Author Archive: paramanp

wp-1668487305219.jpg

வாட்ஸ்ஆப் வொண்டர்ஸ்!

நாளெல்லாம் கடும் வேலஅந்தி சாயவும் அசந்து தூங்கிட்டேன் காலை கண்முழிச்சிகாய்ஞ்சு போய் நிக்கறேன் நல்லவர் ஒருத்தரு ஆரம்பிச்சாருநடுராத்திரியில க்ரூப் ஒண்ணு அவராவே முடிவெடுத்துஅல்லாரையும் சேத்தாரு ஆரோடயோ சண்டையாம்அவராவே போய்ட்டாரு வெளிய காலை கண்முழிச்சிகாய்ஞ்சு போய் நிக்கறேன் என்ன க்ரூப்புஎதுக்கு இந்த க்ரூப்பு எதுவும் தெரியலஎவர்ட்ட கேப்பேன்! ‘ஐயா!  யாருய்யா  நீங்கல்லாம்?’ – பரமன் பச்சைமுத்துமணக்குடி15.11.2022 #Paraman… (READ MORE)

ஆ...!, கவிதை

மு பச்சைமுத்து அறக்கட்டளை: 33வது அன்னதானம்

🌸 இன்று மிருகசீரிடம் (ஐப்பசி மாதம் ) மு பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாகதந்தையின் பெயரால் செய்யப்படும் மதிய உணவு வழங்கல் வடபழனி சிவன் கோவில் தெருவிலும், கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவமனையிலும்நிகழ்த்தப் பெற்றது. இறைவனுக்கு நன்றி! வாழ்க! 🌸 பரமன் பச்சைமுத்துமு பச்சைமுத்து அறக்கட்டளை11.11.2022

மு பச்சைமுத்து அறக்கட்டளை

, , ,

குஞ்சய்யர்

அதற்கு முன்னால் அது மணக்குடியில் நடந்திருக்கிறதாவென தெரியவில்லை.  குஞ்சய்யரும் பலராம ஐயரும்தான் ‘ஏ சிவா! வாடா!’ என்று என்னை அதற்கு அழைத்துவிட்டு முன்னே நடந்து போனார்கள். அந்தி சாய்ந்ததும் வீடு திரும்புவார்கள், பெண் குழந்தைகள் அலங்கரித்துக் கொள்வார்கள், மணக்க மணக்க சமையல் செய்வார்கள், விளக்கு வைத்ததும் உண்பார்கள், ஊரே சீக்கிரம் உறங்கி விடும் என்பது என்… (READ MORE)

Manakkudi Manithargal

, , , , ,

நாளை தேவைப்படுமென்று அளவுக்கு மிகுதியை இன்று பூமியில் ஊற்றி முதலீடுசெய்கிறதா மேகம்? நேற்று மேகவங்கியில் முதலீடு செய்ததில் இன்று அறுவடை மொண்டு குளிக்கிறதா பூமி? அடித்து இடித்துப் பெய்கிறது மழை! – பரமன் பச்சைமுத்து03.11.2022 #Rain #ChennaiRain #Paraman #ParamanPachaimuthu #ParamanOnRain #rainyday #rainyseason

ஆ...!, கவிதை

,

‘SALES Plus’ MALARCHI 1 Day Sales Workshop – Super Results!!!

திருநெல்வேலியிலிருந்து, பொள்ளாச்சியிலிருந்து, செங்கல்பட்டிலிருந்து, காஞ்சியிலிருந்து, புதுச்சேரியிலிருந்து, ஓசூரிலிருந்து, ஈரோட்டிலிருந்து, சென்னை பகுதிகளிலிருந்து என பல ஊர்களிலிருந்தும் தேடலோடு வந்து முதல் நாள் முன்னிரவு தொடங்கி நிற்காமல் அடித்துப் பெய்து மழையிலும் நிற்காமல் வந்து அரங்கு நிரம்ப கலந்து கொண்டவர்கள், மலர்ச்சி ‘SALES Plus’ முழுநாள் கருத்தரங்கிலிருந்து அள்ளிக் கொண்டு போனார்கள். ’20 வருஷமா சேல்ஸ்ல இருக்கேன்…. (READ MORE)

MALARCHI, Paraman's Program

டைலர் கட அல்லது தீபாவளி…

இரவும் பகலுமென எல்லா நேரமும் இயங்கும் ‘டைலர் கடை’.  ஆயத்த ஆடைகளை வாங்கி அணிவதென்பது அவ்வளவு பழக்கத்திலில்லா அந்நாட்களில் துணியெடுத்து தையல் கடைக்கே வந்தனர் மக்கள். கந்தசாமி டைலர்மொத்த மணக்குடிக்கும் மட்டுமல்ல பக்கத்து ஊர்களான குறியாமங்கலம், ஆயிபுரம் என சுற்றுப் பகுதிகளின் எல்லா வீடுகளுக்கும் எல்லோருக்குமான ஒரே தையல்காரர். கந்தசாமி டைலர் என்பது அவர் பெயரென்றாலும்,… (READ MORE)

Manakkudi Manithargal

, , , ,

மு பச்சைமுத்து அறக்கட்டளை: 32வது அன்னதானம்

🌸 இன்று மிருகசீரிடம் (புரட்டாசி மாதம் ) மு பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாகதந்தையின் பெயரால் செய்யப்படும் மதிய உணவு வழங்கல் வடபழனி சிவன் கோவில் தெருவிலும், கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவமனையிலும்நிகழ்த்தப் பெற்றது. இறைவனுக்கு நன்றி! வாழ்க! 🌸 பரமன் பச்சைமுத்துமு பச்சைமுத்து அறக்கட்டளை15.10.2022

மு பச்சைமுத்து அறக்கட்டளை

பம்பரம் விட்டிருக்கிறீர்களா?

பம்பரம் விளையாடியிருக்கிறீர்களா? ஆர்வி உதயகுமார் படத்தில் சுகண்யாவின் தொப்புளில் விட்டதைப் போலல்ல, தரையில் ஓங்கிக் குத்தி. சிறியவர், பெரியவர் பேதமும் இல்லை, இத்தனை பேர்தான் என்ற கட்டுப்பாடும் இல்லை. எவரும் ஆடலாம். எத்தனை பேரும் இணையலாம். ஒரு பம்பரம், சில மீட்டர் கயிறு (சாட்டை என்று பெயர் அதற்கு), சில சதுர அடி கட்டாந்தரை அவ்வளவே… (READ MORE)

Manakkudi Manithargal, பொரி கடலை

பெண்கள் உடைமாற்றும் அறைக்கு வெளியே…

பெண்கள் உடைமாற்றும் அறைக்கு வெளியே சுற்றியிருக்கும் பெண்களெல்லாம் என்னையே பார்க்க ஒரேயொரு ஆணாகவெட்கமின்றி நிற்கிறேன் .. .. .. … மகள்கள் ஆடை அணிந்து பார்க்கிறார்கள் உள்ளே!  #Shopping – பரமன் பச்சைமுத்து02.10.2022

ஆ...!

என்னவெல்லாஞ் செய்யும் இத் திருப்பாவை வரிகள்…

🌸 இன்று புரட்டாசி சனி – சைவ நெறியில் பழகிய எங்கள் வீட்டில் பெருமாளுக்குத் தளிகை. மகள்களும் ஊரிலிருந்து வந்துள்ளதால் இந்த சனி அன்று என்று முடிவு. நெற்றியில் நீறு சைவ பதிகங்களே சொல்லி பழகிய நமக்கு பெருமாளை போற்றிடத் தெரியவில்லை. ‘ஆதி மூலமே!’ என்றழைத்தற்கே வந்தவனாச்சே என்று கட்டு கட்டினாலும், ‘அரங்கா… பார்த்தசாரதி… பெருமாளே!’… (READ MORE)

பொரி கடலை

‘பொன்னியின் செல்வன் – பாகம் 1’ – திரை விமர்சனம.்: பரமன் பச்சைமுத்து:

எழுபதாண்டுகளுக்கு முன்பு கல்கி எழுதி வாசகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற ஆயிரமாண்டுகளுக்கு முந்தைய கதையை நாற்பதாண்டுகளாக முயற்சித்து கடைசியில் திரைக்கதை செய்து இயக்கி முடித்திருக்கிறார் மணிரத்னம். ‘ப்யூட்டி அண்ட் த பீஸ்ட்’ ‘ஸ்பைடர் மேன்’ ‘அலாவுதீன்’ போல நாவல்களை அப்படியே திரை மொழிக்கு மாற்றும் முயற்சி போல கல்கியின் மூல கதையையும் வசனங்களையும் தொன்னூறு சதவீதம்… (READ MORE)

Manakkudi Talkies

, , , ,

அமெரிக்கர்களைப் போல இங்குள்ளவர்களுக்கும் வருகிறதே அல்சைமர் நோய்?

கேள்வி: அமெரிக்கர்களைப் போல இப்போது இங்குள்ளவர்களுக்கும் அதிகமாக வருகிறதே அல்சைமர் எனும் மறதி நோய். நம் முன்னோர்கள் உணவுப் பழக்கத்தை விட்டதால்தானே இந்த நோய் வந்துள்ளது? பரமன்: ஒரு மருத்துவரிடம் கேட்கப்பட வேண்டிய கேள்வியை நமக்கு அனுப்பி வைத்துள்ளீர்கள். அமெரிக்கர்களுக்கு மட்டுமே வந்த அல்சைமர் நோய் உணவு சீர்கேடால் இந்தியர்களுக்கும் வருகிறது என போகிற போக்கில்… (READ MORE)

VALARCHI Tamil Monthly

சூப்பர் ஸ்பீடில் பாஸ்போர்ட் வருகிறது

👏👏என்ன நடக்கிறது இந்தியாவில்! பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு விண்ணப்பித்திருந்தோம். ‘வெள்ளிக்கிழமை காலை 11.15க்கு நேர்முகம், 11க்கே சான்றுகளோடு வரவும்!’ என மின்னஞ்சல் வந்தது. வெள்ளிக்கிழமை 10.45க்கு பாஸ்போர்ட் அலுவலகம் போனேன். சான்றிதழ் படிமங்கள் கேட்டார்கள். நகலெடுத்துக் கொண்டார்கள். என்னைப் படமெடுத்துக்கொண்டார்கள்.ஞாயிறு காலை போலீஸ் வந்தார் தகவல் சரி பார்த்து உறுதிசெய்ய.செவ்வாய் காலை பாஸ்போர்ட்டோடு என் வீட்டு வாசலில்… (READ MORE)

பொரி கடலை

, ,

செந்தாமரை

‘கருமாரப்பட்டி எப்ப வந்த நீ கடைசியா?’ (மீனாட்சி) ‘தர்மலிங்கம் அப்பா இருந்தாரு அப்போ. பக்கத்துல நாய்க்கர் வீட்டில் உட்கார்ந்து கூட பேசினோம். இல்ல, அதுக்கப்புறம் ஒரு தடவ வந்தேன்!’ (பரமன்) ‘ரொம்ப நாளு ஆச்சு!’ ‘ மங்கலட்சுமின்னு ஒருத்தவங்க இருந்தாங்களே! அவங்க எங்க?’ (பரமன்) ‘குன்றத்தூர்ல இருந்துச்சி. செத்துப் போச்சி!’ (செந்தாமரை) ‘செத்துட்டாங்களா? எங்களுக்கெல்லாம் தெரியவே… (READ MORE)

அம்மா

‘உம்பர்கட்கரசே ஒழிவற நிறைந்த…’

‘உம்பர்கட்கரசே ஒழிவற நிறைந்தயோகமே ஊற்றையேன் தனக்கு…’ சில வரிகளைப் படிக்கும் போதே அவை, அது தொடர்பாக நாம் பதிந்து வைத்திருக்கும் சிலரை அல்லது சிலதை உள்ளத்தின் அடியாழத்திலிருந்து மேலெழுப்பிக் கொண்டு வந்து விட்டு விடுகின்றன.  அப்படியொன்றானது மேலுள்ள வரிகள். நியாயமாக இவ்வரிகளைப் பார்க்கையில் தலைக்குள் சிவன் வரவேண்டும் அல்லது இந்தத் திருவாசக வரிகளை இயற்றிய மணிவாசகர்… (READ MORE)

பொரி கடலை, மு பச்சைமுத்து அறக்கட்டளை

, , , , , , , , , ,

31வது அன்னதானம்: மு பச்சைமுத்து அறக்கட்டளை

🌸 இன்று மிருகசீரிடம் (புரட்டாசி மாதம் ) மு பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாகதந்தையின் பெயரால் செய்யப்படும் மதிய உணவு வழங்கல் வடபழனி சிவன் கோவில் தெருவிலும், கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவமனையிலும்நிகழ்த்தப் பெற்றது. இறைவனுக்கு நன்றி! வாழ்க! 🌸 பரமன் பச்சைமுத்துமு பச்சைமுத்து அறக்கட்டளை18.09.2022

மு பச்சைமுத்து அறக்கட்டளை

wp-1663333498208.jpg

‘கார்கி’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

தானுண்டு தன் ஆசிரியப் பணி உண்டு என்று வாழும் இன்னும் சில நாட்களில் திருமண நிச்சயம் செய்து கொண்டு வாழ்வின் புதிய அத்தியாயத்தைத்தொடங்கப்போகும் ஓர் எளிய குடும்பத்து மகளொருவள் பணிக்கு சென்ற தந்தையைக் காணோமெனத் தேடிப் போகையில் கிடைக்கும் செய்திகள் கேட்டு பதறி, குஞ்சைக் காக்க வல்லூரையே எதிர்க்கத் துணியும் கோழியாய் தவித்து எழுகிறாள்.  உலகமே… (READ MORE)

Manakkudi Talkies, Uncategorized

, , , , ,

புதுப்பித்தல் வரிசையில்

இருபத்தியிரண்டாண்டுகளுக்கு முன்பு 1999ல் வந்த போது பதற்றம் கொஞ்சமும் உள்ளே ‘நடக்கனும் நடக்கனும்!’ என்ற வேண்டல் நிறையவும் இருந்தது. பத்தாண்டுகளுக்கு முன்பு 2012ல் வந்த போது பதற்றம் இல்லை, ‘நடந்திடனும் நடந்திடனும், ஒழுங்கா தலை வாரிக்கனும் அதுதான் பிரிண்ட் ஆகி வரும்!’ என்ற கூடுதல் கவனம் இருந்தது. இன்று பதற்றமில்லை, தலையைக் கூட வாரவில்லை, ‘நடக்கும்!’… (READ MORE)

பொரி கடலை

மாணவர்களுக்கு காலையுணவு : நல்ல திட்டம்

தமிழக முதல்வர் நேற்று தொடங்கி வைத்திருக்கும் பள்ளி மாணவர்களுக்கான காலையுணவு திட்டம் மிக மிக சிறப்பான திட்டம். புதுவை மாநிலத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட போதே, இது தமிழகம் வந்தால் நன்றாக இருக்கும் என்று எழுதியிருந்தோம். புதுவை திட்டத்தை விட மேம்படுத்தப்பட்ட திட்டமாக இது உள்ளது. சிறப்பாக நனைமுறைப்படுத்தப் படட்டும். மாணவர்கள் பயன் பெறட்டும்!… (READ MORE)

Politics

பொட்டு வைத்த காசு…

சந்தனமும் குங்குமமும் வைக்கப்பட்ட ரூபாய் நாணயம் ஒன்று உங்களுக்குப் தரப்பட்டால் நீங்கள் அதை என்ன செய்வீர்கள்? … ஒரு கிண்ணத்தில் நல்லெண்ணையும், ஒரு மனைப்பலகையும் ‘எட்டணா’ எனப்படும் ஐம்பது காசு வில்லையையும் தந்து, ‘சிவா! போய் புள்ளாரு வாங்கிட்டு வா!’ என்பார் அம்மா. பிள்ளையார் செய்யுமிடத்திற்குப் போவது தொடங்கி, செய்து வாங்கி,  ‘பைசப்ஸ் கர்ல்’ வருவதற்கு… (READ MORE)

Manakkudi Manithargal, பொரி கடலை

, , , , , ,

நெல் தெளிக்கிறோம் நேரடியாய்…

காவிரி – கொள்ளிடம் – வீராணம் திறப்பு நீர் வந்து பாயும் வரை காத்திருந்தால் பருவம் போய்விடுமென்பதால், மணக்குடியில் எங்கள் வடக்குவெளி வயலில் நேரடி நெல் விதைத் தெளிப்பு தொடங்கி விட்டோம் இன்று.  அழைத்துச் சொல்லி படத்தைப் பகிர்ந்தார் ஊரிலிருந்து சித்தப்பா. படத்தில் விதை தெளிக்கும் பூராயர் அண்ணனின் காலில் கட்டு போடப்பட்டு இருப்பதைப் பார்த்து… (READ MORE)

Manakkudi Manithargal, பொரி கடலை

தனக்கான ஒரு வேலை என்று வரும் போது பொறுப்பு வத்துவிடுகிறது

பள்ளியில் பயின்ற காலங்களிலும் கல்லூரிக் காலங்களிலும் இரவு சீக்கிரம் உறங்கச் செல்வதை வழக்கமாகக் கொண்ட என் மகள்கள், முதுகலை படித்த போது கொரோனா தீ நுண்மி பொதுமுடக்கக் காலங்களில் இயல்பு மாறி நள்ளிரவு வரை கண்விழிப்பு காலையில் நேரங்கழித்து எழல் என இரண்டு மூன்று மாதங்கள் இருந்தார்கள். காலை உடற்பயிற்சியை விடவில்லையென்றாலும் இரவில் உறங்குவது தள்ளிப்போனது.இரண்டொரு… (READ MORE)

பொரி கடலை

நீங்கள் இதை சாப்பிட்டிருக்கிறீர்களா?

நீங்கள் இதை சாப்பிட்டிருக்கிறீர்களா? இதைப் பறித்து வாணலியில் இட்டு புரட்டி மாலைச் சிற்றுண்டியாக உண்ட பாட்டிகள் சிலரை மணக்குடியில் பார்த்திருக்கிறேன் அந்தக் காலங்களில். சிறுவயதில் பள்ளி இடைவேளைகளில் முத்து, முரளி, சரவணன், நட்ராஜோடு பள்ளிக்குப் பின்புறம் கிளைகளில் பூத்திருக்கும் இவற்றை பறித்து வாயிலிட்டு மென்று துவர்ப்பும் புளிப்பும் சேர்ந்த அலாதி கலவையை சுவைத்து மகிழ்ந்திருக்கிறேன். உயர்… (READ MORE)

பொரி கடலை

அறுவை சிகிச்சையென்றாலும் அசராமல் மீண்டு அண்ணாநகர் பூங்காவில் அதிகாலை நடைப்பயிற்சி செய்து அசத்துகிறார் இந்த (என்) அம்மா! – பரமன் பச்சைமுத்து 30.08.2022

Uncategorized

வந்தவாசி தம்பதிகள் சொல்லும் சங்கதி…

கிராமத்தையொட்டிய தங்களது விவசாய நிலத்தில் வீடு கட்டி வாழும் 76 வயது கோதையானுக்கும் அவரது மனைவி 72 வயது ராணியம்மாளுக்கும் எவர் சொல்லிக் கொடுத்தார்கள்!! 40 ஆண்டுகளாக வெறும் மழை நீரை மட்டுமே பிடித்து காய்ச்சி பருகி, சமைத்து வருகின்றனர். ‘எவ்வளவு நாளானாலும் புழுவோ பூச்சியோ பிடிக்காது மழை நீரில். 40 ஆண்டுகளாக மழைநீர்தான் எங்களுக்கு…. (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , , ,

மு பச்சைமுத்து அறக்கட்டளை: 30ஆவது அன்னதானம்

 இன்று மிருகசீரிடம் (ஆவணி மாதம் ) மு பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாகதந்தையின் பெயரால் செய்யப்படும் மதிய உணவு வழங்கல் வடபழனி சிவன் கோவில் தெருவிலும், கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவமனையிலும்நிகழ்த்தப் பெற்றது. இறைவனுக்கு நன்றி! வாழ்க!  பரமன் பச்சைமுத்துமு பச்சைமுத்து அறக்கட்டளை21.08.2022

மு பச்சைமுத்து அறக்கட்டளை

wp-1660918674005.jpg

‘ராக்கெட்ரி’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை மதிப்பிற்குரிய விக்ரம் சாராபாய் ஆரம்பித்து நிர்வகித்து வந்த தொடக்கக் காலத்தில் அவரது நேரடி செல்லப் பிள்ளைகளாக வளர்ந்த சில விஞ்ஞானிகளில் ஒருவரான நம்பி நாராயணன், நிறைய சாகசங்கள், மேற்படிப்பு, ஆராய்ச்சி, மேல்நாட்டு விஞ்ஞானியிடம் நேரடி கற்றல் என பலதையும் செய்து திரவ எரிபொருள் தொழில்நுட்பத்தை இந்தியாவிற்குக் கொண்டு வந்து ராக்கெட்… (READ MORE)

Manakkudi Talkies, Uncategorized

, , , , , ,

சிறு கன்றாக நாம் நட்டவை

சிறு கன்றாக நாம் நட்டுப் பராமரித்தவை இன்று அண்ணார்ந்தே பாத்தாலும் உச்சி் தெரியா உயரத்திற்கு வளர்ந்துவிட்டால்… நம் உள்ளம் கொள்ளும் நிலை என்ன!?  மலையளவு மகிழ்ச்சிதானே! ஷெனாய் நகரில் நம் தெருவில் தடித்த தண்டுகளோடும் பரந்த கிளைகளோடும் வளர்ந்து பறவைகளுக்கும் பல்லுயிர்க்கும் உதவி செய்து நிற்கின்றன நமது அரசு, ஆல், வேம்பு, நாவல் மரங்கள். ம..கி…ழ்…ச்…சி…!… (READ MORE)

பொரி கடலை

கண்ணுக்குத் தெரியா பிணைப்பொன்று

தினசரி செய்யப்படும் மூச்சுப் பயிற்சியும் தவமும் தொடக்கத்தில் நேரடி மாயமந்திரங்கள் எதுவும் புரியாது. ‘சூ… மந்திரக்காளி!’ என்று கையை உயர்த்தினால், எதிரிலிருக்கும் செடியெல்லாம் ஒன்றும் வீழாது. ‘அப்புறம் எதுக்கு பரமன் இதையெல்லாம் செய்யனும்?’ பயிற்சிகள் தொடர தொடர, உள்ளே எதுவோ ஊறும். மனநிலை மாறும், அது வாழ்வை பார்க்கும் விதத்தையே மாற்றியே போடும். பயிற்சிகள் தொடரத்… (READ MORE)

Spirituality

, , , , , , , ,

வரிசையாய் அரசமரம் – NH 79

தேசிய நெடுஞ்சாலை என்ஹெச்44ல் பயணித்துக் கொண்டிருக்கையில் திடீரென்று ஓரிடத்தில் தொடங்கி சில கிலோ மீட்டர்களுக்கு வரிசையாக ஒரே வகை மரங்கள் இருந்தால், ‘அட..!’ என்று ஒரு வியப்பு வரும்தானே! எந்த இடம் இது? சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இடதில் ஆத்தூருக்கு இறங்குவதற்கு முன்பு. ‘வருசலா கண்ணுக்கு எட்டன தூரம் வரைக்கும் அரசமரங்க, ஒரே மாதிரி! வண்டிய… (READ MORE)

பொரி கடலை

, ,

காவிரி தென்பெண்ணை பாலாறு

பாரதி அதை எழுதும் போது ஒருவேளை கோவை – சேலம் – விழுப்புரம் – சென்னை வழித்தடத்தை மனதில் வரித்துதான் எழுதியிருப்பாரோ, ‘காவிரி தென்பெண்ணை பாலாறு’ என்று வரிசைப்படுத்தியிருக்கிறாரே! – பரமன் பச்சைமுத்துவிழுப்புரம் புறவழிச்சாலை15.08.2022

Uncategorized

வகுப்பென்பது…

வகுப்பென்பது மாணவரும் ஆசிரியரும் தங்களைத் தந்து நிற்கும் ஒரு வகைத் தவம்.         கண்கள், செவிகளைக் கொண்டு ‘வை ஃபை’யைப் போல உருவாக்கப்படும் கம்பியில்லா தொடர்பில் உட்கருத்தும், உணர்வுகளும், உயிராற்றலும் கடத்தப்படும்      சாலை. வகுப்பு என் உயிர் ஊறும் இடங்களில் ஒன்று. சிறந்த ஆசிரியர்கள்  மாணவர்களை உருவாக்குவதைப் போலவே, சிறந்த மாணவர்களால்  ஆசிரியரின் அகம் மேம்படுகிறது என்ற… (READ MORE)

பொரி கடலை

ஒடிஸா – சிறு தானிய மிஷன் – சபாஷ்!

நீர்வளமில்லா மலைப் பிரதேசத்தில் விவசாயம் செய்ய, பழங்குடி மக்களுக்கு வாழ்வாதாரம் பெருக்க, மலைவாழ் மக்களை தங்கள் பாரம்பரிய உணவை நோக்கித் திருப்ப, சுற்றுச் சூழல் காக்க என சில முடிவுகளோடு ஒடிஸா அரசு முன்னெடுத்த 5 ஆண்டு பரிசோதனையான  ‘ஒடிஸா சிறுதானிய மிஷன்’ 142 ஊராட்சி ஒன்றியங்களில் 1.5 லட்சம் விவசாயிகளால் 75,000 ஹெக்டேர் நிலப்பரப்பில்… (READ MORE)

Politics

பொன்னியின் செல்வன் : வரலாற்றை மாற்றுகிறார்களா?

மலர்ச்சி வணக்கம் பொன்னுஸ்வாதி! ‘கல்கியின் கதையும் மணிரத்னத்தின் திரைக்கதையும் மக்களுக்கு தவறான வரலாற்றை தந்துவிடுமே!’ என்ற உங்கள் பின்னூட்டம் கண்டேன். ஒரு வரலாற்று நிகழ்வை அல்லது வரலாற்றில் உள்ளவரின் வாழ்விலிருந்து சில நிகழ்வுகளை எடுத்துக் கொண்டு அதைச் சுற்றி கற்பனைகள் புனைந்து கதை செய்வது காலகாலமாக வழக்கத்தில் உள்ளது. நம் புராணங்களிலேயே அத்தனை ‘வெர்ஷன்கள்’ இருப்பது… (READ MORE)

பொரி கடலை

, , , ,

wp-1660048969063.jpg

பொன்னியின் செல்வன் – உண்மைக் கதையா?

கேள்வி: எனக்குத் தெரிந்தே பதினைந்து ஆண்டுகளாக ‘பொன்னியின் செல்வன்’ பற்றி மேடைகளில், எழுத்துகளில் சொல்லி வருபவர், பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே ‘பொன்னியின் செல்வன் டூர்’ போனவர் நீங்கள்.  ராஜராஜனின் கதையை ‘வளர்ச்சி’யில் சித்திரக் கதையாகவும் வெளியிட்டீர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு. உங்கள் உந்துதலால் பொன்னியின் செல்வன் நூலை படித்த பலரில் நானும் ஒருத்தி. பொன்னியின் செல்வன்… (READ MORE)

VALARCHI Tamil Monthly, பொரி கடலை

, , , , , , , , , , ,

அம்மா உண்கிறார் முதல் மிடறு

👏👏👏👏 ‘போங்கடா நீங்க! இனிமே நானே என் கையால சுயமா சாப்டுக்கறேன்!’ ( சாந்திதேவியாருக்கும் சிவாப்பையனுக்கும் உணவு புகட்டும் பாக்கியம் இனி இல்லை!) இரு வாரங்களுக்குப் பிறகு வாய் – தொண்டை வழி உணவு சாப்பிடுகிறார் அம்மா. ✔️ 👏👏👏👏 (கேன்டீனில் மிக்சியில் அடித்து வாங்கிய தயிர்சாதம் மதிய உணவாக ) …. ‘தம்பீ’!’ ‘சொல்லும்மா’… (READ MORE)

அம்மா

ஈரோடை

‘ஓர் ஆடு’ ‘ஒரு புலி’ என்று மட்டுமே பள்ளிக் காலத்திலிருந்து பயன்பாடு கொண்டிருந்தவன், மலேசியாவின் ‘பெந்தாங்’ போனபோதுதான் அங்கிருக்கும் பயன்பாடு கண்டு தலையில் தட்டிக்கொண்டு ‘ஈராயிரம்’ என்று என் சொல் பயன்பாட்டை மாற்றிக் கொண்டேன். அடுத்த ஆண்டு மலர்ச்சி நிகழ்ச்சியின் அனுமதி சீட்டில் ‘ஈராயிரத்து பதினெட்டு’ என்றே அச்சேற்றினோம். மலர்ச்சி பயிலரங்கம் ஒன்றிற்காக இன்று ஈரோட்டுக்கு… (READ MORE)

பொரி கடலை

, , , , , ,

திருவருட்பா

நீண்ட காலமாக (பல ஆண்டுகளாக) என் பட்டியலில் இருந்த தொடாமல் விட்ட திருவருட்பா நூலை புரட்ட எண்ணி எடுத்தேன் இன்று (அழைப்பு இப்போதுதான் வருகிறது). முதல் பக்கம் அவரது கையெழுத்து, ‘சிதம்பரம்’ என்று ஊர்ப்பெயரை சேர்த்து எழுதியிருப்பதை கண்டது என வியப்புடன் நகர்த்தி, முதல் பக்கம் முதல் செய்தி ‘இந்திரிய ஒழுக்கம்’ படித்தேன். ஆடிப் போனேன்…. (READ MORE)

Spirituality, பொரி கடலை

யாரிடம் கேட்பேன் இதை?

குளித்து விட்டு, நகங்களை வெட்டலாமென பால்கனியைத் திறந்து கம்பித் தடுப்புக்கு அருகில் நின்று கை விரல் நகங்களை வெட்டத் தொடங்கினேன் இன்று காலை. எங்கிருந்தோ வந்து அருகிலமர்ந்தது ஒரு காக்கை. தின்னும் பண்டம் எதுவும் வைத்திருக்கிறேன் என்று நினைத்தது போல. ஆனாலும் இவ்வளவு நெருக்கமாக வராதே காக்கை.  உணவே வைத்தாலும் ஓரக் கண்ணால் பார்த்து பார்த்து… (READ MORE)

பொரி கடலை

, ,

தமிழக அரசு நல்ல திட்டம் : கட்டுமான தொழிலாளர்களுக்கு…

என் அலுவலகத்துக்குப் பக்கத்து மனையில் புதிதாக ஒரு கட்டடமெழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். வெளி மாநிலங்களிலிருந்தும் வெளியூர்களிலிருந்தும் வந்திருக்கும் சிலர் தினந்தோறும் வேலை செய்ய மளமளவென உயர்கிறது கட்டிடம். எவர் வந்தாலும் போனாலும் சட்டை செய்யாமல் தங்கள் வேலையை மட்டுமே கவனிக்கும் அவர்களின் முகங்களை உற்று கவனித்திக்கிறேன். இப்படிப் பல கட்டிடங்களை பல இடங்களில் எழுப்பியிருப்பார்கள் என்று எண்ணியிருக்கிறேன்…. (READ MORE)

Politics, பொரி கடலை

, , , ,

வருந்துகிறோம்

அம்மாவுக்கு மருத்துவப் பரிசோதனை, அதிகாலையே புறப்படல்,அடுத்தடுத்த பரிசோதனைகள் என முழுநாளும் கழிந்ததில் நேற்று மிருகசீரிடம் என்பதை கவனிக்கத் தவறியுள்ளேன். மு பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாக மூலமாக மிருகசீரிடம் அன்று செய்யப்படும் மதிய உணவு வழங்கல் நிகழ்விற்கான ஏற்பாடுகளை தவறவிட்டுவிட்டேன். பெரிதும் வருந்துகிறேன். 🌸🙏 பரமன் பச்சைமுத்துமு பச்சைமுத்து அறக்கட்டளை26.07.2022

மு பச்சைமுத்து அறக்கட்டளை

wp-1658727979233.jpg

நமக்கு நடை பயில்வித்தவளை…

நமக்கு நடை பயில்வித்தவளைநாம் நடத்திக் கூட்டிப் போவது ஓரனுபவம் இதையும் எதையும் நடத்தி வைப்பதே அவனென உணர்கையில் கிடைப்பது பேரனுபவம் இடரினும் தளரினும் உறுநோய் தொடரினும் உடன் நிற்பதுசிவம் – பரமன் பச்சைமுத்துகுளோபல் மருத்துவமனை,பெரும்பாக்கம்25.07.2022 ( Here for a check up ) #Amma #AmirthamPachaimuthu#MuPachaimuthuArakkattalai #Paraman #GlobalHospital

Manakkudi Manithargal, பொரி கடலை, மு பச்சைமுத்து அறக்கட்டளை

மரம் வளர்த்தால் மின்சாரம் இலவசம்!

ஜார்கண்ட் மாநிலத்தில் நகர்ப்புற வீடுகளில் வளர்க்கப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் 5 அலகுகள் மின்சாரம் இலவசம் என்று அறிவித்திருக்கிறதாம் அம்மாநில அரசு. இதை குறிப்பிட்டுப் பேசியிரிக்கிறார் பாமக ராமதாஸ். அதன் பிறகே இப்படியொரு திட்டம் இருக்கிறதென்று கவனிக்கிறேன்.  நல்ல திட்டமாச்சே! கொண்டு வரலாமே! – பரமன் பச்சைமுத்துபெரும்பாக்கம்25.07.2022

Uncategorized

குட்டி பையன் டு மாம்பலர் ஐயர் கேட்டரிங்

1991ல் கல்லூரி முடித்திருந்த சமயத்தில், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், கபில்தேவ், அசாருதீன் கொண்ட இந்திய அணி – டேவிட்பூன் போன்றோர் கொண்ட ஆஸ்த்திரேலிய அணி, லாராவின் மே.இந்திய தீவு அணி ஆகியவை ஆடிய மேட்ச்களை மெத்த ஐயர் வீட்டின் மகாதேவ ஐயரின் கருப்பு வெள்ளை டிவியில் பார்த்திருந்தேன் மணக்குடியில். (ஐயர்கள் வீட்டுக்குள்ளும் போனேன் நான்!) அப்போது எங்கள்… (READ MORE)

Manakkudi Manithargal, பொரி கடலை

அவரவர்க்கான வால்

ஆட்டுக்கும் வாலை அளந்து கொடுத்தான் ஆண்டவன் அவரவர்க்கான வால் அவரவர் விழாமல் தகவு நிலை கொளவே அடுத்தவர் மூஞ்சியில் மூக்கினுள் விட அல்லவே தன்னிலை தடுமாறாமல் தடுக்கத் தந்த வாலை அடுத்தவர் நிலை மாற்றி தள்ள நீட்டினால் அறுத்தெறிவான் ஆண்டவனென்னும் ஆகச் சிறந்த அறுவை நிபுணன் அடுத்தவன் வாலில் நெருப்பு வைத்ததால் அழிந்தது தென்னிலங்கை அவரவர்… (READ MORE)

ஆ...!, கவிதை

பல ஆண்டுகளுக்குப் பிறகு ஏவிசிசி கல்லூரி நண்பன்

‘பொன்னியின் செல்வன்’ புதினத்தைப் படித்து விட்டு கிறுக்குப் பிடித்து அலைந்த காலமது. அதில் வரும் பாத்திரங்கள் வாழ்ந்த, நிகழ்வுகள் நடந்த இடங்களுக்குப் போய் வருவோம் என முகுந்தன், ராமு பெருமாளோடு 2004ல் என் அப்போதைய மாருதி 800ல் கோடியக்கரை சென்று குழகர் கோவிலையும் அதையொட்டிய காட்டையும் பார்த்து வந்தியத்தேவனையும் பூங்குழலியையும் நினைவு கூர்ந்து களித்து விட்டு… (READ MORE)

AVCCP

,

பொன்னியின் செல்வன்: ஆதித்த கரிகாலன் நெற்றியில் நாமம் – வழக்கு

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் வரலாறை மறைக்கிறார்கள் என்று சொல்லி மணிரத்னம், விக்ரம், பிரகாஷ்ராஜ், சரத்குமார், சுபாஷ் கரன் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறார் ஒருவர் என்ற தலைப்புச் செய்தியை பார்த்ததும் அதியசமாக இருந்தது. ‘இன்னும் படமே வரலியே! அதுக்குள்ள வரலாற்றை மாற்றினார்கள் என எப்படி சொல்ல முடியும்!?’ என்ற கேள்வியோடு செய்தியை தொடர்ந்து கவனித்தால், சமீபத்தில்… (READ MORE)

Manakkudi Talkies, பொரி கடலை

, , , , ,

காமராஜர் பிறந்த நாள்

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை ‘கல்வி வளர்ச்சி நாள்’ என்ற பெயரில், மணக்குடி கிராமத்தின் அரசுப்பள்ளியில் மாணவர்களுக்கு எழுது பொருள்கள் / ஆங்கில அகராதி / உணவு பாத்திரம் என எதையாவது தந்து மகிழ்ந்து கொண்டாடுவது என் தந்தையின் வழக்கம். அவர் தொடங்கியதை தொடரும் முயற்சியாக, மணக்குடி பள்ளி மாணவர்களுக்கு எழுது பொருள்கள், சிதம்பரம் பலகாரம்.காம்… (READ MORE)

மு பச்சைமுத்து அறக்கட்டளை

‘பரமன்…’  எனும் பெயரைக் கொண்ட நான் இன்று முதல் ‘…. ….’  என்று எனது பெயரை மாற்றிக் கொள்கிறேன்!’ – பரமன்

‘பரமன்…’  எனும் பெயரைக் கொண்ட நான் இன்று முதல் ‘…. ….’  என்று எனது பெயரை மாற்றிக் கொள்கிறேன்!’ – பரமன்…. எனது பெயரை மாற்றிவிட வேண்டியதுதான் என்று முடிவு செய்து அதற்கான அரசு அலுவலகத்திற்குப் போனேன் இன்று காலை. நீண்ட காலமாக ‘பேரை மாத்தனும், இதோ இப்போ செய்யலாம், இப்போ செய்யலாம்!’ என்றே எண்ணிக்கொண்டிருந்ததை… (READ MORE)

பொரி கடலை

, , ,

ஆளை ஈர்க்கும் ஆல் : இரும்பை

மரங்கள் எப்போதுமே எனை ஈர்க்கின்றன. சில மரங்களைக் கண்டதும் தொடத் தோன்றும், சிலதை வெறுமனே பார்க்கத் தோன்றும், இந்த மரத்தையும் அதனடியில் இருந்த கல்லிருக்கையையும் பார்த்ததும் அதில் அமரலாமெனத் தோன்றியது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இலுப்பை மரங்களாலான காடுகளாக இருந்து ‘இலுப்பை’ என்று வழங்கப்பட்டு, மருவி இன்று ‘இரும்பை’ என்றாயிருக்கிறது. திருஞானசம்பந்தரின் பதிகம் பெற்ற தலம்,… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , ,

அணிலுக்கு மூணு கோடு போட்ட ராமரே…

‘அணிலுக்கு மூணு கோடு போட்ட ராமரே, என் கழுத்துக்கு மூணு முடிச்சுப் போடச் சொன்னாரே!’ சில பாடல்கள் மிகச் சாதாரணமானவையாக எளிமையானவையாக இருக்கும், ஆனால் முதல்முறை கேட்கும் போதே ‘பச்சக்’கென்று ஒட்டிக்கொள்ளும். அப்படியொரு பாடல் இது. ரஹ்மானின் ‘என் வீட்டுத் தோட்டத்தின் பூவெல்லாம் கேட்டுப் பார்’, இளையராஜாவின் ‘காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா?’… (READ MORE)

பொரி கடலை

, , , , ,

ட்ராஃபிக் சிக்னலில் வழிகிறது இசை: பெருநகர போக்குவரத்து காவல்துறை அசத்தல்

ஒரு காலை அண்ணாநகர் ரவுண்டானாவில் ஒளிரும் சிவப்பு விளக்கு அணைந்து பச்சை விளக்கு வரட்டுமென சிந்தாமணி நோக்கி வலதில் திரும்பக் காத்திருக்கிறேன்.  ஏதேதோ சிந்தனைகள் ஓட இருந்தவனை ‘டொய்ங் டொய்ங் டொய்ங் டொய்ங்க் டோடம் டோடங்…’ என்று எங்கிருந்தோ வந்த மெல்லிய வீணை இசை உலுக்கியது. உள்ளம் பாடலை கண நேரத்தில் கண்டறிந்து கூடவே பாடவும்… (READ MORE)

பொரி கடலை

, , , ,

மு பச்சைமுத்து அறக்கட்டளை: 28வது அன்னதானம்

🌸 இன்று மிருகசீரிடம் (ஆனி மாதம் ) மு பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாகதந்தையின் பெயரால் செய்யப்படும் மதிய உணவு வழங்கல் வடபழனி சிவன் கோவில் தெருவிலும், கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவமனையிலும்நிகழ்த்தப் பெற்றது. இறைவனுக்கு நன்றி! வாழ்க! 🌸 பரமன் பச்சைமுத்துமு பச்சைமுத்து அறக்கட்டளை28.06.2022

மு பச்சைமுத்து அறக்கட்டளை

வந்தது சாகித்ய விருது!

குமுதம் இதழால் எனக்கு அறிமுகப்படுத்தவர் மாலன்.  யதேச்சையாக படிக்கத் தொடங்கி அவரின் கட்டுரைகளைத் தேடித் தேடிப் படித்ததெல்லாம் நிகழ்ந்திருக்கிறது எனக்கு ஒரு காலத்தில். தொலைக்காட்சி ஷோ நடத்திய மாலனை விட பத்திரிக்கையாளர் மாலன் சிறந்தவர் என்பேன். மறைந்த பத்திரிக்கையாளர் சுப்ரமணிய ராஜூ, சமகால நிகழ்வுகள் என எதைப் பற்றியும் மாலனால் வேறு பரிணாமத்தில் எழுதமுடியும்.  ‘ஜன்னலுக்கு… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , ,

காக்கைகளுக்கும் சுயமரியாதை உண்டு போல

காலை பால்கனி கதவை திறந்து செடிகளை கவனித்துவிட்டு, இரண்டு பிஸ்கட்களை துண்டாக்கி விளிம்பு சிமெண்ட் கட்டையில் வைத்து விட்டு உட்கார்ந்து செய்தித்தாள்களை வாசிப்பது என்ற என் வழக்கத்தில் பிஸ்கட் துண்டுகள் வைப்பதை மறந்து விட்டேன் இன்று. கைக்கெட்டும் தூரத்து எலுமிச்சை மரத்தில் வந்தமர்ந்த காக்கை, பிஸ்கெட் இல்லாத சிமெண்ட் கட்டையைப் பார்த்து விட்டு ‘கா…’ என்றது…. (READ MORE)

பொரி கடலை

மனித மலம் அள்ள ரோபோ – ஹோமோசெப் – சென்னை ஐஐடி

‘மனித மலத்தை மனிதனே அள்ளும் அவலத்தை ஒழித்தார் எங்கள் தலைவர்!’ என்று ஆளாளுக்கு சரடு விட்டுக் கொண்டிருக்க, சத்தமில்லாமல் மனித கழிவுகளை அகற்ற உண்மையாகவே ‘ஹோமோசெப்’ என்றொரு ரோபோவை வடிவமைத்து தயாரித்து செயல்படுத்திக் காட்டிவிட்டார்கள் சென்னை ஐஐடி மாணவர்கள். பெங்களூருவும், புனேவும், டெல்லியும் இதைப் பயன்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளனவாம். தமிழகம் அதிக அளவில் பநன்படுத்திக் கொள்ளட்டும்… (READ MORE)

பொரி கடலை

கடற்புரத்து மீட்பர்கள், நல்ல திட்டம்!

சில நல்ல மனிதர்கள், நல்ல அமைப்புகள் முன்னெடுக்கும் நல்ல திட்டங்கள், செயல்பாடுகள் அரசின் கவனத்திற்குப் போவது நன்று. எந்த வித ‘ஈகோ’வும் இல்லாமல் அதை ஏற்று அவர்களோடே கை கோர்த்து அதை இன்னும் விரிவாக பரவலாக செய்வது அரசு செய்யும் அடுத்த உயர் நிலை நற்செயல். சில ஆண்டுகளாக கடற்புரத்து மீனவ இளைஞர்களை தேடிப்பிடித்து கருவிகள்… (READ MORE)

Politics

wp-16545851418324918622564134180898.jpg

வகுப்பென்பது வெறும் வகுப்பல்ல எனக்கு…

வகுப்பென்பது வெறும் வகுப்பல்ல எனக்கு. மாணவர்களும் ஆசிரியனும் சேர்ந்து ஒருமித்து ஒருமுகப்பட்டு தங்களை தரும் தருணங்கள் அவை. ‘எந்திரன்’ படத்தில் சிட்டி ரோபோ செய்யும் ‘ஸிக்பி ப்ரோட்டோகால்’லையெல்லாம் கடந்தவொரு கடத்தும் பரிமாற்றம் அது. தேடல் உள்ள உள்ளத்திற்குள் மேலும் தூண்டல் உருவாக்கி தீண்டல் இல்லாமல் உள்ளே ஊற்றப்படும் ஒட்பம் அது. அதுவும் தன் மடியில் வந்தமரும்… (READ MORE)

MALARCHI, Paraman's Program

, , , , , , ,

தீண்டித் தின்பது

அடியே…. காதல் என்பது தீண்டித் தின்பது முதலில் காதலர் தின்பர் – பிறகு காதல் அவர்களைத் தின்னும் தின்பது இன்பம்தின்னப்படுவது இன்னும் பேரின்பம் தின்னத் தின்ன தெவிட்டிடும் உலகில்தின்னத் தின்ன தெவிட்டாதது காதல் மட்டுமே, காமம் கலந்த காதல் மட்டுமே காதல் என்பது வெறும் வாயால் அல்ல, ஐம்புலன்களால் தின்னுவது தீண்டலில் தொடங்கி தின்பதில் செழிக்கிறது… (READ MORE)

சிவநெறித்தேவன்

images-1.jpeg

‘விக்ரம்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

அடுத்தடுத்து கொலையுண்டு போகும் காவல்துறை அதிகாரிகள் வரிசையில் பொருட்பெண்டிர் நாடும் குடித்து குணம் கெட்டுத் திரியும் ஓர் ஓய்வு பெற்ற அதிகாரியும் கொலையுண்டு போக, துப்பு துலக்க வரும் கூர்மதியாளன் கவனமாய் நூல் பிடித்து நகர்ந்து நகர்ந்து முக்கிய கண்ணியைப் பிடிக்கையில் ‘ஓகோ!’ என்று வியந்து நிமிர்ந்து நிற்க, அதன் பிறகு நடக்கிறது முழு களையெடுப்பு… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , , , , , ,

மு பச்சைமுத்து அறக்கட்டளை : 27வது அன்னதானம்

 இன்று மிருகசீரிடம் (வைகாசி மாதம் ) மு பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாகதந்தையின் பெயரால் செய்யப்படும் மதிய உணவு வழங்கல் வடபழனி சிவன் கோவில் தெருவிலும், கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவமனையிலும்நிகழ்த்தப் பெற்றது. இறைவனுக்கு நன்றி! வாழ்க!  பரமன் பச்சைமுத்துமு பச்சைமுத்து அறக்கட்டளை31.05.2022

மு பச்சைமுத்து அறக்கட்டளை

பாய் வீட்டுக் கல்யாணம்

‘பாய் வீட்டுக் கல்யாணத்துக்கு வந்துட்டு, சைவ சாப்பாட்டு பந்திக்கு போறீங்களே பரமன்! ‘ என்று என்னை பாவமாக பார்த்து சைவ உணவு உண்ணும் இடத்திற்கு வழி சொன்னார் அந்த தெரிந்த நண்பர். கீழ்ப்பாக்கம் சிஎஸ்ஐ பெயின் ஸ்கூலின் ஒரு கோடியில் போடப்பட்ட பந்தலில் நுழைந்து பந்தியில் அமர்ந்தால், என் எதிர்ப்பந்தியில் தலையில் குல்லாய் அணிந்த இளம்… (READ MORE)

பொரி கடலை

, , ,

அதே சிறு பயிற்சி, ஆனால்…

அதே சிறு பயிற்சி, ஒவ்வொரு நாளும் என சில பயிற்சிகளை தொடர்ந்து செய்யும் போது, அவை ஈட்டித்தரும் பலன்களும் அதன் ஆழமும் அதிகமாயுள்ளன. குதிகால்களை உயர்த்தி, மொத்த உடலையும் முன்னங்கால்களில் நிறுத்தி கைகளை உயர்த்தி விரல்களைக் கோர்த்து வானை நோக்கித் தள்ளிய படி சில மூச்சுகளுக்கு நிற்கும் தாடாசனமும்,பாதங்கள் அரையடி இடைவெளியில் எனும் நின்ற வாக்கிலிருந்து… (READ MORE)

பொரி கடலை

சபாஷ்!

👏👏 வரும் கல்வியாண்டில் பள்ளி திறக்கப்படும் நாள், 10ஆம், 12ஆம் வகுப்புகளுக்கு மார்ச் மாதம் எந்த தேதியில் பொதுத்தேர்வு என்று இப்போது அட்டவணையை வெளியிட்டிருக்கிறார் தமிழக கல்வியமைச்சர். சபாஷ்! நல்லது. ஆசிரியர்களும் மாணவர்களும் சரியாகத் திட்டமிட முடியும். சிறப்பு! வாழ்க! பரமன் பச்சைமுத்து

Politics

wp-1653388447065.jpg

தண்ணீரைக் காதலிக்கும் மீன்களா இல்லை

ஆர்பி சௌத்ரி வீட்டுக்கு எதிர் வீட்டில் தி.நகரின் சவுத் வெஸ்ட் போக் ரோட்டில் நாங்கள் பேச்சுலர்களாகத் தங்கி வேலை பார்த்துக் கொண்டிருந்தோம். மைக்ரோசாஃப்ட் பெரிதாக வளராத அந்த நேரத்தில்  ஹார்டுவேர் சர்வீஸ் அண்ட் நாவல் நெட்வொர்க்கிங் என்று சில்வர் வண்ண டிவிஎஸ் சாம்ப்பில் திரிந்து கொண்டிருந்த நான் (பெட்ரோல் லிட்டர் 18.50/- என்பது நினைவு), ஆர்பி… (READ MORE)

பொரி கடலை

, , ,

காதல் விறகடுக்கி…

கலவி என்பது வெறும் உடல்கள் இணையும் உறவல்ல. காதல் விறகடுக்கிகாமத் தீ மூட்டிதன்னையே உருக்கித் தந்துஉயர் நிலை உணர்வெட்டும்ஒரு வேள்வி… கலவி! சிவநெறித்தேவன் காதல் பார்வைகள்

சிவநெறித்தேவன்

‘டான்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

‘சார் படம் பண்ணலாம் சார்! உங்களுக்கு காலேஜ் டான் ரோல். பிரியங்கா மோகனையே இதிலயும் புக் பண்ணிடலாம் சார்!’ ‘சரி, நான் அனிருத்தை கொண்டு வந்துர்றேன்! கதை?’ ‘காலேஜ் கதை, இன்ஜினியரிங் காலேஜ், படிக்க கஷ்டப்படும் மாணவர்கள், அப்படியே ஜாலி கதை சார்!’ ‘ அமீர்கான் த்ரீ இடியட்ஸ் பாத்தீங்களா? படிப்பு வராத மாணவர்கள், கண்டிப்பான… (READ MORE)

Manakkudi Talkies

இரைச்சலுக்கிடையே அமைதி

‘இதுதான் வாழ்க்கை!’ என்று ஏற்றுக் கொள்ளும் போது, இன்னல்களுக்குக் காரணமான உளைச்சல்கள் உதிர்ந்து விடுகின்றன, ‘இனி செய்ய வேண்டியது என்ன!’ என்பது பற்றி தெளிவும் வழிகளும் தோன்றி விடுகின்றன.  ‘என்னைச் சுற்றி எல்லாமும் சரியாக இருந்தால்தான் என்னால் இயங்கமுடியும், எதையும் செய்ய முடியும்!’ என்பவர்களுக்கு எல்லா நேரங்களிலும் அப்படியான தருணங்களை வாழ்க்கை தந்துவிடுகிறதா என்பது கேள்விக்குறிதான்…. (READ MORE)

பொரி கடலை

எலும்புத் துண்டு

உடைத்து வைத்த பிஸ்கட் துண்டுகள் அதே நிலையில்,வழக்கமாக வரும் காக்கைகள் வரவில்லை… ஞாயிறு – காக்கைகள் விடுமுறை? ஞாயிறு கறி சமைக்கிறான்கீழே குடியிருக்கும் நேபாள செக்யூரிட்டி! 🙂 பரமன் பச்சைமுத்து08.05.2022

ஆ...!

புதுவை சிறப்பு வளர்ச்சிப்பாதை + பேட்ச் 59 பட்டமளிப்பு

அரங்கு நிறைந்த அவையோரோடு அட்டகாசமாக நடந்தது ‘முழுமலர்ச்சி திரள் 59 – பட்டமளிப்பு விழா + சிறப்பு வளர்ச்சிப் பாதை’ புதுச்சேரி, லே ராயல் பார்க் ஹோட்டலில். புதுச்சேரி மலரவர்களுக்கு மறுபடியும் கூடல் என்பதால் மகிழ்வு, மலரவர்களாக பட்டம் பெறும் புதியவர்களுக்கு ‘நாங்கள் இனி மலரவர்கள்!’ என்பதிலும், ‘இதோ, இவர்தான் எங்கள் பரமன், இது எங்கள்… (READ MORE)

MALARCHI, Paraman's Program

மு பச்சைமுத்து அறக்கட்டளை: 26வது அன்னதானம்

 நேற்று மிருகசீரிடம் (சித்திரை மாதம் ) மு பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாகதந்தையின் பெயரால் செய்யப்படும் மதிய உணவு வழங்கல் வடபழனி சிவன் கோவில் தெருவிலும், கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவமனையிலும்நிகழ்த்தப் பெற்றது. ( நேற்று வகுப்பில் இருந்ததால் இதை பகிர முடியவில்லை) இறைவனுக்கு நன்றி! வாழ்க!  பரமன் பச்சைமுத்துமு பச்சைமுத்து அறக்கட்டளை05.04.2022Currently @Puducherry

மு பச்சைமுத்து அறக்கட்டளை

wp-16513788072136417922580023823367.jpg

அல்ஃபோன்ஸா மாம்பழம் வாங்குகிறீர்களா?

அல்ஃபோன்ஸா என்றதும் ‘ஏக் ஹி சான் ஹே ராத் கேலியே!’ என்றவரின் பின்னிருந்து வந்து ‘ஒரேயொரு சந்திரன்தான் இரவுக்கெல்லாம்… ஒரே ஒரு பாஷாதான் ஊருக்கெல்லாம்!’ என ‘பாட்ஷா’ படத்தின் பாடலில் இடையை காட்டி வரும் நடிகையே மனதில் வருவார் முன்பு எனக்கு. இனி, ஒரு அட்டைப்பெட்டி நிறைய ரத்னகிரியிலிந்து வரவழைக்கப்பட்ட இந்த பழங்களை அனுப்பி வைத்த… (READ MORE)

Uncategorized

, , , ,

29.04.2022 வளர்ச்சிப்பாதை…

சிலவற்றை விவரிக்கவோ விளக்கவோ முடிவதில்லை. நேற்றைய வளர்ச்சிப்பாதையும் அப்படியே என்று உறுதிபடுத்துகின்றன வரிசையாய் மலரவர்களிடமிருந்து வரும் பகிர்வுகள். அரங்கு நிறைந்த மலர்ச்சி அகத்தில், பழைய முகங்கள், புதிய பேட்ச் முடித்தவர்கள் என ஒவ்வொருவராய் கண்டறிந்து காண்பதே ஓர் உற்சாகம் தந்த உணர்வாய் இருந்தது. ‘உழைப்பிற்கு அங்கீகாரம் – பலன்’ ‘மலர்ச்சியோடு இணைந்திருக்க வேண்டிய முக்கிய நேரம்… (READ MORE)

MALARCHI, Malarchi Maanavargal

காஃபி ஒரு பானமல்ல

காப்பிக்காக அல்ல,காப்பி பருகும் போது கொள்ளும் தருணங்களுக்காக! காப்பி பானமல்ல,காரணம்! காஃபி வித் அம்மா@சரவணபவன் பரமன் பச்சைமுத்து28.04.2022 Amirtham AmirthamPachaimuthu ParamanAmma Paraman

Manakkudi Manithargal, ஆ...!

‘பரமன், உங்க அப்பா பேர்ல இருக்கற அறக்கட்டளையிலேருந்து மாதாமாதம் அன்னதானம் பண்றே. அத எதுக்கு ஃபோட்டோ எடுத்து போடறே?’ ‘பாரு பரமன், செய்யற உதவி வெளிய தெரியாம பண்ணனும். இல்லன்னா புண்ணியம் கெடையாது’ ஒவ்வொரு மாதமும் பலரும் எனக்கு சொல்பவை இவை. எந்த பதிலும் சொல்வதில்லை நான்.… 27.04.2022 சின்னஞ்சிறு பிஞ்சுக் குழந்தைகள், கர்நாடக பெங்களூருவின்… (READ MORE)

Uncategorized

கோவை வளர்ச்சிப்பாதை

🌸 மலர்ச்சி வணக்கம்! பல ஆண்டுகளாக பலரும் விருப்பப்பட்ட முயற்சித்த‘கோவையில் – வளர்ச்சிப் பாதை’ திடீரென முடிவாகி திரும்பிப் பார்ப்பதற்குள் நிகழ்ந்து முடிந்துள்ளது. ‘பணி நாளில் காலையில்’ ‘மாலையில் வைத்திருக்கலாம்’ ‘திடீர்னு சொல்றீங்களே!’ என பலரும் கேட்டதை அறிந்தோம். (கோவையில் வேறு நிகழ்ச்சிக்கு வந்தவன் விமானத்தை கொஞ்சம் ஒத்திப் போட்டதில் இது நடந்தது). இவற்றைத் தாண்டி…… (READ MORE)

Paraman's Program

wp-1650609481779.jpg

‘யாருக்கு வேண்டும் பன்னீர் டிக்கா சாண்ட்விச்!’

‘எக்ஸ்க்யூஸ் மீ… யூ ஆர் பிகேவிங் ஃபன்னி!’ கருநீல இறுக்கமான உடையணிந்து, சாயாலி என பெயர் பொறித்த பட்டையை மார்பில் அணிந்திருந்த,  கண்ணிமையில் சிவப்பு வண்ணம் பூசியிருந்த விமான பணிப்பெண் சற்று அதிகமான சத்தத்திலேயே கூவினாள்.  தூங்கத் தொடங்கிய நான் அதிர்ந்து கலைந்து எழுந்தேன். கவிஞர் வைரமுத்து கழுத்து இறங்க தூங்கிக் கொண்டிருந்தார். அவருக்கு நேராய்… (READ MORE)

பொரி கடலை

, , , ,

மணிமேகலை, காவிரிப்பட்டினம், மணிமாறன்

காவிரிப் பட்டினம், தொடிதோட் செம்பியன் மன்னன், பொதிகை அகத்திய முனி, இந்திர விழா, புகார் நகரத்து நாளங்காடி பூதம், சதுக்கப் பூதம், சித்திராபதி, மகள் மாதவி, தோழி வயந்த மாலை, சுதமதி, சோழ இளவரசன் உதயகுமாரன், யாழ் மீட்டும் எட்டிக்குமரன், அழகிற் சிறந்த மணிமேகலை, அறவணடிகள், வாரணாசி அந்தணர்கள், பசுவின் மகன், பசிப்பிணி தீர்க்கும் அட்சய… (READ MORE)

பொரி கடலை

‘பீஸ்ட்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

தனது முந்தைய தாக்குதல் ஒன்றின் தொடர்பில் கொஞ்சம் மனநிலை பாதிக்கப்பட்டு மனநல மருத்துவரிடம் போகும் சகல வித்தைகளும் தெரிந்த அசகாயசூர ‘ரா’ உளவாளி ஒருவன் காதல் தொடர்பினால் நகரின் வணிக வளாகம் ஒன்றிற்குள் நுழைந்த வேளையில், மக்கள் நிறைந்த அந்த வணிக வளாகத்தைவல்லமை கொண்ட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கைப்பற்றினால், நம் உளவாளி தீவிரவாதிகளுக்கே தீவிரவாதியாக எழுந்து… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , ,

wp-16493315866315944067076977724616.jpg

செக்யூரிட்டி செக்கின்

மணக்குடி போகும் போதெல்லாம் இது நடக்கும். வீட்டின் வெளிச்சுவரையொட்டிய படியே செல்லும் ஒன்றரையடி  நீள் சிமெண்ட் மேடையில் செருப்பை அழகாக கழற்றி வைத்து விட்டு உள்ளே போவோம். மாலை வெளியில் வந்தால் செருப்பு இருக்காது. வாசல் தெளித்து இருபது புள்ளி அரிசி மாவு கோலம் போடும் அம்மா, அப்படியே நீண்ட சிமெண்ட் மேடையிலும் நீர் விட்டடித்து… (READ MORE)

Manakkudi Manithargal, Uncategorized, பொரி கடலை

wp-16492538636646380278259803578736.jpg

காவல்துறை நண்பன்

‘காவல்துறை உங்கள் நண்பன்’ என்பார்கள், காவல்துறையில் நண்பர்களும் உண்டு என் நண்பர்களில் சிலர் காவல்துறையிலும் உண்டு. திரைப்படங்களில் மிகையாக காட்டப்படுவது போல உண்மை உலகில் காவலர்கள் எப்போதும் இல்லை என்பது நமக்கே தெரியும். ‘ஓங்கி அடிச்சா ஒன்றரை டன்ரா… பாக்கறியா… பாக்கறியா?’ என்று கத்துகிற காவலர் நிசத்தில் இருக்க மாட்டார்தான்.‘மூன்று முகம் – அலெக்ஸ்பாண்டியன்’ ‘விக்ரமார்குடு… (READ MORE)

பொரி கடலை

,

காவல்துறை நண்பன்

‘காவல்துறை உங்கள் நண்பன்’ என்பார்கள், காவல்துறையில் நண்பர்களும் உண்டு என் நண்பர்களில் சிலர் காவல்துறையிலும் உண்டு. திரைப்படங்களில் மிகையாக காட்டப்படுவது போல உண்மை உலகில் காவலர்கள் எப்போதும் இல்லை என்பது நமக்கே தெரியும். ‘ஓங்கி அடிச்சா ஒன்றரை டன்ரா… பாக்கறியா… பாக்கறியா?’ என்று கத்துகிற காவலர் நிசத்தில் இருக்க மாட்டார்தான்.‘மூன்று முகம் – அலெக்ஸ்பாண்டியன்’ ‘விக்ரமார்குடு… (READ MORE)

பொரி கடலை

,

‘மன்மதலீலை’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து:

பெண்கள், பெண்கள் என எதிர்பாலினத்தின் மீது ஆசை கொண்டு திரியும் அதே நேரம் வாழ்வில் கனவுகளோடு வளரும் ஒரு பருவ வயது இளைஞனின் வாழ்வில் பத்தாண்டுகளில் நிகழும் சம்பவங்களை மையமாக வைத்து பின்னப்பட்ட களத்தை எடுத்துக் கொண்டு முதல் பாதியில் ‘அடல்ட்ஸ் ஒன்லி’யை தடவி, இரண்டாம் பாதியில் த்ரில்லர் மிளகாய் பொடி தூவி வெங்கட் பிரபு… (READ MORE)

Manakkudi Talkies

, , , , ,

wp-1648475879805.jpg

ஆர் ஆர் ஆர்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

1920களில் பிரித்தானிய ஆதிக்க இந்தியாவில், தன் லட்சியத்தை அடைவதற்காக காடு மலை ஆறு என பலதையும் கடந்து பயணித்து வந்த ஒரு மலைவாழ் பழங்குடி இன மனிதனும்,  தன் குடும்பமே சிதைந்து போய் விட ஊர் மக்களுக்கு வாக்குக் கொடுத்து விட்டு புறப்பட்ட தன் லட்சியத்தை அடைவதற்காக எந்த வழியிலும் பயணிக்கலாமென செயல்கள் புரியும் கோதாவரி… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , , , , ,

wp-1648197244922.jpg

உயரம் என்பது எதை வைத்து?

உயரம் என்பது எதை வைத்து? மனித உடலின் அளவை வைத்தா, உள்ளிருக்கும் உள்ளத்தின் அளவை வைத்தா,  மனிதன் ஆற்றும் அளவை வைத்தா? உடல் உயரம் கொண்டவர்கள் உயர்ந்தவர்களாக ஆகாமல் போகலாம், உயர்ந்த உன்னத மனிதர்கள் உடலளவில் உயரமாக இல்லாமலும் போகலாம்.  ஓடும் உசேன் போல்ட்டின் ஓட்ட வேகத்திற்கும் உடல் உயரத்திற்கும் சம்மந்தம் இருக்கலாம். கர்மவீரர் காமராஜுக்கும்… (READ MORE)

பொரி கடலை

, , , , , ,

குறுந்தொகை ஆடிப்பாவை – மாலன்

🌸 இவ்வார குமுதமில் மாலனின் கட்டுரை மிக நன்று. உலகில் முதன் முதலில்கண்ணாடியை உருவாக்கியவர்கள் துருக்கியர்கள், மெருகேற்றியவர்கள் எகிப்தியர்கள், இல்லை சீனம்தான் முதலில் என்று கூகுளில் கதைகள் பல இருக்க, கிறிஸ்து பிறப்பதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பு ‘குறுந்தொகை’யில் ஆலங்குடி வங்கனார் ‘ஆடிப்பாவை’யில் கண்ணாடியைப் பற்றியும் அதில் தெரியும் பிம்பத்தை உவமையாக வைத்தும் எழுதியிருக்கிறார் என்று… (READ MORE)

பொரி கடலை

, , ,

ஆம் ஆத்மியின் சின்னமோ

ஹாரி பார்ட்டரின்துடைப்பமோ பஞ்சாபில் வென்றஆம் ஆத்மியின் சின்னமோ குனிந்து நிற்கும்முள்ளம்பன்றியின் முதுகோ சீனத்துப் பெண்ணின் சிகை போல வேண்டுமென்று ஸ்ட்ரெயிட்னிங் செய்தஉள்ளூர் சிங்காரியின் காற்றில் பறக்கும் சிகையோ மருத்துவக் கல்லூரி பதிவாளரின் கையொப்பமாம்! வழுக்கைத் தலை வரப்பெற்று கையெழுத்திலாவது இருக்கட்டும் மயிரென்று வரைந்தாரோ! 樂 – பரமன் ( பொறுப்புத் துறப்பு: பகிர்வில் வந்த பதிவுக்கு… (READ MORE)

ஆ...!, கவிதை

ஆனை ஆனை அழகர் ஆனை

சிறுவர்களுக்கும் பதின்ம வயதினருக்கும் எழுதுவது எளிதில்லை என்பதை பல ஆண்டுகளாக ‘வளர்ச்சி’ சுய முன்னேற்ற இதழில் சிறுவர்களுக்கான சித்திரக்கதை பகுதியில் எழுதி வருவதால் அடிக்கோடிட்டு சொல்ல முடியும்.(சிறுவர்களுக்காக நாம் செய்யும் அந்தப் பகுதியை பெரியவர்களே அதிகம் ரசிக்கின்றனர் என்பது வேறு கதை) இயல்பாக வருவதை சிறுவர்களுக்கான எளிய நடையில் மாற்றிதான் நாம் எழுதுகிறோம் என்று நாமே… (READ MORE)

பொரி கடலை

வசுதேவனுக்காக நண்பன் கம்சன்!?

பர்சானபுரியின் தேவகர் தனது செல்ல மகள் தேவகியை, குலத் தொழில் மாறி நூல் கற்று அமைச்சனாகிப் போன வசுதேவனுக்குத் தந்து விடக் கூடாதென்பதற்காகவே, திமிலும் திமிறும் கொண்ட ஏறுவை மன்றிலில் அடக்குபவனே மகள் கொண்டு போவான் என்றறிவிக்க, வசுதேவனால் முடியாதிது  என்றெல்லோரும் எண்ணியிருக்கும் வேளையில் களத்தில் குதித்து காளையையடக்கி தங்கையைத் தூக்கிச் சென்றானாம் ஆளும் கம்சன்… (READ MORE)

பொரி கடலை

, ,

25ஆவது அன்னதானம்: மு பச்சைமுத்து அறக்கட்டளை

🌸 இன்று மிருகசீரிடம் (மாசி மாதம் ) மு பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாகதந்தையின் பெயரால் செய்யப்படும் மதிய உணவு வழங்கல் வடபழனி சிவன் கோவில் தெருவிலும், கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவமனையிலும்நிகழ்த்தப் பெற்றது. இறைவனுக்கு நன்றி! வாழ்க! 🌸 பரமன் பச்சைமுத்துமு பச்சைமுத்து அறக்கட்டளை10.03.2022

மு பச்சைமுத்து அறக்கட்டளை

wp-1646903254254346934298526907611.jpg

ஆண்ட்ராய்டு பாட்டி

‘அத்தை! இது என்ன சட்னி!?’ என் மனைவியின் அம்மாவான, என் அப்பாவை அண்ணன் என்று விளித்த அத்தை, பைபாஸ் சர்ஜரி, கல்லீரல் செயலிழப்பு காரணங்களால் மாமா இறந்ததிலிருந்து எங்களோடுதான் வசிக்கிறார். அத்தைக்கு வயது 75. என் வீட்டில் அதிகாலைப்பறவைகள் என்றால் நானும் அத்தையும்தான். மற்றவர்கள் எழும் முன்னே எழுந்து ‘மெட்ராஸ் மில்க் ஏ2 மில்க்’ பாட்டிலை… (READ MORE)

Manakkudi Manithargal

, , , ,

மனோஜ்பவனில்

டிரைவருக்கு காலையுணவு, நமக்கு காப்பி!’ என்ற முடிவோடு திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் பாலம் கடந்து நிறுத்தி மனோஜ் பவனில் நுழைந்து, ஓர் இருக்கையில் ( ஓரிக்கை அல்ல, அது பெருமாள் இருக்கும் இடம்) அமர்ந்து, ‘சுடு தண்ணீர், காப்பி… பில்லு அந்த டேபிள்ள சாப்பிடறாரு பாருங்க அவர்ட்ட!’ என்று டிரைவரை காட்டி ஆர்டர் தருகிறேன்…. (READ MORE)

MALARCHI

, ,

பச்சையப்பாஸ் சில்க்ஸ் திருவண்ணாமலை

🌸 ‘திருவண்ணாமலை வகுப்புக்கு வர்றீங்க! அப்படியே நம்ம புது ஷோருமூக்கு வரணும்!’ என்று நம் மலர்ச்சி மாணவரின் அழைப்பின் பேரில், திருவண்ணாமலை ‘பச்சையப்பா சில்க்ஸ்’க்கு போயிருந்தேன். (அவர்கள் விரும்பியபடி அங்கிருந்த பிள்ளையாருக்கு தீபம் காட்டினேன். நான் விரும்பிய படி கண் மூடி பிரார்தனை செய்தேன்) உண்மையைச் சொல்ல வேண்டுமானால் அசந்து போனேன். ஒரு திருமணத்திற்கு என்று… (READ MORE)

பொரி கடலை

மீன் கத்தரிக்கா

சுத்த சைவம்தான்,சாப்பிட உட்கார்ந்தேன்வதக்கித் தாளித்த கத்தரிக்காயை தட்டிலிருந்து எடுத்துக் கடிக்கையில்மீன் வறுவல் வாசனை வருகிறது… அடுத்த மனை கீழ்வீட்டில் வறுக்கிறார்கள்! – பரமன் பச்சைமுத்து

ஆ...!, கவிதை

, ,

இயக்குநர் வசந்த் : புத்தகக் கண்காட்சியில்

இயக்குநர் சிகரம் பாலசந்தர் சாரின் பாசறையிலிருந்து வந்தவர் என்பதைத் தாண்டி, ‘எஸ்பிபியை இப்படிப் பார்க்கிறாரே இவர்!’ என்று வியக்க வைத்து, அதை நமக்கும் கடத்தி எஸ்பிபி மீதான நம் பார்வையின் அடர்த்தியையும் கூட்டிவிட்டுப் போன திரைப்பட இயக்குநர் வசந்த் அவர்களோடு, நேற்று சென்னைப் புத்தகக் கண்காட்சியில்  ஜீரோ டிகிரி பப்ளிஷிங் அரங்கில் கொண்ட அளவளாவுதல் சில… (READ MORE)

பொரி கடலை

, , , , , ,

ஆசிரியனாக அகமகிழ்கிறேன்

‘நிறைய பண்ணிப் பாத்துட்டேன். எதையும் சரியா பண்ண முடியலை. மனசு கஷ்டமா இருக்கு. எதில போறதுன்னே வழி தெரியல! எனக்கு எது வரும்ன்னே எனக்குப் புரியல!’ சில ஆண்டுகளுக்கு முன்பு மனக்குமுறலோடும் கண்ணீரோடும் மாணவனாக வந்து நின்று நம்மிடம் செய்யப்பட்ட பகிர்வு இது.  சில சந்திப்புகள், சில முடிவுகள், புதிய பாதை தீர்மானிப்பு,  புதிய இலக்குகள்,… (READ MORE)

MALARCHI, Malarchi Maanavargal, பொரி கடலை

, , , ,

wp-16452038669085980429362768020932.jpg

என்னது திருக்கோஷ்டியூரா…!

பிள்ளையார்பட்டி கோவிலிலிருந்து வெளியே வந்து காரிலேறி ‘சிவனையும் பெருமாளையும் வணங்குவோர்க்கேயுள்ள திமிர்…’ என்ற முந்தைய பதிவை செல்லிடப் பேசியில் மூழ்கி எழுதி பதிவிட்டுவிட்டு நிமிர்கையில், ‘இறங்குங்க சார்!’ என்கிறார்கள். ‘இது என்ன ஊரு?’ ‘திருக்கோஷ்டியூர்?’ ‘அடடா! ராமானுஜர் திருக்கோட்டியூர் நம்பியிடம் கத்துகிட்டாரே, அதை மத்தவங்களுக்கு சொல்லிக் கொடுத்தாரே… அந்த ஊரா?’ ‘ஆமாம்!’ ‘ரெண்டு நாள் முன்னால… (READ MORE)

பொரி கடலை

, , , ,

wp-1645200769336.jpg

வணக்கம் பிள்ளையார்பட்டி

சிவனை பெருமாளை வணங்குவோர்க்கேயுள்ள திமிர் நமக்கும் கொஞ்சம் இருக்கிறது. ‘பிள்ளையாரைப் போய் பாக்கனுமா? சரி, நமக்காக ஸ்பெஷல் ஏற்பாடுகள் பன்றாங்க, போயிடுவோம்!’ என்றுதான் பிள்ளையார்பட்டி போனேன். அற்புதமான கட்டமைப்பு உள்ள கோவில். நேராக பிள்ளையார் அருகிலேயே கொண்டு போய் உட்கார வைத்தார்கள். விஐபி தரிசன ஏற்பாடுகள்! மாலை போட்டார்கள், பெரிய ஃப்ரேம் போட்ட படம் தந்தார்கள்…. (READ MORE)

பொரி கடலை

, , ,

21: புவனகிரி பள்ளி: நிறைவுபுவனகிரி பள்ளி: நிறைவு

*21* *புவனகிரி பள்ளி: நிறைவு* திரவியம் தேட திரைகடல் ஓடி, அனுபவங்களோடு திரும்ப வந்து ஊரெல்லாம் சுற்றி,முப்பத்தியேழு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் திடீரென்று உள்ளெழுந்த ஓர் உந்துதலால் புவனகிரிப் பள்ளியில் உடன் படித்த மாணவர்களைத் தேட, ஜெகன், சங்கர், பாலு, ராஜாராமன் என நால்வர் அகப்பட, வாட்ஸ்ஆப் குழுவொன்றைத் தொடங்கி வைத்தோம். ‘பள்ளி நினைவுகளை… (READ MORE)

புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

,

20:‘புவனகிரி பள்ளி : புவனகிரி டுடோரியல் சென்டர்கள்’

*’20’* *’புவனகிரி பள்ளி:’* ( சென்ற பதிவில் ஜனார்த்தனன் சார் பற்றிப் படித்து விட்டு அவர் நினைவுகளை சிறிதும் பெரிதுமாக பலர் எழுதியிருந்தனர். ‘தறி வாத்தியார் ஒருவரல்ல, இருவர்!’ என்று தகவல்களும் அனுப்பியிருந்தனர்.  புவனகிரி பள்ளி பற்றிய தொடர் பதிவு ஓர் அனுபவமாக உள்ளது என்று பலரும் மின்னஞ்சல் செய்திருந்தனர். தொடர்ந்து வாசிப்பதற்கும், வாசித்து வந்த… (READ MORE)

புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

,