தைய பாகம் கிளப்பிய எதிர்பார்ப்பை ஈடு செய்யும்  கயிற்றின் மேல் நடக்கும் வித்தையையை கவனமாக செய்ய வேண்டிய சுமை ஒரு இயக்குனருக்கு உண்டு. கயிற்றில் நடந்து கடந்து வருவதே சுமை என்னும் பட்சத்தில், பெரிய யானையையும் அலேக்காகத் தூக்கிக் கொண்டு அனாயாசமாக கடந்து வந்து பேருருவம்… (READ MORE)

Manakkudi Talkies

,

PowerPaandi.png - Copy

‘ப. பாண்டி’ – திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து

குடும்பம் குழந்தைகுட்டி வேலை வாழ்க்கை என்றே பம்பரமாகச் சுழன்று இயங்கிப் பழகிய தகப்பன், தன் பிள்ளைகளின் காலத்தில் தாத்தாவாக ஆகும்போது முதிர் பருவத்தில் எதிர்கொள்ளும் உளவியல் சிக்கல்களை, பொருந்திப் போகும் நடிகர்களை வைத்து அறிமுக இயக்குனர் தனுஷ் அழகாகச் சொல்லியிருக்கும் படம். எல்லாமுமாகவும் மையப்புள்ளியாய் இருந்தவன் எதுவாகவும் வேண்டாம் என்று வாழ்க்கை ஓட்டத்தில் ஒதுக்கப்படும் போது… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , , , , , ,

IMG-20170423-WA0143.jpg

அந்தப் புத்தகங்கள்…

ஏன் அதைத் தந்தார் என்னிடம் அந்த சித்தப்பா என்று தெரியவில்லை. தனக்குப் பிடித்த பகிரக்கூடிய ஒன்றை தனக்குப் பிடித்தவருக்கும் தருவோமே அப்படியிருக்கலாம். ஆனாலும் அது என் அப்போதைய வயதிற்கு மீறிய உள்ளடக்கம் கொண்டிருந்தது. மேல்நிலை வகுப்பில் படித்துக் கொண்டிருந்த ராஜவேலு சித்தப்பா ஏழாம் வகுப்பிற்குள்  நுழையும் என்னிடம் அதைத் தந்தார். முத்தையன் சித்தப்பா வாராவாரம் வாங்கிவரும்… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , , ,

8-Thottakkal-Movie-Release-April-7-Poster - Copy

‘8 தோட்டாக்கள்’ – திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து

சென்னை நகரின் காவல் நிலையம் ஒன்றின் துப்பாக்கி, காவலர் ஒருவரின் பொறுப்பிலிருக்கும் போது களவாடப்படுகிறது. அந்தத் துப்பாக்கியில் பொருத்தப்பட்டிருக்கும் 8 தோட்டாக்களின் சுவராசியமான பயணமே ‘8 தோட்டாக்கள்’ ஒரு சாமானிய மனிதன் வாழ்க்கை முழுக்க தனக்கு நடக்கும் அநீதிகளைக் கண்டு பொறுக்கமுடியாமல் ஒரே ஒரு முறை தவறு செய்து அப்புறம் வாழ்ந்தது விடலாம் என்று முடிவெடுத்தால்… (READ MORE)

Manakkudi Talkies

, , ,

kaatru-veliyidai

‘காற்று வெளியிடை’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

நண்பர்களோடு கதைத்தல் அன்னை தந்தையரோடு அளவளாவுதல் வானவெளியில் பறத்தல் மருத்துவமனையில் சிகிச்சை மறுத்தல் என வாழ்வின் எல்லா இடங்களிலும் தனது இன்பம் தனது துன்பம் என்று தனது உணர்ச்சிகளை மட்டுமே முக்கியமாய் கொண்டு அடுத்தவரின் வலிகள் உணர்வுகள் பற்றி சட்டையே செய்யாத, பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஒரு மூர்க்கனுக்கும், அடுத்த… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , ,

nathi

‘நதி போல ஓடிக் கொண்டிரு…’ : பகுதி – 9

9. “ஏற்றிருக்கும் பொறுப்பின் மீது காட்டப்படும் விருப்பு வெறுப்புகளை தனக்கென்று தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்பவன் தன்னிலை இழந்து காயம்படுவான்”. எவ்வளவு பெரிய பிரச்சினைகளையும் எதிர்கொண்டு மிக எளிதாக சரிசெய்து விடுகிறார்கள் சில மனிதர்கள். ஒன்றுமில்லாத சிறிய விஷயங்களைக் கூட பெரிய பிரச்சினைகளாக்கி களேபரம் செய்து விடுகிறார்கள் சில மனிதர்கள். உலகம் என்பது நான்கு விதமான மனிதர்களையும்… (READ MORE)

Media Published

​ஒன்றரை நாளுக்கு ஓர் ஊர் என்று சுற்றுபவனை

ஒன்றரை நாளுக்கு ஓர் ஊர் என்று சுற்றுபவனை ஒரே இடத்தில் அடைத்துப் போட்டுவிட்டது இந்த விஷக் காய்ச்சல்!  இதற்கு மேல கசப்பா ஒண்ணு இருக்க முடியுமா என்றிருக்கும் நிலவேம்புக்குடிநீரை உலகிலேயே இத்தனை முறை குடித்தவன் நானாகத்தான் இருப்பேன்.  ஒரு நாளைக்கு மூன்றுமுறை என்ற கணக்கில் நிலவேம்பும், ஆடாதொடை மணப்பாகும் பருகித் தள்ளுகிறேன். நான்கு நாட்களாக படுக்கையில்… (READ MORE)

Uncategorized

Mohammaed koya

‘உங்களுக்கு ஒரு ஆறு லட்சம் ரூபாய் வந்தால் என்ன செய்வீர்கள்?’

பத்தாயிரம் சம்பாதித்தபோது ‘ஒரு பதினஞ்சாயிரம் வந்தா கொஞ்சம் சேக்கலாம். எதாவது செய்யலாம்!’ என்று நினைத்தோம். பதினைந்தாயிரம் வந்தபோது இரண்டாம் மாதத்திலிருந்து அதுவும் பற்றாமல் போனது. ‘ஒரு முப்பதாயிரம் வந்தால் எதாவது செய்யலாம்’ என்று சொல்லிக்கொண்டோம். ஆண்டுகள் ஓடின, ஊதியங்கள் ஏறின, வாழ்வின் தேவைகள் மாறின, நாம் சொன்ன அந்த ‘இன்னும் கொஞ்சம் கூட இருந்தா நல்லா… (READ MORE)

Media Published, Self Help

, , ,

aazhiyaaru

ஆழியாறு வேதாத்ரி மகரிஷி அவர்களின் ‘மனவளக்கலை’ மன்றத்தின் ஆசிரமம் ‘அறிவுத் திருக்கோவில்’ – ‘மலர்ச்சி உரை’

  சில நிகழ்வுகள் நடந்தேறும் போது எதற்காக அவை நடத்தி வைக்கப்படுகின்றன என்பது என்பது முழுமையாக புரியாவிட்டாலும் அவை மிக முக்கியமானவை என்பது வரையில் மட்டுமாவது புரிகிறது. இன்று நடந்த நிகழ்வுகள் அவ்வண்ணமே. நினைத்தேப் பார்க்காத ஒன்று நடந்தது. இன்று மிக முக்கியமான நாள். ஆழியாறு வேதாத்ரி மகரிஷி அவர்களின் ‘மனவளக்கலை’ மன்றத்தின் ஆசிரமம் ‘அறிவுத்… (READ MORE)

Uncategorized

இந்த நீதிபதிகள் மதிக்கத் தக்கவர்கள்.

இந்த நீதிபதிகள் மதிக்கத் தக்கவர்கள். அடையாறு ஆற்றையும் கூவம் ஆற்றையும் காப்பாற்றச் சொல்லி அரசுக்கு நீதிமன்ற பரிந்துரை தந்திருக்கிறார்கள். சென்னை நகரின் இந்நதிகளை தூர்வாரி தூய்மைப்படுத்த வழி சொல்லியிருக்கிறார்கள். நகருக்கே வெளியே கழிவுகளை சுத்திகரிக்கும் நிலையம் வைத்து ஒரே நேரத்தில் நகருக்கும் நன்மை ஊருக்கு வெளியே விவசாயத்திற்கும் நன்மை என்றோர் வழியை சொல்லியிருக்கிறார்கள். பழைய படி… (READ MORE)

Uncategorized

Maanagaram-2016

‘மாநகரம்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

பிழைப்புக்காக பலர் வந்துகொண்டேயிருக்கும் பெருநகரில் பிழைப்புக்காக எதையும் செய்யும் சில மனிதர்களின் பிழையால், பிழையில்லாமல் போய்க்கொண்டிருக்கும் சிலரது பிழைப்பில் மண் விழுகிறது. எதிரேபார்த்திராத அந்த அனுபவங்களை அந்த சாமான்ய மனிதர்கள் எப்படி எதிர் கொள்ளுகிறார்கள் என்பதை பக்கத்திலிருந்து பார்ப்பது போல படமாக்கித் தந்திருக்கிறார்கள்.   ‘ஊருக்கே போயிடறேன்’ என்பவனையும் ‘ஊரைவிட்டுப் போக விருப்பமில்லை’ என்பவனையும் இரண்டு நேர்கோடுகளில்… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , , ,

சிட்டுக்குருவி1

சிட்டுக்குருவிகளை கொன்றவன்!

அதிகம் சம்பாதிக்கவேண்டுமென்ற அலட்டல்கள் அதிகமில்லா அக்காலமதில் சித்திரை உச்சத்திலும் … உக்கிர வெய்யில் உள்ளிறங்கமுடியா செக்கச்செவேர் ஓடுகள் வேய்ந்த வீட்டில் அறுத்த நெற்கதிர்களை அழகாகக் கட்டி உத்தரத்தில் உயரே தொங்க விட்டாள் பாட்டி அடுத்த அதிகாலை அதிசயமொன்று நடந்தது அகமே ‘கீச் கீச்’சால் நிறைந்தது அரண்டெழுந்ததில் என்னாழ் உறக்கம் கலைந்தது எங்கிருந்தோ வந்து சேர்ந்தன சின்னஞ்சிறிய… (READ MORE)

பொரி கடலை

, , , ,

nathipol 8

‘நதி போல ஓடிக் கொண்டிரு…’ – Part 8

8. ‘துணிச்சல் என்பது பயத்தை துறப்பது அல்ல, அது பயத்தைத் தாண்டிய பார்வை’   மிக உயரத்திலிருக்கும்போது கீழே குனிந்து பார்க்காதவரை உயரம் பற்றிய பிரக்ஞை எதுவுமேயில்லாமல் செய்வதை தொடரமுடியும்.  கீழே ஒரு முறை பார்த்துவிட்டால் ‘எவ்வளவு உயரம்!’ என்பதான ஒரு எண்ணம் வந்துவிடும். டோக்யோவின் ஷினகாவா பகுதியில் இருக்கும் பெரும்புகழ்பெற்ற ‘ஹோட்டல் ஷினகாவா பிரின்ஸ்’சின்… (READ MORE)

Self Help

, , , ,

mani 1

வேறுவழியின்றி முன்னேறியே செல்ல வேண்டும்!

‘நீங்கள் பார்க்கும் இந்த வேலையில் இருக்கும் கஷ்டங்கள் என்ன?’  – இந்த கேள்வியை உங்கள் முன் வைத்தால் என்ன பதில் சொல்வீர்கள் நீங்கள்? இந்தக் கேள்வியை முன்னால் வைத்தால் பொதுவான உலகம் சொல்லும் பதில் என்னவாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியும்.  ‘அய்யய்யய்யோ…அத ஏன் கேக்கறீங்க? மனுஷன் செத்து சுன்னாம்பா ஆவறேன் இங்கே!’ என்று ஆரம்பித்து… (READ MORE)

Self Help

, , , , ,

வாழ்க்கை ஒரு பெரும் நீதிபதி

வாழ்க்கை ஒரு பெரும் நீதிபதி. யார் மூலமாகவோ எதன் மூலமாகவோ நல்லதுக்கும் கெட்டதுக்கும் தீர்ப்பு வழங்கிக் கொண்டேயிருக்கிறது. ஒவ்வொரு வினைக்கும் அதற்குரிய தீர்ப்புகளை காலம் கடந்தும் கூட தந்து கொண்டேதான் இருக்கிறது. வலி மிகும் தீர்ப்புகள் வரும் போது தனது தவறால்தான் வந்தது இது என்று உணராமல் சுட்டிக்காட்டுவோர் மீது கோபம் கொள்வோர் அடுத்த பெரிய… (READ MORE)

Uncategorized

surya-singam3-photos-600x591

‘ சி 3’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

நல்லூர் மளிகைக் கடையிலிருந்து சென்னை நகரத்திற்கு, அப்புறம் கடல் தாண்டி ஆப்பிரிக்க தேசத்திற்கு என்று தொடர்ந்து இப்போது ஆந்திராவிலிருந்து ஆஸ்த்ரேலியாவிற்கு என்று ஒரு திரைப்படம் மூன்று தொடர் பாகங்களாக வெளிவருவது தமிழுக்குப் புதிது.   ஹரி படம் என்றாலே வில்லன்கள் கேமராவை பார்த்துக் கத்துவார்கள், பரபரவென்று ஷாட்கள் நகரும், நாயகன் ஒரு குத்து குத்தினால் ஆட்கள்… (READ MORE)

Manakkudi Talkies

, , , , ,

screenshot_20170206-124034.jpg

நதி போல ஓடிக்கொண்டிரு – 7

7.  ‘உடனிருக்கும் ஒவ்வொருவரும் முக்கியமானவரே!’ ‘ஈசனருள் இருந்தால் இடி விழுந்தவனும் எழுந்து போவான்,  ஈசனருள் இல்லையென்றால் இடறி விழுந்தவனும் இறந்து போவான்!’ என்று தனது ‘பாண்டவர் பூமி’ நூலில் எழுதியிருப்பார் கவிஞர் வாலி.   யாரோ எங்கிருந்தோ திடீரென வந்து நம்மை நாம் எதிர்கொள்ளவிருந்த ஆபத்திலிருந்து கைபிடித்து அல்லது குரல் கொடுத்து நம்மை நகர்த்தி காத்து… (READ MORE)

Media Published

, , ,

பெரும் ஆளுமை பெரும் நாயக வடிவங்களைக் கொண்ட சாகசங்கள் புரியக்கூடிய கதாபாத்திரங்களால் பிடிக்க முடியாத ஓரிடத்தை சில எளிமையான கதாபாத்திரங்கள் பிடித்து விடுகின்றன நம் மனதில்.  நம் உள் மன ஆசையின் பிரதிபலிப்பாய் அவை அமைந்து விடுவதாலோ, ‘அசாதாரண சூழலில்’ அவை தங்களை வெளிப்படுத்தும் விதத்தாலோ, அவை கொண்டிருக்கும் பெரும்  எளிமையினாலோ… கொஞ்ச நேரமே நம்… (READ MORE)

Uncategorized

horse_dog_swimming - Copy

என்ன கொடுத்தாலும் என்ன செய்தாலும் ஈடு செய்யமுடியவதில்லை…

செல்வி வீட்டு வேலைகள் செய்து குடும்பத்தை நடத்தும் நாற்பத்தியிரண்டு வயது பெண்மணி. தனது கணவனோடு ஈஞ்சம்பாக்கத்தில் குடியிருக்கிறார். ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்த செல்விக்கு மூக்கினுள்ளே குடைச்சல் ஏற்பட்டு அலறி எழுந்து உட்காருகிறார். விடியும் வரை வலி பொறுக்க முடியாதென்று அருகிலுள்ள ஒரு தனியார் மருத்துமனைக்கு ஓடுகிறார்கள். விசாரித்து கேட்டு பரிசோதித்து ‘மூக்கு உள்ள சதை வளர்ந்திருக்கும்,… (READ MORE)

பொரி கடலை

, , , , , , ,

பசு

கோ மாதாவாம்… குல மாதாவாம்…

‘அய்யே… அறிவு இல்ல உனக்கு? ஒழுங்கா தின்னுட்டு ஒழுங்கா வாழ மாட்ட நீ? இப்படி வீணடிச்சு வச்சிருக்க, அறிவு கெட்ட ஜென்மம்! எப்படிதான் வாழப் போறயோ நீ? சிரிப்பா சிரிக்க போவுது உன் கதை.’ இது மனிதர்கள் மனிதர்களிடம் சொல்லும் அறிவுரை என்றுதானே நினைத்தீர்கள்.  இல்லை.  மாட்டிடம் சொல்லப் பட்ட அறிவுரை அது. ‘என்னது, மாட்டிடம்… (READ MORE)

பொரி கடலை

, , , ,

அமெரிக்க மலைப்பாம்பை அச்சுறுத்தும் அசத்தல் இருளர்கள்…

​’ஜீசஸ்… கெட்டிங் வொர்ஸ். வீ ட்ரைட்டு எவ்ரிதிங்…’ ‘ம்ம்ம்… ஹூ கேன் டூ திஸ்?’ ‘இரு…ளர்…கள்…!’ ‘இரூ…லழ்…கல்…!’ ‘தட்ஸ் ரைட்’ ‘ஹூ ஈஸ் தட்?’ ‘தே ஆர் டமில் ட்ரைபள்ஸ் லிவ்விங் இன் இண்டியா!’ :பீப்பிள்? வீ ஹேவ் சிஸ்டம்ஸ், டெக்னாலஜி, சயிண்ட்டிஃபிக் அப்ரோச்…. ஸ்டில் நத்திங் ஈஸ் அச்சீவ்டு!  தே ஆர் ஜஸ்ட் ட்ரைபள்… (READ MORE)

Uncategorized

பெப்ஸியையும கோக்கையும் 

​தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை விக்ரமராஜாவின் வாயில் பனை வெல்லமும், ஆறாயிரம் வணிக அமைப்புகளுக்கு மாலையும் போட ஆசைப்படுகிறேன்.  மார்ச் ஒன்றாம் தேதியிலிருந்து தமிழ்நாட்டில் பெப்ஸியையும் கோக்கையும் விற்பதில்லை என்று பெரும் முடிவெடுத்து எங்களை எழுந்து நின்று கைதட்ட வைத்துவிட்டார்கள். இந்த குளிர்பானங்களால் உடல் பருத்து சீர்கெட்டது ஒரு தலை முறை. இந்த முடிவால் காக்கப்… (READ MORE)

Uncategorized

​பரிமேலழகர்…  

​பரிமேலழகர்…   சிறு வயது பள்ளி நாட்களில் இரண்டு மதிப்பெண் என்ற கணக்கிற்காக படித்து வைத்த வார்த்தை. மணக்குடவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் என்று அந்த வயதில் அறியப்பட்டவர். வள்ளுவப் பெருந்தகை தந்த வாழ்வையே மாற்றும் குறளுக்கு உரை எழுதியவர்களில் ஒருவர்.  தமிழ் மீது ஆர்வம் அதிகரித்த காலங்களில் அதே பெயர் வேறு பல உணர்வுகளை… (READ MORE)

Uncategorized

ompuri-1

கமல்ஹாசன் சொல்வதுபோல அவர் இன்னும் மறையவேயில்லை…

    தொண்ணூறுகளின் இறுதியில் வந்து இரண்டாயிரத்தின் தொடக்கத்தில் நான் பார்க்க நேரிட்டு என்னை மிகவும் கவர்ந்த ஒரு படம் ( நடிகர் சிரஞ்சீவியையும் இது மிகவும் கவர்ந்து விடவே, இந்த நல்ல படத்தின் கதையையும் சில காட்சிகளையும் அப்படியே எடுத்து மசாலா தடவி எண்ணையில் போட்டு வதக்கி பாடல்கள் சண்டைகள் என நிறைய சேர்த்துத்… (READ MORE)

பொரி கடலை

, , , ,

l6.. உள்ளே சமநிலை இழந்த யானை சுற்றியிருப்போரைத் தாக்கும்:

குழந்தைகள் என்றால் இத்தனை முறை, பெரியவர்கள் என்றால் இத்தனை முறை என்று ஒரு நிமிடத்தில் எத்தனை முறை இதயம் துடிக்க வேண்டும்… குறைவாகவும் துடிக்கக் கூடாது மிக அதிகமாகவும் துடிக்கக் கூடாது என்றெல்லாம் கூறப்படும் பரிந்துரைகளுக்கு முற்றிலும் எதிராக இதயம் துடிப்பதே நின்று போனது சிவநெறித்தேவனுக்கு.  அந்தக் காட்சியில் அவனது ரத்தம் உறைந்து போனது.  செடியிலிருந்து… (READ MORE)

Uncategorized

dangal-poster-large-listicle

‘டங்கல்’ : திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

  தன் ஊனில் ஊறிப்போயிருக்கும் பெருங்கலையான மல்யுத்தத்தை தனது வாரிசுக்குத் தந்து அதன் வழியே தனது நாட்டிற்கு ஒரு தங்கப் பதக்கம் வாங்கவேண்டும் என்று ஆசை கொண்ட ஒரு தகப்பனின் வாழ்நாள் போராட்டத்தை உணர்ச்சிப் பீறிட திரைப்படம் செய்து தந்திருக்கிறார்கள்.   ஆரம்பமே அதிரடியாக இருக்கும் ‘ரஜினி’ பட வகை, மிகச் சாதாரணமாக தொடங்கி (திருவல்லிக்கேணி… (READ MORE)

Manakkudi Talkies

, ,

வெள்ளைக்கார கணவன…

​நண்பர்கள் உட்பட மற்றவர்கள் வரமுடியா ஒரு மனிதனின் உள்வட்ட எல்லைக்குள் வரக்கூடிய உரிமை கொண்ட ஓர் உன்னத உறவு ‘மனைவி’. மனையை ஆள்பவள் என்பதால் ‘ மனையாள்’ என்று காரணப்பெயர்க் கொண்ட இவ்வுறவு பார்க்கப்படும் விதம் அந்தந்த சமூகத்தைப் பொறுத்தும் தனிமனித மனநிலையைப் பொறுத்தும் மாறுபடுகிறது.  தனது குடும்பத்திற்காக தனது விருப்பு வெறுப்புகளை அதிகம் துறந்தது… (READ MORE)

Uncategorized

jesus

இயேசு பெருமானின் உள்ளத்து உயரத்தில் அசந்து போகிறேன்!

  வட இந்திய சிறு நகரம் ஒன்றிக்கு புதிதாக சென்ற ஒரு கணவனும் அவனது இளம் மனைவியும் அவ்வூரின் தெருவிலிறங்கி விலாசம் விசாரிக்கிறார்கள். இளம்பெண்ணைக் கண்ட ஒருவன் பின் புறத்திலிருந்து தவறாகத் தொட முயற்சிக்கிறான், அவளது துப்பட்டாவைப் பிடித்திழுக்கிறான். ‘ஏன் இப்படி செய்கிறீர்கள்?’ என்று நியாயம் கேட்ட கணவனை அடிக்க வருகிறான் அவ்வூர் இளைஞனொருவன். அவனைத்… (READ MORE)

Religion, Self Help, பொரி கடலை

, , , , , ,

‘டியர் ஸிந்தகி’ – ‘அன்புள்ள வாழ்க்கையே…’ : திரை விமர்சனம்

ஆண் பெண் உறவுச் சிக்கலை கையாளத்தெரியாமல் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு தனது வேலையிலும் கவனம் செலுத்த முடியாமல் கல்லாக இறுகி நிற்கும் நகரத்து வாழ் இந்தத் தலைமுறை இளம்பெண் ஒருத்தியின் வாழ்வில் மனத்தை மலர்ச்சி பெறச் செய்யும் ஒரு மனிதன் வந்தால் என்னவாகும், எதையுமே வெளிப்படையாய் சொல்லாமல் உள்ளேயே அழுத்தியழுத்திப் பூட்டி வைக்கும்  அவளை எப்படித்… (READ MORE)

Uncategorized

வண்ணதாசனுக்கு வணக்கம்…

​ஒரே குடும்பத்திலிருந்து தந்தையும் மகனுமென இருவர் சாகித்திய விருதுகள் வென்றெடுத்த நிகழ்வு  இந்தியாவிலேயே இதுவரை நடந்திருக்காதென்றே எண்ணுகிறேன். அந்த முத்திரையைப் பதித்து, தந்தை தி.க. சிவசங்கரனுக்கும் தமிழுக்கும் பெருமை சேர்த்த வண்ணதாசன் அவர்களுக்கு வணக்கங்கள்.  “பரமனுக்கு எல்லோரும் பழைய ஆள்தான். பார்த்த இரண்டாவது நிமிஷமே புதிய ஆளை அவன் பழைய ஆளாக்கி விடுவான். ஆளுக்குத் தக்க… (READ MORE)

Uncategorized

அறுபதாங்கோழி…!

​என்ன ஏது என்று உணர்வதற்குள் சில அரிய விஷயங்கள் நடந்தேறி முடிந்து விடுகின்றன. முக்கியத்துவம் உணர்ந்த பிறகு திரும்ப அந்தக் கணங்களுக்கு போகவோ, ‘ரீவைண்டு’ பண்ணியோ வாழ முடிவதில்லை. பறம்பு மலைக் காட்டுச் சரிவில் கொற்றவை கூற்றின் போது  ஈச்சங்கள்ளுக்கு ஏதுவாக இருக்குமென்று கபிலருக்கு தர வேண்டுமென்று அந்நிலத்தையாண்ட தலைவன் வேள்பாரி விரும்பிய காட்டுப் பறவை… (READ MORE)

Uncategorized

அழகான விஷயங்களை…

​மனதைக் கவரும் அழகான விஷயங்கள் சிலவற்றை தூரயிருந்து பார்ப்பதே சிறந்தது. இறங்கித் தொடும் அனுபவம் உயிருக்கே ஆபத்தாய் முடியும். சென்னை நோக்கிப் பயணிக்கும் என் விமானத்திற்கே வெளியே வென் பஞ்சுப் பொதிகளாய் மேகக் கூட்டம்!  😜 #வணக்கம் சென்னை!  Facebook.com/ParamanPage

Uncategorized

அதிர வைக்கும் எளிய  மனிதர்கள்… 

வாழ்க்கை ‘எதனால்?’ என்று அறுதியிட்டுக் கூற முடியாத அவிழ்க்க முடியா பல புதிர் முடிச்சுக்களைக் கொண்டது. எல்லாம் கொண்ட இவர்களுக்கு ஏன் இந்த நிலை? ஒன்றுமே இல்லாத இவர்களுக்கு ஏன் இந்த உச்சம்? போன்ற கேள்விகளுக்கு ‘இதுவாக இருக்கலாம், அதுவாக இருக்கலாம்’ போன்ற யூகங்களைக் கடந்த ‘இதுதான்!’ என்ற நிச்சயமான உண்மையான பதில் காணமுடிவதில்லை என்பதே… (READ MORE)

Uncategorized

நாசகார புயலே வர்தா, நாங்கள் எழுகிறோம் இதோ!

​ மரங்கள் என்றால் இலையும் கிளையும் வான் பக்கம்,  வேரும் தண்டும் பூமிப் பக்கம் என்றல்லவா கொண்டிருக்கும்? வேர்களை வானுக்குக் காட்டி இலைகளை தரையில் பரப்பி கிளைகள் ஒடிந்து சரிந்து வீழ்ந்து கிடக்கின்றனவே எம்மரங்கள்! ஐயோ! என்னவாயிற்று என் நகருக்கு, அனுமன் புகுந்த அசோகவனமாய் குதறப்பட்டு சின்னாபின்னமாகி கிடக்கிறதே என் சென்னை! மேகத்திலிருந்து மழையைத்தானே கேட்டோம்,… (READ MORE)

Uncategorized

காட்டிலிருந்து…

​ஒரு காலத்தில் விலங்குகள் அதிகம் திரிந்த அதிகம் வேட்டையாடப்பட்ட காட்டுப் பகுதியாயிருந்து, வேட்டைக்காரர்கள் மெல்ல மெல்ல குடியேறிய பகுதியாய் மாறி ‘வேட்டைக்காரன்புதூர்’ என்றான பகுதிக்கும் டாப்ஸ்லிப்பிற்கும் இடையில் இருக்கிறேன். நேற்றிரவு காட்டுக்குள் இங்கிருப்போர் துணையோடு வண்டியெடுத்துக் கொண்டு போனதில், கண்களில் அதிகம் மாட்டாத கருஞ்சிறுத்தைகள் இரண்டை பார்க்கும் பெரும் வாய்ப்பு கிட்டியது. மின்னும் கண்களை வைத்து… (READ MORE)

Uncategorized

ஆன்மீக குருக்கள் செய்ய முடியாததை…

வந்தோர் அனைவரும் வரிசையாய் அமர்ந்து கண்மூடி மௌனமாய், ஒரு வித தியான நிலையில்… அட… ஆன்மீக குருக்கள் செய்ய முடியாததை கண் மருத்துவர்கள் செய்து விடுகிறார்கள், இரண்டு சொட்டு மருந்து போட்டு! #கண்மருத்துவமனை  :பரமன் பச்சைமுத்து சென்னை 07.12.2016 Www.ParamanIn.com

பொரி கடலை

,

jaya

மக்களின் ‘அம்மா’விற்கு மலரஞ்சலி…

நானும் இருக்கிறேன் என்று வாழ்வது வாழ்க்கையல்ல; இருக்குமிடத்தில் நான் தனியாகத் தெரிவேன் என்று தடம் பதித்து வாழ்வது வாழ்க்கை. அதில் இதில் என்றில்லை எதில் இருந்தாலும் தடம் பதித்து தலை திருப்பிப் பார்க்கச் செய்வேன் என்று வாழ்வது தலை வாழ்க்கை. எப்போது வந்தோம் எப்போது போனோம் என்பதைத் தாண்டி எத்தனை பேர் வாழ்க்கையில் எவ்வளவு மாற்றங்கள்… (READ MORE)

Politics

,

nathi-5

நதி போல ஓடிக்கொண்டிரு… 

‘இறைவன் மிகப் பெரியவன்!’ என்று சொல்வது ஒரு நிலை. அதையே உள்ளூர உணர்வது வேறு நிலை. முன்னது உதடுகளில் உதிப்பது, பின்னது உள்ளத்தினுள்ளே உணர்வது. அந்நிலை வரும்வரையில் அதன் ஆழம் புரிவதில்லை. உணர்ந்ததாக எண்ணுபவர்கள் கூட அந்நிலை வரும்போதே அதன் உண்மை நிலை கண்டு ஆழம் கண்டு கசிந்துருகிப் போகிறார்கள். ‘நான்… நான்… நான்தான்!’ என்றே… (READ MORE)

Media Published, Self Help

man

அனுபவங்களால் ஆனவன் மனிதன்

வாழ்க்கை எல்லா மனிதர்களின் வாழ்விலேயும் எண்ணற்ற பல நிகழ்வுகளை நடத்திக் கொண்டேதான் இருக்கிறது. சில நிகழ்வுகள் கவனிக்கப்படுகின்றன. சில நிகழ்வுகள் வெளிச்சம் பெறாமலேயே போய் விடுகின்றன. அந்த நிகழ்வுகள் மனிதர்களை என்ன செய்கின்றன, அந்த நிகழ்வுகளுக்கு அவர்கள் என்ன செய்தார்கள் என்பனவற்றைக் கொண்டே சிலசமயம் அவர்களது வாழ்வு மாறிவிகிறது. ஒவ்வொரு மனிதனும் சில பல அனுபவங்களால்… (READ MORE)

பொரி கடலை

,

e

எழுத்து என்பது…

எழுத்து என்பது நாம் எழுதி வருவதில்லை. அது எழுதுபவனின் வழியே தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. எழுதுபவனின் உள்மன அடுக்குகளில் படிந்திருக்கும் துகள்களை பூசிக்கொண்டு அது வெளி வருகிறது. இடம், நிலை, சுற்றுச்சூழல், காலம் என எதுவும் உண்மையில் அதைக் கொண்டு வருவதில்லை. மாறாக அதை வெளிப்பட வைக்கும் ஒத்த ஓர் அலைவரிசையில் உள்ளம் இருக்கும் தருணங்களில்… (READ MORE)

பொரி கடலை

பொள்ளாச்சி

மழை வந்தால் பனி இருக்காது என்பது மற்ற ஊர்களுக்கு எப்படியோ, மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளுக்கு அது பொருந்தாது போல. நகரில் இறங்கும்போது ‘நேத்து முச்சூடும் பேஞ்சுதுங்க!’ என்று யாரோ சொன்னதை நம்பமுடியவில்லை. ‘சூரியன் வரட்டும், அப்புறம் போறேன் நான்!’ என்பதுபோல இறங்கி அப்படியே நகரின் மேலேயே நிற்கிறது பனி, ‘இப்போதைக்கு நான் வர்றதா இல்லையே!’… (READ MORE)

பொரி கடலை

paraman-trans-pollachi

இசை ஒரு மாய நதி…

பொள்ளாச்சியில் ‘வளர்ச்சிப் பாதை’ தொடங்குவதற்கு முன்பாக இளையராஜாவின் இசைத் துண்டு ஒன்றில் நாங்கள் கரைந்து கொண்டிருந்தோம். இருக்குமிடத்திலிருந்து எங்கேயோ ஓர் ஆழத்திற்கு எங்களை எடுத்துப் போய்விட்டது அந்த இசை. மூழ்கிக்கிடந்த போது முன்னே வந்து பதிவு செய்திருக்கிறார் படமெடுப்பவர். பதிவின் நோக்கம் படத்தை காட்டுவதல்ல; இசையின் ஆழம் என்னவெல்லாம் செய்கிறது என்பதை சொல்வது. இசை ஒரு… (READ MORE)

பொரி கடலை

wpid-wp-1479018568328.jpg

‘அச்சம் என்பது மடமையடா’ – திரை விமர்சனம் 

தூங்கி நண்பர்களோடு ‘மாவு’ மாதிரி பொழுதைக் கழிக்கும் ஒருவனது வாழ்வில் திடுமென இனிமையான சில விஷயங்களும் கூடவே ‘வலி’மையான சில விஷயங்களும் நடந்தேறுகின்றன. வாழ்க்கை என்பது இந்தப் புள்ளியில் தொடங்கி அந்தப் புள்ளியில் போய் சேரும் நேர்க்கோடாய் எல்லா நேரங்களிலும் இருந்துவிடுவதில்லை. அது எதிர்பாராத நேரங்களில் எதிர்பாராத இன்பத்தையும் அதிர்ச்சியையும் அள்ளித் தெளித்துவிடக் கூடியது. அப்படி… (READ MORE)

Manakkudi Talkies

, , , , ,

nathi

நதி போல ஓடிக் கொண்டிரு… தொடர் 

​‘லுக் அட் திஸ்! ஹீ கேன் குக் வாட் ஹீ வாண்ட்ஸ் அட் ஹிஸ் வொர்க் டெஸ்க்!’ சிவநெறித்தேவனின் மேசையைக் காட்டி ஜப்பானிலிருந்து வந்திருக்கும் பெரும்நிறுவன வாடிக்கையாளப் பெண்மணியிடம் சொன்னார் நிறுவன இயக்குனர். ‘ஆய்… ஆய்…!’ என்று மாடு ஓட்டி வாய் பிளந்து பார்த்தாள் அவள். ‘சிவா! ஜப்பான்காரி அப்படிப் பாக்குறா உன்ன. ப்ராஜெக்ட் வந்தா… (READ MORE)

Media Published

, , , ,

வைரமுத்து – கம்பன் ஆய்வுப் பதிவு

​வைரமுத்து தந்த ஆய்வுத் தமிழில் தோய்ந்து போனோம் இன்று மாலை. ‘தமிழுக்குப் புனை பெயர் கம்பன்’ என்ற தலைப்பில் அவர் பிய்த்து எறிந்ததை துய்த்து மகிழ்ந்தோம்.  நாளை தினமணியில் வெளியாகும்  இக்கட்டுரையை இன்று அவர் குரலிலேயே கேட்கும் மகிழ்வு கிட்டக் காரணமான தினமணி வைத்தியநாதனுக்கு நன்றி. முன்பு பட்டுக்கோட்டை, புதுமைப்பித்தன், பாரதி, இப்போது கம்பன் என்று… (READ MORE)

Uncategorized

ஊமை காக்கை ஒன்று…

​அலுவலக சங்கதிகள் சிலவற்றிற்காக என் வீட்டிற்கு வந்திருந்த கோமு தங்கம் வரவேற்பரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். சமையலறையைத் தாண்டி சன்னலின் கண்ணாடிகளில் ‘டக் டக் டக்’ சத்தம். நாங்கள் தொடர்ந்து பேசினோம். சப்தம் அதிகரித்தது. தொடர்ந்து பேசினோம். ‘கா…கா…கா…’ என்று கரையும் சத்தம் இப்போது. ‘தங்கம் ஒரு நிமிஷம் இருங்க, காக்கா சாப்பாடு கேக்குது, அதுக்கு… (READ MORE)

Uncategorized

நதி போல ஓடிக் கொண்டிரு… 5 

​ஒருவருக்கு நல்லது செய்ய வேண்டுமென்றால் அதற்கு நெருங்கிய நண்பராக இருந்துதான் செய்ய வேண்டியது இல்லை. நெருக்கம் இல்லாமலே கூட செய்ய முடியும். அதுவே நடந்தது ஹரீஷின் வாழ்விலும் அன்று. ஹரீஷ் அந்த மென் பொருள் இணையதள நிறுவனத்தின் இணையதள கட்டமைப்பை கவனித்துக் கொள்ளும் பொறிஞன். வெப் சர்வர்கள், அதை அப்படியே நகலெடுத்து பதிவேற்றி பாதுகாப்பாய் வைத்துக்… (READ MORE)

Uncategorized

நிலமடந்தைக் கெழில் ஒழுக நீர் வேண்டும்…

பனிப்பொழிவால் தள்ளிப் போன எங்கள் பருவமழையே வா!  நிலமடந்தைக் கெழில் ஒழுக… நீர் வேண்டும் அல்லவே! நீர் வேண்டும் அதனால் ‘நீர் வேண்டும்’  வா!  அண்டை மாநிலங்கள் தரமறுப்பதை ஆண்டவன் தருவானென்று தெரியும்,  அரிய நீரே வா, ஆற்றாமை தீர்க்க வா! ஒரு மாதத்து மழையை ஒரே நாளில் மதம் பிடித்து கொட்டாமல், இரண்டோ மூன்றோ… (READ MORE)

Uncategorized

தவம் ஒரு வகையில்…

​பண்டிகை முடிந்து பல ஊர்களிலிருந்து ஒரே நேரத்தில் சென்னை திரும்பும் பெரும் போக்குவரத்தில்  கண்ணிமைக்காமல்  கால் நீட்ட கார் விட்டிறங்காமல் குடும்பத்தினரை பாதுகாப்பாய் கொண்டு சேர்க்க  பல மணி நேரங்கள் கார் ஓட்டி வருவதும் ஒரு வகையில் தவமே! வணக்கம் சென்னை! 

Uncategorized

‘கொடி’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

ஒருவன் பயந்தவன் மற்றவன் பலமானவன் அவன் இடத்தில் ஒருநாள் இவன் என்ற அதே அரதப்பழசான கதையில்,  அப்பாவின் ஆசைக்காக அரசியலுக்கு வந்த காதலனும் சொந்த ஆசைக்காக அரசியலுக்கு வந்த காதலியும் அரசியல் காய் நகர்த்தலில் எதிரெதிராய் நின்றால் ‘உயிர்’க் காதல் என்னவாகும் மனித மனம் எப்படி இயங்கும் என்றொரு புதுக் கதையை பின்னி இணைத்து களம்… (READ MORE)

Uncategorized

காட்டு ஐயனார் கோவில்…

​ஊருக்கு வெளியே காவல்தெய்வங்களாக உட்கார வைக்கப் பட்டிருக்கும் எல்லைச்சாமிகளை பார்த்திருக்கிறீர்களா? காடுகள் அல்லது மரங்களடர்ந்த பகுதிகளில் தனியாக வைக்கப் பட்டுருப்பவை அவை. ‘ஐயனார் ராத்ரியில் குதிரையில வேட்டைக்குப் போனாரு…’  ‘கருப்பு தொரத்துது!’ போன்ற கட்டுக் கதைகளையும், யூகங்களையும் காலங்காலமாக சேர்த்து வைத்திருக்கும் பிரதேசங்கள் இவை.  சிலைவழிபாடு, தெய்வம் என்பதைத் தாண்டி பயம் தரும் விஷயம் என்பதால்… (READ MORE)

Uncategorized

கீழடி – ஏன் அவசரமாய் மூட வேண்டும்?

​எதிரியமாக ஒரு பதிவிடுகிறேன் என்று எனக்கே நெருடுகிறது என்றாலும் இடவே செய்கிறேன். தொல்லியல் துறைக்குக் கிடைத்த புதையல் குவியல் ஒன்றை திறந்து பார்த்துவிட்டு தீயிட்டுக் கொளுத்துவார்களா யாரேனும், கொளுத்தி மண் மூடி புதைப்பார்களா எவரேனும். செய்கிறார்களே! அகழ்வாராய்ச்சி செய்து அரிய புதையல்களை கண்டெடுத்தனர் கீழடியில். சிந்து சமவெளிக்கு முன்னரே முந்து தமிழ் நாகரீகம் இருந்ததன் சான்றுகள்… (READ MORE)

Uncategorized

வரட்டும் ‘வேள் பாரி’

​ சு. வெங்கடேசன் இருக்கும் இடத்திலிருந்தே நம்மை பச்சைமலைத் தொடருக்கும், வேட்டுவன் பாறைக்கும் கடத்திப் போய் விடுகிறார். மணியம் செல்வம் பறம்பு மலை வீரனையும், கபிலரையும் காட்சிப் படுத்தி உயிர் தந்துவிடுகிறார். ‘வேள் பாரி’ இன்னொரு ‘பொன்னியின் செல்வன்’ ஆகுமா தெரியாது. ஆனால், தமிழ் உலகின் தலைமுறைகள் கடந்து தாக்கத்தை உருவாக்கும். இதைத்தான் பெரும் ஊடகங்கள்… (READ MORE)

Uncategorized

இருட்டில் இருந்திருக்கிறீர்களா…

​இருட்டில் வெறுமனே உட்கார்ந்திருக்கும் அனுபவம் வாய்க்கப் பெற்றிருக்கிறீர்களா? ஆம் எனில் உங்களுக்கு சொல்வதற்கு ஒன்றும் இல்லை இதில். கண்கள் இருட்டுக்குப் பழகி, மெதுவே பொருள்கள் புலப்பட்டு, பின்பு அவை மறைந்து நாம் மட்டுமே இருக்கும் உணர்வு அது. பார்வை உண்டு ஆனால் பொருள்கள் மறைந்து நீங்கள் மட்டுமே இருக்கும் அதிசயம். உலகம் பற்றிய பிரஞ்ஞை எதுவும்… (READ MORE)

Uncategorized

ஊருக்கே சாம்பிராணி…

​இவ்வளவு அதிகாலையில் எழுந்து ஊர் வயல்வெளி வாய்க்கால் என எல்லா இடங்களிலும் சாம்பிராணி புகை போட்டது யார்!  அட… பனி!  (மணக்குடி – சிதம்பரம் வழித் தடம் நெடுக) பரமன் பச்சைமுத்து 21.10.2016

Uncategorized

நல்ல நதி நாளை வரும்…

​வெள்ளையர்கள் கொள்ளையர்கள் என்பதில் இரண்டு கருத்துகள் இல்லைதான். கொள்ளை கொண்டதை தள்ளிக் கொண்டு போக அவன் பயன்படுத்தி பின் தந்துவிட்டுப் போன உன்னத நீள நீர்வழித் தடத்தை சாக்கடையாக்கி நாறச் செய்துவிட்டோம்.  நல்லதையே சாக்கடையில் வீசக்கூடாது, நாம் நல்லதில் சாக்கடையையே கொண்டு வந்து விட்டுவிட்டோம். திரும்பவும் இது ஓர் நதியாகி, இதன் வழியே நீர்ப் போக்குவரத்து… (READ MORE)

Uncategorized

தேவதைகளின் அருகில்…

​தேவதைகளின் அருகாமையிலிருக்கும் தருணங்களில்  அசுரன்கள் கூட அழகாகி விடுகிறார்கள்! ( நான், என் மகள்களோடிருக்கும் தருணங்களைப் பற்றிக் கூறினேன்)

Uncategorized

‘ஸல்லி’ –  திரை விமர்சனம்

விமானப் பயனம் என்பது மற்றப் பயணங்களைப் போலல்ல.  ட்ரெயினில், காரில், பேருந்தில், கப்பலில் என எதில் இஞ்சின் பழுதடைந்தாலும் குறைந்த சேதங்களோடு நிறுத்தி இருப்பவர்களை காப்பாற்றி விடலாம். உயரப் பறக்கும் விமானத்தின் நிலை அப்படி இல்லை. பழுதானால் விழ வேண்டியதுதான். விழுந்தால் முடிந்தது கதை. அப்படி நூற்றைம்பத்தியைந்து பேரை அவர்களது கனவுகளோடு சேர்த்து சுமந்து உயரப்… (READ MORE)

Uncategorized

அந்த வீட்டின் முன்னே

​இரவெல்லாம் பயணித்து அதிகாலை விடியும் முன் அந்த வீட்டின் முன் வந்து நிற்கிறேன். இழவு வீடென்றும் சொல்ல முடியாது, நேற்று மாலை போஸ்ர்ட் மார்ட்டத் செய்து பொட்டலமாய் வந்த பிரேதத்தை எடுத்துப் போய் அடக்கம் செய்துவிட்டனர். நான் இப்போதுதான் வருகிறேன். எங்கும் போகாமல் நேராய் இங்கு வந்து நிற்கிறேன். உள்ளே கதவை தாழிட்டுக் கொண்டு உறங்கிக்… (READ MORE)

Uncategorized

நண்பன் ஒருவன்…

​நண்பன் ஒருவன் என் வகுப்பிலமர்ந்ததில்லை இதுவரை. பலர் பரிந்துரைக்கவே மலர்ச்சி வகுப்பிற்குள் வந்தான் அவன்.  நண்பனை மாணவனாக பார்க்க வேண்டும் என்பது எனக்கும், நண்பனை ஆசிரியனாக பார்க்க வேண்டும் என்பது அவனுக்குமான புதிய பரீட்சை. நிறைய அனுமானங்களோடு நிறைய எண்ணங்களோடு நிறைய எதிர்பார்ப்புகளோடு வந்திருந்தானவன்.  இருவரும் வகுப்பிற்குள் நுழைந்தோம்.  செவ்வாய், வியாழன் என இரு வகுப்புகள்… (READ MORE)

Uncategorized

திருவரங்க வீதியோரத்துப் படிகட்டுகளில்…

​திருமண ஒப்பந்த விழா ஒன்றிற்காக வந்து திருவரங்கத்தில் உலாத்திக் கொண்டிருக்கிறேன்.  உலாத்தவில்லை, இடதும் வலதும் குறுக்கும் நெடுக்கும் என திருவரங்கத்தை கடைந்து கொண்டிருக்கிறேன்.  எந்த இலக்குமில்லை. உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி காவிரி மண்ணில் காவிரி மணல் (மணல்தான், நீரில்லை!) பட்ட காற்றில் காலையிலேயே ஆயிற்று.  வேட்டியை தழையவிட்டு வீதியின் ஓரத்து படியொன்றிலமர்ந்து வருவோர் போவோரை வாசித்துக் கொண்டிருக்கிறேன்…. (READ MORE)

Uncategorized

உளுந்தூர்ட்டை…

​மனம், இப்படித்தான் என்று விளக்கமுடியா விதத்தில் சங்கதிகளை சங்கிலியாய்க் கோர்த்து விளங்கமுடியா முடிச்சுக்களிட்டு நினைவகத்தில் பதியச்செய்து மேலாண்மை புரியும் ஓர் அதிசயம்.  சில இடங்களின் பெயர்கள், மனிதர்களின் பெயர்களைச் சொன்னால் அதனோடு(அவர்களோடு) தொடர்புடைய சில சங்கதிகளை நினைவகத்தின் அடியாழத்திலிருந்து கொண்டு வந்து மேலே போட்டுவிட்டு போய் விடுகிறது.  இருபது ஆண்டுகளுக்கு முன்பிருந்த தமிழகத்தில் நீங்கள் வாழ்ந்திருந்தால்,… (READ MORE)

Uncategorized

‘ஜோக்கர்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

ஐம்பது கோடி ரூபாய் ஊழல் என்று செய்தி வந்தால்,  ‘ஐம்பது கோடி எல்லாம் ஒரு பெரிய ஊழலா அவரவர்கள் பதினேழு லட்சம் கோடிக்கு பண்ணுகிறார்கள், போய்யா! கேவலமா இருக்கு!’ என்று  சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் ஒரு தேசத்தின் மனநிலையால்,  பின்தங்கி கிடக்கும்  பாப்பிரெட்டிப்பட்டி கிராமத்தின் வெளி உலகம் அதிகம் அறியா ஒரு மன்னர்மன்னனின் வாழ்க்கை… (READ MORE)

Uncategorized

சுடச்சுட குடிக்க

​ஆர்டர் செய்து வாங்கிய கேப்பச்சீனோக்களும் லாத்தேக்களும் ஆறிக்கொண்டிருக்க,  செல்லிடப் பேசிக்கு சுடச்சுட குடிக்க தங்களைத் தந்துவிடுகிறார்கள் இங்கே பலர். #ஸ்டார்பக்ஸ் #அண்ணாநகர்  (வெளியில் வரும் போது எழுதியது)  Facebook.com/ParamanPage

Uncategorized

ரொடீனிய பூமிப்பரப்பு 

​துண்டு துண்டாக உடையாமல் ஆழி சூழ ஒரே நிலப்பரப்பாக ‘ரொடீனியா’வாக இருந்த இந்தப் பூமிப்பரப்பு அப்படியே இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? அமெரிக்காவிற்கும், ஆப்பிரிக்காவிற்கும், சிங்கப்பூருக்கும், சிட்னிக்கும் சைக்கிளிலில் சென்றிருப்பார்கள் புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ படத்து தனுஷ் போல.  ராயப் பேட்டை நண்பர்கள் குழு ரியோ ஒலிம்பிக்ஸ் பார்க்க ராயல் என்ஃபீல்டில் கிளம்பியிருக்கும். ஆனால் அப்போது ராயப்பேட்டை மடகாஸ்கரில்… (READ MORE)

Uncategorized

நண்பன் என்றதும்…

​ஊரின் ஒதுக்குப்புறமாய் குளத்து மூலையில் எங்கள் வீடு இருந்தது அப்போது. வீட்டு வாசலில் எப்போதும் தண்ணீர் ஓடும் ஒரு சிறு வாய்க்கால். ஒரு மரத்தை குறுக்கே போட்டு பாலமாக மாற்றி வைத்திருந்தார் அப்பா. பின்புறம் செட்டியாரின் வயல். அந்த என் அரைக்கால் சட்டை வயதின் பொழுதுகளில் பெரும்பாதி ஆளவந்தாரால் நிரப்பப்பட்டவை. மூன்று வீடுகள் தள்ளி இருந்த… (READ MORE)

Uncategorized

wpid-wp-1469229993189.jpg

‘கபாலி’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

மலேசிய மண்ணில் இருபத்தியைந்து ஆண்டுகளுக்கு முன்னால் வஞ்சத்தால் வீழ்த்தி, குடும்பத்தை சின்னாபின்னமாக்கி தன்னைச் சிறையில் தள்ளிய எதிரிகளை, சிறையிலிருந்து வந்து ஸ்டைலாக ‘செய்யும்’ நாயகன் மற்றும் அவன் வாழ்வில் எதிர்கொள்ளும் திருப்பங்களை களமாகக் கொண்ட கதை. ‘வயசான மனுஷன், என்ன பிரச்சினை வரப்போவுது, ரிலீஸ் பண்ணுவோம்!’ என்று பேசும் மலேசிய சிறையதிகாரிகள், சிறையறையிலிருந்து வரும் முன்னே… (READ MORE)

Manakkudi Talkies

,

அய்யோ… இறைவா! 

அவனம்மா தெருவில் யாரிடமோ பேரம் பேசி எதையோ வாங்க முயற்சித்து, பேரம் படியாத ஆற்றாமையில் திட்டிக்கொண்டே வீட்டினுள் வந்தாள். அவளது சத்தத்தில் கண்விழித்தவன் அப்படியே அமர்ந்திருந்தான். தூங்கி எழுந்ததும் இயல்புநிலைக்குத் திரும்ப வெகுநேரம் எடுத்துக்கொள்ளும் குழந்தைகளைப் போல வெறுமனே வெறித்துப் பார்த்துக் கொண்டு அப்படியே உட்கார்ந்திருக்கும் சில மனிதர்களைப் போலில்லை அவன் நிலை இன்று.  தூக்கக்… (READ MORE)

Uncategorized

அன்பென்பது…!

நீர் பருகலாமென்று சமையலறைக்குள் போகிறேன். கூடவே பேசி சிலாகித்துக் கொண்டு வருகிறாள் செல்ல மகள், தான் இப்போது படித்து முடித்த ஒரு நூலைப் பற்றி. ‘அப்பா… யூ நோ… தி எண்ட் ஆஃப் த புக் ஈஸ் ஆஸம்! என்ன ஆகும் தெரியுமா….?’ கிட்டத்தட்ட ‘பாபநாசம்’ க்ளைமாக்ஸ் மாதிரி முடித்திருப்பார்கள் என்று சொல்லப் போகிறாள் என்று… (READ MORE)

Uncategorized

மரங்கள் என்பவை வெறும் நிழலுக்கானவையல்ல…

​எங்களூருக்கு கிழக்கே ஓர் அய்யனார் கோவில் உண்டு. சுரபுன்னை மரங்களும், பனையும், வேம்பும், இன்ன பிற கொடிகளும் சேர்ந்து பின்னிப் பிணைந்திருக்கும் வெயில்புக முடியா அக்காட்டில், சில சிலைகள் இருக்கும். ‘தச்சக்காடு’ அய்யானார் கோவில் என்று பெயர் அதற்கு. குருவிகளும், காட்டுப்பூனைகளும், பாம்புக் குட்டிகளும் வசித்த அந்தக்காட்டிற்கு சென்று வழிபடுவது அந்த வயதில் பயமாக இருந்தாலும்,… (READ MORE)

Uncategorized

தனிமைத் தவம்

கூட்டமாய் குதூகலித்து மகிழ எவ்வளவு பிடிக்குமோ, தனித்து இருக்கவும் அவ்வளவு பிடிக்கும் எனக்கு. சில திரைப்படங்களை சிலரோடு மட்டுமே பார்க்க வேண்டும் என்பதுபோல, சில படங்களை தனியாகவே பார்க்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன் நான். தனியாக இருக்க பயம் கொள்பவன், தூங்கும் நேரம் தவிர மீதி நேரமெல்லாம் துணை வைத்துக்கொள்கிறான். தூங்கும் போது மட்டுமே… (READ MORE)

Uncategorized

iraivi

‘இறைவி’ – திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து

குலதெய்வமாகக் கொண்டாடப்பட வேண்டிய ‘இறைவி’களின் உன்னதம் உணராமல், அவமதித்து, தங்களது சுய உணர்ச்சி ஆதாயங்களுக்காக நெறி பிறழ்ந்தும் கூட எதையும் செய்யும், கொஞ்சம் கொஞ்சமாய் ‘இறைவி’களின் வாழ்வை விற்றுவிடும் ‘நெடில்’ கொண்ட ‘ஆ’ண்களின் கதை. விமர்சனம் செய்பவர்கள் கதையை சொல்ல வேண்டாம் என்று இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளதால், இதற்குமேல் சொல்லவில்லை. மூலக்கதை சுஜாதாவுடையது… (READ MORE)

Manakkudi Talkies

,