Politics

எதிர்பார்க்கிறேன்

நேற்று ஐபிஎல் டிக்கெட் பற்றி அதிமுக அமைச்சர் கேட்டதற்கு தந்த பதிலால் மட்டுமல்ல, ‘மாவட்டம் தோறும் விளையாட்டு திடல்’ என்ற அறிவிப்பால் மட்டுமல்ல, பதவி ஏற்றதும் ஒரிசா – பீகார் – வங்காளம் – டெல்லி என்று போய் முன்மாதிரிகளை பார்வையிட்ட போதே, மோடியை சந்தித்து கோரிக்கை வைத்த போதே தெரிந்து விட்டது உதயநிதி தன்… (READ MORE)

Politics

,

சபாஷ் சென்னை மாநகராட்சி!

அண்ணா நகரின் வீதிகளில் காண்கிறேன். சென்னையில் பிற பகுதிகளில் வாழும் நண்பர்கள் மூலமும் அறிகிறேன். மாண்டஸ் புயலில் இரவு நிறைய மரங்கள் முறிந்தும் வேரோடு சாய்ந்தும் விழுந்து விட்டன. ஆனால், முக்கிய வீதிகளில் அதிகாலையே பணிகளைத் தொடங்கி மரங்களை வெட்டி அகற்றி போக்குவரத்தை கூடுமானவரை இயல்புக்குக் கொண்டு வந்து அசத்தியிருக்கிறது சென்னைப் பெருநகர மாநகராட்சி! 👏👏👏… (READ MORE)

Politics

, , ,

ஒற்றுமை உள்ளே வேண்டும்

நெல்லை ரூபி மனோகரன் கோஷ்டிக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவருக்கும் நடந்த சண்டை தாக்குதல் நிலைக்குப் போய்விட்டது. கே எஸ் அழகிரியை மாற்ற வேண்டும் என்று எதிர்த்து ஈவிகேஎஸ் கோஷ்டி, தங்கபாலு கோஷ்டி கார்கேவிடம் முறையிட தில்லிக்கு சென்றிருக்கிறது. எதிலும் சேரமாட்டேன் என தனியாக நிற்கிறது சிதம்பரம் கோஷ்டி. ராகுல் காந்தி ‘ஒற்றுமை நடைபயணம்’ செய்வதற்குப் பதிலாக… (READ MORE)

Politics

மாணவர்களுக்கு காலையுணவு : நல்ல திட்டம்

தமிழக முதல்வர் நேற்று தொடங்கி வைத்திருக்கும் பள்ளி மாணவர்களுக்கான காலையுணவு திட்டம் மிக மிக சிறப்பான திட்டம். புதுவை மாநிலத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட போதே, இது தமிழகம் வந்தால் நன்றாக இருக்கும் என்று எழுதியிருந்தோம். புதுவை திட்டத்தை விட மேம்படுத்தப்பட்ட திட்டமாக இது உள்ளது. சிறப்பாக நனைமுறைப்படுத்தப் படட்டும். மாணவர்கள் பயன் பெறட்டும்!… (READ MORE)

Politics

ஒடிஸா – சிறு தானிய மிஷன் – சபாஷ்!

நீர்வளமில்லா மலைப் பிரதேசத்தில் விவசாயம் செய்ய, பழங்குடி மக்களுக்கு வாழ்வாதாரம் பெருக்க, மலைவாழ் மக்களை தங்கள் பாரம்பரிய உணவை நோக்கித் திருப்ப, சுற்றுச் சூழல் காக்க என சில முடிவுகளோடு ஒடிஸா அரசு முன்னெடுத்த 5 ஆண்டு பரிசோதனையான  ‘ஒடிஸா சிறுதானிய மிஷன்’ 142 ஊராட்சி ஒன்றியங்களில் 1.5 லட்சம் விவசாயிகளால் 75,000 ஹெக்டேர் நிலப்பரப்பில்… (READ MORE)

Politics

தமிழக அரசு நல்ல திட்டம் : கட்டுமான தொழிலாளர்களுக்கு…

என் அலுவலகத்துக்குப் பக்கத்து மனையில் புதிதாக ஒரு கட்டடமெழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். வெளி மாநிலங்களிலிருந்தும் வெளியூர்களிலிருந்தும் வந்திருக்கும் சிலர் தினந்தோறும் வேலை செய்ய மளமளவென உயர்கிறது கட்டிடம். எவர் வந்தாலும் போனாலும் சட்டை செய்யாமல் தங்கள் வேலையை மட்டுமே கவனிக்கும் அவர்களின் முகங்களை உற்று கவனித்திக்கிறேன். இப்படிப் பல கட்டிடங்களை பல இடங்களில் எழுப்பியிருப்பார்கள் என்று எண்ணியிருக்கிறேன்…. (READ MORE)

Politics, பொரி கடலை

, , , ,

கடற்புரத்து மீட்பர்கள், நல்ல திட்டம்!

சில நல்ல மனிதர்கள், நல்ல அமைப்புகள் முன்னெடுக்கும் நல்ல திட்டங்கள், செயல்பாடுகள் அரசின் கவனத்திற்குப் போவது நன்று. எந்த வித ‘ஈகோ’வும் இல்லாமல் அதை ஏற்று அவர்களோடே கை கோர்த்து அதை இன்னும் விரிவாக பரவலாக செய்வது அரசு செய்யும் அடுத்த உயர் நிலை நற்செயல். சில ஆண்டுகளாக கடற்புரத்து மீனவ இளைஞர்களை தேடிப்பிடித்து கருவிகள்… (READ MORE)

Politics

சபாஷ்!

👏👏 வரும் கல்வியாண்டில் பள்ளி திறக்கப்படும் நாள், 10ஆம், 12ஆம் வகுப்புகளுக்கு மார்ச் மாதம் எந்த தேதியில் பொதுத்தேர்வு என்று இப்போது அட்டவணையை வெளியிட்டிருக்கிறார் தமிழக கல்வியமைச்சர். சபாஷ்! நல்லது. ஆசிரியர்களும் மாணவர்களும் சரியாகத் திட்டமிட முடியும். சிறப்பு! வாழ்க! பரமன் பச்சைமுத்து

Politics

வெள்ள நீர் வடிகால் – தமிழக அரசின் சூப்பர் முடிவு

தமிழகம் முழுக்க வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார் முதல்வர். இதனால் சில சங்கதிகள் நடந்துள்ளன. ( ‘அவரு ஹெலிகாப்டர்ல போவல, நேரில் போனாரு பாரு!’ என்றும், ‘அந்தத்  தொகுதியில் இன்னும் தண்ணி நிக்குது, போட்லதான் போகனும்!’ என்றும் அரசியல் நிலை சார்பு எதிர்ப்பு கொண்டோர்கள் பேசுகிறார்கள், பேசட்டும். நமக்கு வேண்டியதை மட்டும் நாம்… (READ MORE)

Politics

சென்னை – ReEngineering

இப்போது ஆட்சிக்கு வந்த இந்த அரசுக்கு அவகாசம் தேவை என்பதை உணர்வோம். சென்னையில் 16 நீர் வழித்தடங்கள் உள்ளன, அவற்றை முறையாக தூர்வாரவில்லை, ஒவ்வோர் ஆண்டும் 500 கோடி அதற்காக ஒதுக்கப் படுகிறது என்றெல்லாம் சொல்கிறார்கள். இவர்கள் அவர்களை கை காட்டுகிறார்கள். பதிலுக்கு ‘மத்திய அரசு தந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இவ்வளவு கோடி… (READ MORE)

Politics

தமிழ்நாடு தினம்

மெட்ராஸ் ராஜதானியிலிருந்து பிரிந்து போன கர்நாடகமும் ஆந்திரமும் நவம்பர் 1ஐ ‘கர்நாடகா டே’ ‘ஆந்திரா டே’ எனக் கொண்டாடுகிறார்கள். ‘நம்மிடமிருந்து பிரிந்து போனது இழப்பு, எப்படி அந்த நாளை நாம் கொண்டாட முடியும்?’ என்று பலகாலமாக பேசப்பட்டு வந்து கருத்துகள் மாறியுள்ளன இன்று. பழ நெடுமாறன் போன்றோர் நவம்பர் 1ஐ  ‘தமிழ்நாடு தினம்’ எனக் கொண்டாட… (READ MORE)

Politics

தமிழக அரசின் அறிவிப்பை எழுந்து நின்று பாராட்டுகிறேன்!

தமிழக அரசின் அறிவிப்பு ஒன்றை எழுந்து நின்று பாராட்டுகிறேன்! …. ஆர் ஏ புரத்தில் அடுத்தடுத்து 6 பள்ளிகள் இருக்கும் பகுதியொன்றின் முக்கிய வீதியில் இருந்த அடுக்ககம் ஒன்றில் குடியிருந்தேன். 2015ல் நிகழ்ந்த சென்னைப் பெருவெள்ளத்தின் போது நிறைய பகுதிகள் வெள்ளத்தில் மிதந்த போதும், எங்கள் வீதியிலும் அடுக்கக வளாகத்திலும் நீர் தேங்கவில்லை. மாநகராட்சியின் வெள்ள… (READ MORE)

Politics

,

அட இவர் பேசுகிறார்!

பேசும் விதத்தால் தன் பேச்சு வன்மையால் எதிரில் கேள்வி கேட்பவரை விவாதத்தில் எதிரில் இருப்பவரை சாமர்த்தியமாக நிறுத்தி ‘லெவல்’ காட்டுவது பெரியாரிய திராவிட தலைவர்களிடம் பொதுவாகவே இருக்கும் பல காலமாகவே நாம் கண்டு வரும் இயல்பு. ஆ ராசா, சுபவீரபாண்டியன் என பலரை குறிப்பிடலாம். அதிலும் என்ன கருத்துக்களை பேசினாலும் சுபவீ ‘சம்பூகன்’ சங்கதியைக் கொண்டு… (READ MORE)

Politics

போற போக்கைப் பார்த்தால், பிரியங்கா வதேராவை காங்கிரஸ் தலைவராக்கிடுவாங்களோ! நடக்கறதெல்லாம் பாத்தா அப்படித்தான் தெரியுது! – மணக்குடி மண்டு 14.10.2021

Politics

புலம் பெயர்ந்தோர் நலம்

பிழைப்பிற்காக வெளிநாட்டுக்குச் சென்று அங்கேயே வாழும் புலம் பெயர் தமிழர்களுக்கு என திட்டங்கள் அறிவித்து அசத்தியிருக்கிறது தமிழக அரசு! வாழ்க!  வெளிநாடு வாழ் தமிழர்களுக்கும் தமிழ் கற்றுத்தருதல், அங்குள்ள ஆசிரியர்களை தமிழ் கற்ற ஊக்கப்படுத்துதல் என்பன மிகச் சிறப்பானவை. அதே மண்ணில் நீண்ட காலம் வாழ்ந்து தமிழ் மொழித் தொடர்பு அற்றுப் போன அந்த சந்ததியினருக்கு… (READ MORE)

Politics

, ,

புரட்டாசி சனி

பிஜேபியா திமுகவா என்பதற்குள் நுழையவில்லை, விரும்பவுமில்லை. ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு குழந்தைகள் பள்ளி வருவதற்குக் கூட ஏற்பாடுகள் அறிவித்துள்ளது அரசு, சிறப்பான முன்னேற்பாடுகளோடு. திரையரங்குகள், வணிக வளாகங்கள் என எல்லாமும் செயல்பாட்டில். பெருமாளை வழிபடும் பக்தர்களுக்கும் ஏற்பாடு செய்திருக்கலாம். புரட்டாசி சனியில் கோவிலுக்கு சென்று பெருமாளை தரிசிப்பது அவர்களுக்கு காலம்காலமான ஒரு விருப்பம், வேண்டுதல்…. (READ MORE)

Politics

பணம் இல்லாத போது

மாநிலங்களிடம் குறிப்பாய் தென்னிந்திய மாநிலங்களிடம் நிதி இல்லை என்பது தெரிந்ததே. இந்நிலையில் கொரோனா உயிரிழப்புகளுக்கு மாநில அரசே இழப்பீடு தரவேண்டும் என்று மத்திய அரசு சொல்வது சரியில்லை. மத்திய அரசு எடுத்துக் கொள்ளட்டும் இந்தப் பொறுப்பை. – மணக்குடி மண்டு01.10.2021

Politics

பிள்ளைகள் பள்ளிக்கு வருகிறார்கள்

வளரும் வெளியே ஓடி விளையாட வேண்டிய பருவத்தில், பிற குழந்தைகளோடு கலந்து விளையாட வேண்டிய பருவத்தில் நோய்த்தொற்று பொது முடக்கம் வந்து நீண்ட காலத்திற்கு வீட்டிலேயே முடக்கப்பட்டனர் இளம் சிறார்கள். உளவியல் ரீதியாகவும், கற்றல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பிள்ளைகளிடையே சரி செய்ய முடியா சரிவு ஏற்பட்டுள்ளது. பழக்க வழக்கங்கள் உணவு முறை என எல்லாமே… (READ MORE)

Politics, பொரி கடலை

, ,

தமிழக அரசுக்கு ‘சபாஷ்!’

தடுப்பூசி செலுத்த பதிவு செய்து விட்டு கேரளாவில் மக்கள் காத்திருக்க, இங்கே தமிழகத்தில் தடுப்பூசி முழுநாள் முகாம்கள் நடத்தி செப்டம்பர் மாதம் மட்டும் 70.71 லட்சம் தடுப்பூசி செலுத்தி கலக்கியிருக்கிறது தமிழக அரசு. முழுநாள் தடுப்பூசி முகாம்களுக்கு அரசு ஊழியர்கள் களப்பணியாளர்கள் ஞாயிறு காலை 7 மணியிலிருந்து இரவு வரை பணி புரிய வேண்டும் என்பது… (READ MORE)

Politics

மொத்த நாட்டிற்கும் ‘சபாஷ்!’

ஆகஸ்ட் மூன்றாம் வாரம் கொரோனா மூன்றாம் அலை உச்சத்தில் இருக்கும் என்றது ஐசிஎம்ஆர், செப்டம்பர் இரண்டாம் வாரம் இந்தியாவில் மூன்றாம் அலை உச்சத்தில் இருக்கும் என்றது உலக சுகாதார மையம். இவற்றுக்கு நேர்மாறாக கட்டுக்குள் இருக்கிறது நோய்த்தொற்று. நாணு முழுக்க கொரோனாவே இல்லையென்று சொல்ல முடியாவிட்டாலும் கட்டுக்குள் இருக்கிறது. சிக்கிம், ஹிமாச்சல் பிரதேஷ், லடாக், கோவா,… (READ MORE)

Politics

வெள்ள நீர் வடிகால் பணிகள் – சபாஷ்!

பாடி மேம்பாலத்திற்கு வடமேற்கேயுள்ள கொரட்டூர் போன்ற தாழ்நிலை பூமி பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக ‘எல்லா தெருவையும் தோண்டி தோண்டி போட்டுறாங்க. வண்டி போக முடியல’ என்று சிலர் அங்கலாய்க்கிறார்கள். ஆனால், சங்கதி வேறு. வெள்ள நீர் வடிகாலுக்காக பெரிய ஆழ் குழாய்கள் பதிக்கும் வேலை மிகச்சிறப்பாக நடந்து வருகிறது. உண்மையைச் சொல்ல வேண்டுமானால், இவ்வளவு… (READ MORE)

Politics

, , ,

சரியான தேர்வு போல

கோயில் நிலத்தை ஆக்ரமித்துக் கட்டப்பட்ட குயின்ஸ்லேண்ட் தீம் பார்க் அப்புறப்படுத்தப்படும். மதுரவாயல் மார்க்கசகாயேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கடை வைத்திருந்த 23 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு…. பல செய்திகள் இப்படி. அமைச்சராக சேகர்பாபு சரியான தேர்வு எனத் தோன்றுகிறது. சபாஷ்! 👏👏👏👏

Politics

, ,

தொடங்கட்டும், நல்ல திட்டம்!

காஞ்சியின் வேகவதி ஆற்றைப் பார்த்து விட்டு நாம் வருந்தி எழுதிய கட்டுரையில், ‘…நல்ல நதிகளை ஆக்ரமித்து வீடுகட்டுகிறார்கள் என்பது ஒரு பிரச்சினை, நதிகளை கழிவுநீர் வடிகாலாக மாற்றுவது நாம் தொடங்கி வைக்கும் அடுத்த பெரும் பிரச்சினை. இதற்கேதேனும் தீர்வு வர வேண்டும். நிலமும் கெடுகிறது, நிலத்தடி நீரும் கெடுகிறது. …’ என்று எழுதியிருந்தோம்.  அதைப் படித்து… (READ MORE)

Politics

, , , , ,

நல்ல அறிவிப்பு: அரசுப் பள்ளிகளில்…

👏 கொரோனாவால் பெற்றோரை இழந்த பிள்ளைகள், முதல் தலைமுறைப் பட்டதாரிகள் ஆகியவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை என்பதோடு ‘அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கும் பணியில் முன்னுரிமை!’ என்று அறிவித்திருக்கிறார் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். 👏👏 சபாஷ்! சென்ற ஆட்சியிலிருந்தே அரசுப்பள்ளிகளை நோக்கி பிள்ளைகளை பெற்றோர் கொண்டு வருவது கணிசமாக உயர்த்தொடங்கியது என்பதை… (READ MORE)

Politics

,

என்ன சொல்வது இதற்கு

இந்த அரசியல்வாதிகள் செய்யும் அட்ராசிட்டிகள் தாள முடியவில்லை. ஜார்கண்ட் மாநில பேரவை வளாகத்தில் முஸ்லீம் எம்எல்ஏக்கள் தொழுகை நடத்த ஓர் அறை ஒதுக்கப்பட்டது. அதை எதிர்த்து போராட்டம், தடியடி, தண்ணீர் பீச்சியடித்தல்.  தொழுகை நடத்த ஓரிடம் ஒதுக்கியதற்கு ஏன் இவ்வளவு பிரச்சினை! பண்ணிட்டு போகட்டுமே! வேறு கட்சிகாரர்கள் திமுகவின் சின்னத்தில் நின்று ஜனநாயகத்தை ஏமாற்றுகின்றனர், தகுதி… (READ MORE)

Politics

போலிப் பத்திரவுக்கு புதுச் சட்டம்: நன்று!

நம் நண்பரின் வெளியூரில் இருக்கும் உறவினர் ஒருவர் நகரில் நிலம் வாங்கிப் போட்டிருந்தார். மனை வெகுநாட்களாக சும்மாவே இருப்பதை கவனித்து, மெதுவாகத் திட்டமிட்டமிட்ட சில மோசடியாளர்கள், திடீரென்று ஒரு நாள் அதில் கொட்டகை போட்டதோடு நிலம் தோண்டி கடைக்கால் போடும் கட்டுமானப் பணிகள் தொடங்கி விட்டனர். நிலவரம் தெரிந்த நம் நண்பர் தமது உறவினரின் நிலத்தில்… (READ MORE)

Politics

ஜெ வழி

‘சங்கி மாப்ள! திமுக கலைஞர் வழியில ஆட்சி பண்ணல, ஜெயலலிதா வழியிலதான் ஆட்சி பண்ணுது!’ ‘என்ன இப்படி சொல்றிய!’ ‘அதிமுக வெளிநடப்பு, தர்ணா, ஓபிஎஸ் கைது செய்திய  பாத்தீயா?’ ‘பாத்தேன் மச்சான். எடப்பாடியை காணோம்னு பரப்பப்படும் செய்தியையும் பார்த்தேன்!’ ‘எதுக்கு இந்த தர்ணா? கைது?’ ‘ஜெ பல்கலை கழகத்தை கேன்சல் பண்ணி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தோட… (READ MORE)

Politics

அனைத்து வீடுகளுக்கும் தண்ணீர் குழாய் இணைப்பு

👏👏 அனைத்து வீடுகளுக்கும் தண்ணீர் இணைப்பு என்ற அம்சம் கொண்ட ‘ஜல் ஜீவன் மிஷன்’ திட்டத்தைப் பயன்படுத்தி ஒரு நகரின் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடி தண்ணீர் இணைப்பு தந்து இந்தியாவின் முன்னோடி நகரமாக நிற்கிறது ஒரிசாவின் புரி நகரம். முதல்வர் பிஜு பட்நாயக்கும் அங்குள்ள அதிகாரிகளும் நிமிர்ந்து பார்க்க வைக்கின்றனர். 👏👏👏👏

Politics

,

500 ஏரிகள்

சுற்றியுள்ள 500 ஏரிகள், நீர்நிலைகளை சுத்தப்படுத்தி சென்னையின் குடிநீர் ஆதாரத்தை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே என் நேரு அறிவித்திருக்கிறார். இது மட்டும் சரியாக செயல்படுத்தப்பட்டால் சென்னைக்கு மட்டுமல்ல நாளைய தமிழகத்திற்கே நல்லதாக அமையும். வீராணத்திலிருந்து குழாய்களில் சென்னைக்கு கொண்டு வருவதை நிறுத்தலாம். அந்த உபரி நீர் கடலூர் மாவட்டத்தின் வேறு பயன்பாட்டிற்கோ… (READ MORE)

Politics

, ,

முதியவர்களுக்கான நல்ல திட்டம்

தேர்தல் ஆணையம் கொண்டு வந்திருந்த ‘முதியவர்களுக்கான – வீட்டிலிருந்தே வாக்களிக்கும் திட்டம்’ ஒரு பெரும் புரட்சித் திட்டம்.  பல ஊர்களில் கிராமப் பணியார்கள் மற்றும் அரசு அதிகாரிகளால் சிறப்பாக இது நிறைவேற்றப்பட்டாலும், அதே அளவு பல ஊர்களில் இந்தத் திட்டத்தை கூடுதல் பணி என்று சொல்லி தவிர்த்த பணியாளர்களும் அதிகாரிகளும் உண்டு. இன்று தமிழக அரசு… (READ MORE)

Politics

, ,

தவறு தவறுதானே

அவை தொடங்குகிறது. அவைத் தலைவர் பேசத் தொடங்குகிறார். அதற்குள் எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து வேறொரு பிரச்சினை பற்றி பேச வேண்டும் என்று அனுமதி கேட்கிறார். ‘நிச்சயம் நேரம் ஒதுக்கப்படும். அதற்கு முன்பு இந்த முறைமைகளை முடித்து விடுவோம். உங்களுக்கு நேரம் ஒதுக்கப்படும்’ என்கிறார். ‘முடியாது, இப்பவே இதை எடுத்துக் கொள்ள வேண்டும்!’ என்று கூச்சலிடுகிறார். ஏற்கனவே… (READ MORE)

Politics

முக்கியமானதாகப் பார்க்கிறேன்

சுதந்திர தினத்தன்று கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் அதே கையோடு, சுதந்திரத்தின் 75வது ஆண்டை போற்றும் வகையில் காமராஜர் – சிவானந்தா சாலையில் நினைவுத்தூண் ஒன்றை திறந்து வைத்தது இப்போதைய அரசியல் சூழலில் முக்கியமானது என எண்ணுகிறேன். ‘இது வெறும் கல்லாலும் சிமெண்ட்டாலும் கட்டப்பட்டதல்ல, நம் சுதந்திரப் போராட்ட வீரர்களின் ரத்தம், சதை, எலும்பினால் கட்டப்பட்டது என்பதை… (READ MORE)

Politics

வரலாற்று சிறப்பான நகர்வு

கஸ்தூரி ரங்கன் பரிந்துரைத்த  புதிய கல்விக் கொள்கை மொத்தமும் தேவையில்லை என்று நேற்று எதிர்க்கட்டியாகப் போராடி விட்டு, இன்று புதிய கல்வி கொள்கையை நோக்கி திட்டம் என்று அறிவித்திருக்கிறது தமிழக அரசு. நல்ல செயல். நல்ல மாற்றம். புதிய கல்விக் கொள்கை தேவை.  நல்ல நகர்வு. 10 ஆண்டுகளில் 1000 தடுப்பணைகள், கதவணைகள் கட்டப்படும் என்பதை… (READ MORE)

Politics

,

வெள்ளை அறிக்கை – எங்கு நிற்கிறோம்!

சி பொன்னையன் முன்பு செய்ததைப் போல, ஆந்திர, பஞ்சாப் மாநிலங்கள் வழியில் வெள்ளை அறிக்கை விட்டிருக்கிறார் தமிழக நிதியமைச்சர். ஒவ்வொருவர் தலை மீதும் 1.10லட்சம் கடன் உள்ளது, மின்சார வாரியம், சென்னைக் குடிநீர், தமிழ்நாடு குடிநீர் வாரியங்கள், அரசுப் பேருந்து கழகம் ஆகியவை பெரும் நட்டத்தில் உள்ளது என்கிறது அவர் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை. நேற்று… (READ MORE)

Politics

தலமரக்கன்றுகள் – நல்ல திட்டம்

👏👏 ‘கோயில்களில் 1 லட்சம் தல மரக்கன்றுகள் திட்டம் – தமிழக அரசு’ இதைத்தான் சில ஆண்டுகளாக சிதம்பரம் பகுதியில் செய்து வருகிறோம் நான் பங்கேற்கும் ஓர் அமைப்பின் மூலமாக. கோவில் குளம் தூர்வாருவதும் தல விருட்சங்களை காப்பாற்றி அதிக அளவில் வைப்பதும் அதன் முக்கிய பணிகள். இதை அரசே செய்வதால், மாநிலம் முழுக்க இது… (READ MORE)

Politics

,

நல்ல மடைமாற்றம்

தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி இலவசம் என்றொரு திட்டத்தை தொடங்கியிருக்கிறது தமிழக அரசு.  இந்தத் திட்டத்தைத் தாண்டி வரவேற்க வேண்டிய அம்சம் ஒன்று உள்ளது இதன் பின்புலத்தில். தனியார் நிறுவனங்கள் ஒவ்வோர் ஆண்டும் உலகத்திற்கும் மக்களுக்கும் என்று குறிப்பிட்ட அளவிற்கு ஒரு நல்ல தொகையை ‘சமூகப் பொறுப்பு நிதி’ என்று ஒதுக்கி நற்செயல்களை செய்கின்றன. சென்னை நகரின்… (READ MORE)

Politics

, , , ,

நல்ல மடைமாற்றம்

தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி இலவசம் என்றொரு திட்டத்தை தொடங்கியிருக்கிறது தமிழக அரசு.  இந்தத் திட்டத்தைத் தாண்டி வரவேற்க வேண்டிய அம்சம் ஒன்று உள்ளது இதன் பின்புலத்தில். தனியார் நிறுவனங்கள் ஒவ்வோர் ஆண்டும் உலகத்திற்கும் மக்களுக்கும் என்று குறிப்பிட்ட அளவிற்கு ஒரு நல்ல தொகையை ‘சமூகப் பொறுப்பு நிதி’ என்று ஒதுக்கி நற்செயல்களை செய்கின்றன. சென்னை நகரின்… (READ MORE)

Politics

, , , ,

நல்ல மடைமாற்றம்

தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி இலவசம் என்றொரு திட்டத்தை தொடங்கியிருக்கிறது தமிழக அரசு.  இந்தத் திட்டத்தைத் தாண்டி வரவேற்க வேண்டிய அம்சம் ஒன்று உள்ளது இதன் பின்புலத்தில். தனியார் நிறுவனங்கள் ஒவ்வோர் ஆண்டும் உலகத்திற்கும் மக்களுக்கும் என்று குறிப்பிட்ட அளவிற்கு ஒரு நல்ல தொகையை ‘சமூகப் பொறுப்பு நிதி’ என்று ஒதுக்கி நற்செயல்களை செய்கின்றன. சென்னை நகரின்… (READ MORE)

Politics

, , , ,

நாடே கவனிக்கிறது உங்களை!

தொடங்குகிறது நாடாளுமன்றம். பெட்ரோல் டீசல் விலை உயர்வு, வேளாண் மசோதா, மருத்துவக் கட்டமைப்பு, நீட் தேர்வு என விவாதங்களில் இறங்கி கேள்விகளால் அரசை திக்குமுக்காட வைக்கட்டும் எதிர்க்கட்சிகள். மக்களின் மீதான நாட்டின் மீதான உண்மையான அக்கறை அது. இவற்றைத் தவிர்த்து கூச்சல், அமளியில் ஈடுபட்டு செயல்பட தடுப்பது, ரஃபேலை எடுத்துக் கொண்டு கத்துவது என செயல்படாமல்,… (READ MORE)

Politics

நல்லது

ஒன்று – நெல்கொள்முதல் பற்றிய எதிர்க்கட்சி தலைவரின் குரல், அதற்கு பதிலளித்து அமைச்சரின் பதில். இரண்டு – மேக்கேதாட்டூ அணை விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு அனைத்து கட்சிகள் கூட்டம் என்ற முதல்வரின் முடிவு இரண்டையும் பாராட்டுகிறேன். இவற்றால் உடனே பலன் கிடைக்குமா தெரியாது, ஆனால்  சரியான திசையில் பயணம். வாழ்க! – மணக்குடி மண்டு10.07.2021

Politics

கவனிக்க தக்கது

*Disclaimer:* இது ஒரு அரசியல் கட்சியின் செயல்பாடுகள் பற்றிய அரசியல் பார்வை.  ‘நோ பாலிட்டிக்ஸ்’ ‘தனிப்பட்ட முறையில் தலைவர்களை தாக்கிப் பேச மாட்டேன்’ என்னும் தகைமை கொண்ட ‘நடுநிலை நியாயமார்கள்’ இந்தப் பதிவிற்கு கமெண்ட் கூட போட வேண்டாம், இது Politics பற்றியது, அரசு – பாலிசி – நிர்வாகம் பற்றியது இல்லை என்பதால். என்ன… (READ MORE)

Politics

தமிழக அரசுக்கு பூங்கொத்து

ஜெர்மனியின் கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ் துறை தொடர்ந்து இயங்க 1.25 கோடி நிதியுதவி செய்திருக்கிறது தமிழக அரசு. ஆகா… நல்லது. இந்து தமிழ் திசையில் வெளியான செய்தியைப் பார்த்து தமிழக அரசு உடனடியாக செயல்பட்டதைப் போலவே, மத்திய கல்வித் துறை அமைச்சகம் சார்பிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சொல்லுகிறது காலைச் செய்தி. என்ன நடவடிக்கை விவரம்… (READ MORE)

Politics

, ,

சரியான ஆட்களை சரியான இடங்களில் நியமிப்பதால்…

நன்னீர்க் கொசுக்கள், கழிவு நீர்க் கொசுக்கள் என இரண்டு வகைகளாலும் பாதிக்கப்படும் சென்னையில், கொசுக்களை ஒழிக்கவும் தொற்றுகளிலிருந்து மக்களை காக்கவும் பெருநகராட்சி எப்போதுமே பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது உண்டு. இந்த முறை தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதகளில் 15 நாட்களுக்கு சோதனை முறையில் ட்ரோன்கள் மூலம் கொசு மருந்து தெளிக்கப்படும் முறையை கொண்டு வந்திருக்கிறார்கள். மருந்து… (READ MORE)

Politics

, , , ,

முன்னுதாரணமாக இருக்கட்டும் தலைவர்கள்

ஃபரூக் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி, உமர் அப்துல்லா, குலாம் நபி ஆசாத் என 14 கட்சித்தலைவர்களுடனான பிரதமர் மோடியின் சந்திப்பு என்பது நல்ல செய்தி. அதை விட நல்ல செய்தி அவர்கள் ஒற்றுமையாக வெளியே வந்து ஊடகங்களுக்கு முன் நின்றது. இதில் சில தலைவர்கள் பல மாதங்களாக சிறை வைக்கப்பட்டவர்கள் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்…. (READ MORE)

Politics

, , , , ,

விளையாட்டு வீரர்களுக்கு மிக நல்லது

👏👏 விளையாட்டுப் பயிற்சிகளை தருவதற்காகவும் முன்னேற்றத்திற்காகவும், தமிழகம் 4 மண்டலங்களாகப் பிரிக்கப்படுகிறது, ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு 3 கோடி, 1 கோடி என பரிசுகள் என அறிவித்திருக்கிறார் தமிழக முதல்வர்.நன்று. அதை விட சிறப்பானது, விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கியது. தற்போதைய பயிற்சிகளுக்கும் கருவிகள் வாங்கவும் பெரிதும் பயன்படும். பதக்கம் வாங்கி… (READ MORE)

Politics

இதையும் செய்யட்டும்

‘உறவினர்களை நண்பர்களை சந்திக்கும் போது வழக்கமாக உதிர்க்கும் கதாநாயக புன்னகை தற்போது முதல்வரிடம் காணப்படவில்லை. அவர் முள் கிரீடம் சுமந்து அல்லும் பகலும் உழைக்கிறார்’ என்று புதிதாக பொறுப்பேற்றிருப்கும் அமைச்சர் புதிதாகத் தொடங்கப்பட்ட சட்டப்பேரவையில் தனது உரையில் பேசியிருப்பது ஊடகங்களில் வந்தது.  நீட் பற்றியும், கொரோனா கட்டுப்படுத்தல் பற்றியும் இரண்டு நாட்களாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியும்,… (READ MORE)

Politics

உடனடி கவனம் நன்று

காவலர் தாக்கி போதையிலிருந்தவர் உயிரிழந்த விவகாரத்தில், நடவடிக்கை எடுத்துள்ள முதல்வரின் அறிக்கையில் இரண்டு மகிழ்வு தரும் சங்கதிகள் உள்ளன. ( உயிரிழப்பு என்பது கொடுமை, பெரும் இழப்பு. வருத்தம் என்பதை மறுக்கவே முடியாது) 1. காலந்தாழ்த்தாமல், எதிர்க்கட்சிகளும் விவாத மேடைகளும் பேசும் வரையில் காத்திருக்காமல் உடனடியாக முதல்வரின் கவனம் பெற்று நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. 2. போலீஸ்… (READ MORE)

Politics

முத்து மாறி விட்டான்!

கண் விழிக்கும் காலை முதல்கண் துஞ்சும் நள்ளிரவு வரைகண நேரமும் மோடி நினைவே அவனுக்கு ஏழு ஆண்டுகளாக எதிர்ப்புஎதற்கும் எதிர்ப்புவடக்கென்றால் எதிர்ப்பு‘வட’ என்று வருவதால் வடைக்கும் எதிர்ப்பு சேவை வரி நிலுவைசேமியா விலையேற்றம்தடுப்பூசி  தருதல்தடுப்பூசி பற்றாக்குறைதடுக்கி எவரும் விழுதல் பால் விலையேற்றம்பாத்ரூம் குழாய் துடைப்பம்பாடத்திட்டம்பாதசாரிகள் பேண்டமிக் காலம் எது நடந்தாலும் மோடிஎது நடவாவிட்டாலும் மோடி ஒரு… (READ MORE)

Politics

,

சிறந்த செயல்பாடு : வார் ரூம்!

மலர்ச்சி மாணவரொருவரின் குடும்பம் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளது. வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டுள்ள அவர்களது வீட்டின் கதவு தட்டப்படுகிறது. திறந்தால்…. மாநகராட்சி ஊழியர்கள் மருத்துவர் ஒருவரோடு வந்து நிற்கின்றனர். முழு கவச உடை அணிந்த அந்த மருத்துவர், தொற்றால் பாதிக்கப்பட்ட அந்த நோயாளியை வீட்டின் உள்ளேயே வந்து பரிசோதித்து, நிலையறிந்து அடுத்து செய்ய வேண்டியவற்றையும்… (READ MORE)

Politics

, , , ,

தடுப்பூசி போட்டுக் கொள்ள வருகிறார்கள் மக்கள்

மாநிலங்களுக்கு தடுப்பூசி இலவசமாகத் தரப்படும் என்ற மத்திய அரசின் கொள்கை பாராட்டுதலுக்கு உரியது. எவ்வளவு அச்சங்களை பலர் கிளப்பிய போதும், அதையெல்லாம் புறக்கணித்துவிட்டு எல்லா ஊரிலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் நீண்ட பெரும் வரிசையில் நிற்கிறார்கள் என்பது நல்ல செய்தி். முதலில் நடுவனரசுக்கு ஒரு விலை, மாநில அரசுக்கு ஒரு விலை என்று தொடங்கி,… (READ MORE)

Politics

மேகமலை புலிகள் காடு காக்கப்படட்டும்

ஒரு பக்கம் கோவை மாவட்டம் கல்லாறு பகுதியின் யானை வலசைப் பாதையிலுள்ள 50.79 ஹெக்டேர் தனியார் நிலங்களை காடாக அறிவித்து காடுகளை விலங்குகளை பல்லுயிர்ப்பெருக்கத்தைக் காக்கிறார் கோவை மாவட்ட ஆட்சியர். மறுபக்கம் சத்தமில்லாமல் ஸ்ரீவில்லிப்புத்தூர் மேகமலை புலிகள் சரணாலய காடு பகுதியில் சாலை அமைக்கும் வேலைகள் நடக்கின்றன. இந்த சாலை அமைக்கும் அனுமதி கடந்த ஆட்சியால்… (READ MORE)

Politics

நன்றி மாசு அவர்களே!

மருத்துவர்கள், செவிலியர்கள் உணவு உறைவிடச் செலவில் நேரடியாக இறங்கிக் கண்காணித்து இடைத்தரகர்களை நீக்கியதன் மூலம், அதே உணவு, அதே உறைவிடத்துக்கு 9 கோடி ரூபாய் அரசுக்கு மிச்சம் செய்திருக்கிறோம் என்று அறிவித்திருக்கிறார் மருத்துவம் –  மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மாசு. அட்டகாசம்! நன்றி! இன்னும் இறங்கிச் செய்யுங்கள் ஐயா, இவ்வாறான முன்னெடுப்புகள் மற்ற துறைகளுக்கும்… (READ MORE)

Politics

,

அடிப்படை கேள்விகளும் ஆலோசனையும்

சேத்துப்பட்டில் காவலர்கள் – வக்கீல் பெண்மணி சம்பவ காணொளி காட்சி தீயாகப் பரவியிருக்கிறது. ‘உன் காக்கிசட்டையை கழட்டறேன் பாரு, போடா!’ என்று அந்தப் பெண்மணி பேசியது வெளியாகியிருக்கிறது. ‘வாடி போடி என்று சொன்னார்’ என்கிறார் அவர்.  முழு பதிவும் இல்லாததால் எது உண்மையான பின்னணி தெரியாது நமக்கு. ஆனால், சில அடிப்படை கேள்விகளும் ஓர் ஆலோசனையும்… (READ MORE)

Politics

ஹோமியோபதி குணப்படுத்துகிறதாமே!

‘வெளியிலிந்து செயற்கையாக ஆக்ஸிஜன் தரப்படும் போது உடலின் செல்கள் ஆக்ஸிஜனை உறிஞ்சுவதில்லை. கரும்பூஞ்சை தொற்றுக்கு இது ஒரு முக்கிய காரணம். ஆர்சனிக் ஆல்பத்தோடு சில மருந்துகளை நோயாளிக்குக் கொடுத்தால், கரும்பூஞ்சை வராமலே தடுக்கவும் முடியும், வந்தால் குணப்படுத்த முடியும்!’ என்று ஹோமியோபதி மருத்துவர் ஒருவர் அறிவித்திருக்கிறார்.  தமிழக அரசு இவர் சொல்வதை கவனித்து, உண்மைத் தன்மையை… (READ MORE)

Politics

, , , ,

மாநில வளர்ச்சிக் குழுவில் மருத்துவர் சிவராமன்!

👏👏 ‘மாநில வளர்ச்சிக் கொள்கை குழு’ அறிவிக்கப் பட்டு அதில் சித்த மருத்துவர் சிவராமன் அவர்கள் பெயரும் அறிவிக்கப் பட்டுள்ளது. 👏👏👏👏 பாரம்பரிய மருத்துவம், நவீன அறிவியல் என இரண்டையும் மதிக்கும் இரண்டுமே தேவை என்று குரல் கொடுக்கும் சிவராமன் அவர்களை பொறுப்பில் வைத்ததை மிகச் சிறப்பானது என எண்ணுகிறேன். அரசுக்கு நன்றி!சிவராமன் சார் வாழ்த்துகள்!… (READ MORE)

Politics, Uncategorized

,

எழுத்தாளர்களுக்கு இலக்கிய மாமணியும், வீடும்… அருமை!

👏👏நடந்தே விட்டது அது! குமுதத்தில் ‘ஸ்டாலினுக்கு கடிதம்’ எழுதியிருந்த எழுத்தாளர் சாருநிவேதிதா, ‘மலையாளம், வங்காளம், கன்னடம் ஆகியவற்றில் இருப்பது போல எழுத்தாளர்களுக்கு மரியாதை உயர்த்தப்பட வேண்டும். எழுத்தாளன் வாழ்நாள் முழுக்க சேகரித்த நூல்களை இடம் இடமாக வாடகை வீடுகளுக்கு மாற்றி மாற்றி செத்தே போகிறான். பெரிய எழுத்தாளர்களுக்கு வீடு ஏற்பாடு செய்து தர வேண்டும். பத்தோடு… (READ MORE)

Politics

, , ,

பள்ளிகளில் தமிழ் கட்டாயமாகட்டும்

சிங்கப்பூரில் தமிழ் வாழ்கிறது, இனியும் வாழும் என்பதற்கான காரணம் தொடக்கக் கல்வி தொடங்கி மேல்நிலை வரை தாய் மொழிக் கல்வியாக தமிழ் இருக்கிறது.  என்னதான் நூல்கள், இலக்கியத்துறை என பார்த்துப் பார்த்து செய்தாலும், அடுத்த தலைமுறை தாய்மொழியை கைவிட்டால் அம்மொழி நலிவடைந்து விடும். இளம் தலைமுறை தாய்மொழியை வெறும் பேச்சு மொழியாக மட்டுமே கொண்டால், அவர்களின்… (READ MORE)

Politics

, , , , , ,

தமிழக அரசிற்கு பாராட்டுகள்

கடந்த வாரங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் இப்போது மருத்துவமனைகளில் படுக்கைகள் இருக்கின்றன. ஆக்ஸிஜன் கிடைக்கின்றன. உள் கிராமங்களில் சில இடங்களில் இன்னும் பிரச்சினைகள் உள்ளன என்றாலும் சமாளிக்கும் நிலைக்கு வந்தாயிற்று. இனி நிலைமை முன்னேறவே செய்யும். கட்சி சார்பு – எதிர்ப்புகளை ஒத்தி வைத்துவிட்டுப் பார்த்தால், சமாளித்து சரியாக செயல்பட்டிருக்கிறது ஸ்டாலின் அவர்களின் தமிழக அரசு என்பதை… (READ MORE)

Politics

தடுப்பூசி ஸ்பெஷல் பாஸ் தரலாமே

தடுப்பூசி் பற்றி இன்னும் எதிர்ப்பு தகவல்கள் உலவிக் கொண்டுதான் இருக்கின்றன என்றாலும் தடுப்பூசி போடுவதை ஊக்கப்படுத்தி முகாம்களை இயக்குகிறது அரசு. நேற்று வரை 20 கோடிக்கு பேர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்கிறது செய்தி. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டோருக்கு ஒரு சிறப்பு அட்டை (‘ஸ்பெஷல் வேக்ஸின் பாஸ்’) ஒன்றைத் தந்து, அந்த அட்டைக்கு பல… (READ MORE)

Politics

, , , , ,

கார்பன் உமிழும் பேருந்துகள் போகட்டும்!

சவுதி அரேபியாவின் இளவரசர் சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்காகவும் கரிமில வாயு உமிழ்வை பெருமளவு குறைக்கவும் ‘சவுதி முழுக்க 1 கோடி மரங்கள் வளர்ப்போம்’ என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். மரங்கள் இருந்த பகுதிகள் பாலைவனமாக மாறி வரும் வேலையில், பாலைவனத்தில் 1 கோடி மரங்கள் என்பது நினைக்கவே மகிழ்ச்சியைக் கூட்டுகிறது. வெற்றி பெறட்டும் இத்திட்டம். வாழ்க!… (READ MORE)

Politics

, , , ,

பாரம்பரியம் நவீனம் இரண்டும் இருக்கலாமே

‘திமுக முற்போக்கு சிந்தனையுள்ள கட்சி. அறிவியல் அல்லாத இந்த சித்தமருந்து வேலைகளில் நேரத்தை வீண்டிப்பதை விட்டுவிட்டு வேலையைப் பார்க்க வேண்டும்!’ எனும் பொருள்பட பேசியிருக்கிறார் தருமபுரி திமுக எம்பி எவரும் அவரவர் கருத்தைச் சொல்ல உரிமையுள்ளவர்களே. அது தவறென்றால் அதைச் சுட்டிக்காட்டி சரியான கருத்தை சொல்வதும் நம் உரிமையே என்பதால் இந்தப்பதிவு. தமிழகம் முழுவதிலும் 12… (READ MORE)

Politics

அடடா! அருமை!

கேரளம் வெள்ளத்தில் மூழ்கித் தவித்த போது, முதல்வரும் எதிர்கட்சித் தலைவரும் இணைந்து செயல்பட்டதை, இந்தியா – பாக் சிக்கலின் போது பி வி நரசிம்மராவ்வும் வாஜ்பாயும் இணைந்து செயல்பட்டதை… நினைக்காமல் இருக்க முடியவில்லை இப்போது. மாநிலத்தின் நோய்த்தொற்று பேரிடரை எதிர்கொள்ள உருவாக்கப்பட்டுள்ள குழுவில், எல்லாக் கட்சியிலிருந்தும் முக்கிய ஆரோசகர்களை தேர்வு செய்து ஒரு சிறந்த உதாரணத்தைக்… (READ MORE)

Politics

தமிழக அரசு பரிசீலிக்கட்டும்

ரெம்டெசிவிர் மருந்தை கள்ள சந்தையில் விற்றால் குண்டர் சட்டம் பாயும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு நன்றி! அதே ரெம்டெசிவிர் மருந்தை ரூ. 400க்குத் தயாரித்துக் காட்டியுள்ளது ஒரு நிறுவனம். ஆனால், உலகளாவிய ஒப்பந்தம், காப்புரிமை என்ற விதிகளால் கைகள் கட்டப்பட்டு நிற்கிறது அம்மருந்து நிறுவனம். இது போன்ற தொற்றுக்காலங்களில் மருந்தின் அடிப்படையை அனைவருக்கும் பகிர்ந்து… (READ MORE)

Politics

நல்ல ஏற்பாடு

மருத்துவமனைகளில் படு்க்கைகள் இல்லை, மருத்துவமனை வாசலில் வரிசையாக நோயாளிகளோடு ஆம்புலன்ஸ்கள், ஆக்ஸிஜன் கிடைக்காமல் வரிசையில் பல மணி நேரம் காத்திருப்பிலேயே இறப்பு என தமிழக நிலவரம் இருக்கும் வேளையில், இரண்டு நாட்களுக்கு முன்பு மருத்துவமனை வாசலில் ‘ஆக்‌ஸிஜன் பேருந்து’ என ஒரு அமைப்பை பெங்களூரில் ஏற்படுத்தி கவனம் கவர்ந்தது கர்நாடக அரசு. நோயாளிகள் காத்திருக்காமல் அவசரத்திற்கு… (READ MORE)

Politics

,

வரவேற்கிறோம்!

கடந்த ஆண்டு நோய்த்தொற்றின் போது திருப்பத்தூரில் சித்த மருத்துவர் விக்ரம் குமார், சென்னையில் சித்த மருத்துவர் வீரபாபு ஆகியோரின் கண்காணிப்பில் நடந்த சித்த மருத்துவ மையங்களையும் அவற்றின் பலனையும் கண்ட போது, நம்மைப் போலவே பலரது மனதிலும் எழுந்த கேள்வி, ‘இதையே தமிழகத்தின் மற்ற இடங்களிலும் செய்தாலென்ன?’ புதிய தமிழக அரசு அதை முன்னெடுத்திருக்கிறது.சென்னை வியாசர்பாடியில்… (READ MORE)

Politics

, , , , ,

முதல் தேர்வு நன்று

சிங்கப்பூரில் ஸ்டேண்டர்டு சார்ட்டண்ட் வங்கியில் நிதித்துறை பணி அனுபவம், அமெரிக்காவில் முதுகலை என்ற அனுபவம் கொண்ட பழனிவேல்ராஜன் தியாகராஜனுக்கு ( பிடிஆர் மகன்) நிதி – மனித வள மேலாண்மை,சென்னைப் பெருநகரின் பேரிடர்களை எதிர்கொண்டு மேயராக இருந்த அனுபவம் கொண்ட மா. சுப்ரமணியனுக்கு மருத்துவம் – மக்கள் நல்வாழ்வு…. சரியான தேர்வுகளாகத் தெரிகிறது. இவர்களும் மற்ற… (READ MORE)

Politics

நடந்தேறட்டும் நல் அரசியல்!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பெரும்பான்மை வெற்றி பெற்று முதல்வராக வந்திருக்கிறார் ஸ்டாலின் அவர்கள். அட்டகாசம்! வாழ்க!  தமிழகத்தின் உரிமைகள் காக்கப்படட்டும்! வாழ்த்துகள் ஐயா! நியமனம் செய்யப்பட்டவராக நுழைந்து தலைவராக வளர்ந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி அவர்கள். மிக நல்ல எதிர்கட்சியாக அமர்ந்து தன் குழுவோடு அரசியல் செய்யட்டும் அவர். வாழ்த்துகள்! கோவை தொகுதி தவிர கிட்டத்தட்ட ஒட்டு மொத்த… (READ MORE)

Politics

நாம்தான் விழிப்போடு இருக்க வேண்டும்

கொரோனா நோய்தொற்றின் முதல் அலையை சரியாக கையாளப்பட்டதை பாராட்டும் போது, இரண்டாம் அலையை சரியாக கையாளவில்லை என்பதையும் சொல்லித்தானே ஆக வேண்டும்! ‘தேர்தலை ஒத்தி வைத்திருக்கலாம்!’ என்பது நடைமுறையில் எவ்வளவு சாத்தியம் தெரியவில்லை. தேர்தலைத் தள்ளிப் போட அரசியல் நிர்ணய சட்டம் இடம் அளிக்காது என்பதையும் மறக்க இயாலாது. தேர்தலை, 7 கட்டங்கள் 8 கட்டங்கள்… (READ MORE)

Politics

கவனித்த செய்தி

‘கவனித்த செய்தி’ : கோதுமை கொள்முதல் எம்எஸ்பி தொகையை நேரடியாக விவசாயிகளுக்கு செலுத்துவதை எதிர்த்து வந்தன பஞ்சாப், ஹரியானா மாநிலங்கள். விவசாயிகளின் கோதுமைக்கான எப்சிஐ (உணவுக் கழகம்) தரும் தொகையை இது நாள் வரை தனியார் நிறுவனங்கள் கமிஷன் முறையில் பெற்று வந்தன. அவர்களிடமிருந்து  விவசாயிகளுக்கு பணம் சரியாக தரப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் இருந்தன. இந்நிலையில்… (READ MORE)

Politics

தேர்தல் ஆணையத்திற்கு பாராட்டுகள்

இந்தியாவின் ஏதோவொரு மூலையில் பணியிலிருக்கும் ராணுவ வீரர் ஒரேயொரு நாள் வாக்குப்பதிவிற்காக தன் உள்ளூருக்கு பயணித்து வந்து திரும்புவது சிரமம் என்பதால் அவர்களுக்கு மட்டும் சிறப்பு அறிமுகமாக தபால் ஓட்டு என்று ஒன்று வந்தது.  அது உரிமை என்பதைத் தாண்டி ஒரு சிறப்பு மரியாதை அன்று. வாக்குச் சாவடிகளுக்கு அலுவலர்களாக செல்லும் ஆசிரியர்கள் / அரசு… (READ MORE)

Politics

ஆண்டுகள் ஆன பின்னும் அடுத்தவரையே இன்னும் குறை சொல்வது ஆட்சியாளருக்கு அழகல்ல.

‘இந்தியாவின் எரிசக்தி இறக்குமதியைக் குறைப்பதில் முந்தைய அரசு கவனம் செலுத்தத் தவறியதே பெட்ரோல் விலை உயர்வால் நடுத்தர மக்கள் இப்போது பாதிக்கப்படுவதற்குக் காரணம்’ என்று குற்றம் சாட்டியுள்ளார் பிரதமர் மோடி. சென்ற முறை ஆட்சிக்கு வந்த போது சொல்லியிருந்தால் கூட பரவாயில்லை. ஆறு ஆண்டுகளுக்கு ஆட்சியில் இருந்து விட்டு, அதற்கும் முந்தைய ஆட்சியை இப்போது இழுத்து… (READ MORE)

Politics

மக்கள், பல்லுயிர் சூழல் முக்கியமல்லவா!

மத்திய அமைச்சர் தில்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளோடு ஒன்றாக இணைந்து அவர்களது உணவை கரண்டியால் கிளறியும் உண்டும் மகிழ்கிறார். இரண்டு சட்டங்களை மாற்ற ஒத்துக்கொண்டிருக்கிறார் என்றும் உடன்பாடு ஏற்பட்டிருக்கிறதென்றும், அடுத்த கட்ட பேச்சு வார்த்தை சில நாட்களில் தொடரும் என்றும் இன்று ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. ‘விவசாயிகள்… விவசாயிகள்!’ என்று உணர்ச்சி வசப்பட்டவர்கள் சிலர் அமைதியாயிருப்பர்…. (READ MORE)

Politics

கேள்வி ஒன்று

உள்நாட்டில் பெட்ரோல் விலையைத் தீர்மானிப்பது யார்? எதனடிப்படையில் அது முடிவு செய்யப்படுகிறது?எண்ணெய் / எரிபொருள் விற்கும் நிறுவனங்களின் கூட்டமைப்பே அதை தீர்மானிக்கின்றன என்பதைத் தாண்டி இவற்றில் எனக்கு ஆழ் அறிவில்லை. உலக சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் விலை குறையும் போது உள்நாட்டில் விலை குறையும், அது கூடும் போது உள்நாட்டில் விலை கூடும் என்கிறார்கள். … (READ MORE)

Politics

ஊடகங்கள் செல்லட்டும் கடலூர் சிதம்பரம் வயல்களுக்கு

நிவர் புயல் வீசப்போகிறதென்றதும் அதிகாரிகள், பாதுகாப்புப் பணிகள் என அரசு நல்ல முன்னேற்பாடுகளோடு நின்றது. எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் அவர்கள் மழைக்கோட்டு அணிந்து கொண்டு மழைநீரில் இறங்கி நீர் சூழ்ந்த பகுதிகளுக்கே சென்றார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மழையில் செம்பரம்பாக்கம் ஏரிக்குப் போனார். ஸ்டாலின் அவர்கள் இறங்கி செய்வது எப்போதும் அரசிற்கு அழுத்தம் தரும், அது… (READ MORE)

Politics

ரஜினி வருகிறாராமே!

‘ரஜினி காந்த் ஒரு நல்ல நடிகர். அவர் பாட்டுக்கு நடிச்சிட்டு போகட்டும்’ ‘இங்கல்லாம் வரக்கூடாது. வந்தா செஞ்சி வுட்ருவோம்! ஹஹ்ஹாஹ்ஹா!’ என கிண்டலும் கேலியும், அவரை ஒரு டம்மி பீஸ் என்றெல்லாம் மீம்ஸ் தட்டி எகத்தாளமாக சிரித்தவர்கள் என்ன செய்வார்கள் இப்போது என்பதை இனி பார்க்கலாம். ‘நீ வரக்கூடாது. அவரு வரக்கூடாது. தமிழன் இல்ல. மராட்டி,… (READ MORE)

Politics

, ,

பாஜக தேர்தல் கணக்கு

சென்னை வந்த போது முதல்வர் வரவேற்க, திரும்பிப் போகும் போது துணை முதல்வர் வழியனுப்ப என்று நிகழ்ந்த அமித்ஷாவின் தமிழக வருகை இரண்டு சங்கதிகளை வெளிப்படையாக செய்துள்ளன. அதிமுக கூட்டணியில் பாஜக இருந்தாலும், அதிமுக தங்கள் வசதிக்கு பாஜகவை நடத்த முடியாது. ‘திமுக எதிரி பாஜக’ என்று நிலையை தொடங்கி வைத்தாயிற்று எதிர்காலக் கணக்கை குறிவைத்து…. (READ MORE)

Politics

wp-16016357826491550252133250517878.jpg

கட்சிகளைக் கடந்தல்லவா காணப்பட வேண்டியவர் காந்தியார்

ஊரே போற்றி மதிக்கும் சில அப்பாக்களை அவர்களது சொந்தப் பிள்ளைகளே அறியாமலிருப்பது போல காந்தியை அடுத்தத் தலைமுறைக்குக் கடத்தாமல் விட்டுவிட்டோம். அவர்களுக்கு அத்தனை கோடிகளை அள்ளித்தந்து விட்டார் என்பது போன்றவற்றை மட்டுமே எடுத்தியம்பி இளந்தலைமுறைக்கு முன்னே சில திரைகளை எழுப்பி காந்தியின் முக்கிய மற்ற பண்புகளை பார்க்கவிடாமலே செய்து விட்டோம். டால்ஸ்டாய் பண்ணை உருவான விதமும்,… (READ MORE)

Politics, பொரி கடலை

சரி செய்யப் பட வேண்டும் இதை

என் நண்பர்கள் எனை காங்கிரஸ் – இடது – ஆதரவாளன், பாஜக – வலது எதிர்ப்பாளன் என்று கருத பெரும் இடம் இருக்கிறது. இரண்டுமில்லை வெறுமனே கவனிப்பவன், தேர்தலன்று வாக்களிப்பவன் என்பது புரியாமல் என் பெயரின் மீது வண்ணமடிப்பது சில நண்பர்களுக்கு பிடித்த வேலை. இருந்த போதிலும் பகிர வேண்டியிருக்கிறது. ஒரே நாடு ஒரே வரி… (READ MORE)

Politics

TCM

இரண்டும் கைகோர்த்து இணைந்து செயல்பட வேண்டும் இப்போது – பரமன் பச்சைமுத்து

  பீஜிங்கிலிருந்து சாங் யாங்ஃபேய், வுஹானிலிருந்து வு யோங் ([email protected]) ஆகிய பத்திரிக்கையாளர்கள் எழுதி சீன தினசரியான ‘சைனா டெய்லி’யில் வெளியான ஒரு கட்டுரை நம் கவனத்தைக் கவருகிறது. ……. “   ….கொரோனா புயலின் மையப் பகுதியான வுஹானில் உள்ள லேய்ஷென்ஷான் மருத்துவமனையிலிருந்து கொரோனா நோய்த் தாக்குதலிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய 16 பேரில் 6… (READ MORE)

Politics, பொரி கடலை

, , , , ,

அடுத்தவரின் நிலையை புரிந்து ஒத்துழைத்து உயர வேண்டிய நேரமிது – பரமன் பச்சைமுத்து

சீனா கையூன்றி எழுந்து இப்போது இயங்கத்தொடங்கிவிட்ட வேளையில் கிட்டத்தட்ட மொத்த உலகமும் முடங்கிக் கிடக்கிறது. இந்திய நாடு மொத்தமாய் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறது. மருத்துவர்களும், காவல்துறை மற்றும் அரசுப் பணியாளர்களும் வெளியில் தங்களைத் தந்து மற்றவர்களுக்காகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். மூன்று வாரங்கள் வீட்டுக்குள் இருங்கள், வீட்டு வாசலில் லக்ஷ்மணன் ரேகை இருப்பதாகக் கருதி அதைத் தாண்டி… (READ MORE)

Politics, Self Help

நாளை ஊடகங்களை அழைத்திருக்கிறார் ரஜினி.

இன்றைய தினமணி முதல் பக்கத்தில் முக்கிய அரைபக்கத்திற்கு ரஜினி பற்றிய செய்திக் கட்டுரை வெளியிட்டிருக்கிறது.  எம்ஜிஆருக்கு அன்று கட்சி தொடங்க ஏற்பட்ட தர்மசங்கடங்களையும் இன்று ரஜினிக்கு உள்ள தர்மசங்கடங்களையும் ஒப்பிட்டு விரிகிறது அந்தக் கட்டுரை. ஊடகங்கள் பரபரக்கின்றன. ரஜினி கட்சி தொடங்கினால் பாமாக, ஜி கே வாசன் ஆகியோர் அவர் பக்கம் இறங்குவர் என்பதற்காகவே, ஜிகே… (READ MORE)

Politics

, ,

கௌதமியை வைத்து கமலை நோக்கி சமையல் செய்யும் ஊடகங்கள் இனி

‘நான் அவரோடு இணைந்து செயல்படுவதாக சொல்கிறார்கள். இல்லை. நான் என் மகளுக்காகவும் எனக்காகவும் உழைக்கிறேன். அவர் என் சம்பளப் பாக்கியை இன்னும் தரவில்லை. ஆதாரங்கள் உள்ளன’ என சுட்டுரையில் கொளுத்திப் போட்டிருக்கிறார் கௌதமி. ஸ்ரீதேவி மகள்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு திரும்ப வந்த கமலிடம் அதைக்கேட்டும் விட்டனர் நிருபர்கள். ‘சம்மந்தம் இல்லை என்று அவர் சொல்லிவிட்டார். சம்பளப்… (READ MORE)

Politics

, , , , ,

jaya

மக்களின் ‘அம்மா’விற்கு மலரஞ்சலி…

நானும் இருக்கிறேன் என்று வாழ்வது வாழ்க்கையல்ல; இருக்குமிடத்தில் நான் தனியாகத் தெரிவேன் என்று தடம் பதித்து வாழ்வது வாழ்க்கை. அதில் இதில் என்றில்லை எதில் இருந்தாலும் தடம் பதித்து தலை திருப்பிப் பார்க்கச் செய்வேன் என்று வாழ்வது தலை வாழ்க்கை. எப்போது வந்தோம் எப்போது போனோம் என்பதைத் தாண்டி எத்தனை பேர் வாழ்க்கையில் எவ்வளவு மாற்றங்கள்… (READ MORE)

Politics

,

அஞ்சமாட்டோம், அஞ்சமாட்டோம்னு சொல்லிட்டு…

தற்சமயம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘உப்புக்கருவாடு’ (மிக வித்தியாசமான தரமான ரசனைக்கான படம்) படத்தில் ஒரு காட்சி. இளம் இயக்குஞர் ஒருவர் தன் படத்தை எடுக்க தொடங்குவதற்கு முன்பே ஒரு சில சாதி அமைப்புகள் படத்தை தடை செய்ய வேண்டும் என்று போராட்டம் செய்து ரகளையில் ஈடுபடும். ‘அஞ்சமாட்டோம், அஞ்சமாட்டோம்னு சொல்லிட்டு எடுக்கவே உட மாட்டறீங்களே. தப்பா… (READ MORE)

Politics

, ,

Rajini Award

உத்திரப் பிரதேச எம்.பி.யும், உச்சநட்சித்திரம் ரஜினியும்…

இன்று வந்ததில் இரண்டு செய்திகள் கவனம் ஈர்க்கின்றன. ஒன்று – தமிழுக்காக உழைக்கும் பாஜாகாவின் தருண் விஜய். மற்றது – பாஜாகா அரசு ரஜினிக்கு தரும் விருது. உத்திரப் பிரதேச தருண் விஜய்க்கு தமிழ் மீது ஆசை, உச்ச நட்சத்திரம் ரஜினி மீது பாஜாவிற்கு ஆசை! தருணின் ஆசை நிறைவேறுவது தமிழுக்கு நல்லது. தாமரைக் கட்சியின்… (READ MORE)

Politics, பொரி கடலை

, , , , ,

செப்டம்பர் 17

சில நேரங்களில் ஒன்றுக்கொன்று எதிரான இரு விஷயங்களை ஒரே புள்ளியில் இணைத்துவிட்டு தள்ளி நின்று சிரிக்கிறது காலம்… ‘கடவுள் இல்லை’ என்றே இயக்கம் நடத்திய தலைவரும், ‘கடவுளுக்கு கோயில் கட்டுவோம்’ என்றே கட்சி வளர்த்த இயக்கத்தின் தலைவரும் ஒரே நாளில்  பிறந்தார்கள்! # பெரியார், #மோடி, #செப்டம்பர் 17 : பரமன் பச்சைமுத்து

Politics, ஆ...!

, , , ,